search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Sushma Swaraj"

    ஷங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் பங்கேற்க பிஷ்கெக் நகருக்கு வந்துள்ள வெளியுறவுத்துறை மந்திரி சுஷ்மா சுவராஜ் இன்று கிர்கிஸ்தான் அதிபர் சூரோன்பே ஜீன்பேக்கோவ்-ஐ சந்தித்து ஆலோசனை நடத்தினார்.
    பிஷ்கெக்:

    சீனா, கஜகஸ்தான், ரஷியா, தஜிகிஸ்தான், கிர்கிஸ்தான், உஸ்பெகிஸ்தான், இந்தியா, பாகிஸ்தான் ஆகிய நாடுகளை உள்ளடக்கிய ஷங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் உறுப்பு நாடுகளை சேர்ந்த வெளியுறவுத்துறை மந்திரிகளின் மாநாடு கிர்கிஸ்தான் நாட்டின் தலைநகரான பிஷ்கெக் நகரில் நடைபெற்று வருகிறது.



    மாநாட்டில் பங்கேற்க பிஷ்கெக் நகருக்கு வந்துள்ள வெளியுறவுத்துறை மந்திரி சுஷ்மா சுவராஜ் இன்று கிர்கிஸ்தான் அதிபர் சூரோன்பே ஜீன்பேக்கோவ்-ஐ  சந்தித்தார். இந்தியா-கிர்கிஸ்தான் நாடுகளுக்கு இடையிலான நல்லுறவுகளை மேம்படுத்துவது தொடர்பாக இந்த சந்திப்பின்போது அவர் முக்கிய ஆலோசனை நடத்தினார்.

    பின்னர், சீனா நாட்டின் வெளியுறவுத்துறை மந்திரி வாங் யீ மற்றும் அந்நாட்டின் வெளியுறவுத்துறை உயரதிகாரிகளுடன் சுஷ்மா உள்ளிட்ட இந்திய அதிகாரிகள் விரிவான ஆலோசனை நடத்தினர்.

    ஷங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் பங்கேற்க வந்துள்ள வெளியுறவுத்துறை மந்திரி சுஷ்மா சுவராஜ் இன்று கிர்கிஸ்தான் வெளியுறவுத்துறை மந்திரியை சந்தித்து ஆலோசனை நடத்தினார்.
    பிஷ்கெக்:

    சீனா, கஜகஸ்தான், ரஷியா, தஜிகிஸ்தான், கிர்கிஸ்தான், உஸ்பெகிஸ்தான், இந்தியா, பாகிஸ்தான் ஆகிய நாடுகளை உள்ளடக்கிய ஷங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் கூட்டம் சுழற்சி அடிப்படையில் இந்த ஆண்டு கிர்கிஸ்தான் நாட்டின் தலைநகரான பிஷ்கெக் நகரில் நடைபெற்று வருகிறது.

    இந்த அமைப்பில் உறுப்பினர்களாக இருக்கும் நாடுகளை சேர்ந்த ராணுவ மந்திரிகள் கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்ற மாநாட்டில் பங்கேற்று விவாதித்தனர். அதில் நிர்மலா சீதாராமன் கலந்து கொண்டார்.

    இதன் அடுத்தக்கட்டமாக ஷங்காய் கூட்டுறவு அமைப்பின் உறுப்பு நாடுகளை சேர்ந்த வெளியுறவுத்துறை மந்திரிகளின் மாநாடு இன்றும் நாளையும் நடைபெறுகிறது.

    இந்த மாநாட்டில் பங்கேற்க வந்துள்ள வெளியுறவுத்துறை மந்திரி சுஷ்மா சுவராஜ், கிர்கிஸ்தான் நாட்டின் வெளியுறவுத்துறை மந்திரி சின்கிஸ் ஐடர்பேகோவ்-ஐ இன்றூ சந்தித்து இருநாடுகளுக்கு இடையிலான நல்லுறவுகளை மேம்படுத்துவது தொடர்பாக முக்கிய ஆலோசனை நடத்தினார்.



    ஷங்காய் அமைப்பில் பார்வையாளர்களாக இந்தியா 2005-ம் ஆண்டிலும் பாகிஸ்தான் 2017-ம் ஆண்டிலும் இணைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. 
    வெளியுறவுத்துறை மந்திரி சுஷ்மா சுவராஜ் தனது பதவிக்காலத்தில் இறுதிமுறை வெளிநாட்டு பயணமாக ஷங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் பங்கேற்க கிர்கிஸ்தான் செல்கிறார்.
    புதுடெல்லி:

    சீனா, கஜகஸ்தான், ரஷியா, தஜிகிஸ்தான், கிர்கிஸ்தான், உஸ்பெகிஸ்தான், இந்தியா, பாகிஸ்தான் ஆகிய நாடுகளை உள்ளடக்கிய ஷங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் கூட்டம் சுழற்சி அடிப்படையில் இந்த ஆண்டு கிர்கிஸ்தான் நாட்டின் தலைநகரான பிஷ்கெக் நகரில் நடைபெற்று வருகிறது.
     
    ஷங்காய் அமைப்பில் பார்வையாளர்களாக இந்தியா 2005-ம் ஆண்டிலும் பாகிஸ்தான் 2017-ம் ஆண்டிலும் இணைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. இந்த அமைப்பில் உறுப்பினர்களாக இருக்கும் நாடுகளை சேர்ந்த ராணுவ மந்திரிகள் கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்ற மாநாட்டில் பங்கேற்று விவாதித்தனர். அதில் நிர்மலா சீதாராமன் கலந்து கொண்டார்.



    இதன் அடுத்தக்கட்டமாக ஷங்காய் கூட்டுறவு அமைப்பின் உறுப்பு நாடுகளை சேர்ந்த வெளியுறவுத்துறை மந்திரிகளின் மாநாடு வரும் 21, 22 தேதிகளில் நடைபெறுகிறது.

    இந்த மாநாட்டில் பங்கேற்க வெளியுறவுத்துறை மந்திரி சுஷ்மா சுவராஜ் தனது பதவிக்காலத்தில் இறுதிமுறை வெளிநாட்டு பயணமாக கிர்கிஸ்தான் நாட்டுக்கு செல்கிறார்.

    இந்த பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட மாட்டேன் என அறிவித்த சுஷ்மா சுவராஜ் வெளிநாடுவாழ் இந்தியர்களின் நலன்களை பாதுகாப்பதிலும், அவர்களின் இன்னல்களை களைவதிலும் சிறப்பாக பணியாற்றி அனைத்து தரப்பினரின் நன்மதிப்பையும் பெற்றார்.

    கடந்த ஆண்டு அவர் சிறுநீரக பிரச்சனையால் பாதிக்கப்பட்டிருந்தபோது அவருக்கு சிறுநீரகங்களை தானமாக அளிப்பதற்கு பலர் முன்வந்தது நினைவிருக்கலாம்.
     
    லிபியா தலைநகர் திரிபோலியை கைப்பற்ற முயற்சிக்கும் உச்சக்கட்ட மோதல் நடைபெறும் நிலையில் அங்கிருக்கும் இந்தியர்கள் உடனடியாக வெளியேறுமாறு சுஷ்மா சுவராஜ் வலியுறுத்தியுள்ளார். #Tripolitravelban #sushmaswaraj
    புதுடெல்லி:

    லிபியா நாட்டில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கு எதிராக அந்நாட்டின் கிழக்கு பகுதியில் இயங்கிவரும் போட்டி அரசு உள்நாட்டுப் போரில் ஈடுபட்டு வருகிறது. போட்டி அரசின் லிபியா தேசிய ராணுவத்தின் தளபதியாக பதவி பகிக்கும் கலிபா ஹஃப்டர் தலைநகர் திரிபோலியை கைப்பற்றும் நோக்கத்தில் விமானப்படை மற்றும் தரைப்படை மூலம் தாக்குதல் நடத்தி வருகிறார்.

    லிபியா அரசுப்படைகளுக்கும் கலிபா ஹஃப்டர் தலைமையிலான உச்சக்கட்ட மோதலில் இதுவரை 200-க்கும் அதிகமானவர்கள் உயிரிழந்துள்ளனர்.

    இந்நிலையில், திரிபோலியில் நாளுக்குநாள் நிலைமை மோசமாகி வருவதால் அங்குள்ள இந்தியர்கள் உடனடியாக வெளியேறுமாறு அவர்களின் உறவினர்களும், நண்பர்களும் அறிவுறுத்த வேண்டும் என வெளியுறவுத்துறை மந்திரி சுஷ்மா சுவராஜ் இன்று வலியுறுத்தியுள்ளார்.

    இந்திய அரசின் சார்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டும், சிறப்பு விமானங்கள் இயக்கப்பட்டும் இன்னும் 500-க்கும் அதிகமான இந்தியர்கள் திரிபோலியில் இருப்பதாக தெரியவந்துள்ளது. நிலைமை மேலும் மோசமடைந்தால் அங்கிருப்பவர்களை அழைத்து வருவது சிரமமாகி விடும். எனவே, திரிபோலியில் இருக்கும் உங்களது உறவினர்களையும், நண்பர்களையும் உடனடியாக தாய்நாட்டுக்கு திரும்புமாறு நீங்கள் கேட்டுக் கொள்ள வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார். #Tripolitravelban #sushmaswaraj
    மத்திய மந்திரி சுஷ்மா சுவராஜ் நாளை மறுநாள் தூத்துக்குடி பாராளுமன்ற தொகுதி பா.ஜனதா வேட்பாளர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜனுக்கு ஆதரவாக பிரசாரம் செய்கிறார். #LokSabhaElections2019 #SushmaSwaraj
    சென்னை:

    மத்திய மந்திரி சுஷ்மா சுவராஜ் நாளை மறுநாள் (11-ந்தேதி) தேர்தல் பிரசாரத்துக்காக தூத்துக்குடி செல்கிறார்.

    தூத்துக்குடி பாராளுமன்ற தொகுதி பாரதிய ஜனதா வேட்பாளர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜனுக்கு ஆதரவு திரட்டுகிறார்.

    வர்த்தக பிரமுகர்கள், மீனவர் சங்க பிரமுகர்கள், முக்கிய பிரமுகர்கள், பல்வேறு துறைகளை சார்ந்தவர்கள் மத்தியில் அவர் பா.ஜனதாவுக்கு ஆதரவு கேட்டு பேசுகிறார். #LokSabhaElections2019 #SushmaSwaraj

    பயங்கரவாதம் ஒரு பிரச்சனை இல்லையென்றால், ராகுல் காந்திக்கு பாதுகாப்பு எதற்கு என மத்திய மந்திரி சுஷ்மா சுவராஜ் கேள்வி எழுப்பியுள்ளார். #SushmaSwaraj #RahulGandhi
    ஐதராபாத்:

    பாராளுமன்ற தேர்தல் நெருங்கும் வேளையில் அனைத்து கட்சியினரும் பொதுக்கூட்டம், பிரசாரம், மற்றும் வேட்புமனு தாக்கல் போன்ற பல்வேறு பணிகளில் தீவிரமாக களமிறங்கியுள்ளனர்.

    இதையடுத்து மத்திய வெளியுறவு துறை மந்திரி சுஷ்மா சுவராஜ், நேற்று ஐதராபாத்தில் நடைபெற்ற பிரசாரப்பொதுக்கூட்டத்தில் கலந்துக் கொண்டு பேசியதாவது:

    ராகுல் காந்தி பேட்டியின் போது, நாட்டில் மிகப்பெரும் பிரச்சனையாக உள்ளது வேலையின்மை தான், பயங்கரவாதம் இல்லை என கூறினார். அவர் கூறுவதை போல்,  நாட்டில் பயங்கரவாதம் ஒரு பிரச்சனை இல்லை என்றாலும், அனைத்து பயங்கரவாதமும் முழுமையாக  செயலிழந்து விட்டது என்றாலும், ராகுலுக்கு சிறப்பு பாதுகாப்பு குழுவின் பாதுகாவலர்கள் எதற்கு?



    முன்னாள் பிரதமரும், ராகுல் காந்தியின் தந்தையும் ஆன ராஜீவ் காந்தி படுகொலை செய்யப்பட்டது முதல், இன்று வரை அவரது குடும்பத்தில் அனைவருக்கும் சிறப்பு பாதுகாப்பு குழுவின் பாதுகாவலர்கள், எங்கு சென்றாலும் வருகின்றனர். மேலும் ராகுல் காந்தி செல்லும் அனைத்து இடங்களுக்கும் பாதுகாப்பு பலப்படுத்தப்படுகிறது.

    எனவே இதனை ராகுலிடம் கூற விரும்புகிறேன். பயங்கரவாதம் அழிந்து விட்டதாக எண்ணிக் கொண்டிருக்கும் நீங்கள், எவ்வித பாதுகாப்பும் தேவையில்லை என கருதினால் உடனடியாக 'எங்களின் பாதுகாப்பிற்கென சிறப்பு பாதுகாப்பு குழுவின் பாதுகாவலர்கள் வேண்டாம்' என எழுதி தந்து விடுங்கள்.

    இவ்வாறு அவர் பேசினார். #SushmaSwaraj #RahulGandhi
    பயங்கரவாதிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்காதவரை பாகிஸ்தானுடன் பேச்சுவார்த்தை நடத்த முடியாது என மத்திய அரசு மீண்டும் திட்டவட்டமாக கூறியுள்ளது. #SushmaSwaraj
    புதுடெல்லி:

    பாகிஸ்தானில் இயங்கி வரும் பல்வேறு பயங்கரவாத அமைப்புகள் இந்தியாவில் அடிக்கடி தாக்குதல் நடத்தி பெருத்த உயிர்ச்சேதத்தை ஏற்படுத்தி வருகின்றன. இந்த இயக்கங்களுக்கு பாகிஸ்தான் அரசும், ராணுவமும் ஆதரவு அளித்து வருகின்றன. இந்த பயங்கரவாதிகளின் தாக்குதலால் இருநாட்டு உறவு சீர்கெட்டு வருகிறது.

    இதை சீரமைப்பதற்காக இந்தியாவுடன் பேச்சுவார்த்தையை நாடுகிறது, பாகிஸ்தான். ஆனால் பயங்கரவாதிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுத்தால் மட்டுமே அமைதி பேச்சுவார்த்தை நடத்த முடியும் என இந்தியா தொடர்ந்து அறிவுறுத்தி வருகிறது.

    இந்தநிலையில் காஷ்மீரின் புலவாமாவில் கடந்த மாதம் பாகிஸ்தான் பயங்கரவாத அமைப்பு நடத்திய தாக்குதலை தொடர்ந்து, இருநாட்டு உறவுகளும் மேலும் சீர்குலைந்து இருக்கிறது. எனினும் எல்லா பிரச்சினைகளையும் பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண வேண்டும் என பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் அழைப்பு விடுத்து இருந்தார்.

    இதை மத்திய அரசு மீண்டும் திட்டவட்டமாக மறுத்து உள்ளது. டெல்லியில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசிய வெளியுறவுத்துறை மந்திரி சுஷ்மா சுவராஜ் இதை தெரிவித்தார். இது தொடர்பாக அவர் மேலும் கூறியதாவது:-



    பயங்கரவாதம் தொடர்பாக பாகிஸ்தான் தொடர்ந்து இரட்டை வேடம் போடுவது முட்டாள்தனமானது. புலவாமா தாக்குதலுக்கு பின்னும் இந்த இரட்டை வேடம் தொடர்கிறது. ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாத இயக்க தலைவர் மசூத் அசார் பாகிஸ்தானில் இருப்பதாக வெளியுறவு மந்திரி ஷா மக்மூத் குரேஷி ஒருபுறம் ஒப்புக்கொண்டுள்ளார். ஆனால் மறுபுறம் ராணுவம் அதை மறுத்து இருக்கிறது.

    பயங்கரவாதத்தால் பாதிக்கப்பட்ட நாடு (இந்தியா) அந்த பயங்கரவாதிகள் மீது தாக்குதல் நடத்தினால், அவர்களுக்கு ஆதரவாகத்தான் இந்தியாவை பாகிஸ்தான் தாக்குகிறது. ஜெய்ஷ்-இ-முகமது இயக்கத்துக்காக ஏன் இந்தியாவை தாக்க முயன்றீர்கள்?

    பேச்சுவார்த்தை நடத்துவதில் உண்மையான அக்கறையும், தாராளமும் இருந்தால் மசூத் அசாரை இந்தியாவிடம் ஒப்படைத்து தனது ராஜதந்திரத்தை இம்ரான்கான் நிரூபிக்கட்டும்.

    தங்கள் சொந்த மண்ணில் இயங்கி வரும் பயங்கரவாதிகள் மீது பாகிஸ்தான் நடவடிக்கை எடுக்காதவரை, அந்த நாட்டுடன் பேச்சுவார்த்தை நடத்த முடியாது. பயங்கரவாதம் இல்லாத அமைதியான சூழல் நிலவினால் மட்டுமே பாகிஸ்தானுடன் பேச முடியும். பயங்கரவாதத்தை பேசிக்கொண்டிருக்க நாங்கள் விரும்பவில்லை. அதன் மீதான நடவடிக்கையே எங்களுக்கு வேண்டும்.

    இவ்வாறு சுஷ்மா சுவராஜ் திட்டவட்டமாக கூறினார். #SushmaSwaraj
    பாகிஸ்தானில் புகுந்து இந்திய போர் விமானங்கள் குண்டு வீசி தாக்குதல் நடத்தியது குறித்து ரஷியா மற்றும் சீனாவிடம் சுஷ்மாசுவராஜ் விளக்கம் அளித்தார். #SushmaSwaraj #PulwamaAttack #Chinese #ForeignMinister
    பெய்ஜிங்:

    சீனாவின் பெய்ஜிங்கில் வெளியுறவுதுறை மந்திரிகள் கூட்டம் நடைபெறுகிறது. இதில் கலந்து கொள்வதற்காக இந்திய வெளியுறவு துறை மந்திரி சுஷ்மா சுவராஜ் சென்றுள்ளார்.

    அங்கு, பாகிஸ்தானில் புகுந்து இந்திய போர் விமானங்கள் குண்டு வீசி தாக்கியது குறித்து விளக்கம் அளித்தார். இந்தியா நடத்தியது ராணுவ தாக்குதல் அல்ல. ராணுவத்தளங்களை குறிவைத்து இத்தாக்குதல் நடத்தப்படவில்லை.

    ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாதிகளையும் அவர்களது புகலிடத்தையும் குறிவைத்து மட்டுமே தாக்குதல் நடத்தப்பட்டது. ஏனெனில் அவர்கள் இந்தியாவில் புகுந்து மீண்டும் தாக்குதல் நடத்த திட்டமிட்டிருந்தனர்.

    அவர்களிடம் இருந்து பொதுமக்களை காக்கவே பயங்கரவாதிகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. பயங்கரவாதிகளை கட்டுப்படுத்த இத்தகைய நடவடிக்கைகள் தொடரும் என்றார்.



    இதற்கிடையே, அமெரிக்காவின் ராணுவ தலைமையகமான பென்டகனின் உயர் அதிகாரி ஜெனரல் ஜோசப்டன்கோர்டு பாகிஸ்தான் ராணுவ உயர் அதிகாரி ஜெனரல் ஷூபேர் மக்மூதை டெலிபோனில் தொடர்பு கொண்டு பேசினார்.

    இந்திய ராணுவம் குண்டு வீசி தாக்குதல் நடத்திய பிறகு தற்போது ஏற்பட்டுள்ள சூழ்நிலை குறித்து இருவரும் விவாதித்தனர். இந்த தகவலை பென்டகன் செய்தி தொடர்பாளர் கர்னல் பாட்ரிக் எஸ்.ரைடர் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளார். #SushmaSwaraj #PulwamaAttack #Chinese #ForeignMinister
    டெல்லியில் நடந்த அனைத்துக்கட்சி கூட்டத்துக்கு பிறகு பேசிய வெளியுறவு துறை மந்திரி சுஷ்மா சுவராஜ், பயங்கரவாதத்துக்கு எதிரான நடவடிக்கைக்கு அனைத்து கட்சிகளும் ஆதரவு தெரிவித்தன என குறிப்பிட்டார். #IAFAttack #LoC #SushmaSwaraj #AllPartyMeeting
    புதுடெல்லி:

    புல்வாமா தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில், ஜம்மு காஷ்மீர் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோடு பகுதியில் உள்ள பயங்கரவாதிகள் முகாமை இந்திய விமானப்படை குண்டு வீசி அழித்தது. இதையடுத்து, பிரதமர் மோடி, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்ட பல்வேறு தலைவர்கள் விமானப்படைக்கு பாராட்டுதல்களை தெரிவித்து வருகின்றனர். 

    இந்நிலையில், ஜம்மு காஷ்மீரில் எல்லை கட்டுப்பாட்டு கோட்டில் விமானப்படையினர் தாக்குதல் நடத்தியது குறித்து விவாதிக்க வெளியுறவு துறை மந்திரி சுஷ்மா சுவராஜ் அனைத்து கட்சி கூட்டத்தை இன்ரு கூட்டினார். இதில் காங்கிரஸ் உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் பங்கேற்றன. கூட்டத்தில், பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு எதிராக இந்தியா எடுத்துள்ள நடவடிக்கைகள் குறித்து விளக்கம் அளித்தார்,



    அனைத்துக்கட்சி கூட்டத்தின் முடிவில் சுஷ்மா சுவராஜ் கூறுகையில், பயங்கரவாதத்துக்கு எதிராக இந்தியா எடுத்துள்ள நடவடிக்கைக்கு அனைத்துக் கட்சிகளும் ஆதரவு தெரிவித்தது மகிழ்ச்சி அளிக்கிறது என குறிப்பிட்டார்.

    இதுதொடர்பாக காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத் கூறுகையில், பயங்கரவாதத்தை முடிவுக்கு கொண்டு வருவதற்கான ஆதரவு எப்போதும் இருக்கும்; விமானப்படையின் நடவடிக்கையை பாராட்டுகிறோம் என தெரிவித்துள்ளார். #IAFAttack #LoC #SushmaSwaraj #AllPartyMeeting
    நேபாளத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின்போது தங்கள் நாட்டு மக்களை காப்பாற்றிய இந்தியாவுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் ஸ்பெயின் அரசு அளித்த உயரிய விருதை சுஷ்மா சுவராஜ் ஏற்றார். #JosepBorrellF #VianaPalace #SushmaSwaraj
    மாட்ரிட்:

    இந்திய வெளியுறவுத்துறை மந்திரி சுஷ்மா சுவராஜ் பெல்ஜியம், மொராக்கோ, ஸ்பெயின் ஆகிய நாடுகளில் சுற்றுப்பயணம் செய்து வருகிறார். இறுதிகட்டமாக ஸ்பெயின் நாட்டுக்கு வந்த சுஷ்மா சுவராஜ் அந்நாட்டின் வெளியுறவுத்துறை மந்திரியை சந்தித்து இந்தியா-ஸ்பெயின் நாடுகளுக்கு இடையிலான நல்லுறவுகளை மேம்படுத்துவது தொடர்பாக முக்கிய பேச்சுவார்த்தை நடத்தினார்.

    கடந்த 2015-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் நேபாளம் நாட்டில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் சுமார் 9 ஆயிரம் மக்கள் உயிரிழந்தனர். 22 ஆயிரத்துக்கும் அதிகமானவரகள் காயமடைந்தனர். இந்த நிலநடுக்கத்தின் போது ஆபத்தான இடத்தில் சிக்கியிருந்த ஸ்பெயின் நாட்டை சேர்ந்த 71 பேர் இந்திய அரசின் மீட்புப்படையினரால் காப்பாற்றப்பட்டனர்.

    இதற்காக இந்திய மக்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் அரிய சேவை செய்ததற்காக ஸ்பெயின் நாட்டில் பொதுமக்களுக்கு அளிக்கப்படும் அந்நாட்டின் மிகவும் உயர்ந்த ‘கிரான்ட் கிராஸ்’ (Grand Cross of Order of Civil Merit) விருதை சுஷ்மா சுவராஜ் இன்று ஏற்றுக் கொண்டார்.



    ஸ்பெயின் வெளியுறவுத்துறை மந்திரி ஜோசப் போரெல்ஃப் இவ்விருதினை சுஷ்மாவுக்கு அணிவித்து வாழ்த்து தெரிவித்தார். #JosepBorrellF  #VianaPalace #SushmaSwaraj #SpainGrandCross 
    இந்தியா - மொராக்கோ இடையே வெளியுறவுத்துறை மந்திரி சுஷ்மா சுவராஜ் முன்னிலையில் இன்று 4 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையொப்பமானது. #SushmaSwaraj #MoroccoFM #MoU #SushmainMorocco
    ரபாட்:

    அரசுமுறை பயணமாக மொராக்கோ நாட்டுள்ள வெளியுறவுத்துறை மந்திரி சுஷ்மா சுவராஜ் இன்று அந்நாட்டின் வெளியுறவுத்துறை மந்திரி பவுரிட்டாவை சந்தித்து இருநாடுகளுக்கு இடையிலான நல்லுறவுகளை மேம்படுத்துவது தொடர்பாக முக்கிய ஆலோசனை நடத்தினார்.

    எல்லை தாண்டிய பயங்கரவாதத்தை வேரறுப்பது, பயங்கரவாதத்தை ஊக்குவிக்கும் நிதியுதவிகள் செல்வதை தடை செய்வது உள்ளிட்ட பல்வேறு விவகாரங்களில் இருநாடுகளும் இணைந்து பணியாற்றுவது என்று இந்த ஆலோசனையின்போது தீர்மானிக்கப்பட்டது.

    மேலும், இருதரப்பிலும் வர்த்தகரீதியான விசாக்கள் வழங்குவதை எளிமையாக்கும் நடைமுறை, குறைந்த செலவில் வீடுகள் கட்டும் திட்டம், நகர அபிவிருத்தி, ஸ்மார்ட் சிட்டி எனப்படும் மாதிரி நகரங்களை ஏற்படுத்தும் திட்டம், இளைஞர்கள் நலன் உள்ளிட்ட துறைகளில் இந்தியாவும் மொராக்கோவும் இனி இணைந்து செயலாற்ற 4 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் சுஷ்மா சுவராஜ் முன்னிலையில் இன்று கையொப்பமாகின. #SushmaSwaraj #MoroccoFM #MoU #SushmainMorocco
    இந்தியா-பல்கேரியா நாடுகளுக்கிடையிலான நல்லுறவுகளை பலப்படுத்துவது தொடர்பாக வெளியுறவுத்துறை மந்திரி சுஷ்மா சுவராஜ் முக்கிய ஆலோசனை நடத்தினார். #SushmaSwaraj #SushmainBulgaria
    சோபியா:

    இந்திய வெளியுறவுத்துறை மந்திரி சுஷ்மா சுவராஜ் பல்கேரியா, மொராக்கோ, ஸ்பெயின் ஆகிய நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார்.

    முதல்கட்டமாக நேற்று பல்கேரியா தலைநகர் சோபியா வந்தடைந்த அவர் பல்கேரியா வெளியுறவுத்துறை மந்திரி எக்கடெரினா ஸ்ஹரியேவா-வுடன் இருநாடுகளுக்கு இடையிலான பல்வேறு விவகாரங்கள் தொடர்பாக ஆலோசனை நடத்தினார்.

    குறிப்பாக, எட்டாம் நூற்றாண்டு முதல் இந்தியாவுடன் நெருங்கிய தோழமை பாராட்டிவரும் பல்கேரியாவின் நட்புறவை இந்தியா பெரிதும் மதிப்பதாக சுஷ்மா தெரிவித்தார்.



    பின்னர், அதிகாரிகள் மட்டத்திலான பேச்சுவார்த்தையின்போது பொருளாதாரம், வேளாண்மை, சுகாதாரம், தகவல் தொழில்நுட்பம், சுற்றுலா மற்றும் கலாச்சாரம் தொடர்பாக இருநாடுகளும் தொடர்ந்து கூட்டுறவுடன் செயல்படுவது என தீர்மானிக்கப்பட்டது.

    இந்த ஆலோசனைக்கு பின்னர் பல்கேரியா துணை பிரதமரையும் சுஷ்மா சந்தித்தார். #SushmaSwaraj #SushmainBulgaria 
    ×