search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Studiogreen"

    • தேவி ஸ்ரீபிரசாத் இசையமைக்கும் இப்படம் 38 மொழிகளில் 3டி முறையில் உலகம் முழுவதும் நாளை வெளியாகவுள்ளது.
    • ரூ.3.75 கோடியை டிசம்பர் 11ம் தேதிக்குள் செலுத்துவதாக உத்தரவாதம் கொடுக்கப்பட்டுள்ளது.

    சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள படம் 'கங்குவா'. இப்படத்தை ஸ்டூடியோ கிரீன் மற்றும் யுவி கிரியேஷன்ஸ் இணைந்து தயாரிக்க திஷா பதானி, பாபி தியோல், யோகி பாபு, கிங்ஸ்லி, கோவை சரளா, ஆனந்த் ராஜ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

    தேவி ஸ்ரீபிரசாத் இசையமைக்கும் இப்படம் 38 மொழிகளில் 3டி முறையில் உலகம் முழுவதும் நாளை வெளியாகவுள்ளது.

    இதற்கிடையே, அர்ஜுன் லால் என்பவர் திரைத்துறையில் பலருக்கு கடன் கொடுத்துள்ளார். நிதி இழப்பு ஏற்பட அவர் திவாலானதாக அறிவிக்கப்பட்டார்.

    பின்னர் அவர் இறந்துவிட்ட நிலையில், அவரது சொத்துகளை ஐகோர்ட்டு கட்டுப்பாட்டில் உள்ள சொத்தாட்சியர் நிர்வகித்து, கடன் வாங்கியவர்களிடம் வசூலிக்க நடவடிக்கை எடுத்து வருகிறார்.

    இந்த நிலையில் ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் அர்ஜுன் லாலிடம் பெற்ற கடனை வசூலிப்பது தொடர்பாக சொத்தாட்சியர் சென்னை ஐகோர்ட்டில் மனுத் தாக்கல் செய்தார்.

    இதையடுத்து ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் அர்ஜுன் லாலிடம் பெற்ற ரூ.20 கோடியை வருகிற 13-ம் தேதிக்குள் சொத்தாட்சியருக்கு செலுத்தாமல் படத்தை வெளியிடக் கூடாது என்று சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டது.

    இந்த வழக்கு இன்று மீண்டும் சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.

    இந்நிலையில், நடிகர் சூர்யாவின் கங்குவா படத்தை வெளியிட சென்னை உயர்நீதிமன்றம் நிபந்தனையுடன் அனுமதி வழங்கியுள்ளது.

    அதன்படி, டிசம்பர் 11ம் தேதிக்குள் ரூ.3.75 கோடி செலுத்த வேண்டும் என்ற நிபந்தனையுடன் படத்தை வெளியிட அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

    மேலும், அர்ஜூன்லால் சுந்தர்தாஸ் என்பவரிடம் ஸ்டூடியோ கிரீன் பெற்ற ரூ.10.35 கோடி கடனை வசூலிக்க சொத்தாட்சியர் தொடர்ந்த வழக்கு டிசம்பர் 12ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

    'தானா சேர்ந்த கூட்டம்' படத்தின் இந்தி உரிமை வழங்குவதாக கூறி பெற்ற ரூ.1.60 கோடியை திரும்ப தரக் கோரி பியூவல் டெக்னாலஜிஸ் நிறுவனம் வழக்கு தொடர்ந்தது.

    இந்த வழக்கில் ரூ.1.60 கோடியை ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் செலுத்தியது. மற்றொரு வழக்கில் ரூ.6.41 கோடி செலுத்திய நிலையில் மேலும் ரூ.3.75 கோடியை டிசம்பர் 11ம் தேதிக்குள் செலுத்துவதாக உத்தரவாதம் கொடுக்கப்பட்டுள்ளது.

    ஸ்டூடியோ கிரீன் தயாரிப்பில் ராஜு முருகன் கதை எழுத, சரவணன் ராஜேந்திரன் இயக்கும் புதிய படம் குறித்த அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. #MehandiCircus #RajuMurugan
    ஸ்டூடியோ கிரீன் சார்பில் கே.இ.ஞானவேல் ராஜா தயாரிப்பில் உருவாகும் படம் `மெஹந்தி சர்க்கஸ்'. `குக்கு', `ஜோக்கர்' படத்தை இயக்கிய ராஜு முருகன் இந்த படத்திற்கு கதை, வசனம் எழுதுகிறார். ராஜு முருகனிடம் இணை இயக்குநராக பணியாற்றிய சரவணன் ராஜேந்திரன் இந்த படத்தை இயக்குகிறார். 

    மாதம்பட்டி ரங்கராஜ் இந்த படத்தின் மூலம் நாயகனாக அறிமுகமாகிறார். ஷான் ரோல்டன் இசையமைக்கும் இந்த படத்திற்கு மாநகரம் பட பிரபலம் செல்வகுமார்.எஸ்.கே. ஒளிப்பதிவு பணிகளை மேற்கொள்கிறார். 



    கொடைக்கானல் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உருவாக இருப்பதாகவும், நாயகனுக்கும், சர்க்கஸ் செய்பவருக்கும் இடையேயான காதலை மையப்படுத்தி படம் உருவாகுவதாகவும் கூறப்படுகிறது. படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் தலைப்பு வெளியாகி வரவேற்பை பெற்றிருக்கும் நிலையில், படத்தில் யானைக்கும் ஒரு முக்கிய பங்கு இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. #MehandiCircus #RajuMurugan

    முத்தையா இயக்கத்தில் கவுதம் கார்த்திக் நடிக்கவிருக்கும் `தேவராட்டம்' படத்தில் அவருக்கு ஜோடியாக நடிக்க மஞ்சிமா மோகன் ஒப்பந்தமாகி உள்ளார். #Devarattam #ManjimaMohan
    `கொடிவீரன்' படத்தை தொடர்ந்து முத்தையா இயக்கத்தில் அடுத்ததாக உருவாக இருக்கும் படம் `தேவராட்டம்'. கவுதம் கார்த்திக் நாயகனாக நடிக்கும் இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக நடிக்க மஞ்சிமா மோகன் ஒப்பந்தமாகி இருக்கிறார். 

    ஸ்டூடியோ கிரீன் சார்பில் கே.ஈ.ஞானவேல் ராஜா தயாரிக்கும் இந்த படத்திற்கு நிவாஸ் பிரசன்னா இசையமைக்கிறார். சக்தி சரவணன் ஒளிப்பதிவு செய்ய பிரவீன்.கே.எல். படத்தொகுப்பு பணிகளை மேற்கொள்ள இருக்கிறார். `முத்துராமலிங்கம்' படத்திற்கு பிறகு மீண்டும் கிராமத்து சாயலில் நடிக்க இருக்கிறார் கவுதம் கார்த்திக். 



    சமீபத்தில் இந்த படத்தின் பூஜை போடப்பட்ட நிலையில், படப்பிடிப்பு விரைவில் துவங்க இருக்கிறது. இந்த படத்தில் நடிக்கவிருக்கும் மற்ற கதாபாத்திரங்கள் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. #Devarattam #GauthamKarthik #ManjimaMohan

    ×