என் மலர்
நீங்கள் தேடியது "யஷ்"
- கே.ஜி.எப் படங்களில் நடித்து மிகவும் பிரபலம் அடைந்தவர் யஷ்.
- இவர் நடிப்பில் வெளியான கே.ஜி.எப். 2 திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது.
கே.ஜி.எப் படத்தின் 3ம் பாகம் எழுதும் பணியில் இயக்குனர் பிரசாந்த் நீல் தீவிரமாக இருந்து வருகிறார். இரண்டாம் பாகத்தில் கிளைமேக்ஸ் காட்சியில் கடத்தப்பட்ட தங்கத்தை கப்பலில் கொண்டு செல்வதுபோல் அடுத்த பாகத்திற்கான முன்னோட்டக் காட்சியை காட்டியிருப்பார்கள். இதனால் 3-ம் பாகம் முழுவதும் கடலில்தான் கதை நடப்பதாக காட்டப்போகிறார் என்பதுபோல் சொல்லியிருப்பார். கடலில் நடக்கும் சாகச கதை இன்னும் மிரட்டலாக இருக்கும் என்கிறார்கள்.

கே.ஜி.எப்
இந்நிலையில், கே.ஜி.எப். 3-ஆம் பாகத்தின் படப்பிடிப்பு குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படத்தின் படப்பிடிப்பு வருகிற 2025-ஆம் ஆண்டு தொடங்கப்படும் என்று கூறப்படுகிறது. அதுமட்டுமல்லாமல் இப்படம் 2026-ஆம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாகும் என தகவல் வெளியாகியுள்ளது. மேலும், இப்படத்தின் ஐந்தாவது பாகம் முடிந்த பிறகு யஷ்ஷிற்கு பதில் வேறொரு ஹீரோவை மாற்ற படக்குழு முடிவு செய்துள்ளதாக சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
- கே.ஜி.எஃப் படத்தின் மூலம் பலராலும் அறியப்பட்டவர் யஷ்.
- இவரை சந்திக்க நீண்ட வரிசையில் நின்று ரசிகர்கள் புகைப்படம் எடுத்துக் கொண்டுள்ளனர்.
கன்னட திரையுலகின் முன்னணி நடிகராக இருப்பவர் யஷ். 2007-ம் ஆண்டு வெளியான ஜம்பட ஹுடுகி படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமான யஷ், அதன்பின் ராக்கி, கோகுல, லக்கி, ஜானு உள்ளிட்ட பல படங்களில் நடித்து பிரபலமடைந்தார். பிரசாந்த் நீல் இயக்கத்தில் 2018-ம் ஆண்டு வெளியான கே.ஜி.எஃப் படத்தின் மூலம் இந்திய திரையுலகில் மிகவும் பிரபலமடைந்தார். இப்படத்தின் இரண்டாம் பாகமும் வெளியாகி பலரின் பாராட்டுக்களை பெற்றார்.

இந்நிலையில் நடிகர் யஷ்-ஐ சந்திக்க ரசிகர்கள் அவருடைய இல்லத்திற்கு முன்பு குவிந்துள்ளதாகவும், ரசிகர்களின் எதிர்ப்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில் அவர்களை சந்தித்து புகைப்படம் எடுத்து கொண்டதாக கூறப்படுகிறது. இது தொடர்பான வீடியோவை ரசிகர்கள் பலரும் பகிர்ந்து ஹேஷ் டேக் ஒன்றையும் வைரலாக்கி வருகின்றனர்.
- 14-வது சர்வதேச விமான தொழில் கண்காட்சி எலகங்கா விமானப்படை தளத்தில் இன்று தொடங்கியது.
- ரோஇந்தியா கண்காட்சியை பிரதமர் நரேந்திர மோடி இன்று தொடங்கி வைத்தார்.
பெங்களூரு எலகங்கா விமானப்படை தளத்தில் 2 ஆண்டுகளுக்கு ஒரு முறை சர்வதேச விமான கண்காட்சி நடைபெற்று வருகிறது. அதன்படி, 14-வது சர்வதேச விமான தொழில் கண்காட்சி எலகங்கா விமானப்படை தளத்தில் இன்று (திங்கட்கிழமை) தொடங்கி வருகிற 17-ந் தேதி வரை 5 நாட்கள் நடைபெற உள்ளது.

ஆசியாவின் மிகப்பெரிய விமான கண்காட்சி நிகழ்வான ஏரோஇந்தியா கண்காட்சியை பிரதமர் நரேந்திர மோடி இன்று தொடங்கி வைத்தார். இந்நிலையில் பிரதமர் மோடி பெங்களூரில் 'காந்தாரா' பட இயக்குனர் ரிஷப் ஷெட்டி, கே.ஜி.எப். நடிகர் யஷ், மறைந்த நடிகர் புனித் ராஜ்குமாரின் மனைவி அஸ்வினி உள்ளிட்ட கன்னட திரையுலகைச் சேர்ந்தவர்களை சந்தித்தார். இது தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.
மேலும், இந்த சந்திப்பின் போது கன்னட சினிமா குறித்தும் கன்னட திரையுலகில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்கள் குறித்தும் மோடியுடன் பேசியதாக கூறப்படுகிறது.
- இயக்குனர் பிரசாந்த் நீல் இயக்கத்தில் வெளியாகி பிளாக்பஸ்டர் ஹிட் அடித்த திரைப்படம் 'கே.ஜி.எப் -2'
- இப்படத்தின் அடுத்த பாகத்திற்கான பணியில் இயக்குனர் தீவிரமாக ஈடுப்பட்டுள்ளார்.
பிரசாந்த் நீல் இயக்கத்தில் யஷ் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான படம் 'கேஜிஎப்-2'. இதில் சஞ்சய் தத், ரவீணா தாண்டன், ஸ்ரீநிதி ஷெட்டி உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர். ரசிகர்களின் மாபெரும் எதிர்ப்பார்ப்பில் வெளியான இப்படம் பல முன்னணி ரசிகர்களின் படங்களை பின்னுக்கு தள்ளி வசூல் ரீதியாக சாதனை படைத்தது.

கே.ஜி.எப்
இந்நிலையில், 'கேஜிஎப்-2' திரைப்படம் வெளியாகி ஒரு வருடம் நிறைவுற்றுள்ளது. இதனை படக்குழு சமூக வலைதளத்தில் பதிவு ஒன்றை பகிர்ந்து தெரிவித்துள்ளது. அந்த பதிவில், 'கேஜிஎப் 2 மறக்க முடியாத கதாபாத்திரங்கள் மற்றும் ஆக்ஷன் காட்சிகள் மூலம் நம்மை கலைத்துவமிக்க பயணத்தில் அழைத்து சென்றது. ரெக்கார்டுகளை தகர்த்தது. பார்வையாளர்களின் இதயங்களை வென்றது' என குறிப்பிட்டுள்ளது.

கே.ஜி.எப்
மேலும், இதோடு வீடியோ ஒன்றையும் வெளியிட்டுள்ளது. அந்த வீடியோவின் 36-வது நொடியில் '1978-81 வரை ராக்கி எங்கே இருந்தார்?' என அடுத்த பாகத்திற்கு ஹிண்ட் கொடுக்கப்பட்டுள்ளது. இதனால் உற்சாகமடைந்த ரசிகர்கள் வீடியோவை அதிகம் பகிர்ந்து வருகின்றனர்.
இயக்குனர் பிரசாந்த் நீல் 'கேஜிஎப் -3' திரைக்கதை பணியில் ஈடுப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
- ஒடிசா மாநிலம் பாலசோர் பகுதி அருகே இரண்டு பயணிகள் ரெயில் மற்றும் ஒரு சரக்கு ரெயில்கள் மோதி பயங்கர விபத்துக்குள்ளானது.
- இதில், 600-க்கும் மேற்பட்டோர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
ஒடிசா மாநிலம் பாலசோர் பகுதி அருகே இரண்டு பயணிகள் ரெயில் மற்றும் ஒரு சரக்கு ரெயில்கள் மோதி பயங்கர விபத்துக்குள்ளானது. ரெயில்களின் 17 பெட்டிகள் தடம் புரண்டதில் 230க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். 600க்கும் மேற்பட்டோர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதில், தமிழகம், மேற்கு வங்காளம் உள்பட பல்வேறு மாநிலங்களை சேர்ந்த பயணிகள் பயணம் செய்துள்ளனர். விபத்தில் சிக்கிய தமிழர்களை மீட்க தமிழக அரசு மீட்பு பணிகளை தீவிரப்படுத்தியது. மீட்பு பணிகள் நிறைவடைந்த நிலையில் தற்போது ரெயில் பாதை சீரமைக்கும் பணி தொடங்கப்பட்டுள்ளதாக ரெயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இந்த விபத்திற்கு இரங்கல் தெரிவித்து திரைப்பிரபலங்கள் பலர் சமூக வலைதளத்தில் பதிவுகளை பகிர்ந்து வருகின்றனர். இந்நிலையில் நடிகர் யஷ், "ஒடிசாவில் நடந்த ரெயில் விபத்தை நினைக்கும் போது, என் இதயம் எப்படி நொறுங்கியது என்பதை வார்த்தைகளால் விவரிக்க முடியாது. உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு என் ஆழ்ந்த இரங்கல். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன். மீட்பு பணிகளுக்கு உதவியவர்களுக்கு என் நன்றிகள்" என்று சோகமாக பதிவிட்டுள்ளார்.
It's difficult to describe in words how heart-wrenching the train tragedy of Odisha is. My deepest condolences to the families of the deceased and praying for the speedy recovery of those injured. Gratitude to the people who have come out in large numbers to help with rescue…
— Yash (@TheNameIsYash) June 3, 2023
- இயக்குனர் பிரசாந்த் நீல் அடுத்ததாக 'சலார்' திரைப்படத்தை இயக்கி வருகிறார்.
- இதில் ‘பாகுபலி’ நடிகர் பிரபாஸ் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.
கே.ஜி.எப். திரைப்படத்தின் பிரம்மாண்ட வெற்றியை தொடர்ந்து, இயக்குனர் பிரசாந்த் நீல் அடுத்ததாக 'சலார்' திரைப்படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தில் 'பாகுபலி' திரைப்படத்தில் நடித்திருந்த பிரபாஸ் நடிக்க உள்ளதாக அறிவிப்பு வெளியானதில் இருந்து, இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

கே.ஜி.எப். திரைப்படத்தை தயாரித்த ஹோம்பாலே பிலிம்ஸ் 'சலார்' படத்தையும் தயாரிக்கிறது. இந்த படத்தில் வரதராஜ மன்னார் என்ற கதாபாத்திரத்தில் நடிகர் பிரித்விராஜ் நடிக்கிறார். இப்படம் வருகிற செப்டம்பர் 28-ம் தேதி வெளியாகவுள்ளது. இதையடுத்து 'சலார்' திரைப்படத்தின் டீசர் ஜூலை 6-ம் தேதி காலை 5.12 மணிக்கு வெளியாகும் என படக்குழு போஸ்டர் வெளியிட்டு அறிவித்துள்ளது.

இந்நிலையில், இயக்குனர் பிரசாந்த் நீல் ஒரு புதிய யூனிவர்ஸை உருவாக்குகிறாரா? என்ற கேள்வியை ரசிகர்கள் கேட்டு வருகின்றனர். அதாவது, கே.ஜி.எப். இரண்டாவது பாகத்தின் கிளைமேக்ஸில் யஷ் சென்ற கப்பல் மீது அதிகாலை 5 மணிக்கு தான் தாக்குதல் நடக்கும் என்று சுட்டிக்காட்டும் ரசிகர்கள் இதன் தொடர்ச்சியாக 'சலார்' இருக்குமோ என்று இணையத்தில் பதிவிட்டு வருகின்றனர்.
- பிரசாந்த் நீல் இயக்கத்தில் நடிகர் யஷ் நடிப்பில் வெளியான படம் கேஜிஎஃப்.
- இப்படம் ஜப்பானில் வெளியாகவுள்ளதாக படக்குழு வீடியோ வெளியிட்டு தெரிவித்துள்ளது.
பிரசாந்த் நீல் இயக்கத்தில் நடிகர் யஷ் நடிப்பில் வெளியான படம் கேஜிஎஃப். இப்படம் இரண்டு பாகங்களாக வெளியானது. இதில் ராக்கி பாய் என்ற கதாப்பாத்திரத்தில் யஷ் நடித்திருந்தார். மேலும் சஞ்சய் தத், ரவீணா தாண்டன், ஸ்ரீநிதி ஷெட்டி உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர். ரசிகர்களின் மாபெரும் எதிர்ப்பார்ப்பில் வெளியான இப்படம் பல முன்னணி ரசிகர்களின் படங்களை பின்னுக்கு தள்ளி வசூல் ரீதியாக சாதனை படைத்தது. குறிப்பாக கேஜிஎஃப் இரண்டாம் பாகம் சர்வதேச அளவில் சுமார் ஆயிரத்து 200 கோடி ரூபாய் வசூல் ஈட்டியதாக கூறப்பட்டது.

இந்நிலையில் இந்தியாவில் பெற்ற பிரம்மாண்ட வெற்றியை தொடர்ந்து கேஜிஎஃப் படத்தின் இரண்டு பாகங்ளும் ஜப்பானில் வரும் 14ஆம் தேதி வெளியாக உள்ளதாக நடிகர் யஷ் வீடியோ பகிர்ந்துள்ளார். இதனால் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.
- இயக்குனர் பிரசாந்த் நீல் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் 'சலார்'.
- 'சலார்' திரைப்படம் டிசம்பர் 22-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
இயக்குனர் பிரசாந்த் நீல் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் 'சலார்'. இந்த படத்தில் 'பாகுபலி' திரைப்படத்தில் நடித்திருந்த பிரபாஸ் கதாநாயகனாக நடித்துள்ளார். கே.ஜி.எப். திரைப்படத்தை தயாரித்த ஹோம்பாலே பிலிம்ஸ் 'சலார்' படத்தையும் தயாரித்துள்ளது.

இந்த படத்தில் வரதராஜ மன்னார் என்ற கதாபாத்திரத்தில் நடிகர் பிரித்விராஜ் நடித்துள்ளார். இப்படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை பெருமளவில் ஈர்த்தது. 'சலார்' திரைப்படம் டிசம்பர் 22-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

இந்நிலையில், இப்படம் தொடர்பாக நேர்காணல் ஒன்றில் கலந்து கொண்ட இயக்குனர் பிரசாந்த் நீல் 'கேஜிஎப் 3' குறித்த தகவல்களை பகிர்ந்துள்ளார். அதில், "கேஜிஎப் மூன்றாம் பாகம் உருவாவது உறுதி. அதற்கான கதையும் ரெடியாகிவிட்டது. அதற்கான அறிவிப்பை வெளியிடும் முன் நாங்கள் கதையை தயார் செய்ய முடிவு செய்தோம். யஷ் மிகவும் பொறுப்பான நபர், வெறும் வியாபார நோக்கத்துடன் மட்டுமே எதையும் செய்யமாட்டார். 'கேஜிஎப்' மூன்றாம் பாகத்தை நான் இயக்குவேனா இல்லையா என்று தெரியாது. ஆனால், அதில் கண்டிப்பாக யஷ் இருப்பார்" என்று தெரிவித்தார்.
- நடிகர் யஷ்ஷின் அடுத்தடுத்த படங்கள் குறித்த தகவல் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை அதிகப்படுத்தியுள்ளது.
- யஷ் நடிக்கும் 19-வது படத்தின் டைட்டில் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
பிரசாந்த் நீல் இயக்கத்தில் வெளியான 'கே.ஜி.எப்' படத்தின் மிகப்பெரிய வெற்றியின் மூலம் பிரபலமானவர் யஷ். இப்படத்தின் மூலம் ரசிகர்கள் மத்தியில் தனக்கான இடத்தை பிடித்த நடிகர் யஷ்ஷின் அடுத்தடுத்த படங்கள் குறித்த தகவல் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை அதிகப்படுத்தியுள்ளது.

நடிகர் யஷ்ஷின் 19-வது படத்தை இயக்குனர் கீது மோகன்தாஸ் இயக்குகிறார். இதில், சாய் பல்லவி கதாநாயகியாக நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. கேவிஎன் புரொடக்ஷன்ஸ் மற்றும் மாஸ்டர் மைண்ட் கிரியேஷன்ஸ் இணைந்து தயாரிக்கும் இப்படத்தின் டைட்டில் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
அதன்படி, இப்படத்திற்கு 'டாக்ஸிக்' (TOXIC) என்று படக்குழு தலைப்பு வைத்துள்ளது. மேலும், இப்படம் 2025-ஆம் ஆண்டு ஏப்ரல் 10-ஆம் தேதி வெளியாகவுள்ளதாக வீடியோ ஒன்றை வெளியிட்டு படக்குழு அறிவித்துள்ளது. இந்த வீடியோ தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

இயக்குனர் கீது மோகன்தாஸ், தமிழில் சத்யராஜ் நடிப்பில் வெளியான 'பொம்முக்குட்டி அம்மாவுக்கு' படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்தவர். அதுமட்டுமல்லாமல், மாதவன் நடித்த 'நள தமயந்தி' படத்தில் கதாநாயகியாக நடித்தார். மலையாளத்தில் 2019-ஆம் ஆண்டு நிவின் பாலி நடித்த 'மூத்தோன்' என்ற படத்தை இயக்கியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
- கர்நாடகாவில் ராக்கிங் ஸ்டார் என்றழைக்கப்படும் நடிகர் யஷ்.
- இவர் இன்று தனது பிறந்த நாளை கொண்டாடி வருகிறார்.
கர்நாடகாவில் ராக்கிங் ஸ்டார் என்றழைக்கப்படும் நடிகர் யஷ்சுக்கு இன்று பிறந்தநாள். இதையொட்டி கர்நாடக மாநிலம் கடக் மாவட்டம் லக்ஷ்மேஷ்வர் தாலுகா சுரங்கி என்ற கிராமத்தில் அவரது ரசிகர்கள் கட் அவுட் தயார் செய்து இருந்தனர். பின்னர் ரசிகர்கள் ஹனமந்த ஹரிஜன் (21), முரளி நடவினமணி (20), நவீன் காஜி (19) உள்பட 10 ரசிகர்கள் கட் அவுட்டை நிறுத்துவதற்காக தூக்கி சென்றனர்.

அப்போது எதிர்பாராத விதமாக அந்த கட் அவுட் மின்சார வயரில் பட்டது. இதில் மின்சாரம் பாய்ந்து 3 ரசிகர்களும் அலறி துடித்தனர். இதில் சம்பவ இடத்திலேயே ஹனமந்த ஹரிஜன், முரளி நடவினமணி, நவீன் காஜி ஆகியோர் பலியானார்கள். மற்றும் சிலர் லேசான காயத்துடன் உயிர் தப்பி கதறி அழுதனர். இதுபற்றி தெரிய வந்ததும் போலீசார் மற்றும் மின்வாரியத்துறை அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர்.

மின்சாரம் தாக்கி பலியானவர்கள்
உடனடியாக மின்சார இணைப்பை துண்டித்து காயமடைந்த 7 ரசிகர்களை மீட்டு சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் பலியான 3 பேரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் கர்நாடக மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- கன்னட திரையுலகில் பிரபல நடிகராக வலம் வருபவர் யஷ்.
- இவருக்கு என்று தனி ரசிகர் பட்டாளமே உள்ளது.
கன்னட திரையுலகில் கடந்த 2018-ம் ஆண்டு வெளியான 'கே.ஜி.எப்' படத்தில் நடித்தவர் நடிகர் யஷ். இவருக்கு என்று கர்நாடகாவில் தனி ரசிகர்கள் கூட்டம் உள்ளது. இதையடுத்து நேற்று அவரது 38-வது பிறந்த நாளை யொட்டி கர்நாடக மாநிலம் கடக் பகுதியில் உள்ள சுரங்கி என்ற இடத்தில் கட் அவுட் வைத்தபோது மின்சாரம் தாக்கி அனுமந்த ஹரிஜன் (21), முரளி நடவினமணி (20), நவீன்காஜி (19) ஆகிய 3 ரசிகர்கள் பலியானார்கள். மேலும் 2 பேர் கவலைக்கிடமாக உள்ளனர்.

இந்த நிலையில் மின்சாரம் தாக்கி இறந்த ரசிகர்களின் வீடுகளுக்கு நேரில் சென்று நடிகர் யஷ் ஆறுதல் தெரிவித்தார். மேலும் ரசிகர்கள் யாரும் இது போன்ற செயலில் ஈடுபட வேண்டாம். உங்களின் அன்பை சமூக வலைதளங்களில் செல்போனில் காண்பித்தால் கூட போதும், மனதில் இருந்தால் போதும். கட் அவுட் வைத்து அதனை வெளிப்படுத்த வேண்டாம். இது போன்று எதிர்காலத்தில் யாரும் செயல்பட வேண்டாம் முற்றிலும் தவிர்த்து விடுங்கள் என்று அறிவுரையும் கூறினார்.

இதற்கிடையே மின்சாரம் தாக்கி இறந்தவர்களின் குடும்பத்துக்கு தலா ரூ. 2 லட்சமும், காயம் அடைந்தவர்களுக்கு ரூ. 50ஆயிரமும் நிதி உதவி வழங்கப்படும் என்று முதல்-மந்திரி சித்தராமையா அறிவித்து உள்ளார்.
