என் மலர்
நீங்கள் தேடியது "sunainaa"
- இயக்குனர் டோமின் டி சில்வா இயக்கத்தில் உருவான படம் 'ரெஜினா'.
- இப்படம் ஜூன் 23-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது.
மலையாள இயக்குனர் டோமின் டி சில்வா இயக்கத்தில் உருவான படம் 'ரெஜினா'. இப்படத்தில், சுனைனா கதாநாயகியாக நடித்துள்ளார். எல்லோ பியர் புரொடக்ஷன் தயாரிப்பில் உருவான இப்படத்திற்கு சதீஷ் நாயர் இசையமைத்துள்ளார். இப்படத்தின் பாடல்களை யுகபாரதி, விவேக் வேல்முருகன், விஜயன் வின்சென்ட் மற்றும் இஜாஸ்.ஆர் எழுதியுள்ளனர். இப்படத்தை பவி கே. பவன் ஒளிப்பதிவு செய்துள்ளார். இப்படம் ஜூன் 23-ஆம் தேதி தமிழ், மலையாளம் என பல மொழிகளில் திரையரங்குகளில் வெளியானது.

ரெஜினா போஸ்டர்
இந்நிலையில், 'ரெஜினா' திரைப்படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படம் நாளை (ஜூலை 25) அமேசன் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது. இதனை படக்குழு போஸ்டர் ஒன்றை பகிர்ந்து அறிவித்துள்ளனர்.
- நடிகை சுனைனா தமிழில் பல படங்களில் நடித்துள்ளார்.
- இவர் ‘தெறி’ திரைப்படத்தில் கேமியோ கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
கடந்த 2008-ஆம் ஆண்டு 'காதலில் விழுந்தேன்' திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானவர் சுனைனா. இந்த படத்தில் சுனைனா நடிப்பு பெரும் கவனம் பெற்றது. இதைத்தொடந்து 'மாசிலாமணி', 'வம்சம்', 'நீர்பறவை', 'சமர்' என பல படங்களில் நடித்தார்.

இவர் 'தெறி' படத்தில் விஜய்யுடன் சிறிய கேமியோ கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இதை தவிர முன்னணி நடிகர்கள் யாருடனும் சுனைனா ஜோடி சேரவில்லை. சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான 'ரெஜினா' திரைப்படம் கலவையான விமர்சனத்தை பெற்றது. தொடர்ந்து சுனைனா பல வெப் தொடர்களிலும் படங்களிலும் நடித்து வருகிறார்.

இந்நிலையில், இவர் தற்போது சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ள புகைப்படம் ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. அதாவது, கையில் டிரிப்ஸ் ஏறுவது போலவும் மூக்கில் டியூப் வைத்திருப்பது போலவும் சுனைனா 'தம்ஸ் அப்' சிக்னலுடன் ஒரு போட்டோவை பதிவிட்டுள்ளார். இதனுடன் சேர்த்து, "எனக்கு சிறிது நேரம் கொடுங்கள். நான் திரும்பி வருவேன்…" என்று பதிவிட்டுள்ளார். இதற்கு விரைவில் குணமடைந்து வருமாறு ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.
Give me some time… I will be back soon :) pic.twitter.com/WboqbO04sI
— Sunainaa Yeellaa (@TheSunainaa) October 20, 2023