search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஆடுகள்"

    பலமுறை ஆடு வளர்ப்போரிடம் நேரில் எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

    காங்கயம்:

    காங்கயம் நகராட்சி ஆணையர் எஸ்.வெங்கடேஷ்வரன் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-

    காங்கயம் நகராட்சி எல்லைக்குட்பட்ட பகுதிகளில் ஆடுகள் பொது இடங்களிலும், சாலைகளிலும் சுற்றித்திரிவதால், வாகன ஓட்டிகள் அவ்வப்போது விபத்தில் சிக்கி வருகின்றனர். ஆடுகளை பட்டியில் அடைத்து வளர்க்காமல், சாலைகளில் ஆடுகளை அவிழ்த்துவிடக் கூடாது என நகராட்சி நிர்வாகம் சார்பில் பலமுறை ஆடு வளர்ப்போரிடம் நேரில் எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

    எனவே சொந்தமாக ஆடுகளை வளர்ப்போர் பட்டியில் அடைத்து வளர்க்க வேண்டும். அதையும் மீறி சாலைகள் மற்றும் பொது இடங்களில் ஆடுகளை அவிழ்த்து விடும் ஆட்டின் உரிமையாளர்கள் மீது உரிய சட்டப்பிரிவுகளின்படி காவல்துறை மூலமாகவும், நீதிமன்றத்தின் மூலமாகவும் நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    வனத்துறையினர் கண்காணிப்பு கேமரா மற்றும் கூண்டு வைத்து சிறுத்தையை பிடிக்க வேண்டும்.

    உடுமலை:

    திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே உள்ள சின்னவீரன் பட்டி, இந்திரா நகர், முத்து நகர் உட்பட பல்வேறு பகுதிகளில் கடந்த சில மாதங்களாக ஒருவித மர்ம விலங்கு ஆடுகளை கொன்று வந்த நிலையில் தற்போது மின் நகர் பகுதியில் உள்ள விவசாயி ஒருவரின் ஆட்டுப்பண்ணையில் புகுந்த மர்ம விலங்கு 80க்கும் மேற்பட்ட ஆடுகளை கடித்ததில் பரிதாபமாக உயிரிழந்தது. சம்பவ இடத்தில் வனத்துறையினர், கால்நடை மருத்துவர்கள், காவல்துறையினர் தீவிர ஆய்வு நடத்தி வருகின்றனர்.

    இது குறித்து விவசாயிகள் தரப்பில் கூறியதாவது :-

    இப்பகுதியில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து ஆடுகள் உயிர் இழந்து வருகின்றது. வனத்துறை தரப்பில் செந்நாய்கள் கூட்டம் என தகவல் தெரிவித்து வருகிறார்கள். இது முற்றிலும் தவறானது. ஆடுகளை கொன்று வருவது சிறுத்தை அல்லது கழுதை புலியாக இருக்கலாம். இதற்கான ஆதாரங்களாக கால் தடங்கள் பதிவாகியுள்ளது.

    ஆகையால் சம்பந்தப்பட்ட வனத்துறையினர் இப்பகுதியில் கண்காணிப்பு கேமரா மற்றும் கூண்டு வைத்து சிறுத்தையை பிடிக்க வேண்டும் என தெரிவித்தனர். மேலும் உயிரிழந்த ஆடுகளின் மதிப்பு பல லட்சம் இருக்கும் என்பதால் வனத்துறையினர் உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர். 

    வீராணம் அருகே வயலில் மர்மமாக இறந்து கிடந்த ஆடுகள்
    சேலம்:

    சேலம்  மாவட்டம் வீராணம் அருகே உள்ள வளையகாரனூர்  பகுதியை  சேர்ந்தவர் சீனிவாசன். இவருக்கு சொந்தமான ஆடுகளை நேற்று    அருகில் உள்ள ஒரு வயிலில்  கட்டி போட்டிருந்தார். 

    மாலையில்  இதில் 3 ஆடுகள்  மர்மமான முறையில் இறந்து கிடந்தது. இதனை  பார்த்த சீனிவாசன் கதறினார். பின்னர் சம்பவம்  குறித்து வீராணம் போலீசில் புகார் கொடுத்தார். 

    அதன் பேரில்  விச செடிகளை  தின்றதால் ஆடுகள்  இறந்ததா? அல்லது யாராவது விஷம் வைத்து கொன்றார்களா?      என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். 
    இடி தாக்கி 7 ஆடுகள் பலியாகின.
    வாடிப்பட்டி

    மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகே குலசேகரன் கோட்டையை சேர்ந்தவர் ஆண்டி (வயது 50). இவர் 15ஆடுகள் வளர்த்து வந்தார். அதே பகுதியை சேர்ந்த கருப்புசாமி (35) என்பவர் 19 ஆடுகள் வளர்த்து வந்தார். 

    குலசேகரன்கோட்டை பகுதியல் நேற்று மாலை 4 மணி அளவில் திடீரென்று இடி மின்னலுடன் கூடிய பலத்த மழை அந்த 30 நிமிடங்கள் பெய்தது.

    அப்போது எதிர்பாராத விதமாக கூவாகரடு அருகே மேய்ந்துகொண்டிருந்த ஆடுகளை இடி தாக்கியது. இதில் 7 ஆடுகள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தது.

    அதில் ஆண்டிக்கு சொந்தமாக 4 ஆடுகளும், கருப்பு சாமிக்கு சொந்தமான 3 ஆடுகளும் அடங்கும்.இதுகுறித்து தகவலறிந்த நீரேத்தான் வருவாய் ஆய்வாளர் அசோக்குமார், குலசேகரன் கோட்டை கிராம நிர்வாக அதிகாரி முத்துப்பாண்டி ஆகியோர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். 

    வாடிப்பட்டி கால்நடை மருத்துவர் டாக்டர் விஜயபாஸ்கர் ஆடுகளை உடல் கூறு ஆய்வு செய்தார்.
    ×