என் மலர்
நீங்கள் தேடியது "நயன்தாரா"
- படத்தின் காட்சி சில நொடிகள் வரை இடம்பெற்று இருந்தது.
- சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.
நடிகை நயன்தாராவின் வாழ்க்கை சம்பவங்களை தொகுத்து உருவாக்கப்பட்ட இணைய தொடர் 'நயன்தாரா: பியாண்ட் தி பேரி டேல்' என்ற பெயரில் பிரபல ஓடிடி தளமான நெட்ப்ளிக்ஸ்-இல் வெளியானது. இந்த ஆவணத் தொடரின் டிரெய்லரில் தனுஷ் தயாரித்து வெளியான "நானும் ரவுடி தான்" படத்தின் காட்சி சில நொடிகள் வரை இடம்பெற்று இருந்தது.
இந்தக் காட்சியை உரிய அனுமதியின்றி பயன்படுத்தியதாக நயன்தாராவிடம் ரூ. 10 கோடி இழப்பீடு கேட்டு தனுஷ் சார்பில் அவரது வழக்கறிஞர் மூலம் நோட்டீஸ் அனுப்பி இருந்தார். மேலும், நயன்தாராவுக்கு எதிராக தனுஷ்-இன் படத் தயாரிப்பு நிறுவனம் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி வழக்கு தொடர்பாக பதில் அளிக்கும் படி நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் மற்றும் நெட்ப்ளிக்ஸ் நிறுவனங்களுக்கு உத்தரவிட்டார். இந்த பதில் மனுக்களுக்கு, தனுஷ் தரப்பிலும் பதில் அளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டார்.
மேலும், இந்த வழக்கில் இடைக்கால தடை கோரும் மனு மீது ஜனவரி 8-ம் தேதி இறுதி விசாரணை நடத்தப்படும் என்று அறிவித்துள்ளார்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.