search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Suzuki S Cross"

    சுசுகி நிறுவனம் முற்றிலும் புதிய எஸ் கிராஸ் மாடலை விற்பனைக்கு அறிமுகம் செய்து இருக்கிறது.


    சுசுகி நிறுவனத்தின் புதிய எஸ் கிராஸ் மாடல் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த மாடல் மேம்பட்ட குளோபல் சி பிளாட்பார்மில் உருவாக்கப்பட்டு இருக்கிறது. இது முந்தைய மாடலை விட அதிகளவு எஸ்.யு.வி. போன்ற தோற்றம் கொண்டிருக்கிறது.

    இந்த காரின் முன்புறம் கிளாஸ்-பிளாக் கிரில் மற்றும் எல்.இ.டி. ஹெட்லைட்கள் உள்ளன. இவை காரின் தோற்றத்தை பிரம்மாண்டமாக வெளிப்படுத்துகின்றன. பக்கவாட்டில் இந்த கார் முந்தைய மாடலை விட பெரிதாக காட்சியளிக்கிறது. பின்புறம் ராப்-அரவுண்ட் டெயில் லேம்ப்கள், இண்டகிரேட் செய்யப்பட்ட ரூப் ஸ்பாயிலர் உள்ளிட்டவை வழங்கப்பட்டு இருக்கிறது. 

     சுசுகி எஸ் கிராஸ்

    புதிய சுசுகி எஸ் கிராஸ் மாடலில் 1.4 லிட்டர் டர்போசார்ஜ் செய்யப்பட்ட என்ஜின் மற்றும் மைல்டு-ஹைப்ரிட் தொழில்நுட்பம் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் 125.2 பி.ஹெச்.பி. திறன், 235 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. 

    இந்த காரில் 360 டிகிரி சரவுண்ட்-வியூ கேமரா, 9 இன்ச் இன்போடெயின்மெண்ட் யூனிட், ஆப்பிள் கார்பிளே, ஆண்ட்ராய்டு ஆட்டோ, முன்புறம் ஹீட்டெட் சீட்கள், ஆட்டோமேடிக் கிளைமேட் கண்ட்ரோல் மற்றும் பல்வேறு இதர அம்சங்கள் உள்ளன. 

    இத்துடன் அட்வான்ஸ்டு டிரைவர் அசிஸ்டன்ஸ் சிஸ்டம், டிரைவர் அசிஸ்டன்ஸ், அடாப்டிவ் குரூயிஸ் கண்ட்ரோல், லேன் கீப் அசிஸ்ட், கிராஸ்-டிராபிக் அலெர்ட், எமர்ஜென்சி ஆட்டோனோமஸ் பிரேக்கிங் போன்ற வசதிகள் வழங்கப்பட்டு இருக்கின்றன.
    ×