என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Swayambulingam"
- 12 ஜோதிர்லிங்கத் தலங்களில் ஒன்றாகும்.
- அனைவரையும் வியப்பில் ஆழ்த்தக்கூடிய நீரூற்று ஒன்று உள்ளது.
ஆலயங்கள் எப்போதும் அதிசயம் நிறைந்தவை. அப்படி ஆச்சரியமும், அதிசயமும் நிறைந்த ஆலயங்களில் ஒன்றுதான், மகாராஷ்டிராவில் உள்ள திரியம்பகேஸ்வரர் திருக்கோவில்.
இந்த ஆலயம், மகாராஷ்டிரா மாநிலம் நாசிக் நகரில் இருந்து சுமார் 28 கிலோமீட்டர் தொலைவில் திரியம்பக் என்ற இடத்தில் உள்ளது. இந்தக்கோவில் 12 ஜோதிர்லிங்கத் தலங்களில் ஒன்றாகும்.
சுயம்பு மூர்த்தியான இத்தல இறைவன், 'திரியம்பகேஸ்வரர்' என்று அழைக்கப்படுகிறார். கோதாவரி ஆறு தொடங்கும் இடத்தில் இந்த ஆலயம் இருக்கிறது.
பிரம்மகிரி, நீலகிரி, கலகிரி ஆகிய மூன்று மலைகளுக்கு நடுவில், பிரம்மகிரி மலையின் அடிவாரத்தில் உள்ள இக்கோவில் கருங்கற்களினால் கட்டப்பட்டது. இந்த ஆலயத்தில் பில்வ தீர்த்தம், விஸ்வநந் தீர்த்தம், முகுந்த தீர்த்தம் ஆகிய மூன்று நீர்நிலைகள் உள்ளன.
கடல் மட்டத்தில் இருந்து சுமார் 2500 அடி உயரத்தில் மலை மீது அமைந்த இவ்வாலயத்தில், பல நூறு ஆண்டுகளாக அனைவரையும் வியப்பில் ஆழ்த்தக்கூடிய நீரூற்று ஒன்று உள்ளது. கோவிலின் கருவறையில் உள்ள சுயம்பு லிங்கத்தின் மீது எப்பொழுதும் நீர் ஊற்றிக் கொண்டே இருப்பது அதிசயமான நிகழ்வாகும்.
இப்பகுதியில் வாழ்ந்த கவுதம முனிவர், கடுமையான தவத்தை மேற்கொண்டார். அவருக்காக சிவபெருமான் தன் ஜடாமுடியில் இருந்து கங்கையின் சில துளியை விழச் செய்ததாகவும், அதுவே இங்கு நீரூற்றாக வருவதாகவும் சொல்லப்படுகிறது.
பிற ஜோதிர் லிங்கங்கள் அனைத்தும் சிவனையே முக்கிய கடவுளாகக் கொண்டவை. ஆனால், இத்தலத்தில் உள்ள சிவலிங்கமானது, பிரம்மா, விஷ்ணு, ருத்திரன் ஆகிய மும்மூர்த்திகளின் அமைப்பில் இருப்பது தனித்துவமான சிறப்பு. திரியம்பகேஸ்வரர் வீற்றிருக்கும் கர்ப்பக்கிரகம் தாழ்வாக உள்ளது.
இத்தல லிங்கத்தில் ஆவுடையார் மட்டுமே உள்ளது. அதன் நடுவே உரல் போன்று பள்ளம் மட்டுமே சிவலிங்கமாக பாவிக்கப்படுகிறது. இந்த பள்ளத்தில் மும்மூர்த்திகள் அர்ச்சனை செய்த மூன்று தாமரை மொட்டுகளின் அடையாளம் காணப்படுகிறது.
- சுயம்புலிங்கம் தலையில் வெட்டுப்பட்ட காயம் உள்ளது.
- ஆண்டு முழுவதும் சந்தனக்காப்பு அலங்காரம் செய்யப்படுகிறது.
குடும்ப பிரச்சினைகளை தீர்க்கும் திருமுல்லைவாயில் என்ற பெயரில் இரண்டு பாடல் பெற்ற சிவ தலங்கள் இருக்கின்றன. இவற்றை வேறுபடுத்திக் காட்ட தொண்டை நாட்டில் உள்ள சிவாலயத்துக்கு 'வட திருமுல்லைவாயில்' என்றும், காவிரியின் வடகரையில் சீர்காழிக்கு அருகில் உள்ள சிவதலம் 'தென் திருமுல்லைவாயில்' என்றும் அழைக்கப்படுகிறது.
தேவாரப் பாடல் பெற்ற தொண்டை நாட்டு சிவாலயங்கள் வரிசையில் 21-வது தலமாக இருப்பது, வட திருமுல்லைவாயில். புராதன சிறப்புமிக்க இந்த ஆலய இறைவன் திருநாமம் மாசிலாமணீஸ்வரர். இறைவி பெயர் கொடியுடைய நாயகி. சிவபெருமான் இங்கு சுயம்புலிங்கமாக அருள்புரிகிறார். சுயம்புலிங்கம் தலையில் வெட்டுப்பட்ட காயம் உள்ளது. இதனால் சிவனை குளிர வைக்கும் வகையில் ஆண்டு முழுவதும் சந்தனக்காப்பு அலங்காரம் செய்யப்படுகிறது.
சித்திரை மாதம் சதய நட்சத்திரத்தில் இரண்டு தினங்கள் மட்டும் சந்தன காப்பு இல்லாமல் நிஜ திருமேனியுடன் இறைவன் காட்சி தருகிறார். அந்த நேரத்தில் இவரை வழிபட்டால் பாவங்கள் நீங்கப் பெற்று முக்தி பெறலாம் என்பது நம்பிக்கை. இவருக்கு அபிஷேகம் இல்லாததால் ஒரு பாதரச லிங்கத்தை தனி சன்னிதியில் வைத்து பூஜை செய்கிறார்கள்.
குடும்பத்தில் ஏற்படும் பிரச்சினைகள் தீர்ந்து ஒற்றுமையுடனும், மன நிம்மதியுடனும் வாழ வழிபட வேண்டிய தலம் என்ற சிறப்பு இத்திருத்தலத்திற்கு உண்டு. சென்னை அரக்கோணம் புறநகர் ரெயில் பாதையில் திருமுல்லைவாயில் அமைந்துள்ளது. சென்னை அம்பத்தூரில் இருந்து 3 கிலோ மீட்டர் தூரம் பயணித்தால் கோவிலை சென்றடையலாம்.
தல வரலாறு
காஞ்சீபுரத்தில் இருந்து அரசாட்சி செய்து வந்தார் தொண்டைமான் மன்னர். அதேவேளையில் புழல் கோட்டையில் ஓணன், காந்தன் என்ற அசுரர்கள், எருக்க தூண்களும், வெண்கல கதவும் கொண்டு ஒரு அரண் அமைத்து ஆட்சி செய்து வந்தனர். அவர்கள் வன்முறையில் ஈடுபட்டு மக்களை பல வகையிலும் துன்புறுத்தி வந்தனர். இதனால் அஞ்சி நடுங்கிய மக்கள் தொண்டமானிடம் வந்து முறையிட்டனர். அதை கேட்ட மன்னர் வெகுண்டெழுந்து பெரும் படையுடன் அங்கு சென்றார். 'கோலம்பேடு' என்ற கிராமத்தை கடக்கும் போது இரவு ஆனதால், அங்கேயே தங்கினார்.
அப்போது தூரத்தில் இருந்து வெண்கல மணி ஓசை கேட்டது. அது சிவாலயத்தில் இருந்து ஒலிக்கும் மணி என்று மன்னர் நினைத்தார். அருகில் இருந்த அமைச்சர்கள், அது அரக்கர்கள் மாளிகையில் இருந்து வருகிறது என்று கூறினர். அரக்கர்களின் அடாத செயலுக்கு முடிவுகட்டி, அவர்களை அடக்கும் நோக்கத்தோடு மன்னர் படையுடன் விரைந்து சென்றார். தொண்டைமான் படையுடன் வருவதைக் கண்ட அரக்கர்கள், தாங்களும் படையை திரட்டி வந்து போர் செய்தனர். அரக்கர்களின் தெய்வமான பைரவரின் வரத்தால் ஒரு பூதத்தின் உதவியால் அவர்கள் தொண்டமான் படையை விரட்டி அடித்தனர். இதற்கு மேல் போர் செய்ய முடியாது என்று தீர்மானித்த மன்னன் படையுடன் பாசறைக்கு திரும்பினான்.
வரும் வழியில், மன்னன் ஏறி வந்த யானையின் காலில் முல்லைக்கொடிகள் பின்னிக்கொண்டன. யானை கால்களை எடுக்க முடியாமல் திணறியது. இதை பார்த்த மன்னன் யானையின் மீது அமர்ந்தபடியே முல்லைக் கொடிகளை வெட்டினார். திடீரென்று அந்த இடத்தில் இருந்து ரத்தம் பீறிட்டு வரவே மன்னன் திடுக்கிட்டு யானையில் இருந்து இறங்கி வந்து அந்த இடத்தை பார்த்தான். புதர்கள் வெட்டப்பட்டு இருந்த இடத்தில் ஒரு லிங்கத் திருமேனி இருப்பதையும், அதில் இருந்து ரத்தம் வழிவதையும் கண்டு திகைத்தான். பின்னர் தனது வாளால் தலையை கொய்து உயிரைவிடத் துணிந்தான்.
அப்போது இறைவன் காளை வாகனத்தில் காட்சியளித்து, "மன்னா! வெட்டுப்பட்டாலும் குற்றமில்லை, நான் மாசில்லா மணி கவலைப்படாதே! நந்தியை உனக்கு துணையாக அனுப்பி வைக்கிறேன், வெற்றி பெறுவீர்!" என அருள்புரிந்தார். அரசனும் அரக்கர்களுடன் மறுபடியும் போர் செய்து அவர்களை வெற்றி கொண்டான். தனக்கு உதவி செய்த இறைவனின் கருணையை நினைத்து போற்றி சிவபெருமானுக்கு அவ்விடத்தில் ஒரு ஆலயம் எழுப்பினார். அசுரர்களின் அரணில் இருந்து கொண்டு வந்த இரண்டு வெள்ளருக்கு தூண்களையும், தான் உருவாக்கிய சிவாலயத்தில் இறைவன் கருவறை முன் பொருத்தி வைத்தார். அந்த இடமே திருமுல்லைவாயில் ஆகும்.
அந்த இடத்தில் பெருமானுக்கு கோவில் அமைத்து கருவறை மணிமண்டபம், கல்யாண மண்டபம் முதலியவற்றை அமைத்தார். நித்திய பூஜைகள் தவறாமல் நடைபெற ஏற்பாடுகளை செய்தார் தேவாரப் பாடல் ஆசிரியர்களில் ஒருவரான சுந்தரர். இதை தமது தேவாரப் பாடலில் குறிப்பிட்டுள்ளார். சுயம்பு லிங்கம் ஆலயத்தின் கிழக்கு நோக்கி வீற்றிருந்து அருள் பாலிக்கிறார். உயரமான லிங்கத்தைச் சுற்றி சதுர பீட ஆவுடையார் உள்ளது. லிங்கத்தின் மேல் புறம் வெட்டப்பட்ட வடு உள்ளது. வெட்டப்பட்ட இடத்தில் எப்போதும் சந்தனம் சாத்தப்படுவதால் லிங்கப் பகுதிக்கு அபிஷேகங்கள் கிடையாது. ஆவுடையாருக்கு தான் வென்னீர்அபிஷேகம் செய்யப்படுகிறது.
ஆவுடையாருக்கு மட்டும் அபிஷேகம் என்பதால் லிங்கத்தின் மீது சந்தனம் களையப்படுவதில்லை. அந்த சந்தனத்தின் மீது மீண்டும் சந்தனம் சாத்தப்படும். வருடத்திற்கு ஒருமுறை சித்திரை மாதம் சதய நட்சத்திரத்தில் மட்டும் சந்தன காப்பு முழுவதுமாக களையப்பட்டு, அபிஷேகம் முடிந்து மீண்டும் சந்தன காப்பு செய்யப்படும். இந்த நாளில் மட்டுமே லிங்கத் திருமேனியின் சொரூபத்தை நாம் தரிசிக்க முடியும். மற்றபடி ஆண்டு முழுவதும் இறைவன் மீது சந்தன காப்பு இருந்து கொண்டே இருக்கும். அம்பாள் சுவாமிக்கு வடபுறத்தில் எழுந்தருளியுள்ளார்.
பொதுவாக சிவாலயங்களில் மூலவருக்கு நேராக நந்தி சிலை இருக்கும். தலபுராணபடி இங்குள்ள நந்தி தொண்டைமானுக்கு உதவி செய்வதற்காக அசுரர்களை எதிர்த்து போர் புரிய சென்றதால் நந்தி, சுவாமியை பார்த்தபடி இல்லாமல் எதிர் திசையை நோக்கி திரும்பியபடி உள்ளது. பவுர்ணமி, அமாவாசை, கிருத்திகை, பிரதோஷம் போன்ற நாட்களை தவிர்த்து மற்ற நாட்களில் நந்திக்கு பூஜை செய்து, நந்திக்கு சாற்றிய மாலையை அணிந்து கொண்டால் திருமணத்தடை, புத்திர தோஷம் நீங்கும் என்பது ஐதீகம்.
இந்த ஆலயம் தினமும் காலை 6 மணி முதல் பகல் 12 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் திறந்திருக்கும். ம் மாசிலாமணீஸ்வரர்.
- தேன் - இனிய குரல்வளம் தரும் நெய் - வீடுபேறு அடைய உதவும்
- பன்னீர் - புகழ் சேர்க்கும் சந்தனம் - செல்வம் உண்டாகும்
சந்தனாதித் தைலம் - சுகம் தரும்
நல்எண்ணை - விஷசுரம் நிவர்த்தி
பால் - தீர்க்காயுள் தரும்
தயிர் - நன்மக்கட்பேறு
தேன் - இனிய குரல்வளம் தரும்
நெய் - வீடுபேறு அடைய உதவும்
சர்க்கரை - எதிரிகள் தொல்லை நீங்குதல்
பஞ்சாமிர்தம் - உடல் வலிமை தரும்
மாம்பழம் - வெற்றியைத் தரும்
கரும்புசாறு - நல்ல உடல் நலம்
இளநீர் - போகம் அளிக்கும்
எலுமிச்சம் பழம் - சகல பகையை அழிக்கும்
அன்னம் - சகல பாக்கியங்களும் தரும்
பன்னீர் - புகழ் சேர்க்கும்
சந்தனம் - செல்வம் உண்டாகும்
நறுமணப்பொடி - கடன், நோய் தீரம்
ஆண் தெய்வமூர்த்திக்கு நறுமணப் பொடியும், பெண் தெய்வமூர்த்திக்கு நறுமணப் பொடியும், மஞ்சள்தூளும் அபிஷேகம் செய்ய வேண்டும்.
மஞ்சள் தூள் - மங்களம் அளித்திடும்
விபூதி - கர்மவினைகளை நீக்கி மோட்சம் அளிக்கும்
சொர்ணாபிஷேகம் - ஐஸ்வர்யம் வரும்
ஒவ்வொரு அபிஷேகத்தின் இடையிலும் சுத்தநீர் - சாந்தி தரும்.
தில்லை தீர்த்தங்கள் பத்து
1. சிவகங்கை
2. பரமானந்த கூபம் (சித்சபைக்கு கிழக்குப் பக்கத்தில் கிணறு வடிவில் சக்தி வடிவம் பொருந்தியது)
3. வியாக்கிரபாத தீர்த்தம் (இளமையாக்கினர் கோவில்)
4. அனந்த தீர்த்தம் (திருஅனந்தேஸ்சுரத்துக்கு முன்பு உள்ளது)
5. நாகச்சேரி (திருஅனந்தேஸ்சுரத்துக்கு மேற்பாங்கான உள்ள திருக்குளம்)
6. பிரமதீர்த்தம்
7. சிவப்பிரியை
8. புலிமடு
9. குய்ய தீர்த்தம்
10. திருப்பாற்கடல்
பிரபஞ்சத்தின் மையம்
பதஞ்சலி முனிவர், வியாக்கிரபாதர், திருமூலர் ஆகியோரால் பூஜிக்கப் பெற்ற சுயம்புலிங்கம்தான் ஆதிமூலநாதர். இதுதான் பிரபஞ்சங்களின் மையமாகும்.
ஆதியந்த மற்றது. ஆகாயத்தின் மையம் இதுவேயாகும். ஒரு காலத்தில் பெரும் வனமான தில்லை மரங்கள் அடர்ந்த காட்டில் ஊடே வியாக்ரபாதரால் பூஜிக்கப்பட்ட சுயம்புலிங்கம் தில்லை மரங்கள் நிறைந்த வனம்தான் இன்றைய சிதம்பரம்.
எனவே சிதம்பரத்திற்கு தில்லை என்ற பெயரே பிரசித்தி பெற்று விளங்குகிறது.
ஆதிமூலநாதர் சன்னதி இரவு 8 மணிக்கு அர்த்தஜாம பூஜை நடைபெறும் நடராஜர் சன்னதி இரவு 10 மணிக்கே அர்த்தஜாம பூஜை நடைபெறும் முதலாவது அர்த்தஜாம பூஜையும், கடைசியாக அர்த்தஜாம பூஜையும் நடக்கும் இடம் தில்லையில் மட்டுமே.
தில்லையம்பலவாணன் தினசரி பூஜைகள்
தில்லை திருத்தலத்தில் திருநடனம் புரிந்தருளும் நடராஜ மூர்த்திக்கு நாள்தோறும் ஆறுகால பூஜைகள் நடைபெறுகின்றன. காலை மூன்று, மாலையில் மூன்று பூஜைகள் காலை 6 மணிக்கு நடை திறக்கப்பட்டு பள்ளியறையில் பால், பொரி, பழம் முதலியன நைவேத்தியம் செய்து, தீபாராதனை செய்து சுவாமியின் பாதுகையை வெள்ளி, தங்க பல்லக்கில் எழுந்தருளச் செய்து கொண்டு வந்து நடராஜரின் அருகில் வைத்து, நடராஜருக்கும் சிவகாமசுந்தரியம்பாளுக்கும் பால், பொரி, பழம் முதலியன நைவேத்தியம் செய்து தீபாராதனை செய்தும் வருகின்றனர். இது `திருவனந்தல்' என்றும், பால் நைவேத்தியம் என்றும் அழைக்கப்படும் இது ஆறு கால பூஜைகளில் சேர்ந்தல்ல என்பது குறிப்பிடத்தக்கது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்