search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பக்கோடா"

    காலையில் செய்ய சாதம் மீந்து விட்டால் மாலையில் அந்த மீந்த சாதத்தை வைத்து சூப்பரான ஸ்நாக்ஸ் செய்யலாம். இன்று இந்த ஸ்நாக்ஸ் செய்முறையை பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    பழைய சாதம் - 1 கப்
    முட்டை - 2
    கடலை மாவு - 1/2 கப்
    வெங்காயம் - 1
    உப்பு - தேவைக்கேற்ப
    பச்சை மிளகாய் - 1
    மிளகாய்த்தூள் - 1/2 தேக்கரண்டி
    மல்லித் தூள் - 1/4 தேக்கரண்டி
    துருவிய கேரட் - 1
    பெருங்காயத்தூள் - சிறிதளவு

    செய்முறை :


    வெங்காயம், பச்சை மிளகாயை பொடியாக நறுக்கிகொள்ளவும்.

    முதலில் பழைய சாதத்துடன், இரண்டு முட்டை சேர்த்து நன்றாக மசிக்க வேண்டும்.

    பின் இந்த கலவையுடன் கடலை மாவு, வெங்காயம், மிளகாய் தூள், மல்லி தூள், பெருங்காயத்தூள் ஆகியவற்றை சேர்க்க வேண்டும்.

    அவற்றை நன்றாக கலந்த பின் தேவையான அளவு உப்பு சேர்த்து, கையில் ஒட்டாத அளவிற்கு பிசைந்து கொள்ள வேண்டும்.

    அடுத்து ஒரு வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும், செய்து வைத்த கலவையை சிறிது சிறிதாக எண்ணெயில் போட்டு பொரிக்கவும்

    நன்றாக சிவந்து வந்தபின் பொரித்த பக்கோடாவை எடுத்து பரிமாறினால் சுவையான பக்கோடா தயார் ஆகிவிடும்.
    ×