என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Suri"

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • இந்த படம் இந்த வாரம் வெள்ளிக்கிழமை ஆகஸ்ட் 23 ஆம் தேதி அன்று வெளியாக உள்ளது.
    • படத்தின் புதிய போஸ்டர் ஒன்றை படக்குழு வெளியிட்டுள்ளது.

    கடந்த 2022 ஆம் ஆண்டு இந்தியா சார்பில் ஆஸ்கார் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட கூழாங்கல் படத்தை இயக்கிய அறிமுக இயக்குநர் பிஎஸ் வினோத்ராஜ் தனது அடுத்த படைப்பாக கொட்டுக்காளி திரைப்படத்தை இயக்கியுள்ளார்.

    சிவகார்த்திகேயன் தயாரிப்பில் சூரி நடிப்பில் உருவாகி இருக்கும் இந்த படம் பல சர்வதேச திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டு மக்களின் ஆதரவைப் பெற்றுப் பல விருதுகளையும் வென்றுள்ளது. இந்த படம் இந்த வாரம் வெள்ளிக்கிழமை ஆகஸ்ட் 23 ஆம் தேதி அன்று வெளியாக உள்ளது.

    'கொட்டுக்காளி' திரைப்படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி மக்களின் கவனத்தைப் பெற்றது. படத்தின் ப்ரோமோஷன் பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்நிலையில் படத்தின் புதிய போஸ்டர் ஒன்றை படக்குழு வெளியிட்டுள்ளது. நடிகர் சூரி பகிர்ந்துள்ள அந்த போஸ்டரில் படம் வெளியாக இன்னும் 4 நாட்கள் தான் உள்ளது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.  

    • இயக்குநர் பிஎஸ் வினோத்ராஜ் தனது அடுத்த படைப்பாக கொட்டுக்காளி திரைப்படத்தை இயக்கியுள்ளார்.
    • படத்தில் இசையமைப்பாளர் இல்லாதது படத்தின் எதிர்பார்ப்பை இன்னும் அதிகரித்துள்ளது

    கடந்த 2022 ஆம் ஆண்டு இந்தியா சார்பில் ஆஸ்கார் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட கூழாங்கல் படத்தை இயக்கிய அறிமுக இயக்குநர் பிஎஸ் வினோத்ராஜ் தனது அடுத்த படைப்பாக கொட்டுக்காளி திரைப்படத்தை இயக்கியுள்ளார்.

    சிவகார்த்திகேயன் தயாரிப்பில் சூரி நடிப்பில் உருவாகி இருக்கும் இந்த படம் பல சர்வதேச திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டு மக்களின் ஆதரவைப் பெற்றுப் பல விருதுகளையும் வென்றுள்ளது. இந்த படம் இந்த வாரம் வெள்ளிக்கிழமை ஆகஸ்ட் 23 ஆம் தேதி அன்று வெளியாக உள்ளது.

    சூரி, அன்னா பென் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகி உள்ள 'கொட்டுக்காளி' திரைப்படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி மக்களின் கவனத்தை பெற்றது. இந்த படம் நாளை மறுநாள் ஆகஸ்ட் 23 ஆம் தேதி வெள்ளிக்கிமை வெளியாக உள்ளது.

    படத்தில் இசையமைப்பாளர் இல்லாதது படத்தின் எதிர்பார்ப்பை இன்னும் அதிகரித்துள்ளது. இந்நிலையில் இயக்குனர் பிஎஸ் வினோத்ராஜ், நடிகர் சூரி மற்றும் பிற நடிகர்கள் சூட்டிங் ஸ்பாட் அனுபவம் மற்றும் படத்தின் கதை  குறித்து பேசும் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது.

    கொட்டுக்காளி என்பது தென் தமிழக பகுதிகளில் சாதாரணமாக புழக்கத்தில் உள்ள ஒரு வார்த்தைதான். ஒரு பெண் தனக்கு விருப்பமானதை செய்யும்போதும், அது ஊராருக்கு தவறாக தெரிந்தால் அந்த பெண்ணை அவர்கள் கொட்டுக்காளி என்று அழைப்பார்கள் என்று இயக்குனர் பிஎஸ் வினோத்ராஜ் அந்த வீடியோவில் தெரிவித்துள்ளார். மேலும் இதுபோல சூரியும், நடிகை அன்னா பென் உள்ளிட்டோரும் படம் குறித்த தங்களது பார்வையை அந்த வீடியோவில்  பகிர்ந்துள்ளனர்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • இப்படத்திற்கு இளையராஜா இசையமைத்திருந்தார்.
    • விடுதலை 2 ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது.

    வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி, விஜய் சேதுபதி இணைந்து நடித்து கடந்த ஆண்டு மார்ச் 31 ஆம் தேதி வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்ற படம் விடுதலை. இப்படத்திற்கு இளையராஜா இசையமைத்திருந்தார். இப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது.

    இந்தப் படத்தின் இரண்டாம் பாகம் வெளியாகும் எனப் படக்குழு அறிவித்த நிலையில், படத்திற்கு எதிர்பார்ப்பைக் கூட்டும் வகையில் முதல் பாகத்தின் இறுதியில் இரண்டாம் பாகத்தில் நடக்கும் சில காட்சிகளை வைத்திருந்தார் வெற்றிமாறன்.

    இதையடுத்து, விடுதலை படத்தின் இரண்டாம் பாகத்திற்கான படப்பிடிப்பு தொடர்ந்து பல இடங்களில் நடைபெற்றது. இதில் விஜய் சேதுபதி, சூரி, எஸ்.ஜே சூர்யா மற்றும் மஞ்சு வாரியர், அட்டகத்தி தினேஷ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இதையடுத்து கடந்த மாதம் விடுதலை பாகம் 2 படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் வெளியானது. இரண்டு போஸ்டர்கள் வெளியான நிலையில் ஒரு போஸ்டரில் விஜய் சேதுபதியும் மஞ்சு வாரியரும் அன்பாக பேசிக்கொண்டிருக்கும் புகைப்படமும் மற்றொரு போஸ்டரில் விஜய் சேதுபதி ஆக்ரோஷமாக கையில் கத்தியுடன் இருக்கும் புகைப்படமும் வெளியானது. மேலும் போஸ்டரில் படப்பிடிப்பு இறுதிக் கட்டத்தில் இருப்பதாகக் குறிப்பிடப்பட்டிருந்தது.

    இந்த நிலையில் இப்படத்தின் ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது. அதன்படி வருகிற டிசம்பர் 20ஆம் தேதி வெளியாகவுள்ளதாகத் தெரிவித்து புதிய போஸ்டரையும் படக்குழு வெளியிட்டுள்ளது. இதனால் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • முத்தையா இயக்கத்தில் நடிகர் கார்த்தி நடித்துள்ள படம் விருமன்.
    • இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சில தினங்களுக்கு முன்பு மதுரையில் நடைபெற்றது.

    கார்த்தி நடித்துள்ள விருமன் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா சில தினங்களுக்கு முன்பு மதுரையில் நடைபெற்றது. அதில் கலந்துகொண்டு பேசிய சூரி, அகரம் அறக்கட்டளை குறித்து பேசினார். அப்போது ஆயிரம் கோவில் கட்டுவதைவிட, அன்னசத்திரத்தை விட ஒரு மாணவனுக்கு கல்வி வழங்குவது சிறந்தது என பேசினார். அதற்கு சில இந்து அமைப்புகள் கண்டனம் தெரிவித்தன.

     

    சூரி

    சூரி

    இந்நிலையில் விருமன் படத்தின் சென்னை செய்தியாளர் சந்திப்பில் பேசிய சூரி, படக்குழுவினர் பற்றியும், நடிகை அதிதி செயல்பாடுகள் குறித்தும் நகைச்சுவையாக பேசினார். அதன் பின், மதுரையில் தான் பேசிய பேச்சுக்கு விளக்கமளித்தார். அதில் நான் எப்போதும் மீனாட்சி அம்மனை குறிப்பிட்டுதான் பேசுவேன். எனக்கு மீனாட்சி அம்மன் மிகவும் பிடிக்கும். நான் நடத்தும் ஹோட்டல்களுக்கு அம்மன் எனதான் பெயர் வைத்துள்ளேன். என்னுடைய பேச்சு தவறாக புரிந்துகொள்ளப்பட்டது. நான் கோவிலுக்கு எதிரானவன் கிடையாது நான் படிக்காதவன், அதன் முக்கியத்துவம் எனக்கு தெரியும் என அவர் பேசினார். 

    ×