search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Stunt Silva"

    • ரசிகர்களின் மனதை கவர்ந்த அதிரடி ஆக்‌ஷன் படமாக மிஷன் சாப்டர்-1 இடம் பெற்றுள்ளது.
    • ஜெயிலராக நடித்திருக்கும் எமி ஜாக்சனும் அதிரடி ஆக்க்ஷனில் அனல் பறக்கவிடுகிறார்.

    பொங்கலுக்கு வெளியாகும் திரைப்படங்களில் எந்த படம் நம் எதிர்பார்ப்பை முழுமையாக பூர்த்தி செய்யும் என்று அதிகம் எதிர்பார்ப்போம். அதில் ஏதாவது சில படங்கள் முன் வரிசையிலும் மற்றும் ஒரு சில படங்கள் அடுத்த வரிசையிலும் இருப்பதை நாம் சிறுவயது முதல் பார்த்திருக்கிறோம். இந்த தை பொங்கலில் வெளிவந்த படங்களான கேப்டன் மில்லர், அயலான், மெரி கிறிஸ்துமஸ், ஹனுமான் மற்றும்  மிஷன் சாப்டர்-1 ஆகிய படங்களில் அதிகமாக ரசிகர்களின் மனதை கவர்ந்த அதிரடி ஆக்ஷன் படமாக மிஷன் சாப்டர்-1 இடம் பெற்றுள்ளது.


    பொதுவாக படத்தில் சண்டை என்றால் ஹீரோவுடன் ஒருவர் அல்லது   நான்கு பேர் மோதலாம் இதில் நூற்றுக்கணக்கான ஸ்டண்ட்  நடிகர்களை வைத்து ஸ்டண்ட் சில்வா அமைத்திருக்கும் சண்டைக்காட்சிகள்  படம் பார்ப்பவர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. ரசிகர்கள் படம் பார்த்துவிட்டு தியேட்டரை விட்டு வெளியே வரும்போது படம் எப்படி இருக்கிறது என்று கேட்டால் படத்தில் சண்டை காட்சிகள் பின்னி எடுத்திருக்காங்க என்றும், சண்டைக் காட்சிகள்  மிகப்பிரமாண்டமாக இருக்கின்றது என்றும்  சொல்கிறார்கள்.

    இப்படத்தில் ஜெயிலராக நடித்திருக்கும் எமி ஜாக்சனும் அதிரடி ஆக்க்ஷனில் அனல் பறக்கவிடுகிறார். இதற்கு காரணம் சண்டை பயிற்சி இயக்குனர்  'ஸ்டண்ட் சில்வா தான்.


    ஸ்டண்ட் சில்வா, இவர் இந்திய சினிமாவில் ஒரு மிக சிறந்த ஸ்டண்ட் இயக்குனர், ஸ்டண்ட் நடிகர், மற்றும் திரைப்பட இயக்குனரும் ஆவார். இந்தியாவின் மிக சிறந்த வெற்றிபட இயக்குனரான எஸ்.எஸ். ராஜமவுலி இயக்கத்தில் ஜூனியர் என்.டி.ஆர். நடிப்பில் வெளி வந்து ஆக்ஷனில் மிகப்பெரிய வெற்றி அடைந்த 'எமதொங்கா' படத்தின் மூலம் ஸ்டண்ட் இயக்கனராக அறிமுகமாகி தமிழ், தெலுங்கு, மலயாளம், கன்னடம், ஹிந்தி, மராட்டி, பெங்காலி மற்றும் சிங்களம் என பல மொழிகளில் 300 படங்களுக்கு மேலாக சண்டைபயிற்சியாளராக பணியாற்றி பல அரிய விருதுகளையும் பெற்றுள்ளார். இவர் சண்டை பயிற்சி அளிப்பது மட்டுமின்றி பல படங்களில் நடித்து நல்ல ஸ்டண்ட் நடிகர் என ரசிகர்கள் மனதில் இடம் பிடித்துள்ளார்.


    அஜித் நடிப்பில் வெளிவந்த 'மங்காத்தா' திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அனைவரையும் திரும்பி பார்க்க வைத்தவர் தான் இந்த ஸ்டண்ட் சில்வா. பிறகு அதே அஜித்துடன்  அருண் விஜய் நடிக்கும் 'என்னை அறிந்தால்' திரைப்படத்தின் சண்டைக் காட்சிகளை பற்றி சொல்லவே வேண்டாம் சும்மா திரையில் அதிர வைத்திருப்பார். இன்னும் ஒரு படி மேலே சொல்ல வேண்டுமென்றால் நடிகர் அருண் விஜய் தொடர்ந்து பிசியான நடிகராக வலம் வருவதற்கு இந்த படத்தின் சண்டைக் காட்சிகள் ஒரு உதாரணம் என்றே சொல்லலாம்.


    ஸ்டண்ட் சில்வா தமிழில் இயக்கிய முதல் திரைப்படம்  'சித்திரை செவ்வானம்' சமுத்திரக்கனி மற்றும் பிரபல நடிகை சாய் பல்லவியின்  தங்கை பூஜா நடிப்பில் 2022-ஆம் ஆண்டு வெளியான இப்படம் அனைவரது நெஞ்சையும் நெகிழ வைத்து மிகப்பெரிய எமோஷனல் வெற்றி படமாக  அமைந்தது.

    இத்திரைபடத்தின் மூலமாக சமூகத்தில் பெண் பிள்ளைகளை எவ்வாறு  பாதுகாப்பாக   வளர்க்க வேண்டும்  என்றும் சோஷியல் மீடியாவை எப்படி கையாளவேண்டும் என்பதை மையமாக வைத்து இப்படத்தை இயக்கியிருந்தார். இப்படத்திற்கு பிறகு  ஏற்கனவே ஒப்புக்கொண்ட  பல  படங்களில் ஸ்டண்ட் இயக்குனர் பணி இருந்ததால் உடனே  படங்கள் இயக்க முடியவில்லை.


    இந்நிலையில், ஸ்டண்ட் சில்வா இந்த 2024-ஆம் ஆண்டு மிக பிரமாண்டமான  சூப்பரான அதிரடி ஆக்க்ஷன் திரைப்படத்தை இயக்க போகிறார். இப்படத்தின் அப்டேட் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    ஸ்டெர்லைட் போராட்டம் தூத்துக்குடி மாவட்டத்தையே போராட்டக் களமாக மாற்றியிருக்கும் நிலையில், இந்த போராட்டத்தில் தனது உறவினரும் உயிரிழந்துள்ளதாக ஸ்டண்ட் சில்வா வருத்தம் தெரிவித்துள்ளார். #StuntSilva
    தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட தூத்துக்குடி மக்கள் கடந்த 100 நாட்களாக தொடர்ந்து போராடி வருகின்றனர். போராட்டத்தின் 100-வது நாளான நேற்று ஆயிரக்கணக்கான மக்கள் மாவட்ட ஆட்சிர் அலுவலகத்தை நோக்கி ஊர்வலமாக சென்றனர். அப்போது நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் பொதுமக்களில் 11 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இதனால் தூத்துக்குடியில் பதற்றமான சூழல் நிலவுகிறது.

    இதில் ரஞ்சித்குமார், கிளாஸ்டன், கந்தையா, தமிழரசன், சண்முகம், மாணவி வெனிஸ்டா, அந்தோணி செல்வராஜ், மணிராஜ், கார்த்திக் உள்ளிட்ட 11 பேர் பலியாகினர். மேலும் பலர் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 



    இந்த போராட்டத்தில் தனது உறவினரும் உயிரிழந்துள்ளதாக ஸ்டண்ட் சில்வா அவரது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். இதுகுறித்து ஸ்டண்ட் சில்வா கூறியிருப்பதாவது, 

    `எனது அன்புத்தங்கையின் கணவர் ஆருயிர் மாப்பிள்ளை J. செல்வராஜ் ஸ்டெர்லைட் போராட்டத்தில் அநியாயமாக போலீசாரால் சுட்டு கொல்லப்பட்டார். மிக்க வேதனையோடு பகிர்கிறேன்' என்று கூறியிருக்கிறார். #Bansterlite #SaveThoothukudi #SterliteProtest  #StuntSilva

    ×