search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Sureshkumar"

    • நடிகை கீர்த்தி சுரேஷ் தமிழ், தெலுங்கு, மலையாளம் என பல மொழிகளில் நடித்து வருகிறார்.
    • இவர் நடித்துள்ள ‘மாமன்னன்’ திரைப்படம் விரைவில் வெளியாகவுள்ளது.

    தென்னிந்திய திரையுலகின் முன்னணி நடிகையான கீர்த்தி சுரேஷ், தமிழில் 'இது என்ன மாயம்' படத்தின் மூலம் அறிமுகமானார். இவர் நடிகையர் திலகம் படத்திற்காக தேசிய விருது பெற்றார். அண்மையில் இவர் நடித்த 'தசரா' திரைப்படம் ரூ.100 கோடிக்கு மேல் வசூல் செய்தது. தற்போது தமிழில் உதயநிதியுடன் மாமன்னன் படத்திலும் நடித்து முடித்துள்ளார்.


    கீர்த்தி சுரேஷ்

    சில தினங்களுக்கு முன்பு கீர்த்தி சுரேஷும் துபாய் தொழில் அதிபர் பர்ஹான் என்பவரும் ஒரே மாதிரி நிறம் மற்றும் டிசைனில் உடை அணிந்து புகைப்படம் எடுத்து வெளியிட்டனர். இதையடுத்து பர்ஹானை கீர்த்தி சுரேஷ் காதலிப்பதாகவும் அவரை திருமணம் செய்ய இருப்பதாகவும் வலைத்தளத்தில் தகவல் பரவி பரபரப்பானது.


    குடும்பத்துடன் கீர்த்தி சுரேஷ்

    இதற்கு கீர்த்தி சுரேசின் தந்தையும் சினிமா தயாரிப்பாளருமான சுரேஷ்குமார் மறுப்பு தெரிவித்து வீடியோ வெளியிட்டுள்ளார். அதில், "கீர்த்தி சுரேஷும் பர்ஹானும் நண்பர்கள். எங்கள் குடும்பத்தில் ஒருவராகவே பர்ஹான் இருக்கிறார். இதுபோன்ற தவறான தகவலை பரப்புவது எங்கள் குடும்பம் மட்டுமன்றி அவரது குடும்பத்தையும் பாதிக்க செய்யும். இதுபோன்ற ஆதாரம் இல்லாத தகவல்களை தயவு செய்து வெளியிட வேண்டாம். கீர்த்திக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டால் கண்டிப்பாக நானே முதலில் அறிவிப்பேன்'' என்று தெரிவித்துள்ளார்.

    • 3 சுற்றுகளில் புட்டண்ணா முன்னிலை வகித்தார்.
    • ஒட்டு மொத்தமாக 15 சுற்றுலாக ஓட்டு எண்ணிக்கை நடந்திருந்தது.

    பெங்களூரு :

    கர்நாடக சட்டசபை தேர்தலில் நேற்று ஓட்டு எண்ணிக்கை நடைபெற்றது. இந்த தேர்தலில் பெங்களூரு ராஜாஜிநகர் தொகுதியில் பா.ஜனதா மற்றும் காங்கிரஸ் கட்சிகள் இடையே கடும் போட்டி நிலவியது. பா.ஜனதா சார்பில் தற்போது எம்.எல்.ஏ.வாக இருக்கும் சுரேஷ்குமாரும், காங்கிரஸ் சார்பில் புட்டண்ணாவும் களத்தில் இருந்தனர்.

    பா.ஜனதா கட்சியில் மேல்-சபை உறுப்பினராக (எம்.எல்.சி) இருந்த புட்டண்ணா, அந்த பதவியை ராஜினாமா செய்துவிட்டும், பா.ஜனதாவில் இருந்து விலகியும் காங்கிரஸ் கட்சியில் சேர்ந்திருந்தார். அவருக்கு காங்கிரஸ், ராஜாஜிநகர் தொகுதியில் போட்டியிட சீட் வழங்கி இருந்தது. இந்த நிலையில், நேற்று நடந்த ஓட்டு எண்ணிக்கையின் போது முதல் 3 சுற்றுகளில் புட்டண்ணா முன்னிலை வகித்தார். அதன்பிறகு, சுரேஷ்குமாருக்கு அதிக ஓட்டுகள் கிடைத்ததால் இருவரும் மாறி, மாறி முன்னிலை பெற்று வந்தனர்.

    ஒட்டு மொத்தமாக 15 சுற்றுலாக ஓட்டு எண்ணிக்கை நடந்திருந்தது. இறுதியில் ராஜாஜிநகர் தொகுதியில் பா.ஜனதா வேட்பாளரும், முன்னாள் மந்திரியுமான 7 ஆயிரத்து 914 ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருந்தார். காங்கிரஸ் வேட்பாளர் புட்டண்ணா 50 ஆயிரத்து 306 வாக்குகளும், சுரேஷ்குமார் 58 ஆயிரத்து 220 ஓட்டுகளும் பெற்றிருந்தனர்.

    ×