என் மலர்![tooltip icon](/images/info-tooltip.svg)
முகப்பு » Surface Buds
நீங்கள் தேடியது "Surface Buds"
ஆப்பிள் நிறுவனத்தின் ஏர்பாட்ஸ் இயர்பட்ஸ்களுக்கு போட்டியாக மைக்ரோசாஃப்ட் நிறுவனம் வயர்லெஸ் இயர்பட்ஸ்களை உருவாக்கி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. #Microsoft
சர்வதேச சந்தையில் வயர்லெஸ் இயர்பட்ஸ்கள் டிரெண்ட் ஆகி வருகிறது. சந்தையில் பல்வேறு நிறுவனங்களும் ஆப்பிள் நிறுவனத்தின் ஏர்பாட்ஸ்க்கு போட்டியாக சொந்த வயர்லெஸ் இயர்பட்ஸ்களை உருவாக்கும் பணிகளில் ஈடுபட்டுள்ளன.
சில நிறுவனங்கள் ஏற்கனவே வயர்லெஸ் இயர்பட்ஸ்களை அறிமுகம் செய்துவிட்ட நிலையில், மைக்ரோசாஃப்ட் நிறுவனமும் சொந்தமாக இயர்பட்ஸ்களை உருவாக்கும் பணிகளில் ஈடுபட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. மைக்ரோசாஃப்ட் வயர்லெஸ் இயர்பட்ஸ் சர்ஃபேஸ் பட்ஸ் என அழைக்கப்படலாம் என கூறப்படுகிறது.
![](https://img.maalaimalar.com/InlineImage/201904171335380507_1_Surface-Earbuds._L_styvpf.jpg)
புதிய இயர்பட்ஸ்களை மைக்ரோசாஃப்ட் மொரிசன் என்ற பெயரில் உருவாக்கி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. முந்தைய சாதனங்களில் மைக்ரோசாஃப்ட் வானியல் சார்ந்த பெயர்களை சூட்டுவதை மைக்ரோசாஃப்ட் வாடிக்கையாக கொண்டிருந்தது. மைக்ரோசாஃப்ட் ஏற்கனவே ஆடியோ சாதனங்கள் சந்தையில் சர்ஃபேஸ் ஹெட்போன்களை கடந்த ஆண்டு அறிமுகம் செய்தது.
இதைத் தொடர்ந்து மைக்ரோசாஃப்ட் சர்ஃபேஸ் இயர்பட்ஸ்களை உருவாக்கி வருகிறது. இந்த இயர்பட்ஸ்களின் சிறப்பம்சங்கள் பற்றி இதுவரை தெளிவான விவரங்கள் வெளியாகவில்லை. எனினும், இதில் கார்டணா வசதி நிச்சயம் வழங்கப்படும் என கூறப்படுகிறது. இந்த வசதியை கொண்டு மொபைலில் தகவல்களை மிக எளிமையாக வாசிக்க முடியும்.
சிரி, அலெக்சா போன்ற வாய்ஸ் அசிஸ்டண்ட் சேவைகள் இயர்போன்களில் வழங்கப்பட்டு இருக்கும் நிலையில் மைக்ரோசாஃப்ட் சாதனத்தில் வாய்ஸ் அசிஸ்டண்ட் சேவை எந்தளவு வித்தியாசமாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
புகைப்படம் நன்றி: thurrott
×
X