என் மலர்
நீங்கள் தேடியது "Taapsee"
- நடிகை டாப்சி தமிழில் ஜெயம் ரவியின் ஜன கன மன படத்தில் நடித்து வருகிறார்.
- பயிற்சியாளரால் தான் அவமதிக்கப்பட்டதைச் சமீபத்தில் பகிர்ந்து கொண்டார்.
ஆடுகளம், காஞ்சனா 2, கேம் ஓவர் உள்ளிட்ட தமிழ் படங்களில் நடித்த நடிகை டாப்ஸிக்கு பாலிவுட்டில் ஏகப்பட்ட படங்கள் குவிந்து வருகின்றன. பிங்க் படத்தின் மூலம் அவருக்கு பாராட்டுக்கள் கிடைத்த நிலையில், பல படங்களை கைவசம் வைத்துள்ளார். இவர் தற்போது தமிழில் ஜெயம் ரவியின் ஜன கன மன படத்தில் நடித்து வருகிறார். இவர் நடிக்க வருவதற்கு முன்பாக படித்துக் கொண்டிருக்கும்போது, மாடலிங் துறையில் ஈடுபடுவதில் கவனம் செலுத்தினார்.

டாப்சி
அந்த நாட்களில் அவருக்குப் பயிற்சிக்கொடுத்த போது பயிற்சியாளரால் தான் அவமதிக்கப்பட்டதைச் சமீபத்தில் பகிர்ந்து கொண்டார். இந்த நிலையில் அவரோடு தொடர்ந்து மோதல் போக்கைக் கடைப்பிடித்து வரும் கங்கனா ரணாவத்தை நேரில் பார்த்தால் என்ன தோன்றும் என்று அவரிடம் கேட்கப்பட்டது. அதற்கு அவர், "கங்கனாவைப் பார்த்தால் ஹலோ சொல்லுவேன். கங்கனா நல்ல நடிகை. அவரைப்போல நான் இருப்பதாக யாராவது சொன்னால் எனக்கு மகிழ்ச்சியே" என்று குறிப்பிட்டுப் பேசியிருக்கிறார்.
- பாலிவுட்டில் பிரபல நடிகையாக வலம் வருபவர் நடிகை டாப்சி.
- இவர் ஜெயம் ரவியின் ஜன கன மன படத்தில் நடித்து வருகிறார்.
ஆடுகளம், காஞ்சனா 2, கேம் ஓவர் உள்ளிட்ட தமிழ் படங்களில் நடித்த நடிகை டாப்சிக்கு பாலிவுட்டில் ஏகப்பட்ட படங்கள் குவிந்து வருகின்றன. பிங்க் படத்தின் மூலம் அவருக்கு பாராட்டுக்கள் கிடைத்த நிலையில், பல படங்களை கைவசம் வைத்துள்ளார். இவர் தற்போது தமிழில் ஜெயம் ரவியின் ஜன கன மன படத்தில் நடித்து வருகிறார்.

டாப்சி
இந்தநிலையில் சில தினங்களுக்கு முன்பு ஆடை அலங்கார அணிவகுப்பு நிகழ்ச்சியொன்றில் டாப்சி கலந்து கொண்டார். அப்போது அவர் கவர்ச்சியான ஆடை அணிந்து கழுத்தில் மகாலட்சுமி அம்மன் உருவத்துடன் கூடிய நெக்லஸ் ஒன்றை அணிந்திருந்தார். இது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

அலங்கார அணிவகுப்பு நிகழ்ச்சியில் டாப்சி
கவர்ச்சி ஆடையில் கடவுள் உருவம் பொறித்த நெக்லஸை எப்படி அணியலாம் என்று வலைத்தளத்தில் அவருக்கு எதிராக நெட்டிசன்கள் கமெண்ட் செய்து வருகின்றனர். மேலும், இந்து கடவுளை அவமதித்து விட்டதாகவும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
- ஆடை அலங்கார அணிவகுப்பு நிகழ்ச்சியொன்றில் டாப்சி கவர்ச்சியான ஆடை அணிந்து கழுத்தில் மகாலட்சுமி அம்மன் உருவத்துடன் கூடிய நெக்லஸ் ஒன்றை அணிந்திருந்தார்.
- கவர்ச்சி ஆடையில் கடவுள் உருவம் பொறித்த நெக்லஸை எப்படி அணியலாம் என்று வலைத்தளத்தில் பலர் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.
ஆடுகளம், காஞ்சனா 2, கேம் ஓவர் உள்ளிட்ட தமிழ் படங்களில் நடித்த நடிகை டாப்சிக்கு பாலிவுட்டில் ஏகப்பட்ட படங்கள் குவிந்து வருகின்றன. பிங்க் படத்தின் மூலம் அவருக்கு பாராட்டுக்கள் கிடைத்த நிலையில், பல படங்களை கைவசம் வைத்துள்ளார். இவர் தற்போது தமிழில் ஜெயம் ரவியின் ஜன கன மன படத்தில் நடித்து வருகிறார்.

சில தினங்களுக்கு முன்பு ஆடை அலங்கார அணிவகுப்பு நிகழ்ச்சியொன்றில் டாப்சி கலந்து கொண்டார். அப்போது அவர் கவர்ச்சியான ஆடை அணிந்து கழுத்தில் மகாலட்சுமி அம்மன் உருவத்துடன் கூடிய நெக்லஸ் ஒன்றை அணிந்திருந்தார். இது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
மேலும், கவர்ச்சி ஆடையில் கடவுள் உருவம் பொறித்த நெக்லஸை எப்படி அணியலாம் என்று வலைத்தளத்தில் அவருக்கு எதிராக நெட்டிசன்கள் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். இந்நிலையில், நடிகை டாப்சி அணிந்திருந்த ஆடை மற்றும் அணிகலன் இந்து கடவுள் மற்றும் இந்து மதத்தின் மீது நம்பிக்கையை கொண்டிருப்பவர்களின் மனதை புண்படுத்தும் விதமாக இருப்பதாக கூறி பா.ஜ.க. எம்.எல்.ஏ. மகன் ஏக்லவ்யா கவுர் என்பவர் மத்தியப் பிரதேசத்தின் இந்தூர் காவல் நிலையத்தில் புகாரளித்துள்ளார்.

இந்தப் புகார் குறித்து வழக்கு ஏதும் பதிவு செய்யப்படவில்லை என்றும், குற்றச்சாட்டு குறித்து விசாரணை மேற்கொண்டு வருவதாகவும் ஆய்வாளர் கபில் சர்மா தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
- நடிகை டாப்சி பாலிவுட்டில் பல படங்களில் நடித்து வருகிறார்.
- இவர் பேட்மின்டன் பயிற்சியாளர் மத்தியாஸ் போ என்பவரை காதலித்து வருகிறார்.
ஆடுகளம், காஞ்சனா 2, கேம் ஓவர் உள்ளிட்ட தமிழ் படங்களில் நடித்த நடிகை டாப்சிக்கு பாலிவுட்டில் ஏகப்பட்ட படங்கள் குவிந்து வருகின்றன. பிங்க் படத்தின் மூலம் அவருக்கு பாராட்டுக்கள் கிடைத்த நிலையில், பல படங்களை கைவசம் வைத்துள்ளார். இவர் தமிழில் ஜெயம் ரவியின் ஜன கன மன படத்தில் நடித்து வருகிறார். இவர் கடந்த சில ஆண்டுகளாக பேட்மின்டன் பயிற்சியாளர் மத்தியாஸ் போ என்பவரை காதலித்து வருகிறார்.

இந்நிலையில், நடிகை டாப்சி நீண்ட இடைவெளிக்கு பின் சமூக வலைதளத்தில் ரசிகர்களின் கேள்விக்கு பதிலளித்தார். அப்போது ஒரு ரசிகர் நீங்கள் எப்போது திருமணம் செய்துகொள்ளப் போகிறீர்கள்? என்று கேள்வி எழுப்பினார். இதற்கு டாப்சி, "நான் இதுவரை தாய்மை அடையவில்லை. அதனால் இப்போது என் திருமணம் இருக்காது. திருமணம் குறித்து உங்கள் அனைவருக்கும் தெரியப்படுத்துவேன்" என்று கேலியாக கூறினார்.
பிரபலங்கள் பலர் தாய்மைக்கு பின் திருமணம் செய்து கொண்ட நிலையில் டாப்சியின் இந்த பதிவிற்கு சமூக வலைதளத்தில் பலர் பாலிவுட் பிரபலங்களை மறைமுகமாக தாக்குகிறார் என்று கமெண்ட் செய்து வருகின்றனர்.
- ஐஸ்வர்யா ராய், பிரியங்கா சோப்ரா, தமன்னா என நடிகைகள் பலரும் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்.
- அதனால் தான் ஆனந்த் அம்பானி திருமணத்துக்கு செல்லவில்லை என்று தெரிவித்துள்ளார்.
ஆசியாவின் பெரும் பணக்காரர்முகேஷ் அம்பானியின் இளைய மகன் ஆன்ந்த அம்பானிக்கு ராதிகா மெர்ச்செண்டுடன் கோலாகலமாக திருமணம் நடந்த முடிந்திருக்கிறது. மும்பையில் நடைபெற்றது. கடந்த 1½ ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நிச்சயிக்கப்பட்டது.
திருமணத்துக்கு முந்தைய வைபவங்களும், கொண்டாட்டங்களும் கடந்த சில மாதங்களாகவே நடந்து வந்தது. மும்பை பி.கே.சி.யில் உள்ள அம்பானி குடும்பத்துக்கு சொந்தமான ஜியோ வேர்ல்டு டிரைவ் கன்வென்சன் அரங்கில் கடந்த ஜூலை 12 ஆம் தேதி நடந்த ஆனந்த் அம்பானி - ராதிகா மெர்ச்சன்ட் திருமண விழாவில் நடிகர் ரஜினிகாந்த், கிரிக்கெட் வீரர் டோனி, ஹாலிவுட் நடிகர் ஜான் சீனா, ஷாருக்கான், சல்மான் கான் என கிட்டத்தட்ட ஒட்டுமொத்த இந்தியத் திரையுலகமே கலந்து கொண்டது. ஐஸ்வர்யா ராய், பிரியங்கா சோப்ரா, தமன்னா என நடிகைகள் பலரும் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்.

இந்நிலையில் ஆடுகளம் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களுக்கு அறிமுகமாகி முன்னணி பாலிவுட் நடிகையாக வளம் வரும் டாப்ஸி தான் ஏன் இந்த திருமண நிகழ்வில் கலந்துகொள்ளவில்லை என்று மனம் திறந்துள்ளார்.

அவர் கூறியதாவது, எனக்கு அவர்களை தனிப்பட்ட முறையில் தெரியாது; திருமணம் என்பது தனிப்பட்ட விசயம் என நினைக்கிறேன்; எனக்கு அல்லது எனது குடும்பத்துக்கும் சிறியதாவது பழக்கமிருந்தால் மட்டுமே நான் பெரும்பாலும் திருமண நிகழ்வுகளில் கலந்து கொள்வேன்; அதனால் தான் ஆனந்த் அம்பானி திருமணத்துக்கு செல்லவில்லை என்று தெரிவித்துள்ளார்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- ஆடுகளம், காஞ்சனா 2, கேம் ஓவர் உள்ளிட்ட தமிழ் படங்களில் நடித்து பிரபலமடைந்தவர் டாப்சி.
- இவர் தற்போது ஜெயம் ரவியின் ஜன கன மன படத்தில் நடித்துள்ளார்.
ஆடுகளம், காஞ்சனா 2, கேம் ஓவர் உள்ளிட்ட தமிழ் படங்களில் நடித்த நடிகை டாப்ஸிக்கு பாலிவுட்டில் ஏகப்பட்ட படங்கள் குவிந்து வருகின்றன. பிங்க் படத்தின் மூலம் அவருக்கு பாராட்டுக்கள் கிடைத்த நிலையில், கங்கனாவை விட இவர் வசம் அதிக நல்ல படங்கள் குவிந்தன. ஆனால், சமீப காலமாக டாப்ஸி நடிப்பில் வெளியான படங்கள் எதுவுமே சரியாக ஓடவில்லை. தற்போது தமிழில் ஜெயம் ரவியின் ஜன கன மன படத்திலும், இந்தியில் அனுராக் காஷ்யப் இயக்கியுள்ள 'டோபரா' படத்தில் டாப்சி நடித்துள்ளார். இப்படம் வருகிற 19-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

டாப்சி
இந்நிலையில் மும்பையில் நடைபெற்ற புரமோஷன் நிகழ்ச்சிக்கு நடிகை டாப்ஸி தாமதமாக வந்ததாகவும், ஏன் லேட் என பத்திரிகையாளர் ஒருவர் அவரிடம் கேட்க பிரச்சனை வெடித்திருக்கிறது. எனக்கு சொன்ன டைமுக்கு நான் வந்திருக்கேன், என்னை எப்படி லேட்னு சொல்லலாம் என நடிகை டாப்ஸி அந்த பத்திரிகையாளரிடம் கேட்டு உள்ளார்.

டாப்சி
நான் கேமரா முன்னாடி நிற்கிறேன். நான் எது செஞ்சாலும் தப்பா தான் தெரியும். கொஞ்சம் நீங்களும் கேமரா முன்னாடி வந்து பேசினால், நீங்க எப்படி கேள்வி கேட்டீங்கன்னு புரியும். எப்போதுமே நடிகர்கள் தான் தவறு செய்வார்கள் என பொரிந்து தள்ளி விட்டார்.

டாப்சி
ஆலியா பட்டின் டார்லிங்ஸ், அமீர்கானின் லால் சிங் சத்தா உள்ளிட்ட படங்களை தடை செய்வதாக ஹேஷ்டேக்குகள் டிரெண்டாகி வரும் நிலையில், தங்களுடைய டோபாரா படத்தையும் தடை செய்ய பாலிவுட் ரசிகர்கள் டிரெண்ட் செய்தால் நெகட்டிவ் பப்ளிசிட்டியாவது கிடைக்கும் என சமீபத்தில் அனுராக் காஷ்யப் மற்றும் டாப்ஸி பேசிய நிலையில், பத்திரிகையாளர்களுடன் டாப்ஸி மல்லுக்கு சென்றதே புரமோஷன் யுக்தியாக இருக்குமா? என நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.





