என் மலர்
நீங்கள் தேடியது "tag 100878"
நாடாளுமன்றத்தின் மாநிலங்களவை உறுப்பினர்களின் பதவிக்காலம் 6 ஆண்டுகள் ஆகும். மராட்டிய மாநிலத்தை சேர்ந்த 6 மாநிலங்களவை உறுப்பினர்களான பியூஷ் கோயல், வினய் சகஸ்ரபுதே, விகாஸ் மகாத்மே, ப.சிதம்ரபம், பிரபுல் பாடேல் மற்றும் சஞ்சய் ராவத் ஆகியோரின் பதிவக்காலம் ஜூலை 4-ந் தேதி முடிவடைகிறது. இந்த பதவிகளுக்கு ஜூன் 10-ந் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. மராட்டிய சட்டமன்றத்தில் எம்.எல்.ஏ.க்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் பா.ஜனதாவுக்கு 2 மாநிலங்களவை உறுப்பினர்களையும், ஆளும் கூட்டணியில் அங்கம் வகிக்கும் சிவசேனா, காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் தலா ஒரு இடத்தையும் கைப்பற்ற முடியும். எனவே 6-வது உறுப்பினரை தேர்வு செய்வதில் கடும் போட்டி நிலவும் என தெரிகிறது.
இந்நிலையில் கோலாப்பூர் அரசு குடும்பத்தை சேர்ந்தவரும், சத்ரபதி சிவாஜி மகாராஜின் வழித்தோன்றலுமான சம்பாஜிராஜே மாநிலங்களவை உறுப்பினர் தேர்தலில், சுயேட்சையாக போட்டியிட போவதாக சமீபத்தில் அறிவித்தார். தன்னை ஆதரிக்குமாறு அனைத்து கட்சிகளுக்கும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார். முன்பு அவர் நாடாளுமன்ற மக்களவையில் ஜனாதிபதியால் பரிந்துரைக்கப்பட்ட உறுப்பினராக இருந்தது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் தேசியவாத காங்கிரஸ் கட்சி தலைவர் சரத்பவாரிடம் வரும் மாநிலங்களவை தேர்தலில் சம்பாஜிராஜேவுக்கு ஆதரவு அளிப்பீர்களா என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு பதில் அளித்து அவர் கூறியதவாது:-
கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு நங்கள் மாநிலங்களவையில் 2 வேட்பாளர்களை கேட்டிருந்தோம். எங்களுக்கு அவை கிடைத்தன. ஆனால் இந்த முறை எங்களுக்கு ஒரு இடம் மட்டும் கிடைக்கும். எங்கள் வேட்பாளரை ஆதரித்த பிறகு சிவசேனா தேர்வு செய்யும் ஒரு வேட்பாளரை ஆதரிப்பதற்கான வாக்குகள் மட்டுமே எங்களிடம் இருக்கும். அவர்கள் சம்பாஜிராஜே அல்லது வேறு எந்த வேட்பாளரையும் தேர்வு செய்யலாம். நாங்கள் சிவசேனாவால் தேர்ந்தெடுக்கப்பட்ட வேட்பாளரை ஆதரிப்போம்.
இவ்வாறு அவர் கூறினார்.
சில மூத்த சிவசேனா தலைவர்கள் வரும் மாநிலங்கவை தேர்தலில் கட்சி 2 வேட்பாளர்களை நிறுத்தும் என கூறியுள்ளனர். இந்த முடிவு சாம்பாஜிராஜேவுக்கு இடையூறு விளைவிக்கும் என கருதப்படுகிறது.
மராட்டிய உள்ளாட்சி தேர்தலில் இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு (ஓ.பி.சி) வழங்கப்பட்ட 27 சதவீத இடஒதுக்கீட்டை சுப்ரீம் கோர்ட்டு அதிரடியாக ரத்து செய்தது. இந்த இடஒதுக்கீட்டை மீட்டெடுக்க மராட்டிய அரசு சட்டப்போராட்டம் நடத்தி வருகிறது. இந்தநிலையில் மும்பையில் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் ஓ.பி.சி. பிரிவு கூட்டத்தில் கலந்துகொண்ட அந்த கட்சியின் நிறுவன தலைவர் சரத்பவார் பேசியதாவது:-
நாட்டில் உள்ள ஒவ்வொருவரும் தங்களுக்கு சேர வேண்டியதை சரியாக பெற வேண்டும். நாங்கள் எதையும் இலவசமாக கேட்கவில்லை. உரிமையை பெற சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பை தவிர வேறு வழியில்லை.
பட்டியல் வகுப்பினர் மற்றும் பழங்குடியினர் தங்களுக்கு அரசியலமைப்பு சட்டம் வழங்கிய இடஒதுக்கீட்டின் காரணமாக பலனடைந்துள்ளனர். இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கும் இதே போன்ற சலுகைகள் தேவை.
சலுகைகளை வழங்க அரசு இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினரின் மக்கள் தொகையை துல்லியமாக அறிந்து கொள்ள வேண்டும். எனவே சாதி வாரியான மக்கள் தொகை கணக்கெடுப்பு அவசியம் தேவை. இந்த கணக்கெடுப்பின் புள்ளிவிவர அடிப்படையில் தான் சமூக நீதி வழங்க முடிவும்.
பா.ஜனதாவுடன் கூட்டணியில் உள்ள பீகார் முதல்-மந்திரி நிதீஷ் குமார் சாதிவாரி கணக்கெடுப்புக்கு ஆதரவாக பேசுகிறார். ஆனால் அங்குள்ள காவி அமைப்புகள் அதற்கு எதிரான மனநிலையில் உள்ளன. ஆர்.எஸ்.எஸ். மூத்த தலைவர் பையாஜி ஜோஷி சாதி அடிப்படையிலான மக்கள் தொகை கணக்கெடுப்பை எதிர்க்கிறார். அது சமூகத்திற்கு தவறான செய்தியை கொண்டு சேர்க்கும் என்கிறார். நாட்டின் சரியான காட்சியை வெளிக்கொண்டு வருவதில் என்ன தவறு இருக்கிறது?. தேசியவாத காங்கிரஸ் இதுகுறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும்.
இவ்வாறு அவர் பேசினார்.
மேலும் மராட்டியத்தில் இதர பிற்படுத்தப்பட்டோர் இட ஒதுக்கீட்டை மீட்டெடுக்கும் அரசின் முயற்சியை விமர்சித்து வரும் பா.ஜனதாவை சாடிய அவர், "நீங்கள் (பா.ஜனதா) மராட்டியத்தில் 5 ஆண்டுகள் ஆட்சியில் இருந்தீர்கள், மேலும் 2014-ம் ஆண்டு முதல் மத்தியில் தொடர்ந்து ஆட்சி செய்கிறீர்கள். நீங்கள் இப்போது வரை தூங்கிக்கொண்டு இருக்கிறீர்களா?" என்று சாடினார்.
புதுடெல்லி:
பாராளுமன்ற தேர்தலில் காங்கிரசுக்கு மோசமான தோல்வி ஏற்பட்டது.
ராஜஸ்தான், மத்திய பிரதேசம், சத்தீஸ்கர் ஆகிய 3 மாநில சட்டசபை தேர்தலில் பெற்ற வெற்றியால் பாராளு மன்ற தேர்தலில் காங்கிரஸ் அதிகமான இடங்களில் வெல்லும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் ஏமாற்றம் தான் மிஞ்சியது.
காங்கிரஸ் தலைமையிலான ஐக்கியமுற்போக்கு கூட்டணி 91 இடங்களை மட்டுமே கைப்பற்றியது. இதில் காங்கிரசுக்கு வெறும் 52 தொகுதிகள் மட்டுமே கிடைத்தது.
இதனால் பாராளுமன்றத்தில் காங்கிரஸ் எதிர்க்கட்சி அந்தஸ்தை பெற முடியாத சூழ்நிலை ஏற்பட்டு உள்ளது. எதிர்க்கட்சி அந்தஸ்தை பெற குறைந்தபட்சம் 55 எம்.பி.க்களை பெற்றிருக்க வேண்டும்.
எதிர்க்கட்சி அந்தஸ்தை பெற காங்கிரஸ் கட்சி புதிய முயற்சியில் இறங்கி உள்ளது.
சரத்பவாரின் தேசியவாத காங்கிரஸ் கட்சியை தங்களுடன் இணைத்தால் எதிர்க்கட்சி அந்தஸ்தை பெற முடியும் என்று காங்கிரஸ் கருதுகிறது.
இதுதொடர்பாக காங்கிரஸ் நிர்வாகி ஒருவர் கூறியதாவது:-
ராகுல்காந்தி ராஜினாமா செய்வதில் அடம்பிடிப்பதால் காந்தி குடும்பத்தில் இல்லாத ஒருவர் தலைவர் பதவிக்கு தேடப்பட்டு வருகிறார். இதற்கு ஏற்றவாறு சரத் பவாரின் கட்சியை காங்கிரசுடன் இணைத்து விட்டால் அவர் கட்சியின் தலைவராவதுடன் பாராளு மன்றத்திலும் எதிர்க்கட்சி அந்தஸ்து கிடைக்கும் என்ற யோசனை தீவிரமாக ஆலோசிக்கப்பட்டு வருகிறது’.
இவ்வாறு அவர் கூறினார்.
மராட்டியத்தில் காங்கிரசுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்ட சரத்பவாருக்கு 4 எம்.பி.க்கள் உள்ளனர். காங்கிரஸ் கட்சி ஒரே ஒரு தொகுதியில் மட்டுமே வெற்றிபெற்றது.
தேசியவாத காங்கிரஸ் கட்சி எம்.பி.க்கள் இணைந்தால் காங்கிரசின் எண்ணிக்கை பாராளுமன்றத்தில் 57 ஆக அதிகரித்து எதிர்க் கட்சி அந்தஸ்து கிடைக்கும்.
அத்துடன் சரத்பவாருக்கு காங்கிரசின் தலைவராகும் வாய்ப்பு கிடைக்கும் என கருதப்படுகிறது.
காங்கிரசின் இந்த யோசனையை சரத்பவார் ஒப்புக்கொள்ள மாட்டார் என்றே கருதப்படுகிறது.
இது தொடர்பாக தேசியவாத காங்கிரஸ் கட்சியின் நிர்வாகிகள் கூறும்போது, ‘மராட்டியத்தில் சரத்பவார் தேசியவாத காங்கிரஸ் கட்சியை நன்கு வளர்த்துள்ளார். இதனால் அவர் காங்கிரசுடன் தனது கட்சியை இணைப்பது கடினம்’ என்றனர்.
பாராளுமன்றத்தில் நடிகை சுமலதா (கர்நாடகம்), நவ்னீத் ரவிரானா (மராட்டியம்), நம்பாகுமார் சரணியா (அசாம்), மோகன் பாய் டெல்கர் (தத்ரா நாகர் ஹவேலி) ஆகியோர் சுயேச்சை எம்.பி.க்களாக உள்ளனர்.
இவர்களது ஆதரவை பெறவும் காங்கிரஸ் முயற்சிப்பதாக கூறப்படுகிறது.
நாளை மறுநாள் ஓட்டு எண்ணிக்கையின்போது பா.ஜனதா கட்சிக்கு தனி பெரும்பான்மை கிடைக்காத பட்சத்தில் காங்கிரஸ் தலைமையில் ஆட்சி அமைத்து விடவேண்டும் என்று முயற்சிகள் நடந்து வருகிறது.
இதற்காக மாநில கட்சிகளை ஒருங்கிணைக்கும் பணிகளில் சந்திரபாபு நாயுடு ஈடுபட்டுள்ளார். அவருக்கு உதவியாக தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவாரும் பேச்சு வார்த்தைகளில் ஈடுபட்டுள்ளார்.
ஆந்திராவில் சந்திரபாபு நாயுடுவுக்கு பரம எதிரியாக திகழும் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் தலைவர் ஜெகன்மோகன் ரெட்டியையும் மாநில கட்சிகளின் அணியில் இடம் பெற செய்ய பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. சரத்பவார் கடந்த சில தினங்களாக ஜெகன்மோகன் ரெட்டியுடன் இது தொடர்பாக பேசி வருகிறார்.
இந்த நிலையில் தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்புகளில் பா.ஜனதாவுக்கு ஆதரவான நிலை பரவி இருப்பதால் சில மாநில கட்சி தலைவர்கள் காங்கிரசுடன் சேர தயங்கியபடி உள்ளனர். ஜெகன்மோகன் ரெட்டியும் 23-ந்தேதிக்கு பிறகு இதில் முடிவு செய்து கொள்ளலாம் என்று தீர்மானித்து இருக்கிறார்.
இப்போதே காங்கிரசுடன் கூட்டணி என்ற உறுதியான நிலைப்பாட்டை எடுக்க வேண்டாம் என்று அவர் தயங்கியபடி உள்ளார்.
இதையறிந்த தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் நேற்று முதல் ஜெகன்மோகன் ரெட்டியை போனில் தொடர்பு கொள்ள முயன்று வருகிறார். ஆனால் ஜெகன்மோகன் ரெட்டி அவருடன் பேசுவதை தவிர்த்து விட்டார்.
இதனால் ஜெகன்மோகன் ரெட்டி எத்தகைய முடிவை மேற்கொள்வார் என்பது கேள்விக்குறியாக மாறி உள்ளது. பா.ஜனதாவுக்கு பெரும்பான்மை கிடைக்கும் பட்சத்தில் அவர் பா.ஜனதா பக்கம் சாய வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.
பாரதிய ஜனதா மீண்டும் மத்தியில் ஆட்சி அமைப்பதை தடுப்பதற்கு காங்கிரஸ் கட்சியும், பா.ஜனதாவை எதிர்க்கும் மாநில கட்சிகளும் தீவிரமாக ஆலோசனை நடத்த தொடங்கி உள்ளன.
இதன் முதல் கட்டமாக காங்கிரஸ் மற்றும் மாநில கட்சிகளை ஓர் அணியில் திரட்டும் நடவடிக்கைகள் தீவிரமாக நடந்து வருகின்றன.
காங்கிரஸ் கட்சியை எதிர்த்து தொடங்கப்பட்ட தெலுங்கு தேசம் கட்சியின் தலைவர் சந்திரபாபு நாயுடு மாநில கட்சிகள் அனைத்தையும் காங்கிரசுடன் கை கோர்க்க வைக்க கடந்த மாதம் முதல் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார். இடையில் அவரது பேச்சுவார்த்தையில் சற்று தொய்வு ஏற்பட்டது.
தற்போது அவர் மீண்டும் தனது வியூகத்தை தீவிரப்படுத்த தொடங்கி இருக்கிறார். நேற்று அவர் கம்யூனிஸ்டு கட்சி தலைவர் சீதாராம் யெச்சூரியை சந்தித்து பேசினார். பிறகு ஆம்ஆத்மி கட்சி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவாலை சந்தித்து ஆலோசனை நடத்தினார்.
தேர்தல் முடிவுகள் வெளியாகும் 23-ந்தேதி மாலை எதிர்க்கட்சி தலைவர்கள் அனைவரையும் டெல்லியில் திரள செய்ய வேண்டும் என்ற இலக்குடன் சந்திரபாபு நாயுடு முக்கிய கட்சி தலைவர்களை சந்தித்து வருகிறார்.
இந்த நிலையில் இன்று காலை அவர் டெல்லியில் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தியை சந்தித்து பேசினார். அப்போது தேர்தல் முடிவுகள் வெளியானதும் எத்தகைய நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டும் என்று அவர்கள் ஆலோசனை நடத்தினார்கள்.


அடுத்தகட்டமாக, பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதியை சந்தித்து பேசினார். மேற்கு வங்காளம் மாநில முதல் மந்திரியும் திரினாமுல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜியை சந்திரபாபு நாயுடு விரைவில் சந்திக்க உள்ளார்.
மும்பை:
தேசியவாத காங்கிரஸ் கட்சியின் நிறுவனர் சரத்பவார் தேர்தல் பிரசாரம் செய்ய சதாரா வருகை தந்தார். அங்கு அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
ஓட்டு எந்திரங்களில் குளறுபடி நடைபெறுவதாக ஏற்பட்ட புகாரை தொடர்ந்து தேர்தலுக்கு முன்பு ஆந்திரா மற்றும் குஜராத்தில் நிபுணர்கள் மூலம் பரிசோதனை நடத்தி காட்டப்பட்டது. அதில் நான் கலந்து கொண்டேன்.
அப்போது ஓட்டுகள் பா.ஜனதா கட்சிக்கு சென்றதை நான் நேரில் பார்த்தேன். எந்திரத்தில் ஓட்டு போடும் பட்டனை நான் அழுத்தினேன். ஆனால் நான் போட்ட ஓட்டு தாமரைக்கு சென்றது. தனிப்பட்ட முறையில் எனக்கு அந்த அனுபவம் கிடைத்தது.
எனவே ஓட்டு எந்திரத்தில் குளறுபடி ஏற்பட வாய்ப்பு உள்ளது. அனைத்து ஓட்டு எந்திரங்களிலும் தவறு நடைபெறும் என சொல்லவில்லை. ஆனால் குளறுபடிகள் மற்றும் தவறுகள் நடைபெற வாய்ப்பு இல்லை என்று கூற முடியாது.

இந்த விவகாரம் குறித்து சில எதிர்க்கட்சிகள் கோர்ட்டில் முறையிட்டன. ஆனால் துரதிர்ஷ்ட வசமாக அவர்களின் முயற்சி வெற்றி பெறவில்லை.
ராஜீவ் காந்திக்கு எதிராக பிரதமர் மோடி கூறிய குற்றச்சாட்டுகள் துரதிர்ஷ்டவசமானது. நிரூபிக்க முடியாது. அவரது குடும்பம் நாட்டுக்காக பெரிய தியாகம் செய்துள்ளது. 2 தியாகிகளை நாட்டுக்கு தந்துள்ளது. எனவே அந்த குடும்பம் பற்றிய கருத்துக்களை மோடி மிக கவனமாக பேச வேண்டும்.
விடுமுறையை கழிக்க இந்திய ராணுவத்துக்கு சொந்தமான போர்க் கப்பலை ராஜீவ் காந்தி தவறான முறையில் பயன்படுத்தினார் என மோடி குற்றம் சாட்டியுள்ளார். இந்திய ராணுவ கப்பலை பயன்படுத்தியதில் ஆட்சே பனை எதுவுமில்லை.
ராணுவ மந்திரியாக இருந்த போது போர்க்கப்பலில் நான் அந்தமான் சென்று இருக்கிறேன். அது கடலில் தான் பயணம் செய்கிறது. பிரதமராக இருப்பவர் அதை பயன்படுத்துவதில் என்ன தவறு இருக்கிறது.
இவ்வாறு சரத்பவார் கூறினார். #SharadPawar #PMModi
தேசியவாத காங்கிரஸ் கட்சியின் நிறுவன தலைவர் சரத்பவாரின் மகள் சுப்ரியா சுலே பர்பானி தொகுதியில் மீண்டும் போட்டியிட்டுள்ளார்.
இதேபோல கட்சியின் மூத்த தலைவர் அஜித் பவாரின் மகனும், சரத்பவாரின் பேரனுமான பர்த் பவாருக்கு மாவல் தொகுதியில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் மாவல் தொகுதியில் சிவசேனா வேட்பாளர் ஸ்ரீரங் பர்னேவை ஆதரித்து பிரசாரம் செய்த அக்கட்சியின் தலைவர் உத்தவ் தாக்கரே பேசியதாவது:-
சரத்பவார் தேர்தல் டிக்கெட் வழங்கும்போது அவரது குடும்பத்தை மனதில் வைத்து கொண்டு செயல்பட்டு உள்ளார். தான் இல்லாவிட்டால் தனது மகன்.. மகன் இல்லாவிட்டால் தனது மருமகன்... இப்படி தான் தேர்தல் டிக்கெட் வழங்கப்பட்டு உள்ளது. மற்றவர்களுக்கு பிள்ளைகள் இல்லையா?. சத்தாராவில் நாங்கள் ஒரு சுமைதூக்கும் தொழிலாளியின் மகனுக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கியுள்ளோம்.
இவ்வாறு அவர் கூறினார். #LoksabhaElections2019 #Uddhavthackeray #SharadPawar
தேசியவாத காங்கிரஸ் கட்சி தலைவர் சரத்பவார் சிரூர், மன்சார் பகுதியில் நடந்த தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் தேசியவாத காங்கிரஸ் வேட்பாளருக்கு ஆதரவாக வாக்கு சேகரித்து பேசினார். அப்போது அவர், தான் தேர்தலில் போட்டியிடாதது குறித்து விமர்சித்து பேசிய உத்தவ் தாக்கரேக்கு பதிலடி கொடுக்கும் வகையில் பேசியதாவது:-
நான் போட்டி நடக்கும் களத்தைவிட்டு வெளியேறி விட்டதாக உத்தவ் தாக்கரே கூறுகிறார். நான் 14 தேர்தல்களில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளேன். 80 வயதை நெருங்கிவிட்டதால் இளைஞர்களுக்கு வாய்ப்பு கொடுக்கும் வகையில் தேர்தலில் போட்டியிடுவதை நிறுத்தினேன்.

நீங்கள் (உத்தவ்தாக்கரே) ஒருமுறையாவது களத்திற்கு வந்து (தேர்தலில்) போட்டியிடுங்கள். என்னை மறந்துவிடுங்கள், எனது கட்சியின் சிறு மல்யுத்த வீரன் (தொண்டன்) கூட உங்களை தோற்கடித்துவிடுவான்.
கட்சிக்காக எதையும் செய்யாமல் பால்தாக்கரே உருவாக்கிய சிவசேனாவை உத்தவ் தாக்கரே கைப்பற்றி கொண்டார்.
இவ்வாறு சரத்பவார் பேசினார். #UddhavThackeray #SharadPawar
தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
2014-ம் ஆண்டு நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலில் மக்கள் மாற்றத்தை விரும்பினார். அப்போது குஜராத்தில் ஏற்பட்டதை போன்ற வளர்ச்சியை உருவாக்க போவதாக ஒரு மாதிரி திட்டத்தை நாட்டு மக்கள் முன் நரேந்திரமோடி முன்வைத்தார்.
ஆனால் ஆயிரக்கணக்கான இளைஞர்களின் வேலைவாய்ப்பு பறிபோனது. புதிய வேலைவாய்ப்புக்கான சாத்திய கூறுகளோ வாய்ப்புகளோ இல்லை. இந்த பாதிப்பு இளைஞர்கள் மட்டுமின்றி அனைத்து தரப்பு வாக்காளர்களையும் வெகுவாக பாதித்துள்ளது.
எனவே, அதற்கான விலையை பிரதமர் மோடி இந்த தேர்தலில் கொடுக்க வேண்டிய நிலை ஏற்படும். இத்தேர்தலில் அவர் மிகப்பெரும் சரிவை சந்திப்பார்.
ஆனால் அவரது 5 ஆண்டுகால ஆட்சியில் நாடு அனைத்து துறைகளிலும் தோல்வி அடைந்து விட்டது. தேசிய முற்போக்கு கூட்டணி அரசு வேலை வாய்ப்புகளை உருவாக்குவதிலும், நாட்டின் பொது வளர்ச்சியை ஊக்குவிப்பதிலும் படுதோல்வி அடைந்தது.
ஜி.எஸ்.டி. அமல்படுத்துதல் மற்றும் பணமதிப்பு நீக்கம் போன்ற முக்கிய பிரச்சனைகளில் மோடி எடுத்த முடிவால் நாட்டின் பொருளாதாரம் மிகவும் பாதிக்கப்பட்டது.
அது இளம் தலைமுறையினரை வசீகரித்தது. மோடி தலைமையிலான பாஜனதா ஆட்சிக்கு வந்தால் இளைஞர்களின் வாழ்வாதாரம் உயரும் என எதிர்பார்த்தனர்.
அவரால் ராணுவ வீரர்களின் பெயரை வைத்து தேர்தலில் ஓட்டு பெற முடியாது. இந்த தேர்தலில் பா.ஜனதாவுக்கு குறைந்தது 100 இடங்களே கிடைக்கும்.
இவ்வாறு அவர் கூறினார். #SharadPawar #PMModi
பா.ஜ.க. தேசிய தலைவர் அமித் ஷா உத்தரப்பிரதேசம் மாநிலம், கான்பூர் நகரில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பேசி வருகிறார்.

ஞாயிற்றுக்கிழமை ஒட்டுமொத்த நாட்டுக்கும் விடுமுறை நாளாக அமைந்துவிடும்’ என பலத்த கரகோஷம் மற்றும் சிரிப்பலைகளுக்கு இடையில் அமித் ஷா தெரிவித்தார். #StalinPM #SaturdayPM #AmitShah

அவுரங்காபாத்:
அடுத்த ஆண்டு நடைபெறும் பாராளுமன்ற தேர்தலில் பா.ஜனதாவை வீழ்த்த எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைக்கும் முயற்சியில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி ஈடுபட்டுள்ளார்.
ஒவ்வொரு மாநிலத்திலும் கூட்டணி மற்றும் தொகுதி பங்கீடு தொடர்பாக காங்கிரஸ் தீவிர ஆலோசனை நடத்தி வருகிறது.
மராட்டிய மாநிலத்தில் சரத்பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரசுடன் தொகுதி பங்கீடு பேச்சு வார்த்தையில் ஈடுபட்டு வருகிறது. அந்த மாநிலத்தில் மொத்தம் 48 தொகுதிகள் இருக்கிறது.
இதில் 40 தொகுதிகளில் காங்கிரஸ் - தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் இடையே ஒருமித்த கருத்து ஏற்பட்டது. மீதியுள்ள 8 இடங்களில் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது. இதை அந்த கட்சியின் தலைவர் சரத்பவார் தெரிவித்துள்ளார்.

மராட்டிய மாநிலத்தில் காங்கிரசுக்கும், தேசியவாத காங்கிரசுக்கும் இடையே எந்தெந்த தொகுதியில் போட்டியிடுவது என்பது பற்றி பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. இதில் 40 தொகுதிகளில் ஒருமித்த கருத்து ஏற்பட்டுள்ளது. மீதியுள்ள 8 இடங்களில் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.
அவுரங்காபாத், புனே இடங்கள் குறித்து இன்னும் முடிவாகவில்லை. இங்கு காங்கிரசுடன் செயல்பாடு சரியில்லாததால் எங்கள் கட்சி நிர்வாகிகள் இந்த தொகுதியில் டிக்கெட் கேட்கிறார்கள்.
மாநிலங்களில் உள்ள எதிர்க்கட்சிகள் அனைத்தும் கூட்டணி அமைத்து ஒருங்கிணைந்து போட்டியிட்டால் மத்தியில் பா.ஜனதாவை வீழ்த்த இயலும். மாநிலங்களில் ஒவ்வொரு கட்சிகளும் வலிமை வாய்ந்தவை.
கூட்டணிக்கு யார்? தலைமை தாங்குவது என்பது குறித்து பாராளுமன்ற தேர்தலுக்கு பிறகே முடிவு செய்யலாம். தமிழகத்தில் தி.மு.க. பலம் பெற்றது. கர்நாடகா, குஜராத்தில் காங்கிரஸ் தலைமை வகிக்கலாம்.
உத்தரபிரதேசத்தில் பகுஜன் சமாஜ்வாடி, பகுஜன் சமாஜ் பலம் வாய்ந்தவை. இதனால் காங்கிரஸ் அதற்கு ஏற்ற வகையில் அனைத்து எதிர்க் கட்சிகளையும் கவனத்துடன் ஒருங்கிணைக்க வேண்டும்.
இவ்வாறு சரத்பவார் கூறியுள்ளார். #SharadPawar #BJP #ParliamentElection