என் மலர்
நீங்கள் தேடியது "tag 125882"
தமிழில் முன்னணி நடிகராக திகழும் அரவிந்த் சாமி, தற்போது நடித்துள்ள படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு அறிவித்துள்ளது.
தமிழில் முன்னணி நடிகராக திகழும் அரவிந்த் சாமி, தளபதி படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார். ரோஜா, என் சுவாசக்காற்றே, பம்பாய் போன்ற படங்கள் மூலம் ரசிகர் மத்தியில் நீங்கா இடம் பிடித்த இவர், சினிமாவில் இருந்து சிலகாலமாக விலகி இருந்தார். நீண்ட இடைவேளைக்கு பிறகு மணிரத்தினத்தின் ‘கடல்' படத்தின் மூலம் மீண்டும் அரவிந்த் சாமி நடிக்கத் தொடங்கினார். இவர் நடித்துள்ள 'ரெண்டகம்', 'சதுரங்க வேட்டை 2' போன்ற படங்கள் அடுத்தடுத்து வெளியாகவுள்ளது.

கள்ளபார்ட்
தற்போது, ராஜபாண்டி இயக்கத்தில் அரவிந்த் சாமி கதாநாயகனாக நடித்திருக்கும் படம் ‘கள்ளபார்ட்'. இப்படத்தில் ரெஜினா, ஆனந்த்ராஜ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். மூவிங் ஃபிரேம் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு நிவாஸ் கே பிரசன்னா இசையமைத்துள்ளார். இந்தப் படத்துக்கு, அரவிந்த் கிருஷ்ணா ஒளிப்பதிவு செய்துள்ளார். சமீபத்தில் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை விஜய் சேதுபது தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் வெளியிட்டிருந்தார். இந்நிலையில், ‘கள்ளபார்ட்' படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு அறிவித்துள்ளது. அதன்படி இப்படம் வருகிற ஜூன் 24-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என்று படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.
2019-ஆம் ஆண்டு வெளியாக இருந்த இப்படம் சில காரணங்களால் வெளியிடப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழ், தெலுங்கில் பல படங்களில் நடித்து பிரபலமான நடிகை ரெஜினா, தன்னுடன் நடித்த நடிகர் பற்றி கூறியிருக்கிறார். #Regina #ReginaCassandra
சதுரங்க வேட்டை -2’, ‘நரகாசூரன்’, ‘வணங்காமுடி’ ஆகிய படங்களைத் தொடர்ந்து ‘கள்ளபார்ட்’ படத்தில் நடிக்கத் தொடங்கினார் அரவிந்த்சாமி. சென்னையில் தொடங்கிய இப்படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. ராஜபாண்டி இயக்கி வரும் இப்படத்தில் ரெஜினா நாயகியாக நடித்து வருகிறார்.
இதில் அரவிந்த்சாமி ஹார்ட்வேர் என்ஜினீயராகவும், ரெஜினா நடன ஆசிரியையாகவும் நடித்து வருகிறார்கள். இதில் பார்த்தி என்ற புதுமுக நடிகரை வில்லனாக அறிமுகப்படுத்துகிறார்கள். ஹரிஷ் பெராடி, ஆதேஷ், பாப்ரிகோஷ் உள்ளிட்டோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்கள்.

அரவிந்த் கிருஷ்ணா ஒளிப்பதிவு செய்து வரும் இப்படத்துக்கு நிவாஸ் கே.பிரசன்னா இசையமைத்து வருகிறார். இதுவரை 75 சதவீதம் படப்பிடிப்பு முடிவடைந்துள்ளது. ஏப்ரல் மாதம் இப்படத்தை திரைக்கு கொண்டு வர படக்குழு முடிவு செய்துள்ளது.
தனது வேடம் பற்றி ரெஜினா கூறும்போது ‘இது எனக்கு மிகவும் பிடித்த வேடம். எனது வேடத்துக்கு படத்தின் கதையில் நிறைய முக்கியத்துவம் உள்ளது. அரவிந்தசாமியுடன் நடித்ததில் மகிழ்ச்சி’ என்று கூறி இருக்கிறார்.
ராஜபாண்டி இயக்கத்தில் அரவிந்த்சாமி - ரெஜினா கசாண்ட்ரா நடிப்பில் உருவாகி வரும் கள்ளபார்ட் படத்தை ஏப்ரலில் திரைக்கு கொண்டு வர திட்டமிட்டுள்ளனர். #Kallapart #ArvindSwamy
மூவிங் பிரேம்ஸ் பட நிறுவனம் சார்பில் எஸ்.பார்த்தி, எஸ்.சீனா இணைந்து தயாரிக்கும் படம் `கள்ளபார்ட்'. அரந்த்சாமி - ரெஜினா இணைந்து நடிக்கும் இந்த படத்தில் ஹரிஷ் பெராடி, ஆதேஷ், பாப்ரிகோஷ், ராட்சசன் புகழ் பேபி மோனிகா உள்ளிட்ட பலரும் நடிக்கிறார்கள்.
ஆக்ஷன் கலந்த திரில்லர் படமாக உருவாகும் இந்த படத்தை ராஜபாண்டி இயக்கி வருகிறார். படம் பற்றி இயக்குநர் கூறும்போது,

அரவிந்த்சாமி எவ்வளவோ படங்களில் நடித்திருக்கிறார். அவருக்கு எந்த கதாபாத்திரம் கொடுத்தாலும் அதை சிறப்பித்து விடக் கூடியவர். இதில் அதிபன் என்கிற ஹார்ட்வேர் கதாபாத்திரம். நாம் என்ன சொல்கிறோமோ அதை அப்படியே உள்வாங்கி பிரதிபலிப்பார். அது திரையில் இன்னும் பிரமிப்பை ஏற்படுத்தும்படி இருக்கிறது. ரெஜினா டான்ஸ் டீச்சர் வேடம் ஏற்றிருக்கிறார். படப்பிடிப்பு வேகமாக வளர்ந்து வருகிறது. ஏப்ரல் மாதம் படத்தை திரைக்கு கொண்டு வர உள்ளோம் என்றார்.
அரவிந்த் கிருஷ்ணா ஒளிப்பதிவு செய்யும் இந்த படத்திற்கு நிவாஸ் கே.பிரசன்னா இசையமைக்கிறார். #Kallapart #ArvindSwamy #ReginaCassandra
ராஜபாண்டி இயக்கத்தில் அரவிந்த்சாமி - ரெஜினா இணைந்து நடிக்கும் கள்ளபார்ட் படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் இன்று துவங்கியது. #Kallapart #ArvindSwamy
விக்ரமின் `ஸ்கெட்ச்' படத்தை தயாரித்த மூவிங் பிரேம் நிறுவனம் அடுத்ததாக அரவிந்த்சாமி நாயகனாக நடிக்கும் `கள்ளபார்ட்' படத்தை பிரம்மாண்டமாக தயாரிக்கிறது.
`என்னமோ நடக்குது', `அச்சமின்றி' படங்களை இயக்கிய ராஜபாண்டி இந்த படத்தை இயக்குகிறார். வித்தியாசமான கதையம்சம் கொண்ட இந்தப் படத்தில் நாயகியாக ரெஜினா நடிக்கிறார். முக்கிய வேடத்தில் ஆனந்த்ராஜ் நடிக்கிறார். படத்தில் இடம்பெறும் மற்ற நட்சத்திரங்கள் தேர்வு நடைபெற்று வருகிறது.
நிவாஸ் கே.பிரசன்னா இசையமைக்கும் இந்த படத்திற்கு அரவிந்த் கிருஷ்ணா ஒளிப்பதிவு பணிகளை மேற்கொள்கிறார். இந்த படத்திற்காக ஏ.வி.எம் ஸ்டுடியோவில் அரங்குகள் அமைக்கப்பட்டு இன்று பூஜையுடன் படப்பிடிப்பு துவங்கியது. தொடர்ந்து முப்பது நாட்கள் சென்னையில் படப்பிடிப்பு நடைபெற உள்ளது.

இன்று நடைபெற்ற படத்தின் பூஜையில் பா.ரங்கநாதன் எம்.எல்.ஏ, தொழிலதிபர்கள் எஸ்.செல்வம், சிவசங்கர், பொன்வண்ணன், சரண்யா பொன்வண்ணன், இயக்குனர்கள் விஜய் சந்தர், ஜெயபிரகாஷ், பெப்ஸி தலைவர் ஆர்.கே.செல்வமணி, குட்டிபத்மினி ஆகியோர் கலந்து கொண்டனர். #Kallapart #ArvindSwamy #ReginaCassandra