என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "surya"

    • சிம்பொனியை அரங்கேற்றம் செய்து இளையராஜா மற்றொரு சாதனையைப் படைத்தார்.
    • பிரதமர் மோடியை சந்தித்து இசைஞானி இளையராஜா வாழ்த்துப் பெற்றார்.

    இசைஞானி இளையராஜா தனது நீண்ட இசைப்பயணத்தில் சுமார் ஆயிரம் திரைப்படங்களுக்கு மேல் இசையமைத்து சாதனை படைத்துள்ளார்.

    மேற்கத்திய இசை மீது மிகுந்த ஈடுபாடு கொண்டவரான இளையராஜா மொசார்ட் உள்ளிட்ட மேற்கத்திய இசை ஜாம்பவான்களின் சிம்பொனி இசைக் கூறுகளை தனது பாடல்களில் பயன்படுத்தி பாமர மக்களும் அவற்றை ரசிக்கும் வகையில் மெட்டுகளை அமைத்தார். அவரது இசையால் பல திரைப்படங்கள் வெற்றிப் படங்களாக மாறியுள்ளன. அவரது பாடல்கள் அனைத்தும் இன்றைய தலைமுறையையும் கவரும் வகையில் அமைந்துள்ளன.

    சமீபத்தில் லண்டனில் 'வேலியண்ட்' (Valiant) சிம்பொனியை அரங்கேற்றம் செய்து இளையராஜா மற்றொரு சாதனையைப் படைத்தார்.

    இந்நிலையில், லண்டனில் 'சிம்பொனி' இசையை அரங்கேற்றம் செய்து சென்னை திரும்பியுள்ள இளையராஜாவை நேரில் சந்தித்து நடிகர் சிவகுமார் வாழ்த்து தெரிவித்துள்ளார்;

    சிவகுமார் உடன் அவரது மகனும் நடிகருமான சூர்யா மற்றும் மகள் பிருந்தா ஆகியோர் இளையராஜாவுக்கு வாழ்த்து தெரிவித்தனர். 

    • சமந்தா நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘யசோதா’.
    • இந்த படத்தின் டிரைலர் தற்போது வெளியாகி சமூக வலைதளத்தில் கவனம் ஈர்த்து வருகிறது.

    இயக்குனர் ஹரி-ஹரிஷ் இயக்கத்தில் நடிகை சமந்தா நடித்துள்ள படம் 'யசோதா'. பான் இந்தியா திரைப்படமாக உருவாகியுள்ள இந்த படத்தில் வரலட்சுமி சரத்குமார், உன்னி முகுந்தன், ராவ் ரமேஷ், முரளி சர்மா உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கின்றனர்.


    யசோதா

    திரில்லர் வகை கதையம்சம் கொண்ட இந்த திரைப்படத்தில் சமந்தா எழுத்தாளர் கதாபாத்திரத்தில் நடிக்கிறார். 'யசோதா' படத்தை சிவலெங்க கிருஷ்ண பிரசாத் தனது ஸ்ரீதேவி மூவிஸ் நிறுவனம் மூலம் தயாரித்துள்ளார். மணிஷர்மா இசையமைத்துள்ளார். இப்படத்தின் டீசர் அண்மையில் வெளியாகி வைரலானது.


    யசோதா

    இதையடுத்து 'யசோதா' படத்தின் டிரைலர் இன்று மாலை 5.36 மணிக்கு வெளியாகும் என படக்குழு அறிவித்திருந்தது. அதன்படி, இந்த படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது. இதனை நடிகர் சூர்யா தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். வாடகைத் தாய்க்கு ஏற்படும் பிரச்சினைகளை வெளிப்படுத்துவது போன்று உருவாகியுள்ள இந்த டிரைலர் சமூக வலைதளத்தில் கவனம் ஈர்த்து வருகிறது.



    • நடிகர் சூர்யா நடிப்பில் கடந்த ஆண்டு வெளியாகி வரவேற்பு பெற்ற படம் ‘ஜெய்பீம்’.
    • இந்த படத்தில் சூர்யா வழக்கறிஞர் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

    நடிகர் சூர்யா நடிப்பில், கூட்டத்தில் ஒருவன் பட இயக்குனர் ஞானவேல் இயக்கத்தில் உருவாகி வெளியான திரைப்படம் ஜெய்பீம். இப்படத்தில் கர்ணன் பட நடிகை ரஜிஷா விஜயனும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இருளர் பழங்குடியின மக்களின் வாழ்க்கை மற்றும் உரிமைகள் பற்றி பேசும் இப்படத்தில் நடிகர் சூர்யா, பழங்குடியின மக்களுக்காக வாதாடும் வழக்கறிஞர் வேடத்தில் நடித்திருந்தார்.


    ஜெய்பீம்

    கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நேரடியாக ஓ.டி.டி.யில் வெளியான இப்படம் நல்ல விமர்சனங்களை பெற்று ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றது. இப்படம் பலரின் பாராட்டுக்களை பெற்றிருந்தாலும் குறிப்பிட்ட சமூகத்தைத் தவறாகச் சித்தரித்துள்ளதாகக் கூறி ஜெய் பீம் படக்குழு சில பிரச்சனைகளையும் சந்தித்தது. இருப்பினும் இப்படம் பல்வேறு சர்வதேச விருதுகளை வாங்கிக் குவித்துள்ளது.


    ஜெய்பீம்

    இந்நிலையில் 'ஜெய் பீம்' படம் வெளியாகி இன்றுடன் ஓராண்டு நிறைவடைகிறது. இதனைக் கொண்டாடும் விதமாகப் படக்குழு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், இயக்குனர் ஞானவேல் 'ஜெய்பீம்' படத்தில் பணியாற்றிய அனுபவம் குறித்து பகிர்ந்துள்ளார்.


    ஜெய்பீம்

    தொடர்ந்து சூர்யா தனது சமூக வலைதளப் பக்கத்தில், "ஜெய் பீம் படம் ஓராண்டு நிறைவு செய்வதை கொண்டாடுவது மகிழ்ச்சியளிக்கிறது. திரைக்கதை முதல் இயக்கம் வரை இப்படம் வலுப்பெற்றுக் கொண்டேயிருந்தது. இந்த அர்த்தமுள்ள படத்தை கொடுத்த என் சகோதரர் ஞானவேல் மற்றும் படக்குழுவினருக்கு நன்றி. வழக்கறிஞர் சந்துரு கதாபாத்திரம் என் வாழ்வில் ஓர் மைல்கல்" என நெகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ளார். 


    • மலையாள நடிகர் மம்முட்டி தற்போது 'காதல் - தி கோர்' திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
    • இந்த படத்தில் நடிகை ஜோதிகா கதாநாயகியாக இணைந்துள்ளார்.

    தமிழ் திரையுலகில் முன்னணி நடிகையான ஜோதிகா, திருமணத்துக்கு பிறகு சில வருடங்கள் சினிமாவை விட்டு ஒதுங்கி இருந்தார். பின்னர் 36 வயதினிலே படம் மூலம் மீண்டும் நடிக்க தொடங்கினார். இதை தொடர்ந்து மகளிர் மட்டும், நாச்சியார், காற்றின் மொழி, ராட்சசி, ஜாக்பாட், பொன்மகள் வந்தாள், உடன் பிறப்பு உள்ளிட்ட கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள கதைகளை தேர்வு செய்து நடித்தார்.


    காதல் தி கோர்

    தற்போது இவர் நடிகர் மம்முட்டியுடன் 'காதல் - தி கோர்' திரைப்படத்தில் நடித்து வருகிறார். மம்முட்டி கம்பெனி தயாரிக்கும் இப்படத்தை மலையாளத்தில் சூப்பர் ஹிட்டான 'தி கிரேட் இந்தியன் கிட்சன்' படத்தை இயக்கிய ஜியோ பேபி இயக்குகிறார். சமீபத்தில் இப்படத்தின் படப்பிடிப்பில் நடிகை ஜோதிகா கலந்து கொண்டார்.


    சூர்யா-மம்முட்டி-ஜோதிகா

    இந்நிலையில், 'காதல் - தி கோர்' திரைப்படத்தின் படப்பிடிப்பு தளத்திற்கு நடிகர் சூர்யா சென்றுள்ளார். இதனை மம்முட்டி தனது சமூக வலைதளப் பக்கத்தில் புகைப்படம் ஒன்று பகிர்ந்து தெரிவித்துள்ளார். இந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.


    • இந்த ஆண்டுக்கான தேசிய விளையாட்டு விருதுகள் வழங்கும் விழா டெல்லியில் சில தினங்களுக்கு முன்பு நடைபெற்றது.
    • இதில் பிரக்ஞானந்தா, இளவேனில் வாலறிவன், ஜெர்லின் அனிகா ஆகியோருக்கு விருது வழங்கப்பட்டது.

    சர்வதேச விளையாட்டுப் போட்டிகளில் சிறந்து விளங்கும் இந்திய வீரர், வீராங்கனைகளுக்கு ஆண்டுதோறும் கேல் ரத்னா மற்றும் அர்ஜூனா விருதும், சிறந்த பயிற்சியாளர்களுக்கு துரோணாச்சார்யா விருதும், வாழ்நாள் சாதனையாளருக்கு தயான் சந்த் விருதும் வழங்கப்பட்டு வருகிறது.


    பிரக்ஞானந்தா

    அதன்படி இந்த ஆண்டுக்கான தேசிய விளையாட்டு விருதுகள் வழங்கும் விழா டெல்லியில் சில தினங்களுக்கு முன்பு நடைபெற்றது. இதில் மொத்தம் 25 பேருக்கு அர்ஜுனா விருதும், 4 பேருக்கு துரோணாச்சார்யா விருதும், 4 பேருக்கு தியான்சந்த் விருதும் வழங்கப்பட்டது. இந்த விருதினை குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு வழங்கினார்.


    இளவேனில் வாலறிவன்

    இதில் தமிழக டேபிள் டென்னிஸ் வீரர் சரத் கமலுக்கு கேல் ரத்னா விருது வழங்கப்பட்டது. மேலும் தமிழகத்தைச் சேர்ந்த செஸ் வீரர் பிரக்ஞானந்தா, துப்பாக்கிச் சுடுதல் வீராங்கனை இளவேனில் வாலறிவன், மாற்றுத் திறனாளி பேட்மிண்டன் வீராங்கனை ஜெர்லின் அனிகா ஆகியோருக்கு அர்ஜுனா விருது வழங்கப்பட்டது.


    சூர்யா

    இதைத் தொடர்ந்து செஸ் வீரர் பிரக்ஞானந்தாவும் துப்பாக்கிச் சுடுதல் வீராங்கனை இளவேனில் வாலறிவனும் நிகழ்வின்போது எடுக்கப்பட்ட புகைப்படத்தைத் தங்களது சமூக வலைத்தள பக்கத்தில் பகிர்ந்திருந்தனர். இந்நிலையில் நடிகர் சூர்யா இவர்களுக்கு வாழ்த்து தெரிவித்து பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில், "உங்களை நினைத்து நாங்களும் பெருமைப்படுகிறோம்" எனக் குறிப்பிட்டுள்ளார்.



    • வணங்கான் படத்திலிருந்து நடிகர் சூர்யா விலகியுள்ளார்.
    • இது நடிகர் சூர்யா மற்றும் சினிமா ரசிகர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

    சென்னை:

    வணங்கான் படத்திலிருந்து நடிகர் சூர்யா விலகியுள்ளார். இந்த அறிவிப்பு சூர்யா மற்றும் சினிமா ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியது.

    இதுதொடர்பாக படத்தின் இயக்குனர் பாலா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:

    வணக்கம். என் தம்பி சூர்யாவுடன் இணைந்து வணங்கான் என்ற புதிய திரைப்படத்தை இயக்க விரும்பினேன். ஆனால் கதையில் நிகழ்ந்த சில மாற்றங்களினால், இந்தக் கதை சூர்யாவுக்கு உகந்ததாக இருக்குமா என்கிற ஐயம் தற்போது எனக்கு ஏற்பட்டுள்ளது.

    என் மீதும், இந்தக் கதையின் மீதும் முழு நம்பிக்கையுடன் இருக்கிறார் சூர்யா. இவ்வளவு அன்பும், மதிப்பும், நம்பிக்கையும் வைத்திருக்கும் என் தம்பிக்கு ஒரு அண்ணனாக என்னால் ஒரு சிறு தர்மசங்கடம் கூட நேர்ந்து விடக்கூடாது என்பது என் கடமையாகவும் இருக்கிறது.

    எனவே வணங்கான் திரைப்படத்திலிருந்து சூர்யா விலகிக் கொள்வது என நாங்கள் இருவரும் கலந்து பேசி ஒருமனதாக முடிவு எடுத்திருக்கிறோம். அதில் அவருக்கு மிகவும் வருத்தம் தான் என்றாலும் அவரது நலன் கருதி எடுத்த முடிவு இது.

    நந்தாவில் நான் பார்த்த சூர்யா பிதாமகனில் நீங்கள் பார்த்த சூர்யா போல் வேறு ஒரு தருணத்தில் உறுதியாக இணைவோம் மற்றபடி வணங்கான் பணிகள் தொடரும் என தெரிவித்துள்ளார்.

    • வணங்கான் படத்திலிருந்து நடிகர் சூர்யா விலகியுள்ளார்.
    • இது தொடர்பான சூர்யாவின் பதிவு சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

    இயக்குனர் பாலா இயக்கத்தில் நடிகர் சூர்யா 'வணங்கான்' திரைப்படத்தில் நடித்து வந்த நிலையில் சூர்யா தற்போது இந்த படத்தில் இருந்து விலகியுள்ளார்.


    சூர்யா - பாலா

    இதுதொடர்பாக படத்தின் இயக்குனர் பாலா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது: வணக்கம். என் தம்பி சூர்யாவுடன் இணைந்து வணங்கான் என்ற புதிய திரைப்படத்தை இயக்க விரும்பினேன். ஆனால் கதையில் நிகழ்ந்த சில மாற்றங்களினால், இந்தக் கதை சூர்யாவுக்கு உகந்ததாக இருக்குமா என்கிற ஐயம் தற்போது எனக்கு ஏற்பட்டுள்ளது. என் மீதும், இந்தக் கதையின் மீதும் முழு நம்பிக்கையுடன் இருக்கிறார் சூர்யா. இவ்வளவு அன்பும், மதிப்பும், நம்பிக்கையும் வைத்திருக்கும் என் தம்பிக்கு ஒரு அண்ணனாக என்னால் ஒரு சிறு தர்மசங்கடம் கூட நேர்ந்து விடக்கூடாது என்பது என் கடமையாகவும் இருக்கிறது.


    வணங்கான்

    எனவே வணங்கான் திரைப்படத்திலிருந்து சூர்யா விலகிக் கொள்வது என நாங்கள் இருவரும் கலந்து பேசி ஒருமனதாக முடிவு எடுத்திருக்கிறோம். அதில் அவருக்கு மிகவும் வருத்தம் தான் என்றாலும் அவரது நலன் கருதி எடுத்த முடிவு இது. நந்தாவில் நான் பார்த்த சூர்யா பிதாமகனில் நீங்கள் பார்த்த சூர்யா போல் வேறு ஒரு தருணத்தில் உறுதியாக இணைவோம் மற்றபடி வணங்கான் பணிகள் தொடரும் என தெரிவித்துள்ளார்.

    இந்நிலையில், பாலாவின் இந்த அறிக்கைக்கு சூர்யாவின் 2டி நிறுவனம் பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளது. அதில், "பாலா அண்ணாவின் உணர்வுகளுக்கும் முடிவுகளுக்கும் மதிப்பளித்து சூர்யா அவர்களும் 2டி என்டர்டெயின்மெண்ட் நிறுவனமும் வணங்கான்-ல் இருந்து விலகிக்கொள்கிறோம். எப்போதும் பாலா அண்ணா உடன் துணை நிற்போம்" என்று பதிவிட்டுள்ளது.



    • நடிகர் சூர்யா இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் ‘வாடிவாசல்’ திரைப்படத்தில் நடிக்கிறார்.
    • இந்த படத்திற்காக மாடுபிடி வீரர்களுடன் சூர்யா பயிற்சி மேற்கொள்ளும் வீடியோ கடந்த சில மாதங்களுக்கு முன்பு வெளியானது.

    நடிகர் சூர்யா தற்போது சிறுத்தை சிவா இயக்கத்தில் 'சூர்யா 42' படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் இவருக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை திஷா பதானி நடிக்கிறார். 3டி முறையில் உருவாகும் இப்படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு அண்மையில் நிறைவுற்றது.


    சூர்யா - வெற்றிமாறன்

    இதனிடையே இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் 'வாடிவாசல்' திரைப்படத்திலும் சூர்யா நடிக்கிறார். ஜல்லிக்கட்டை மையப்படுத்தி உருவாகும் இந்த படத்திற்காக மாடுபிடி வீரர்களுடன் சூர்யா பயிற்சி மேற்கொள்ளும் வீடியோ கடந்த சில மாதங்களுக்கு முன்பு படக்குழு வெளியிட்டது.

    சமீபத்தில் பாலா இயக்கும் 'வணங்கான்' படத்தில் நடித்து வந்த சூர்யா, சில காரணங்களால் படத்தில் இருந்து விலகினார். இதைத்தொடர்ந்து 'வாடிவாசல்' படத்தில் இருந்தும் சூர்யா விலக முடிவெடுத்துள்ளதாகவும் இந்த படம் கைவிடப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியானது.


    வாடிவாசல்

    இந்நிலையில், இந்த வதந்திகள் உண்மை இல்லை என்று தயாரிப்பாளர் கலைப்புலி எஸ் தாணு விளக்கமளித்துள்ளார். சமீபத்தில் அவர் அளித்துள்ள பேட்டியில் கூறியதாவது, "இது ஆதாரமற்ற வதந்திகள். மக்கள் தங்கள் பத்து நிமிட புகழுக்காக இது போன்ற வதந்திகளை பரப்புகின்றனர். யாரும் அதனை நம்ப வேண்டாம். படத்தின் ப்ரீ புரொடக்‌ஷன் பணிகள் நடைபெற்று வருகிறது" என்று கூறியுள்ளார்.

    • இயக்குனர் சிறுத்தை சிவா தற்போது இயக்கி வரும் திரைப்படம் ‘சூர்யா 42’.
    • இந்த படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார்.

    'சிறுத்தை', 'வீரம்', 'விஸ்வாசம்', 'அண்ணாத்த' உள்ளிட்ட பல படங்களை இயக்கிய சிவா இயக்கும் படத்தில் சூர்யா தற்போது நடித்து வருகிறார். சூர்யா 42 என்று தற்காலிகமாக பெயரிடப்பட்டுள்ள இப்படத்தை ஸ்டுடியோ கிரீன் மற்றும் யுவி கிரியேஷன் நிறுவனம் இணைந்து தயாரிக்கின்றனர்.


    சூர்யா 42

    இப்படத்தில் பாலிவுட் நடிகை திஷா பத்தானி, யோகி பாபு, கிங்ஸ்லி, கோவை சரளா, ஆனந்த் ராஜ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கவுள்ள இப்படம் 3டி முறையில் சரித்திர படமாக 10 மொழிகளில் வெளியாகவுள்ளது.


    சூர்யா 42 படக்குழு

    இந்நிலையில், இப்படத்தின் புதிய தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, 'சூர்யா 42' படத்தின் இந்தி பதிப்பின் திரையரங்க உரிமை, சாட்டிலைட் உரிமை மற்றும் டிஜிட்டல் உரிமை ஆகியவை ரூ.100 கோடிக்கு விற்பனை செய்யப்பட்டு உள்ளதாகவும் பென் ஸ்டூடியோஸ் என்கிற நிறுவனம் இதனை வாங்கி உள்ளதாகவும் சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

    • அறிமுக இயக்குனர் பி.வி.ஷங்கர் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம்‘கள்வன்’.
    • இந்த படத்தில் ஜி.வி.பிரகாஷ் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

    பிரபல இசையமைப்பாளரான ஜி.வி. பிரகாஷ் இசையில் மட்டுமல்லாமல் நடிப்பிலும் தனக்கான இடத்தை பிடித்துள்ளார். இவர் நடித்த 'பேச்சுலர்', 'ஐங்கரன்', 'ஜெயில்' போன்ற படங்கள் ரசிகர்களிடம் கலவையான விமர்சனங்களை பெற்றது. தற்போது இவர் அறிமுக இயக்குனர் பி.வி.ஷங்கர் இயக்கத்தில் 'கள்வன்' திரைப்படத்தில் நடித்து வருகிறார்.


    சூர்யா

    ஆக்சஸ் பிலிம் பேக்டரி தயாரிக்கும் இந்த படத்தில் பாரதிராஜா, இவனா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். இப்படத்தின் மோஷன் போஸ்டர் சமீபத்தில் வெளியாகி வைரலானது. இந்நிலையில், இப்படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது. அதன்படி, 'கள்வன்' திரைப்படத்தின் டீசரை நாளை மாலை 4.44 மணிக்கு நடிகர் சூர்யா வெளியிடுவார் என ஜி.வி. பிரகாஷ் தனது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டு அறிவித்துள்ளார்.


    • சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா 42-வது படத்தில் நடித்து வருகிறார்.
    • இந்த படத்தில் சூர்யாவிற்கு ஜோடியாக திஷா பத்தானி இணைந்துள்ளார்.

    'சிறுத்தை', 'வீரம்', 'விஸ்வாசம்', 'அண்ணாத்த' உள்ளிட்ட பல படங்களை இயக்கிய சிவா இயக்கும் படத்தில் சூர்யா தற்போது நடித்து வருகிறார். சூர்யா 42 என்று தற்காலிகமாக பெயரிடப்பட்டுள்ள இப்படத்தை ஸ்டுடியோ கிரீன் மற்றும் யுவி கிரியேஷன் நிறுவனம் இணைந்து தயாரிக்கின்றனர்.


    சூர்யா 42

    இப்படத்தில் பாலிவுட் நடிகை திஷா பத்தானி, யோகி பாபு, கிங்ஸ்லி, கோவை சரளா, ஆனந்த் ராஜ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கவுள்ள இப்படம் 3டி முறையில் சரித்திர படமாக 10 மொழிகளில் வெளியாகவுள்ளது.


    திஷா பத்தானி

    இதையடுத்து இப்படத்தின் கதாநாயகி திஷா பத்தானிக்கு இந்த படத்தில் ஸ்டண்ட் காட்சிகள் இருப்பதாக கூறப்படுகிறது. இந்நிலையில், திஷா பத்தானி தனது சமூக வலைதளத்தில் பறந்து பறந்து அடிக்கும் வீடியோ ஒன்றை பகிர்ந்துள்ளார். இந்த வீடியோ தற்போது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வைரலாகி வருகிறது.


    • ’சூர்யா 42’ படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
    • இந்த படத்தில் சூர்யாவிற்கு ஜோடியாக திஷா பத்தானி இணைந்துள்ளார்.

    'சிறுத்தை', 'வீரம்', 'விஸ்வாசம்', 'அண்ணாத்த' உள்ளிட்ட பல படங்களை இயக்கிய சிவா இயக்கும் படத்தில் சூர்யா தற்போது நடித்து வருகிறார். சூர்யா 42 என்று தற்காலிகமாக பெயரிடப்பட்டுள்ள இப்படத்தை ஸ்டுடியோ கிரீன் மற்றும் யுவி கிரியேஷன் நிறுவனம் இணைந்து தயாரிக்கின்றனர்.


    சூர்யா 42

    இப்படத்தில் பாலிவுட் நடிகை திஷா பத்தானி, யோகி பாபு, கிங்ஸ்லி, கோவை சரளா, ஆனந்த் ராஜ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கவுள்ள இப்படம் 3டி முறையில் சரித்திர படமாக 10 மொழிகளில் வெளியாகவுள்ளது.


    சூர்யா 42

    இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், 'சூர்யா 42' படம் குறித்து புதிய தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, கோவா மற்றும் பிஜூ தீவில் நடைபெற்ற படப்பிடிப்புகள் முடிவடைந்ததை தொடர்ந்து அடுத்தகட்ட படப்பிடிப்பு சென்னையில் துவங்கவுள்ளதாக சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

    ×