என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "SunPictures"

    • ராயன் படத்தில் நடிக்கும் முக்கிய கதாபாத்திரங்களை படக்குழு வெளியிட்டு வருகிறது.
    • 'ராயன்' படத்தில் நடிகர் எஸ்.ஜே.சூர்யா நடிப்பதாக நேற்று அறிவிக்கப்பட்டது.

    தனுஷ் இயக்கி நடிக்கும் அவரின் 50-வது படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் கடந்த 19ம் தேதி வெளியானது. டி50 என அறியப்பட்ட இப்படத்திற்கு ராயன் என பெயரிடப்பட்டுள்ளது. சன் பிக்சர்ஸ் நிறுவனம் இப்படத்தை தயாரித்துள்ளது.

    ராயன் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டுள்ள படக்குழு, தமிழ், தெலுங்கு,ஹிந்தி ஆகிய மூன்று மொழியில் இப்படம் வெளியாகும் என தெரிவித்துள்ளது.

    இப்படத்திற்கு இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். காளிதாஸ் மற்றும் சந்தீப் கிஷன் உள்ளிட்டோர் இணைந்து நடித்துள்ள இத்திரைப்படம் இந்த ஆண்டே வெளியாகும் என பட நிறுவனம் அறிவித்துள்ளது. 

    இதற்கிடையே, ராயன் படத்தில் நடிக்கும் முக்கிய கதாபாத்திரங்களை படக்குழு வெளியிட்டு வருகிறது. அந்த வகையில், நேற்று ராயன் படத்தில் எஸ்.ஜே.சூர்யா நடிப்பதாக போஸ்டருடன் வெளியிடப்பட்டது.

    இந்நிலையில், 'ராயன்' படத்தில் நடிகர் எஸ்.ஜே.சூர்யாவை தொடர்ந்து, இயக்குனர் செல்வராகவனும் இணைந்துள்ளதாக சன் பிக்சர்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.

    இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள பதிவில், செல்வராகவனின் போஸ்டருடன், "ராயன் உலகத்தில் செல்வராகவனை அறிமுகம் செய்கிறோம்" என குறிப்பிடப்பட்டுள்ளது.

    • “உங்களை இயக்குவேன் என நினைத்துக்கூட பார்க்கவில்லை” என இயக்குநர் செல்வராகவன் நடிப்பது குறித்து தனுஷ் நெகிழ்ச்சியாக பதிவிட்டுள்ளார்.
    • இப்படம் தமிழ், தெலுங்கு,ஹிந்தி ஆகிய மூன்று மொழிகளில் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    "உங்களை இயக்குவேன் என நினைத்துக்கூட பார்க்கவில்லை" என 'ராயன்' படத்தில் இயக்குநர் செல்வராகவன் நடிப்பது குறித்து X தளத்தில் நடிகர் தனுஷ் நெகிழ்ச்சியாக பதிவிட்டுள்ளார்.

    "வாய்ப்பிற்கு நன்றி இயக்குநர் சார். உங்களை நினைத்து பெருமை கொள்கிறேன்" என இயக்குநர் செல்வராகவன் அதற்கு பதிலளித்துள்ளார்.

    தனுஷ் இயக்கி நடிக்கும் அவரின் 50-வது படத்திற்கு ராயன் என பெயரிட்டுள்ளனர். இப்படம் தமிழ், தெலுங்கு,ஹிந்தி ஆகிய மூன்று மொழிகளில் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இப்படத்திற்கு இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். காளிதாஸ் மற்றும் சந்தீப் கிஷன் உள்ளிட்டோர் இணைந்து நடித்துள்ள இத்திரைப்படம் இந்த ஆண்டே வெளியாகும் என பட நிறுவனம் அறிவித்துள்ளது.

    இந்நிலையில், 'ராயன்' படத்தில் நடிகர் எஸ்.ஜே.சூர்யாவை தொடர்ந்து, இயக்குனர் செல்வராகவனும் இணைந்துள்ளதாக சன் பிக்சர்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது. இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள பதிவில், செல்வராகவனின் போஸ்டருடன், "ராயன் உலகத்தில் செல்வராகவனை அறிமுகம் செய்கிறோம்" என குறிப்பிடப்பட்டுள்ளது.

    ×