search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "suicide bomber"

    • கைது செய்யப்பட்ட பெண், தாக்குதலுக்கு திட்டமிட்டு இருந்ததாக பயங்கரவாத ஒழிப்பு படை செய்தி தொடர்பாளர் கூறி உள்ளார்.
    • பொய்யான குற்றச்சாட்டுகளை சுமத்தி மக்கள் ஒடுக்கப்படுவது நிறுத்தப்பட வேண்டும் என மக்கள் கோரிக்கை

    பாகிஸ்தான் நாட்டின் பலூசிஸ்தான் மாகாணத்தில் குவெட்டா நகரில் மஹால் பலூச் என்ற பெண்ணை பயங்கரவாத ஒழிப்பு படை சமீபத்தில் கைது செய்தது. அவரது கைப்பையில் இருந்து, தற்கொலை தாக்குதலுக்கு பயன்படுத்தும் கவச உடை மற்றும் அதனுடன் இணைக்கப்பட்ட நிலையிலான 4 முதல் 5 கிலோ எடை கொண்ட வெடிபொருட்கள் ஆகியவையும் பறிமுதல் செய்யப்பட்டன. இதுபற்றி தி எக்ஸ்பிரஸ் டிரிபியூன் பத்திரிகை வெளியிட்ட செய்தியில், பலூசிஸ்தான் விடுதலை முன்னணி பிரிவுக்கு ஆதரவளிக்கும்படி மஹால் பலூச் கட்டாயப்படுத்தப்பட்டு உள்ளார் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. அந்த பயங்கரவாத அமைப்பினரால் பலூச் பயன்படுத்தப்பட்டு உள்ளதுடன், ஆதரவு தெரிவிக்க நெருக்கடியும் கொடுக்கப்பட்டு உள்ளது.

    பலூச் அவரது குழந்தைகளிடம் இருந்து பிரிக்கப்பட்டு உள்ளார். அதன்பின்னர், தற்கொலை படை பயங்கரவாதியாக மாற்றப்பட்டு உள்ளார். பலூசிஸ்தான் தாய்மார்களும், சகோதரிகளும் தீய நோக்கங்களுக்காக பயங்கரவாத அமைப்புகளால் பயன்படுத்தப்படுகின்றனர் என்பதற்கு இது மற்றொரு எடுத்துக்காட்டு என தகவல்கள் தெரிவிக்கின்றன.

    ஆனால், பலூசிஸ்தானின் பயங்கரவாத ஒழிப்பு படை செய்தி தொடர்பாளர் கூறும்போது, குற்றச்சாட்டுக்கு ஆளான தற்கொலை படை பயங்கரவாதியான மஹால் பலூச், குவெட்டா நகரில் முக்கியம் வாய்ந்த பகுதிகளை அல்லது பாதுகாப்பு படையினரை தாக்க திட்டமிட்டு இருந்துள்ளார் என குற்றச்சாட்டாக கூறியுள்ளார்.

    எனினும், மஹால் பலூச்சை கைது செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து, ஆயிரக்கணக்கான மக்கள் பலூசிஸ்தானின் வீதிகளில் இறங்கி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கைகளில் பதாகைகளை ஏந்தியபடி சென்ற அவர்கள், உடனடியாக பலூச் விடுதலை செய்யப்பட வேண்டும். பொய்யான குற்றச்சாட்டுகளை சுமத்தி மக்கள் ஒடுக்கப்படுவது நிறுத்தப்பட வேண்டும் என கோரிக்கை விடுத்து உள்ளனர். பலூச் மீது வழக்குகளை ஜோடித்து உள்ளனர் என்றும் அவர்கள் குற்றச்சாட்டாக கூறியுள்ளனர்.

    இந்நிலையில், பலூச்சுக்கு எதிராக எப்.ஐ.ஆர். பதிவு செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அவருடன் நெட்வொர்க்கில் தொடர்புடைய மற்ற உறுப்பினர்களை கைது செய்வதற்காக பலூசிஸ்தானில் பல்வேறு இடங்களில் அதிரடி சோதனை நடத்த திட்டமிடப்பட்டு உள்ளது. 

    இலங்கையில் தொடர் குண்டுவெடிப்பு நிகழ்த்திய 9 மனித வெடிகுண்டுகள், அடையாளம் காணப்பட்டு இருப்பதாக போலீசார் தெரிவித்தனர்.
    கொழும்பு:

    இலங்கையில் கடந்த மாதம் 21-ந் தேதி ஈஸ்டர் பண்டிகை தினத்தில் 3 தேவாலயங்கள், 3 ஓட்டல்கள் உள்ளிட்ட இடங்களில் தொடர் குண்டுவெடிப்புகள் நடந்தன. இதில் 250-க்கும் மேற்பட்டோர் பலியானார்கள்.

    தேசிய தவ்ஹீத் ஜமாத் என்ற பயங்கரவாத அமைப்பு, இந்த கொடூரத்தை அரங்கேற்றி இருப்பது தெரிய வந்தது. ஒரு பெண் உள்பட 9 பேர் மனித வெடிகுண்டுகளாக செயல்பட்டு இருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டது.

    இந்நிலையில், இந்த மனித வெடிகுண்டுகள் அனைவரும் அடையாளம் காணப்பட்டு இருப்பதாக இலங்கை போலீசார் தெரிவித்தனர். இதுகுறித்து போலீஸ் செய்தித்தொடர்பாளர் ருவன் குணசேகரா கூறியதாவது:-

    எல்லா மனித வெடிகுண்டுகளும் மரபணு சோதனை மூலம் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இந்த மனித வெடிகுண்டுகளில், தேசிய தவ்ஹீத் ஜமாத் தலைவராக இருந்த முகமது ஜஹ்ரானும் ஒருவர் என்பதும் இந்த சோதனை மூலம் கண்டறியப்பட்டுள்ளது. அவர் ஷாங்கிரி லா ஓட்டலில் குண்டு வெடிப்பை நிகழ்த்திவிட்டு பலியானார்.

    தொடர் குண்டுவெடிப்பில் தொடர்புடையதாக சந்தேகத்தின்பேரில் 89 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் சி.ஐ.டி. போலீசார் மற்றும் பயங்கரவாத புலனாய்வு துறையினரின் கட்டுப்பாட்டில் வைத்து விசாரிக்கப்பட்டு வருகிறார்கள்.

    சந்தேகத்துக்குரிய மேலும் பலரை பிடிப்பதற்காக நாடு முழுவதும் சோதனை நடந்து வருகிறது. இருப்பினும், பெரும்பாலானவர்கள் கைது செய்யப்பட்டு விட்டனர்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    இலங்கையில் நடத்தப்பட்ட வெடிகுண்டு தாக்குதலில் தொடர்புடைய தற்கொலைப்படை பயங்கரவாதிகளுள் ஒருவர் இங்கிலாந்தில் படித்தவர் என பாதுகாப்புத்துறை தெரிவித்துள்ளது. #SrilankanBlasts
    கொழும்பு:

    இலங்கை தலைநகர் கொழும்புவில் கடந்த ஞாயிறன்று பயங்கரவாதிகள் நிகழ்த்திய தொடர் வெடிகுண்டு தாக்குதலில் தேவாலயங்கள், நட்சத்திர ஓட்டல்கள் தகர்க்கப்பட்டன. இந்த தாக்குதலில்  359 பேர் உயிரிழந்தனர். மேலும் 500-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். 
     
    தாக்குதல்கள் தொடர வாய்ப்புள்ளது. ஆயுதங்கள் மற்றும் வெடிகுண்டுகளுடன் இலங்கையில் மேலும் பலர் பதுங்கியிருப்பதாக கிடைத்த தகவலை தொடர்ந்து, அங்கு வாகன சோதனை, தேடுதல் வேட்டை தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது.

    இதற்கிடையே, இன்று காலை நடத்தப்பட்ட வாகன சோதனையில் மேலும் ஒரு வெடிகுண்டு கண்டறியப்பட்டது.

    இந்நிலையில், இலங்கையில் தாக்குதல் நடத்திய தற்கொலைப்படை பயங்கரவாதிகளில் ஒருவர் இங்கிலாந்தில் படித்தவர் என்பதும், அவரது பெயர் அப்துல் லத்தீப் ஜமீல் மொகமது எனவும் பாதுகாப்பு துறை தெரிவித்துள்ளது.

    இவர் இங்கிலாந்தின் தென்கிழக்கே கடந்த 2006 -2007ம் ஆண்டு படித்தவர் என்பதும், மேற்படிப்பை ஆஸ்திரேலியாவில் முடித்தவர் என்பதும் விசாரணையில் தெரிய வந்துள்ளது என அதிகாரிகள் தெரிவித்தனர். #SrilankanBlasts
    ஆப்கானிஸ்தான் அரசு மற்றும் தலிபான் பயங்கரவாதிகளுக்கு இடையேயான அமைதி பேச்சுவார்த்தை தொடர்பாக ரஷியா விடுத்த அழைப்பை தலிபான்கள் ஏற்றுக்கொண்ட நிலையில், ஆப்கானிஸ்தான் அரசு அழைப்பை நிராகரித்துள்ளது. #Afghanistan #Taliban
    காபுல் :

    முன்னர் சோவியத் யூனியனாக இருந்த தற்போதைய ரஷியா, ஐரோப்பிய நாடுகளுக்கு எண்ணெய் குழாய் பதிப்பதற்காக ஆப்கானிஸ்தானை பகடைகாயாக பயன்படுத்தி அந்நாட்டிற்குள் நுழைந்தது. இதனால், அதிர்ச்சியடைந்த அமெரிக்கா மற்றும் பாகிஸ்தான் ஆப்கானிஸ்தானில் இருந்து சோவியத் யூனியனை வெளியேற்ற திட்டம் தீட்டியது.

    இதனால், பாகிஸ்தானின் மதரசாக்களில் படித்துக் கொண்டிருந்த மாணவர்களுக்கு அமெரிக்காவின் துணையோடு ஆயுதப் பயிற்சி அளித்து சோவியத் யூனியன் படைகளை எதிர்த்துப் போரிடத் தயார் செய்தது பாகிஸ்தான் அரசு. அவர்களே பின்னாளில் தலிபான்களாக மாறினர்.

    தலிபான்கள் என்றால் மாணவர்கள் என்று அர்த்தம். பின்னர், 90-களில் அவர்கள் ஆப்கானிஸ்தானில் ஆட்சியைக் கைப்பற்றிய பிறகு  அமெரிக்கா தொடர்ந்து அவர்களுக்கு உதவி செய்து வந்தது. இந்த காட்டுமிராண்டிக் கூட்டத்தின் கையில் சிக்கி நாடு சின்னாபின்னாமானது. ஆனால், தலிபான்களின் மனித உரிமை மீறல் கொடுமைகளை அமெரிக்கா கண்டுகொள்ளவில்லை. ஆனால், இரட்டை கோபுர தாக்குதலுக்கு பிறகு பிறகுதான் அமெரிக்காவிற்கு எதிரியாக மாறிப்போனது தலிபான் அமைப்பு.

    அப்போது முதலாக ஆப்கானிஸ்தானில் அரசு படைக்கும், தலிபான் பயங்கரவாதிகளுக்கும் இடையே சுமார் 17 ஆண்டுகளாக உள்நாட்டு போர் நடைபெற்று வருகிறது. நாட்டின் பல பகுதிகளை பிடித்து வைத்துள்ள தலிபான் பயங்கரவாதிகள் தினம்தோறும் பாதுகாப்பு படையினருடன் ஆக்ரோஷமாக சண்டையிட்டு வருகின்றனர்.

    அவ்வப்போது ஆப்கானிஸ்தான் அரசு அறிவிக்கும் போர் நிறுத்தங்களுக்கும் சம்மதிக்காமல் ரத்த வெறியுடனே தலிபான் பயங்கரவாதிகள் சுற்றித் திரிந்தனர். சமீபத்தில் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு மீண்டும் ஒரு இடைக்கால போர்நிறுத்தத்துக்கு அதிபர் அஷ்ரப் கானி கடந்த 19-ம் தேதி அழைப்பு விடுத்தார். ஆனால் அதை தலிபான்கள் நிராகரித்தனர்.



    இந்நிலையில், ஆப்கானிஸ்தான் அரசுக்கும், தலிபான் அமைப்பினருக்கும் இடையே அமைதி பேச்சுவார்த்தை நடத்த தேவையான உதவிகளை ரஷியா செய்யும் என அறிவிப்பு வெளியானது. இதற்காக அமெரிக்கா, ஆப்கானிஸ்தான் மற்றும் தலிபான் அமைப்பை சேர்ந்த பிரதிநிதிகள் பங்கேற்கும் பேச்சுவார்த்தை கூட்டத்தை மாஸ்கோவில் நடத்தவுள்ளதாக ரஷியா அறிவித்தது.

    ஆனால், இந்த பேச்சுவார்த்தையில் பங்கேற்க விருப்பம் இல்லை என ஆப்கானிஸ்தான் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தலிபான் மற்றும் ஆப்கானிஸ்தான் அரசுக்கு இடையிலான பிரச்சனைகளை இரண்டு தரப்புமே நேரடியாக பேசி தீர்த்துக்கொள்ளும் இதில், மூன்றாவது நபரின்(நாட்டின்) தலையீடு தேவையில்லை என அந்நாடு ரஷியாவிற்கு தெரிவித்துள்ளது.

    மேலும், ஆப்கானிஸ்தான் அரசு அழைக்கும் அமைதி பேச்சுவார்த்தையில் வேண்டுமானால் ஆக்கப்பூர்வமாக பங்கேற்க தலிபான் அமைப்புக்கு ரஷியா அழுத்தம் கொடுக்க முயற்சிக்கலாம் என கூறி ரஷியாவின் முயற்சிக்கு முட்டுக்கட்டை போட்டுள்ளது.

    இதற்கிடையே, ரஷியாவின் அமைதி பேச்சுவார்த்தையை ஏற்றுக்கொள்வதாக அறிவித்துள்ள தலிபான்கள் அந்த கூட்டத்திற்கு தங்களது தரப்பின் மூத்த உறுப்பினரை அனுப்பி வைக்க உள்ளதாக தெரிவித்துள்ளது.

    ஆப்கானிஸ்தானில் உள்ள தலிபான்களுக்கு ரஷியா வான்வழி உதவிகளை வழ்ங்கி வருகிறது என சமீபத்தில் அமெரிக்க தளபதி ஒருவர் குற்றச்சாட்டை கூறியிருந்த நிலையில் இந்த அமைதி பேச்சுவார்த்தைக்கு ரஷியா முயன்றுள்ளது குறிப்பிடத்தக்கது. #Afghanistan #Taliban
    ஆப்கானிஸ்தானில் நிகழ்ந்த பயங்கரவாத தாக்குதலில் பாதுகாப்புப்படை வீரர்கள் 11 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
    காபூல்:

    ஆப்கானிஸ்தான் நாட்டின் மேற்கு பகுதியில் அமைந்துள்ள பாரா மாகாணத்தில் இருக்கும் சோதனைச்சாவடி மீது பயங்கரவாதிகள் இன்று திடீர் தாக்குதல் நடத்தினர். இதில், ஆப்கானிஸ்தான் பாதுகாப்புப்படை வீரர்கள் 11 பேர் பரிதாபமாக சம்பவ இடத்திலேய உயிரிழந்துள்ளதாக முதல் கட்ட தகவல் வெளியாகியுள்ளது.

    தாக்குதல் நடந்த பாரா மாகாண கவர்னரின் செய்தித்தொடர்பாளர் முகமது நாசர் மேஹ்ரி ஊடகங்களிடம் கூறுகையில், பாலா பலக் மாவட்டத்தின் சோதனைசாவடி மீது பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்திய பிறகு பாதுகாப்புப்படை எதிர்த்தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில் 9 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர். மேலும், 13 பேர் படுகாயம் அடைந்துள்ளனர் என தெரிவித்தார்.

    மேலும், இந்த தாக்குதலுக்கு இதுவரை எந்த பயங்கரவாத இயக்கமும் பொறுப்பேற்காத நிலையில், இந்த தாக்குதலை நடத்தியது தலிபான் இயக்கம் தான் எனவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.
    ஆப்கானிஸ்தானில் நிகழ்ந்த தற்கொலைப்படை தாக்குதலில் பொதுமக்கள் 10 பேர் பரிதாபமாக உடல் சிதறி உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. #AfghanBlast
    காபூல் :

    ஆப்கானிஸ்தானில் உள்ள ஜலாலாபாத் நகரில் இருக்கும் பெட்ரோல் பங்க் அருகே திடீரென இன்று பயங்கர சத்தத்துடன் குண்டு வெடித்தது. தற்கொலைப்படை நடத்திய இந்த தாக்குதலில் பொதுமக்கள் 10 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உடல் சிதறி உயிரிழந்துள்ளதாக முதல்கட்ட தகவல் வெளியாகியுள்ளது.

    மேலும், படுகாயம் அடைந்த 4 பேர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த தாக்குதலுக்கு இதுவரை எந்த பயங்கரவாத அமைப்பும் பொறுப்பேற்கவில்லை. #AfghanBlast
    ஈராக்கின் தலைநகரான பாக்தாத்தில் மக்கள் அதிகம் கூடும் பூங்கா ஒன்றில் நேற்று இரவு தற்கொலைப்படை நடத்திய தாக்குதலில் 7 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.#Suicideattack
    பாக்தாத்:

    இஸ்லாமியர்கள் பெரும்பான்மையாக வாழும் ஈராக் நாட்டின் பாக்தாத் நகரில், தற்போது இஸ்லாமியர்களின் புனித மாதமான ரமலான் கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

    இந்நிலையில் நேற்று இரவு மக்கள் அதிகம் கூடும் பூங்கா ஒன்றில் தற்கொலைப்படை மூலம் வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதுதொடர்பாக காவல்துறை அதிகாரிகள் கூறுகையில், 'சந்தேகத்துக்கு உரிய நபர் நுழையும்போதே காவல்துறையினர் அவரை தடுக்க முயன்றுள்ளனர். இருப்பினும் அவர்களை மீறி உள்ளே சென்ற அந்த நபர் தன் உடலில் மறைத்து வைத்திருந்த வெடிகுண்டை வெடிக்க செய்துள்ளான்' என தெரிவித்துள்ளனர்.

    மேலும், பூங்காவின் முன்பகுதியிலேயே அவன் வெடிகுண்டை வெடிக்கச்செய்ததால் பாதிப்புகள் குறைவு எனவும் போலீசார் கூறியுள்ளனர்.

    இந்த வெடிகுண்டு தாக்குதலில் சுமார் 7 பேர் இதுவரை உயிரிழந்துள்ளதாகவும், 16 பேர் படுகாயம் அடைந்து சிகிச்சை பெற்று வருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இச்சம்பவத்துக்கு இதுவரை எந்த பயங்கரவாத அமைப்பும் பொறுப்பேற்கவில்லை.

    ஐ.எஸ் பயங்கரவாத அமைப்பினர் வடக்கு மற்றும் தெற்கு ஈராக் பகுதிகளில் பாதுகாப்பு படையினர் மீது தாக்குதல் நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது. #Baghdad #Suicideattack
    ×