என் மலர்
நீங்கள் தேடியது "Sudan"
- துணை ராணுவ விரைவு ஆதரவுப் படை (RSF) உறுப்பினர்களைத் தேடி வருகின்றனர்.
- ஆண் குழந்தைகள் உட்பட 221 குழந்தைகள் ராணுவ வீரர்களால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டதாக ஐநா தெரிவித்திருந்தது.
வட ஆப்பிரிக்க நாடான சூடானில் கடந்த 2023 ஆம் ஆண்டு ஏப்ரல் முதல் ராணுவத்துக்கும், கிளர்ச்சியாளர்களாக மாறிய பாராளுமன்ற துணை ராணுவப் படையினருக்கும் (RSF) இடையே உள்நாட்டுப் போர் நடந்து வருகிறது.
இரண்டு வருட போருக்குப் பிறகு, சூடானின் தலைநகர் கார்ட்டூமில் உள்ள அதிபர் மாளிகையை பாராளுமன்ற படைகளிடம் இருந்து மீட்டுள்ளதாக சூடான் ராணுவம் அறிவித்துள்ளது.
நேற்று (வெள்ளிக்கிழமை) கார்ட்டூமில் RSF கட்டுப்பாட்டில் இருந்த அதிபர் மாளிகையை சூடான் ராணுவம் முழுமையாகக் கைப்பற்றியதாக சூடான் தொலைக்காட்சி மற்றும் இராணுவ வட்டாரங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.


துணை ராணுவ விரைவு ஆதரவுப் படை (RSF) உறுப்பினர்களைத் தேடி, மாளிகையை சுற்றியுள்ள பகுதிகளில் சூடான் இராணுவம் இப்போது தேடுதல் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக வட்டாரங்கள் தெரிவித்தன.
உள்நாட்டு போரில் கடந்த 2 வருடமாக நாடு முழுவதும் பொதுமக்கள் மீது வன்முறை, வெறிச்செயல்கள் அரங்கேறி வருகின்றன. இதுவரை குறைந்தது 20,000 பேர் கொல்லப்பட்டுள்ளனர். இந்தப் போரில் 1.4 கோடிக்கும் அதிகமான மக்களை தங்கள் வீடுகளிலிருந்து விரட்டியடிக்கப்பட்டுள்ளனர். நாட்டின் சில பகுதிகள் பஞ்சத்தில் சிக்கித் தவித்து வருகிறது.

கடந்த 1 ஆண்டில் (2024இல்) மட்டும் சூடானில் ஆண் குழந்தைகள் உட்பட 221 குழந்தைகள் ராணுவ வீரர்களால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டதாக ஐநாவுக்கான குழந்தைகள் நிறுவனம் (யுனிசெப்) அறிக்கை மதிப்பிடுகிறது .
- சூடான் உள்நாட்டு போரால் மிகப்பெரும் பசி , பட்டினி நிலை உருவாகி உள்ளது.
- மக்கள் உயிர் வாழ மண், இலைகளை சாப்பிடும் அவல நிலை ஏற்பட்டு உள்ளது.
கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் சூடான் ராணுவத்திற்கும் துணை ராணுவப்படைக்கும் இடையே உள்நாட்டு போர் வெடித்தது. இந்த போர் தற்போது வரை குறைய வில்லை . இதனால் மக்கள் பசி, பட்டினியால் வாடி வருகின்றனர்.
சூடானில் தற்போது சுமார் 49 மில்லியன் மக்கள் வசித்து வருகின்றனர். இதில் 18 மில்லியன் மக்கள் உணவு தட்டுப்பாடு காரணமாக பாதிக்கப்பட்டு உள்ளனர்,

உள்நாட்டு போரில் காயம் அடைந்த 160- க்கும் மேற்பட்ட மக்கள் மற்றும் 60 - க்கும் மேற்பட்ட ஊழியர்கள் நிலை கவலைக்கிடமாக உள்ளது.
சூடானில் ஏற்பட்ட சண்டையால் விவசாய பயிர்கள் உற்பத்தி பாதிக்கப்பட்டது இதனால் மக்கள் உணவைத் தேடி வீட்டை விட்டு வெளியேறி வருகின்றனர். மக்கள் இடம் பெயர்வால் அங்கு மலேரியா மற்றும் பிற நோய்கள் பரவுகின்றன.

மேலும் சூடானுக்கு வரும் சர்வதேச உதவிகள் பட்டினியால் வாடும் பகுதிகளில் உள்ள மக்களை சென்றடைவதை ராணுவம் தடுத்து வருகிறது. சூடான் உள்நாட்டு போரால் மிகப்பெரும் பசி , பட்டினி நிலை உருவாகி உள்ளது.

உணவு பொருட்கள் அனைத்தும் தீர்ந்து விட்டதால், விவசாயிகள் நடவுக்காக வாங்கிய விதை தானியங்களை சாப்பிட்டுள்ளனர். மக்கள் உயிர் வாழ மண், இலைகளை சாப்பிடும் அவல நிலை தற்போது ஏற்பட்டு உள்ளது.
- டார்பூர் மாகாணம் எல்பேஷர் என்ற இடத்தில் துணை ராணுவ படையினர் வான் வழித்தாக்குதலில் ஈடுபட்டனர்.
- பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
சூடானில் ராணுவம் மற்றும் துணை ராணுவத்தினர் இடையே அதிகார போட்டி காரணமாக உள்நாட்டு போர் மூண்டது. இதனால் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் பசி, பட்டினியால் வாடும் சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

இதற்கிடையில் மேற்கு சூடானில் உள்ள டார்பூர் மாகாணம் எல்பேஷர் என்ற இடத்தில் துணை ராணுவ படையினர் திடீர் வான் வழித்தாக்குதலில் ஈடுபட்டனர். வான்வழியாக சரமாரியாக குண்டுகளை வீசினார்கள்.
இந்த தாக்குதலில் 9 குழந்தைகள் பரிதாபமாக இறந்தனர். 11 பேர் படுகாயம் அடைந்தனர். அவர்கள் சிகிச்சைக்காக ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதனால் அப்பகுதியில் பதற்றம் ஏற்பட்டுள்ளது.
- போரில் இதுவரை சுமார் 150,000 மக்கள் இறந்துள்ளனர். போரில் ஏற்பட்ட பஞ்சத்தால் 11 மில்லியன் மக்கள் இடம்பெயர்ந்துள்ளனர்.
- மறுத்ததால் தன்னை ராணுவ வீரர்கள் சித்திரவதை செய்து தனது கால்களை எரித்ததாக பெண் ஒருவர் கூறுகிறார்.
உள்நாட்டுப் போரினால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள ஆப்பிரிக்க நாடான சூடானில் தினமும் பெண்கள் ராணுவ வீரர்களால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட வரிசையில் நிற்கின்றனர். அவ்வாறு செய்தால் மட்டுமே தங்களது குடும்பத்துக்கு தேவையான உணவும் அத்தியாவசிய பொருட்களும் அவர்களுக்கு கிடைக்கிறது .
இதுகுறித்து கார்டியன் இதழ் வெளியிட்டுள்ள செய்தியில், பஞ்சத்தை சமாளிக்க நாடு முழுவதும் உள்ள தொழிற்சாலைகளில் இறைச்சி உள்ளிட்ட உணவுப் பொருட்கள் பதப்படுத்தப்பட்டு இருப்பு வைக்கபட்டுள்ள நிலையில் அங்கு தங்களின் குடும்பத்துக்கு தேவையான உணவை பெற்றுக்கொள்ள வரும் பெண்கள் ராணுவ வீரர்காளால் இந்த வன்கொடுமைகளுக்கு ஆளாக்கி வருகின்றனர்.
சூடான் ராணுவத்தின் இருவேறு பிரிவுகளான SAF மற்றும் RSF ஆகிய படைகளுக்கிடையே கடந்த வருடம் ஏப்ரல் மாதத்தில் ஏற்பட்ட மோதல் உள்நாட்டுப் போராக வெடித்தது. இந்த போரில் இதுவரை சுமார் 150,000 மக்கள் இறந்துள்ளனர். போரில் ஏற்பட்ட பஞ்சத்தால் 11 மில்லியன் மக்கள் இடம்பெயர்ந்துள்ளனர்.
RSF ராணுவ வீரர்கள் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளில் உள்ள பெண்கள் தொடர்ந்து பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகிவருவதாக அப்பெண்கள் பலர் கார்டியன் இதழ் கள செய்தியாளர் குழுவிடம் வாக்குமூலம் அளித்துள்ளனர்.
தங்களின் குழந்தைகளுக்கு உணவளிப்பதற்கு வேறு வழி தங்களுக்கு தெரியவில்லை என்று அவர்கள் கூறுகின்றனர். போரினால் கைவிடப்பட்ட வீடுகளில் முகாமிட்டுள்ள ராணுவ வீரர்கள் பெண்களை வரிசையில் நிறுத்தி பாலியல் வன்புணர்வு செய்கின்றனர்.
பாதிக்கப்பட்ட பெண் ஒருவர் கூறுகையில், தான் அதற்கு மறுத்ததால் தன்னை ராணுவ வீரர்கள் சித்திரவதை செய்து தனது கால்களை எரித்ததாக கூறுகிறார். கைவிடப்பட்ட வீடுகளில் உள்ள பொருட்களை எடுத்துச் சென்று விற்று அதன்மூலம் உணவு வாங்க வேண்டும் என்றால் ராணுவ வீரர்களின் நிர்பந்தத்துக்கு அடிபணித்த பிறகே அனுமதி கிடைக்கும் என்ற நிலை உள்ளது.
- கிராமத்தைச் சேர்ந்த பெண்களை RSF வீரர்கள் கடத்த முயன்றுள்ளனர்.
- சுமார் 80 கிராமவாசிகளை பாராளுமன்ற படை [RSF] வீரர்கள் சுட்டுக் படுகொலை செய்துள்ளனர்.
உள்நாட்டுப் போர்
உள்நாட்டுப் போரினால் சூடான் நாடு துண்டாடப்பட்டு வருகிறது. சூடான் ராணுவத்தின் இருவேறு பிரிவுகளான SAF மற்றும் RSF [பாராளுமன்ற படை] ஆகிய படைகளுக்கிடையே கடந்த வருடம் ஏப்ரல் மாதத்தில் ஏற்பட்ட மோதல் உள்நாட்டுப் போராக வெடித்தது.
பசி - பஞ்சம் - பாலியல் பலாத்காரம்
இந்த போரில் இதுவரை சுமார் 150,000 மக்கள் இறந்துள்ளனர். போரில் ஏற்பட்ட பஞ்சத்தால் 11 மில்லியன் மக்கள் இடம்பெயர்ந்துள்ளனர். பசியால் மக்கள் மண்ணையும், இலைகளையும் சாப்பிடும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். உணவுக்காக தினமும் ராணுவ வீரர்களால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட பெண்கள் வரிசையில் நிற்கும் அவல நிலையில்தான் தற்போது சூடான் உள்ளது.


பாராளுமன்றப் படுகொலை
இந்நிலையில் மத்திய சூடானில் உள்ள சினார்[Sinnar] மாகாணத்தில் ஜால்க்னி [Jalqni] என்ற கிராமத்தில் பாராளுமன்ற படை [RSF] வீரர்கள் சுமார் 80 கிராமவாசிகளை கடந்த வியாழனன்று சுட்டுக் படுகொலை செய்துள்ளனர்.
முன்னதாக அந்த கிராமத்தைச் சேர்ந்த பெண்களை RSF வீரர்கள் கடத்த முயன்றுள்ளனர். இதனால் ஆத்திரமற்ற கிராம மக்கள் எதிர்த்து நின்ற நிலையில் அவர்களை நோக்கி RSF வீரர்கள் சரமாரியாகத் துப்பாக்கிச்சூடு நடத்தியதில் 80க்கும் அதிகமானோர் கொல்லப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அதிகாரம்
கடந்த புதன் கிழமை அன்று ஸ்விடர்லாந்தில் அமெரிக்காவால் ஏற்பாடு செய்யப்பட்ட அமைதிப் பேச்சுவார்த்தையில் பங்கேற்க சூடான் ராணுவம் மறுத்தது குறிப்பிடத்தக்கது. சமீபத்தில் சூடான் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட சட்டத்தின்படி மக்களை எந்தவித வாரண்ட்டும் இன்றி கைது செய்யலாம் என்ற அதிகாரம் ராணுவத்துக்கு வழங்கப்பட்டதும் கவனிக்கத்தக்கது.

- விமானம் தெற்கு சூடானின் யூனிட்டி ஸ்டேட் பகுதி அருகே விழுந்து நொறுங்கியது.
- இந்த விமான விபத்தில் சுமார் 18 பேர் உயிரிழந்துள்ளனர் என தகவல் வெளியானது.
ஜூபா:
தெற்கு சூடானில் நடந்த விமான விபத்தில் சுமார் 18 பேர் உயிரிழந்துள்ளனர் என தகவல் வெளியானது.
சூடானின் வடபகுதியில் அமைந்துள்ள ஆயில்பீல்டு விமான நிலையத்தில் இருந்து புறப்பட்ட பயணிகள் விமானத்தில் 21 பேர் பயணம் செய்தனர்.
விமானம் தெற்கு சூடானின் யூனிட்டி ஸ்டேட் பகுதி அருகே இன்று விழுந்து நொறுங்கியது.
இந்த விபத்தில் விமானத்தில் பயணம் செய்த 18 பேர் உயிரிழந்துள்ளனர் என ஐக்கிய நாடுகளின் ரேடியோ மிராயா தெரிவித்துள்ளது. விபத்து குறித்த காரணம் இதுவரை தெரியவில்லை. விமான விபத்தில் 18 பேர் பலியானது அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த சில ஆண்டுகளாக சூடானில் பல்வேறு விமான விபத்துகள் நடந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
- சூடான் நாட்டில் உள்நாட்டு போர் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
- அங்கு உள்நாட்டு போரில் 200 பேர் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.
கார்டூம்:
சூடான் நாட்டில் உள்நாட்டு போர் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இங்கு ராணுவம் ஆட்சியைக் கைப்பற்றிய நிலையில், அவர்களுக்கு எதிராக துணை ராணுவம் தீவிரமாக போரிட்டு வருகிறது.
இந்த மோதலில் அப்பாவி பொதுமக்கள், ராணுவ வீரர்கள் உள்பட 5 லட்சத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.
இதற்கிடையே, சூடானின் தெற்கு பகுதியின் அல்-கடாரிஸ், அல்-கேல்லவட் கிராமத்தில் துணை ராணுவப் படையினர் பதுங்கி இருந்து செயல்படுவதாக அந்நாட்டின் ராணுவத்தினருக்கு தகவல் கிடைத்தது.
இதனால் ராணுவத்தினர் அங்கு களம் இறக்கப்பட்டனர். தொடர்ந்து ராக்கெட் குண்டுகளை வீசியும், துப்பாக்கிச் சூடு நடத்தியும் பயங்கர தாக்குதல் நடத்தப்பட்டது.
இந்நிலையில், கடந்த 3 நாளாக நீடித்து வரும் இந்தத் தாக்குதலில் தற்போதுவரை 200 பேர் கொல்லப்பட்டுள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
- ஓம்துர்மானில் உள்ள கராரி மாவட்டத்தில் மக்கள் வசிக்கும் பகுதியில் வீடு ஒன்றின் மேல் விமானமானது மோதி விபத்துள்ளது.
- நாடு முழுவதிலும் கூட்டுப் பாலியல் வன்கொடுமைகள், திட்டமிட்ட இனப்படுகொலைகள் உள்ளிட்ட போர் குற்றங்கள் நடந்து வருகிறது.
சூடானில் ராணுவ விமான விழுந்து ஏற்பட்ட பயங்கர விபத்தில் 46 பேர் கொல்லப்பட்டனர். மேலும் 10 பேர் படுகாயமடைந்தனர். ஓம்துர்மான் (Omdurman) நகருக்கு கிழக்கே உள்ள வாடி சாயிட்னா (Wadi Sayidna) ஏர் பேஸில் இருந்து ஆன்டோனோவ் ஏர்கிராப்ட் நேற்று (செவ்வாய்க்கிழமை) டேக் ஆப் செய்யப்பட்டு வானில் பறந்துகொண்டிருந்தது.
ஓம்துர்மானில் உள்ள கராரி மாவட்டத்தில் மக்கள் வசிக்கும் பகுதியில் வீடு ஒன்றின் மேல் விமானமானது மோதி வெடித்து விபத்துள்ளது. இந்த விபத்துக்கான காரணம் குறித்து தெரியவில்லை. இதில் விமானத்தில் பயணித்த ராணுவ வீரர்கள் மற்றும் வீடு உள்ள பகுதியிலிருந்த பொதுமக்கள் உட்பட 46 பேர் உயிரிழந்துள்ளதுள்ளதாக அரசு அதிகாரிகள் இன்று தெரிவித்தனர்.
சூடானில் கடந்த 2023 ஆம் ஆண்டு பாராளுமன்ற படைகளுக்கும், ராணுவ படைகளுக்கும் இடையே மோதல் ஏற்பட்டதில் இருந்து உள்நாட்டு போர் தீவிரமடைந்துள்ளது. இதனால் நாடு முழுவதிலும் கூட்டுப் பாலியல் வன்கொடுமைகள், திட்டமிட்ட இனப்படுகொலைகள் உள்ளிட்ட போர் குற்றங்கள் நடந்து வருகிறது.
- பாலியல் வன்கொடுமைக்கு ஆளான குழந்தைகளில் 30% க்கும் அதிகமானோர் சிறுவர்கள் என்று யுனிசெப் தெரிவித்துள்ளது.
- பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டவர்களில் 5 மற்றும் 4 வயதுக்கு உட்பட 16 பச்சிளம் குழந்தைகளும் அடங்குவர்.
வட ஆப்பிரிக்க நாடான சூடானில் கடந்த 2023 ஆம் ஆண்டு ஏப்ரல் முதல் ராணுவத்துக்கும், துணை ராணுவப் படையினருக்கும் இடையே உள்நாட்டுப் போர் நடந்து வருகிறது.
இதனால் நாடு முழுவதும் பொதுமக்கள் மீது வன்முறை, வெறிச்செயல்கள் அரங்கேறி வருகின்றன. இதுவரை குறைந்தது 20,000 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
இந்தப் போரில் 1.4 கோடிக்கும் அதிகமான மக்களை தங்கள் வீடுகளிலிருந்து விரட்டியடிக்கப்பட்டுள்ளனர். நாட்டின் சில பகுதிகள் பஞ்சத்தில் சிக்கித் தவித்து வருகிறது.
இந்நிலையில் சூடானில் கடந்த 1 ஆண்டில் (2024இல்) மட்டும் ஆண் குழந்தைகள் உட்பட 221 குழந்தைகள் ராணுவ வீரர்களால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டதாக ஐநாவுக்கான குழந்தைகள் நிறுவனம் (யுனிசெப்) அறிக்கை வெளியிட்டுள்ளது.

போர் தொடங்கியதில் இருந்து சுமார் 61 ஆயிரத்து 800 குழந்தைகள் இடம்பெயர்ந்துள்ளனர் என்றும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. பாலியல் வன்முறை மற்றும் கட்டாய குழந்தை திருமணங்கள் உள்ளிட்ட அட்டூழியங்கள் இரு ராணுவ தரப்பினராலும் செய்யப்பட்டதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.
பாலியல் வன்கொடுமைக்கு ஆளான குழந்தைகளில் 30% க்கும் அதிகமானோர் சிறுவர்கள் என்று யுனிசெப் தெரிவித்துள்ளது. பாதிக்கப்பட்டவர்களில் 5 மற்றும் 4 வயதுக்கு உட்பட 16 பச்சிளம் குழந்தைகளும் அடங்குவர். பதிவான வழக்குகளை தவிர்த்து இந்த எண்ணிக்கை பன்மடங்கு அதிகம் இருக்கலாம் என்ற அச்சம் சர்வதேச சமூகங்களிடையே பரவியுள்ளது.

சூடானில் கடும் பொருளாதார நெருக்கடி நீடிப்பதால் உணவு பொருட்களின் விலை உச்சத்தில் இருக்கிறது. இதனால் ஏழை மற்றும் நடுத்தர குடும்பத்தை சேர்ந்த சிறுவர், சிறுமிகள் பணத்துக்காக ஆபத்தான வேலைகளில் ஈடுபட்டு வருகிறார்கள்.
இந்த நிலையில் தலைநகர் கார்டூமில் உள்ள ஓம்டுர்மான் நகரில் ராணுவ பயிற்சி மையத்துக்கு அருகே வெடிகுண்டு ஒன்றை சிறுவர்கள் கண்டெடுத்தனர். பின்னர் அவர்கள் அந்த வெடிகுண்டில் இருந்த தாமிரத்தை பிரித்து எடுப்பதற்காக அதனை செயலிழக்க செய்ய முயன்றனர். அப்போது சற்றும் எதிர்பாராத வகையில் அந்த குண்டு வெடித்து சிதறியது. இதில் 8 சிறுவர்கள் பரிதாபமாக பலியாகினர். #Sudan #ScrapMetal #Blast