என் மலர்
நீங்கள் தேடியது "T20 World Cup"
- முதல் ஆட்டத்தில் டக் வொர்த் லீவிஸ் முறைப்படி அயர்லாந்து வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.
- நியூசிலாந்து-ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு தலா ஒரு புள்ளி பகிர்ந்து அளிக்கப்பட்டது
டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் சூப்பர்-12 சுற்று ஆட்டங்கள் நடைபெறுகின்றன. இன்று மெல்போர்னில் நடைபெற்ற முதல் போட்டியில் இங்கிலாந்து-அயர்லாந்து அணிகள் மோதின. மழையால் தாமதமாக தொடங்கிய இந்த போட்டியில், முதலில் ஆடிய அயர்லாந்து அணி 157 ரன்னில் 'ஆல் அவுட்' ஆனது. அடுத்து ஆடிய இங்கிலாந்து அணி 14.3 ஓவரில் 5 விக்கெட்டுகளை இழந்து 105 ரன்கள் எடுத்திருந்தபோது மீண்டும் மழை பெய்ததால் ஆட்டம் பாதிக்கப்பட்டது. இதனால் டக் வொர்த் லீவிஸ் முறைப்படி அயர்லாந்து 5 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.
இரண்டாவது ஆட்டத்தில் குரூப்-1ல் உள்ள நியூசிலாந்து-ஆப்கானிஸ்தான் அணிகள் விளையாடுவதாக இருந்தது. டாஸ் போடுவதற்கு முன்பே மழை பெய்யத் தொடங்கியது. மழை விட்டதும் போட்டி தாமதமாக தொடங்கும் என தெரிவிக்கப்பட்டது. ஆனால் இடைவிடாது மழை பெய்தது. எனவே, டாஸ் கூட போடப்படாமல் ஆட்டம் ரத்து செய்யப்பட்டது. இதையடுத்து இரு அணிகளுக்கும் தலா 1 புள்ளி பகிர்ந்தளிக்கப்பட்டது.
- டாஸ் வென்ற ஜிம்பாப்வே முதலில் பேட்டிங் தேர்வு செய்தது..
- முதலில் ஆடிய ஜிம்பாப்வே 130 ரன்களை எடுத்தது.
பெர்த்:
ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் டி20 உலகக்கோப்பையில் தற்போது சூப்பர் 12 சுற்று ஆட்டம் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், இன்று நடைபெறும் 3வது போட்டியில் ஜிம்பாப்வே, பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன. டாஸ் வென்ற ஜிம்பாப்வே அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்தது.
அதன்படி ஜிம்பாப்வே அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் நிதானமாக ஆடினர். அணியின் எண்ணிக்கை 42 ஆக இருந்தபோது கேப்டன் எர்வின் 19 ரன்னில் அவுட்டானார். மாதேவீர் 17 ரன்னில் ஆட்டமிழந்தார்.
மில்டன் ஷம்பா 8 ரன்னிலும், சிக்கந்தர் ராசா 9 ரன்னிலும் அவுட்டாகினர். சீன் வில்லியம்ஸ் மட்டும் ஓரளவு தாக்குப் பிடித்து 31 ரன்கள் எடுத்தார். 14 மற்றும் 15வது ஓவரில் ஜிம்பாப்வே அணி தலா 2 விக்கெட்டுகளை இழந்தது.
இறுதியில், ஜிம்பாப்வே அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 8 விக்கெட் இழப்புக்கு 130 ரன்களை எடுத்துள்ளது.
பாகிஸ்தான் சார்பில் முகமது வாசிம் ஜூனியர் 4 விக்கெட்டும், ஷதாப் கான் 3 விக்கெட்டும் வீழ்த்தினர். இதையடுத்து,131 ரன்களை எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பாகிஸ்தான் களமிறங்குகிறது.
- முதலில் ஆடிய ஜிம்பாப்வே 130 ரன்களை எடுத்தது.
- அடுத்து ஆடிய பாகிஸ்தான் 129 ரன்களை மட்டுமே எடுத்தது.
பெர்த்:
ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் டி20 உலகக்கோப்பையில் தற்போது சூப்பர் 12 சுற்று ஆட்டம் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், இன்று நடைபெற்ற 3-வது போட்டியில் ஜிம்பாப்வே, பாகிஸ்தான் அணிகள் மோதின. டாஸ் வென்ற ஜிம்பாப்வே அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் ஆடிய ஜிம்பாப்வே அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 8 விக்கெட் இழப்புக்கு 130 ரன்களை எடுத்தது. சீன் வில்லியம்ஸ் அதிகபட்சமாக 31 ரன்கள் எடுத்தார்.
பாகிஸ்தான் சார்பில் முகமது வாசிம் ஜூனியர் 4 விக்கெட்டும், ஷதாப் கான் 3 விக்கெட்டும் வீழ்த்தினர்.
இதையடுத்து, 131 ரன்களை எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பாகிஸ்தான் களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர் பாபர் அசாம் 4 ரன்னிலும், முகமது ரிஸ்வான் 15 ரன்னிலும் அவுட்டாகினர். இப்திகார் அகமது 5 ரன்னிலும், ஷதாப் கான் 17 ரன்னிலும் அவுட்டாகினர்.
பொறுப்புடன் ஆடிய ஷான் மசூத் 44 ரன்னில் ஆட்டமிழந்தார். ஹைதர் அலி டக் அவுட்டானார்.
இறுதியில், பாகிஸ்தான் 20 ஓவரில் 8 விக்கெட் இழப்புக்கு 129 ரன்களை எடுத்தது. இதன்மூலம் ஒரு ரன் வித்தியாசத்தில் ஜிம்பாப்வே திரில் வெற்றியை பதிவு செய்தது.
ஜிம்பாப்வே சார்பில் சிக்கந்தர் ராசா 3 விக்கெட் வீழ்த்தினார்.
- எனது அணியின் செயல்பாடு மிகவும் ஏமாற்றமளிக்கிறது.
- நாங்கள் பேட்டிங்கில் சிறப்பாக செயல்படவில்லை.
பெர்த்:
ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் டி20 உலகக்கோப்பையில் நேற்று நடைபெற்ற சூப்பர் 12 சுற்று ஆட்டம் ஒன்றில் வலுவான பாகிஸ்தான் அணி, ஜிம்பாப்வே அணியிடம் ஒரு ரன் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.

முதலில் விளையாடிய ஜிம்பாப்வே அணி 20 ஓவரில் 8 விக்கெட் இழப்புக்கு 130 ரன்களை எடுத்தது.பின்னர் விளையாடிய பாகிஸ்தான் 20 ஓவரில் 8 விக்கெட் இழப்புக்கு 129 ரன்களை எடுத்து தோல்வி அடைந்தது. நேற்றைய போட்டியில் ஜிம்பாப்வே வீரர் சிக்கந்தர் ராசா சிறப்பாக பந்து வீசி 25 ரன்கள் விட்டுக் கொடுத்து பாகிஸ்தான் அணியின் 3 விக்கெட்களை சாய்த்தார்.

மற்றொரு வீரர் பிராட் எவன்ஸ் 2 விக்கெட்களை கைப்பற்றினார். 2வது போட்டியிலும் தோல்வி அடைந்தது பாகிஸ்தான் அணிக்கு பெரும் பின்னடைவாக கருதப்படுகிறது.
போட்டி நிறைவுக்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அந்த அணியின் கேப்டன் பாபர் ஆசம் கூறியுள்ளதாவது: பேட்டிங் போது நாங்கள் முதல் ஆறு ஓவர்கள் மிக மோசமான நிலையில் இருந்தோம், ஆனால் ஷதாப் மற்றும் ஷான் ஒரு பார்ட்னர்ஷிப்பை உருவாக்கினர், ஆனால் துரதிர்ஷ்டவசமாக ஷதாப் அவுட்டானார்.

பின்னர் அடுத்தடுத்து விக்கெட்டுகள் சரிந்ததால் மற்ற வீரர்களுக்கு பேட்டிங்கில் அழுத்தம் ஏற்பட்டது. பவுலிங் போது முதல் ஆறு ஓவர்களில் நாங்கள் புதிய பந்தை நன்றாகப் பயன்படுத்தவில்லை. பின்னர் நன்றாக செயல்பட்டோம். நாங்கள் ஒன்றாக அமர்ந்து பேசி எங்கள் தவறுகளில் இருந்து பாடம் கற்றுக் கொண்டு அடுத்த போட்டியில் வலுவான நிலைக்குத் திரும்புவோம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
- மெல்போர்ன் நகரில் இன்று மழை பெய்வதற்கு 90 சதவீதம் வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டு இருந்தது.
- தொடர்ந்து மழை பெய்து வந்து உள்ளூர் நேரப்படி மாலை 4 மணிக்கு நடுவர்கள் மைதானத்தை ஆய்வு செய்வார்கள் என்று தெரிவிக்கப்பட்டது.
மெல்போர்ன்:
20 ஓவர் உலகக்கோப்பை போட்டி ஆஸ்திரேலியாவில் நடந்து வருகிறது. 'சூப்பர்-12' சுற்றில் குரூப்-1 பிரிவில் இடம் பெற்றுள்ள ஆப்கானிஸ்தான்-அயர்லாந்து அணிகள் மோதும் போட்டி இந்திய நேரப்படி இன்று காலை மெல்போர்ன் நகரில் தொடங்க இருந்தது.
அயர்லாந்து அணி 2 ஆட்டத்தில் ஒரு வெற்றி, ஒரு தோல்வி பெற்றது. அந்த அணி இலங்கையிடம் தோற்றது. இங்கிலாந்தை வீழ்த்தியது. ஆப்கானிஸ்தான் அணி இங்கிலாந்திடம் தோல்வி அடைந்தது.
நியூசிலாந்துடன் மோத இருந்த ஆட்டம் மழையால் ரத்து செய்யப்பட்டது. ஆப்கானிஸ்தான் இன்று தனது 3-வது ஆட்டத்தில் அயர்லாந்தை சந்தித்தது.
மெல்போர்ன் நகரில் இன்று மழை பெய்வதற்கு 90 சதவீதம் வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டு இருந்தது. அதற்கு ஏற்றார் போல் டாஸ் போடுவதற்கு முன்பு மழை பெய்ய தொடங்கியது. இதனால் ஆட்டம் தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டது.
ஆடுகளம் மற்றும் மைதானத்தின் மற்ற பகுதிகள் மூடப்பட்டு இருந்தது. தொடர்ந்து மழை பெய்து வந்து உள்ளூர் நேரப்படி மாலை 4 மணிக்கு நடுவர்கள் மைதானத்தை ஆய்வு செய்வார்கள் என்று தெரிவிக்கப்பட்டது. மாலை 3 மணியளவில் மழை குறைந்த நிலையில் அரை மணி நேரத்தில் மீண்டும் மழை பெய்ய தொடங்கியது. இதனால் போட்டியை தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.
இந்திய நேரப்படி மதியம் 1.30 மணிக்கு நடக்கும் ஆட்டத்தில் ஆஸ்திரேலியா-இங்கிலாந்து (குரூப்-1) மெல்போர்னில் மோத உள்ளன. இந்த ஆட்டமும் மழையால் பாதிக்க வாய்ப்பு உள்ளது.
- இன்றைய 2 போட்டிகளும் மழையால் கைவிடப்பட்டது.
- இரு அணிகளுக்கு தலா ஒரு புள்ளிகள் வழங்கப்பட்டுள்ளது.
20 ஓவர் உலகக்கோப்பை போட்டி ஆஸ்திரேலியாவில் நடந்து வருகிறது. சூப்பர்-12 சுற்றில் குரூப்-1 பிரிவில் இடம் பெற்றுள்ள ஆப்கானிஸ்தான்-அயர்லாந்து அணிகள் மோதும் போட்டி மழை காரணமாக டாஸ் போடுவதற்கு முன்பு போட்டியை நடத்த முடியாத நிலை ஏற்பட்டது. இதனால் ஆட்டம் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது.
இரு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளி வழங்கப்பட்டது. இதன் மூலம் அரை இறுதி வாய்ப்பில் நீடிக்க இரு அணிகளும் எஞ்சிய ஆட்டங்களில் வெற்றி பெற வேண்டும்.
இந்நிலையில் இந்திய நேரப்படி மதியம் 1.30 மணிக்கு நடக்கவிருந்த ஆஸ்திரேலியா-இங்கிலாந்து ஆட்டமும் மழையால் பாதிக்கப்பட்டது. இதனால் ஒரு பந்து கூட வீசாமல் ஆட்டம் கைவிடப்பட்டது. இதனால் இரு அணிகளுக்கு தலா ஒரு புள்ளிகள் வழங்கப்பட்டுள்ளது.
- டி 20 உலக கோப்பை தொடரில் தற்போது சூப்பர் 12 போட்டிகள் நடைபெற்று வருகின்றன.
- இந்தியா 2 போட்டிகளில் விளையாடி இரண்டிலும் வெற்றி பெற்று முதல் இடத்தில் உள்ளது.
பெர்த்:
டி 20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டி ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வருகிறது. தற்போது சூப்பர் 12 போட்டிகள் நடைபெற்று வருகின்றன. குரூப் 2 பிரிவில் இந்தியா, தென் ஆப்பிரிக்கா, ஜிம்பாப்வே, வங்காளதேசம், பாகிஸ்தான், நெதர்லாந்து ஆகிய 6 அணிகள் இடம் பெற்றுள்ளன. ஒவ்வொரு அணிகளும் மற்ற அணிகளுடன் தலா ஒருமுறை மோதும். முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் அணி அரையிறுதிக்கு முன்னேறும்.
இதுவரை இந்தியா 2 போட்டிகளில் விளையாடி இரண்டிலும் வெற்றி பெற்று முதல் இடத்தில் உள்ளது. தென் ஆப்பிரிக்கா ஒரு வெற்றி, ஒரு போட்டி மழையால் ரத்து ஆகியவற்றின் மூலம் 3 புள்ளிகள் பெற்று 2-வது இடத்தில் உள்ளது.
இரண்டு அணிகளும் தங்களது 3-வது போட்டியில் நாளை பெர்த்தில் பலப்பரீட்சை நடத்துகின்றன. ஆஸ்திரேலியா ஆடுகளங்கள் வேகப்பந்து வீச்சுக்கு சற்று கூடுதலாக ஒத்துழைக்கும். அதிலும் பெர்த் ஆடுகளம் உலகின் அதிவேக வேகப்பந்து ஆடுகளம் என்று அழைக்கப்படுகிறது. இதனால் பேட்ஸ்மேன்களுக்கு பந்து வீச்சாளர்கள் சிம்ம சொப்பனமாக இருப்பார்கள்.
இந்நிலையில், நாங்கள் உலக கோப்பையில் விளையாடும் அணிகளில் சிறந்த வேகப்பந்து வீச்சாளர்களை கொண்ட அணி என தென் ஆப்பிரிக்கா அணியின் வேகப்பந்து வீச்சாளர் நோர்ஜே தெரிவித்துள்ளார். இது தொடர்பாக நோர்ஜே கூறியதாவது:
நாங்கள் எங்களை நம்புகிறோம். உலக கோப்பையில் விளையாடும் அணிகளில் சிறந்த வேகப்பந்து வீச்சாளர்களை கொண்டுள்ள அணிகளில் நாங்களும் ஒன்று. இந்தியாவிற்கு எதிராக நாங்கள் எங்களுடைய முழு திறமை மீது நம்பிக்கை வைத்து செல்வோம். நாங்கள் விதவிதமான வகையில் பந்து வீசும் வீரர்களைக் கொண்டுள்ளோம். நாங்கள் பல்வேறு அம்சங்களை உள்ளடக்கிய அணி. எங்களுடைய வேகப்பந்து வீச்சின் மூலம் பல்வேறு இடங்களை சரிசெய்வோம்.
வேகப்பந்து வீச்சை பொறுத்த வரைக்கும் நாங்கள் எங்களுடைய திறமையைின் மீது நம்பிக்கை வைத்து செல்வோம். எந்த அணிக்கு எதிராக இருந்தாலும் சரி, போட்டி நடக்கும் நாளில் நாங்கள் எங்களுடைய திறமையை வெளிப்படுத்தி, வெற்றிபெற முயற்சிப்போம்.
அத்துடன் இரண்டு சுழற்பந்து வீச்சாளர்களையும் பெற்றுள்ளோம். நாளைய போட்டியை எங்கள் வீரர்கள் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். நாங்கள் என்ன செய்ய வேண்டுமோ, அதன்மீது கவனம் செலுத்துவோம்.
பெர்த் மைதானத்தில் நடந்துள்ள போட்டிகளை வைத்து பார்க்கும்போது, சிறந்த ஆடுகளமாக தெரிகிறது. அதிக அளவில் பவுன்ஸ் மற்றும் வேகம் உள்ளது. நாளைய போட்டிக்கான ஆடுகளம் எப்படி இருக்கும் என்பதை குறித்து உறுதியாக கூற இயலாது. சற்று மாறுபட்டு காணப்படலாம் என தெரிவித்தார்.
வங்காளதேச அணிக்கு எதிரான ஆட்டத்தில் நோர்ஜே 10 ரன்கள் விட்டுக் கொடுத்து 4 விக்கெட் வீழ்த்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.
- இன்றைய போட்டியிலும் கோலி சிறப்பாக விளையாடுவார் என எதிர்பார்ப்பு
- கோலியை எதிர்கொள்ள காத்திருக்கும் தென் ஆப்பிரிக்கா வேகப்பந்து வீச்சாளர்கள்.
பெர்த்:
ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. தற்போது நடைபெற்று வரும் சூப்பர் 12 சுற்று ஆட்டத்தில் இன்று இந்திய அணி, தென் ஆப்பிரிக்காவை எதிர்கொள்கிறது. மாலை 4.30 மணிக்கு பெர்த் மைதானத்தில் இந்த போட்டி தொடங்குகிறது. உலகின் அதிவேக வேகப்பந்து வீச்சிற்கான ஆடுகளம் என்று இந்த மைதானம் அழைக்கப்படுகிறது.
இதனால் இந்திய பேட்ஸ்மேன்களுக்கு இன்றைய போட்டியில் தென் ஆப்பிரிக்க வேகப்பந்து வீச்சாளர்கள் கடும் சவால் அளிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. முதல் இரண்டு போட்டிகளில் அரை சதம் அடித்த விராட் கோலி இன்றைய போட்டியிலும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவார் என ரசிகர்கள் நம்பிக்கையுடன் உள்ளனர். இந்த நிலையில் கோலியை எதிர்கொள்ள தயாராக இருப்பதாக தென் ஆப்பிரிக்க வேகப்பந்து வீச்சாளர்கள் ரபாடாவும், அன்ட்ரிச் நார்ஜே, எய்டன் மார்க்ரம் ஆகியோர் தெரிவித்துள்ளனர்.
- டி20 உலக கோப்பை தொடரில் இன்று வங்காளதேசம், ஜிம்பாப்வே அணிகள் மோதுகின்றன.
- முதலில் ஆடிய வங்காளதேசம் 150 ரன்களை எடுத்துள்ளது.
பிரிஸ்பேன்:
டி 20 உலக கோப்பை தொடர் ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வருகிறது. இதில் தற்போது சூப்பர் 12 சுற்று ஆட்டங்கள் நடைபெற்று வருகின்றன.
இன்று நடைபெறும் போட்டியில் வங்காளதேசம், ஜிம்பாப்வே அணிகள் மோதுகின்றன. இந்த போட்டியில் டாஸ் வென்ற வங்காளதேசம் அணி பேட்டிங் தேர்வு செய்தது.
அதன்படி, வங்காளதேச அணி முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர் சவுமியா சர்க்கார் டக் அவுட்டானார். லிட்டன் தாஸ் 14 ரன்னில் அவுட்டானார்.
அடுத்து இறங்கிய கேப்டன் ஷகில் அல் ஹசன் மற்றொரு தொடக்க ஆட்டக்காரர் ஹுசைன் ஷாண்டோவுடன் இணைந்து நிதானமாக ஆடினார். இந்த ஜோடி 3வது விக்கெட்டுக்கு 54 ரன்கள் சேர்த்த நிலையில் ஷகிப் அல் ஹசன் 23 ரன்னில் ஆட்டமிழந்தார்.
ஒருபுறம் விக்கெட்டுகள் வீழ்ந்தாலும் ஹுசைன் ஷாண்டோ அதிரடியாக ஆடி அரை சதமடித்தார். அவர் 55 பந்தில் 71 ரன்கள் எடுத்து வெளியேறினார்.
இறுதியில், வங்காளதேசம் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 7 விக்கெட் இழப்புக்கு 150 ரன்கள் எடுத்துள்ளது. இதையடுத்து, 151 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஜிம்பாப்வே அணி களமிறங்குகிறது.
- முதலில் ஆடிய வங்காளதேசம் 150 ரன்களை எடுத்துள்ளது.
- அந்த அணியின் ஹுசைன் ஷாண்டோ அரை சதமடித்து அசத்தினார்.
பிரிஸ்பேன்:
டி 20 உலக கோப்பை தொடர் ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வருகிறது. இதில் தற்போது சூப்பர் 12 சுற்று ஆட்டங்கள் நடைபெற்று வருகின்றன.
இன்று நடைபெற்ற போட்டியில் வங்காளதேசம், ஜிம்பாப்வே அணிகள் மோதின. டாஸ் வென்ற வங்காளதேசம் அணி பேட்டிங் தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் ஆடிய வங்காளதேச அணி 20 ஓவரில் 7 விக்கெட் இழப்புக்கு 150 ரன்கள் எடுத்தது. ஹுசைன் ஷாண்டோ பொறுப்புடன் ஆடி அரை சதமடித்தார். அவர் 55 பந்தில் 71 ரன்கள் எடுத்து வெளியேறினார்.
இதையடுத்து, 151 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஜிம்பாப்வே அணி களமிறங்கியது. முன்னணி வீரர்களான மாதேவீர், எர்வின், மில்டன் ஷும்பா, சிக்கந்தர் ராசா ஆகியோர் விரைவில் அவுட்டாகினர்.
சீன் வில்லியம்ஸ் பொறுப்புடன் ஆடி அரை சதமடித்தார். அவர் 64 ரன்னில் அவுட்டானார். ரியான் பர்ல் 27 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் உள்ளார்.
இறுதியில், ஜிம்பாப்வே அணி 8 விக்கெட் இழப்புக்கு 147 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன்மூலம் வங்காளதேசம் 3 ரன்கள் வித்தியாசத்தில் போராடி வெற்றி பெற்றது. வங்காளதேசம் அணி பெறும் 2வது வெற்றி இதுவாகும்.
- முதல் இரு போட்டிகளில் தோல்வியடைந்த பாகிஸ்தான் இப்போட்டியில் வெற்றிபெற வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.
- நெதர்லாந்து தான் ஆடிய இரு போட்டிகளிலும் தோல்வி அடைந்துள்ளது.
பெர்த்:
டி 20 உலக கோப்பை தொடர் ஆஸ்திரேலியாவில் நடந்து வருகிறது. இதில் தற்போது சூப்பர் 12 சுற்று ஆட்டங்கள் நடைபெற்று வருகின்றன.
இன்று நடைபெறும் 2-வது போட்டியில் பாகிஸ்தான், நெதர்லாந்து அணிகள் மோதுகின்றன. டாஸ் வென்ற நெதர்லாந்து அணி பேட்டிங் தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் ஆடிய நெதர்லாந்து அணிக்கு பாகிஸ்தான் பந்து வீச்சாளர்கள் துல்லியமாக பந்து வீசி நெருக்குதல் கொடுத்தனர்.
சீரான இடைவெளியில் விக்கெட்டுகள் விழுந்தன.
அந்த அணியின் ஆக்கர்மேன் 27 ரன்னும், ஸ்காட் எட்வர்ட்ஸ் 15 ரன்னும் எடுத்தனர்.
இறுதியில், நெதர்லாந்து அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 91 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதையடுத்து 92 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பாகிஸ்தான் களமிறங்குகிறது.
பாகிஸ்தான் சார்பில் ஷதாப் கான் 3 விக்கெட்டும், முகமது வாசிம் ஜூனியர் 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.
- பாகிஸ்தான் சார்பில் ஷதாப் கான் 3 விக்கெட்டும், முகமது வாசிம் ஜூனியர் 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.
- இறுதியில் 13.5 ஓவரில் 95 ரன்கள் எடுத்து 4 விக்கெட்டுகளை வீழ்த்து பாகிஸ்தான் அணி வெற்றிப் பெற்றது.
டி20 உலகக்கோப்பை தொடர் ஆஸ்திரேலியாவில் நடந்து வருகிறது. இதில் தற்போது சூப்பர் 12 சுற்று ஆட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இன்று நடைபெறும் 2-வது போட்டியில் பாகிஸ்தான், நெதர்லாந்து அணிகள் மோதின.
டாஸ் வென்ற நெதர்லாந்து அணி பேட்டிங் தேர்வு செய்தது. அதன்படி, முதலில் ஆடிய நெதர்லாந்து அணிக்கு பாகிஸ்தான் பந்து வீச்சாளர்கள் துல்லியமாக பந்து வீசி நெருக்குதல் கொடுத்தனர்.
சீரான இடைவெளியில் விக்கெட்டுகள் விழுந்தன. அந்த அணியின் ஆக்கர்மேன் 27 ரன்னும், ஸ்காட் எட்வர்ட்ஸ் 15 ரன்னும் எடுத்தனர்.
இறுதியில், நெதர்லாந்து அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 91 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதையடுத்து 92 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பாகிஸ்தான் களமிறங்கியது.
பாகிஸ்தான் சார்பில் ஷதாப் கான் 3 விக்கெட்டும், முகமது வாசிம் ஜூனியர் 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.
பின்னர் பாகிஸ்தான் அணி வெற்றி இலக்கை அடைய விளையாடி வந்தனர். இறுதியில் 13.5 ஓவரில் 95 ரன்கள் எடுத்து 4 விக்கெட்டுகளை வீழ்த்து பாகிஸ்தான் அணி வெற்றிப்பெற்றது.
இதில் முகமது ரிஸ்வான் 39 பந்துகளில் 49 ரன்களும், பாபர் அசாம் 5 பந்துகளில் 4 ரன்களும், பாகர் சமான் 16 பந்துகளில் 20 ரன்களும், ஷான் மசூத் 16 பந்துகளில் 12 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தனர்.
தொடர்ந்து இப்திகார் அகமது 6 ரன்கள் மற்றும் ஷதாப் கான் 4 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தனர்.
பாகிஸ்தான் அணியில் அதிகபட்சமாக தொடக்க வீரர் ரிஸ்வான் 49 ரன்கள் அடித்தார்.