search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Sudhakar"

    • பாஜக வேட்பாளர் சுதாகர் சார்பில், வாக்காளர்களுக்கு கொடுப்பதற்காக பதுக்கப்பட்டதாக கூறப்படும் ₹4.8 கோடியை படை பறிமுதல் செய்தது
    • பாஜக வேட்பாளர் சுதாகர் மீது மதநாயக்கஹள்ளி காவல் நிலையத்தில் அதிகாரிகள் வழக்குப் பதிவு செய்தனர்

    பாஜக வேட்பாளர் சுதாகர் சார்பில், வாக்காளர்களுக்கு கொடுப்பதற்காக பதுக்கப்பட்டதாக கூறப்படும் ₹4.8 கோடியை படை பறிமுதல் செய்தது

    கர்நாடக மாநிலம் சிக்கபல்லாபூர் தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் சுதாகர் சார்பில், வாக்காளர்களுக்கு கொடுப்பதற்காக பதுக்கப்பட்டதாக கூறப்படும் ₹4.8 கோடியை ஏப்ரல் 24 அன்று பறக்கும் படை பறிமுதல் செய்தது.

    இதனையடுத்து பாஜக வேட்பாளர் சுதாகர் மீது மதநாயக்கனஹள்ளி காவல் நிலையத்தில் அதிகாரிகள் வழக்குப் பதிவு செய்தனர்.

    இந்நிலையில், பணம் பறிமுதல் செய்யப்பட்டவுடன் தேர்தல் அதிகாரி முனிஷ் முட்கலை பாஜக வேட்பாளர் சுதாகர் தொடர்புகொண்டு பேசியதாகவும் பிடிபட்ட பணத்தை விடுவிக்கும்படியும், வாட்ஸ் அப் மூலம் தகவல் அனுப்பி பணத்தை விடுவிக்க சுதாகர் உதவி கோரியதாகவும் மூத்த ஐஏஎஸ் அதிகாரி முனிஷ் மௌத்கில் போலீசில் புகார் அளித்துள்ளார்.

    இதனையடுத்து மதநாயக்கனஹள்ளி போலீசார் சுதாகர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர். 

    • பரிதாபங்கள் யூ டியூப் சேனல் மூலம் பிரபலமடைந்தவர்கள் கோபி மற்றும் சுதாகர்.
    • வடமாநில தொழிலாளர்கள் குறித்து எழுந்துள்ள பிரச்சினைகளுக்கு கோபி மற்றும் சுதாகர் தான் காரணம் என்று புகார் எழுந்துள்ளது.

    பரிதாபங்கள் என்ற யூ டியூப் சேனல் ஆரம்பித்து நகைச்சுவையான பல வீடியோக்களை வெளியிட்டு வருகின்றவர்கள் கோபி, சுதாகர். இவர்களுக்கென தனி ரசிகர்கள் பட்டாளமே உள்ளனர். இந்நிலையில், சமீபத்தில் வடமாநில தொழிலாளர்கள் குறித்து இவர்கள் வீடியோ ஒன்றை பதிவிட்டிருந்தனர்.

    இந்த வீடியோ மிகவும் டிரெண்டானது. அதில், தமிழர்கள் செய்ய மறுக்கும் வேலைகளை குறைந்த சம்பளத்துக்கு வட மாநிலத்தவர்கள் செய்வதையும், முன்பதிவு செய்யப்பட்டுள்ள ரயில் இருக்கைகளை ஆக்கிரமிக்கும் நிகழ்வினையும் இருவரும் நகைச்சுவையாக பதிவிட்டிருந்தனர்.


    சுதாகர் -கோபி

    இந்நிலையில், ஒரு சில இடங்களில் நடக்கும் தவறினால் ஒட்டுமொத்த வடமாநில தொழிலாளர்கள் மீதும் வன்மத்தை ஏற்படுத்துவது தவறானது. இதனால், பிரபல யூ டியூபர்கள் கோபி மற்றும் சுதாகர் ஆகியோரின் யூ டியூப் சேனலை தடை செய்து தமிழக அரசு இருவர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கட்டுமான பொறியாளர் சங்கத்தின் தலைவர் ஸ்ரீனிவாசன் கோரிக்கை வைத்துள்ளதாக கூறப்படுகிறது.

    மேலும், வட மாநில தொழிலாளர்கள் குறித்து எழுந்துள்ள பிரச்சினைகளுக்கு பிரபல யூடியூபர்களான பரிதாபங்கள் கோபி மற்றும் சுதாகர் தான் காரணம் என்றும் அவர்களது சேனலை தடை செய்ய வேண்டும் என்றும் பாஜகவினர் வேண்டுகோள் விடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    புவன் நல்லன் இயக்கத்தில் யோகி பாபு, யாஷிகா ஆனந்த், கோபி, சுதாகர் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி வரும் `ஜாம்பி' படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. #Zombie #YogiBabu
    எஸ் 3 பிக்சர்ஸ் சார்பில் வசந்த் மகாலிங்கம் மற்றும் முத்துக்குமார் இணைந்து தயாரிக்கும் திரைப்படம் `ஜாம்பி'. இந்த படத்தின் இரண்டாவது கட்ட படப்பிடிப்பு பரபரப்பாக நடைபெற்று வருகிறது. 15 நாட்கள் தொடர்ந்து நடைபெறும் படப்பிடிப்புடன் மொத்த காட்சிகளையும் படமாக்கி முடிக்க படக்குழு முடிவு செய்துள்ளது.

    யோகிபாபு, யாஷிகா ஆனந்த், கோபி, சுதாகர், டி.எம்.கார்த்திக், மனோபாலா, அன்பு தாசன், பிஜிலி ரமேஷ், ராமர், லொள்ளு சபா மனோகர், சித்ரா அக்கா உள்ளிட்ட பலரும் இந்த படத்தில் நடித்து வருகிறார்கள்.



    ஜாம்பிகள் மற்றும் முக்கிய நட்சத்திரங்கள் சந்திக்கும் கிளைமாக்சுக்கு முந்தைய முக்கிய காட்சிகள் சமீபத்தில் படமாக்கப்பட்டது. இந்த படத்தின் ஹைலைட்டான காட்சியான இதை ஹீலியம் விளக்கொளியில் காட்சிப்படுத்தியுள்ளார் இயக்குனர் புவன் நல்லன். சென்னை முதல் பாண்டிச்சேரி வரை உள்ள கிழக்கு கடற்கரை சாலையில் நடக்கும்படியாக காட்சிப்படுத்தப்படும் இந்த படத்தின் கதை ஒரு நாள், ஓர் இரவில் நடப்பது போல் உருவாகி வருகிறது. படத்தை கோடை விடுமுறையில் திரைக்கு கொண்டுவர திட்டமிட்டுள்ளனர். பிரேம்ஜி இந்த படத்துக்கு இசையமைக்கிறார். #Zombie #YogiBabu #YashikaAannand

    ரஜினி மக்கள் மன்றத்தில் மாவட்ட பொறுப்பாளர்கள் கூட்டத்தை புதிய நிர்வாகிகள் நடத்தி இருப்பதால் ராஜூ மகாலிங்கம், சுதாகருக்கு ரஜினி தடை விதித்திருக்கிறாரோ? என்கிற சந்தேகம் எழுந்துள்ளது. #RajuMahalingam #RajiniMakkalMandram
    சென்னை:

    அரசியல் களத்தில் குதித்துள்ள நடிகர் ரஜினிகாந்த் புதிய கட்சியின் பெயரை விரைவில் அறிவிக்க உள்ளார். மாநிலம் முழுவதும் நிர்வாகிகள் நியமனத்தை முடித்துள்ள ரஜினி உறுப்பினர் சேர்க்கையை தீவிரப்படுத்தி இருக்கிறார்.

    இதுவரை 50 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் ரஜினி மக்கள் மன்றத்தில் சேர்ந்துள்ள நிலையில், புதிதாக நியமிக்கப்பட்ட நிர்வாகிகளுடன் கலந்துரையாடல் கூட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    காலா படத்துக்கு பின்னர் தீவிர அரசியலில் ஈடுபடுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட ரஜினி, அது போன்று வேகத்தை காட்டவில்லை. அரசியல் கட்சியை தொடங்குவது எப்போது? என்கிற அறிவிப்பை வெளிப்படையாக இன்னும் அறிவிக்காத ரஜினி, மன்ற நிர்வாகிகள் கூட்டத்திலும் கலந்து கொள்ளாமலேயே உள்ளார்.

    புதிய நிர்வாகிகள் நியமனத்துக்கு பின்னர் கோடம்பாக்கத்தில் உள்ள ராகவேந்திரா திருமண மண்டபத்தில் ஆலோசனை கூட்டம் நடந்து வருகிறது. இந்த கூட்டத்தில் மாவட்டம் வாரியாக பொறுப்பாளர்கள் கலந்து கொண்டுள்ளனர்.

    கடலூர், திருச்சி, பெரம்பலூர், திருவாரூர், நாகப்பட்டினம், தஞ்சாவூர் உள்ளிட்ட 18 மாவட்ட நிர்வாகிகளின் ஆலோசனை கூட்டம் முடிந்துள்ள நிலையில் இன்றும், நாளையும் நடக்கும் கூட்டத்தில் மீதி உள்ள 12 மாவட்ட பொறுப்பாளர்கள் பங்கேற்கின்றனர்.

    இது நாள் வரையில் இந்த கூட்டத்தை நடத்தி வந்த மாநில செயலாளர் ராஜூ மகாலிங்கம், பொறுப்பாளர் சுதாகர் ஆகியோர் புதிய நிர்வாகிகள் கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை. அவர்களுக்கு பதில் ரஜினி மக்கள் மன்றத்தின் மாநில அமைப்பு செயலாளரான டாக்டர் இளவரசன், முன்னாள் போலீஸ் அதிகாரியான ராஜசேகர், தூத்துக்குடி மாவட்ட செயலாளர் ஸ்டாலின் ஆகியோர் கூட்டத்தை நடத்துகின்றனர்.

    கடந்த சில நாட்களாகவே ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகள் மீது மாவட்ட பொறுப்பாளர்கள் புகார் கூறி வந்தனர். மாநில செயலாளரான ராஜூ மகாலிங்கம் ரஜினி மக்கள் மன்றத்தில் இருந்து நீக்கப்பட்டு விட்டதாகவும் தகவல் வெளியானது. ஆனால் இதனை இன்னொரு முக்கிய நிர்வாகியான சுதாகர் மறுத்தார்.

    இந்த நிலையில் இவர்கள் 2 பேருக்கு பதிலாக மாவட்ட பொறுப்பாளர்களின் ஆலோசனை கூட்டத்தை புதிய நிர்வாகிகள் நடத்தி இருப்பது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இதன் மூலம் ராஜூ மகாலிங்கம், சுதாகர் இருவருக்கும் ரஜினி தடை விதித்திருக்கிறாரோ? என்கிற சந்தேகம் எழுந்துள்ளது.

    பொறுப்பாளர்களை வழிநடத்துவதற்காக முதன் முதலாக போடப்பட்ட நிர்வாகிகளான ராஜூ மகாலிங்கம், சுதாகர் ஆகியோர் திடீரென ஒதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக வெளியாகி இருக்கும் தகவல் நிர்வாகிகள் மத்தியில் புதிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    இது தொடர்பாக பெயர் வெளியிட விரும்பாத ரஜினி மக்கள் மன்ற நிர்வாகி ஒருவர் கூறியதாவது:-


    காலா படம் முடிந்ததும் ரஜினி அதிரடியாக அரசியலில் ஈடுபடுவார் என்கிற எண்ணம் அவர் மீண்டும் படப்பிடிப்புக்கு சென்றதும் நொறுங்கிப் போனது.

    நிர்வாகிகள் நியமனம் முடிந்ததும் ரஜினி எங்களையெல்லாம் சந்திப்பார் என்று எதிர்பார்த்து காத்திருந்தோம். அதுவும் நடக்கவில்லை. ரசிகர்களின் எண்ண ஓட்டங்களை அறிந்த மன்றத்தின் மாநில நிர்வாகிகளும் சந்திக்காமல் உள்ளனர்.

    இதுபோன்ற நடவடிக்கைகளால் அரசியல் பணிகளில் திருப்தி இல்லாமலேயே இருக்கிறோம். எங்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்கும் வகையில் ரஜினிகாந்த் அடுத்த முறை சென்னை வரும் போது நிர்வாகிகளை சந்திக்க வேண்டும். அப்போது தான் மாநிலம் முழுவதும் உள்ள பொறுப்பாளர்கள் மகிழ்ச்சி அடைவார்கள். புதிய கட்சியை தொடங்கி ரஜினி உடனடியாக தீவிர அரசியலில் ஈடுபட வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார். #RajuMahalingam #RajiniMakkalMandram #Rajinikanth
    ×