என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பாலா"

    • வணங்கான் படத்திலிருந்து நடிகர் சூர்யா விலகியுள்ளார்.
    • இது தொடர்பான சூர்யாவின் பதிவு சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

    இயக்குனர் பாலா இயக்கத்தில் நடிகர் சூர்யா 'வணங்கான்' திரைப்படத்தில் நடித்து வந்த நிலையில் சூர்யா தற்போது இந்த படத்தில் இருந்து விலகியுள்ளார்.


    சூர்யா - பாலா

    இதுதொடர்பாக படத்தின் இயக்குனர் பாலா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது: வணக்கம். என் தம்பி சூர்யாவுடன் இணைந்து வணங்கான் என்ற புதிய திரைப்படத்தை இயக்க விரும்பினேன். ஆனால் கதையில் நிகழ்ந்த சில மாற்றங்களினால், இந்தக் கதை சூர்யாவுக்கு உகந்ததாக இருக்குமா என்கிற ஐயம் தற்போது எனக்கு ஏற்பட்டுள்ளது. என் மீதும், இந்தக் கதையின் மீதும் முழு நம்பிக்கையுடன் இருக்கிறார் சூர்யா. இவ்வளவு அன்பும், மதிப்பும், நம்பிக்கையும் வைத்திருக்கும் என் தம்பிக்கு ஒரு அண்ணனாக என்னால் ஒரு சிறு தர்மசங்கடம் கூட நேர்ந்து விடக்கூடாது என்பது என் கடமையாகவும் இருக்கிறது.


    வணங்கான்

    எனவே வணங்கான் திரைப்படத்திலிருந்து சூர்யா விலகிக் கொள்வது என நாங்கள் இருவரும் கலந்து பேசி ஒருமனதாக முடிவு எடுத்திருக்கிறோம். அதில் அவருக்கு மிகவும் வருத்தம் தான் என்றாலும் அவரது நலன் கருதி எடுத்த முடிவு இது. நந்தாவில் நான் பார்த்த சூர்யா பிதாமகனில் நீங்கள் பார்த்த சூர்யா போல் வேறு ஒரு தருணத்தில் உறுதியாக இணைவோம் மற்றபடி வணங்கான் பணிகள் தொடரும் என தெரிவித்துள்ளார்.

    இந்நிலையில், பாலாவின் இந்த அறிக்கைக்கு சூர்யாவின் 2டி நிறுவனம் பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளது. அதில், "பாலா அண்ணாவின் உணர்வுகளுக்கும் முடிவுகளுக்கும் மதிப்பளித்து சூர்யா அவர்களும் 2டி என்டர்டெயின்மெண்ட் நிறுவனமும் வணங்கான்-ல் இருந்து விலகிக்கொள்கிறோம். எப்போதும் பாலா அண்ணா உடன் துணை நிற்போம்" என்று பதிவிட்டுள்ளது.



    • இயக்குனர் பாலா ‘வணங்கான்’ திரைப்படத்தை இயக்கி வருகிறார்.
    • இந்த படத்தில் இருந்து நடிகர் சூர்யா சமீபத்தில் விலகினார்.

    இயக்குனர் பாலா இயக்கத்தில் நடிகர் சூர்யா 'வணங்கான்' திரைப்படத்தில் நடித்து வந்தார். இதன்படப்பிடிப்பு நடந்து வந்த நிலையில் இந்த படத்தில் இருந்து நடிகர் சூர்யா விலகுவதாகவும் ஆனாலும் 'வணங்கான்' திரைப்படத்தின் பணிகள் தொடரும் என்றும் இயக்குனர் பாலா அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார்.


    வணங்கான்

    இதனைத் தொடர்ந்து சூர்யா கதாபாத்திரத்தில் நடிக்கப்போவாது யார்? என்ற எதிர்பார்ப்பு நிலவியது. ஆர்யா நடிக்கலாம் என்று கூறப்பட்ட நிலையில் அதர்வா இந்த படத்தில் நடிக்க வாய்ப்புள்ளதாகவும் இது தொடர்பாக படக்குழு அவரிடம் பேச்சு வார்த்தை நடித்தி வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

    இதற்கு முன்பு பாலா இயக்கிய 'பரதேசி' திரைப்படத்தில் அதர்வா நடித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • வீரம் படத்தில் நடித்து தமிழ் ரசிகர்களிடம் பரவலான அறிமுகத்தை பெற்றவர் நடிகர் பாலா
    • இவர் நடித்த 'ஷபீக்கிண்டே சந்தோஷம்' பெரிய அளவில் வெற்றி பெற்றது.

    அஜித்தின் தம்பியாக 'வீரம்' படத்தில் நடித்து தமிழ் ரசிகர்களிடம் பரவலான அறிமுகத்தைப் பெற்றவர் நடிகர் பாலா. தமிழில் குறைந்த படங்களே நடித்திருந்தாலும் மலையாளத்தில் கலாபம் தொடங்கி பிக் பி, ஹிட் லிஸ்ட், புலி முருகன், லூசிபர் போன்று சுமார் ௫௦ படங்களில் நடித்துள்ளார்.

    அனூப் இயக்கத்தில் இவர் நடித்த 'ஷபீக்கிண்டே சந்தோஷம்' படம் சில தினங்களுக்கு முன் வெளியாகி பெரிய அளவில் வெற்றி பெற்றது. மம்முட்டி உட்பட பல நடிகர்கள் பாலாவின் நடிப்பைப் பாராட்டி உள்ளனர். இந்தப் படத்தை தயாரித்த நடிகர் உண்ணி முகுந்தன் படம் நல்ல விலைக்கு வியாபாரமாகியும் படத்தில் நடித்த பாலாவுக்கு சம்பளம் எதுவும் தராமல் இழுத்தடித்ததாகத் கூறப்படுகிறது.


    பாலா

    இதனைத் தொடர்ந்து உண்ணி முகுந்தனின் செய்தியாளர் சந்திப்பில் பாலாவின் சம்பளப் பிரச்சினை பற்றி ரசிகர்கள் கேள்வி கேட்க, அது பெரும் பிரச்சனையாக மாறியது. இது குறித்து நடிகர் பாலா கூறியதாவது "உண்மை எப்போதும் உறங்காது. தனக்காக குரல் கொடுத்த ரசிகர்களுக்கு நன்றி" என்று தெரிவித்துக் கொண்டார்.

    விரைவில் நடிகர் பாலா திரைப்படம் ஒன்றை இயக்க இருக்கிறார். இது தமிழ் மற்றும் மலையாளத்தில் உருவாகிறது. அதற்கான பேச்சு வார்த்தைகள் நடந்து கொண்டிருக்கிறது. இன்று கேரள அரசின் சிறந்த நடிகருக்கான 'கோல்டன் அவார்ட் 'என்கிற விருதைப் பாலா பெற்றுக்கொள்ள இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • 'வீரம்' படத்தில் நடித்து தமிழ் ரசிகர்களிடம் பரவலான அறிமுகத்தைப் பெற்றவர் நடிகர் பாலா.
    • இவர் கொச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

    அஜித்தின் தம்பியாக 'வீரம்' படத்தில் நடித்து தமிழ் ரசிகர்களிடம் பரவலான அறிமுகத்தைப் பெற்றவர் நடிகர் பாலா. தமிழில் குறைந்த படங்களே நடித்திருந்தாலும் மலையாளத்தில் கலாபம் தொடங்கி பிக் பி, ஹிட் லிஸ்ட், புலி முருகன், லூசிபர் போன்ற பல படங்களில் நடித்துள்ளார்.


    பாலா

    இதையடுத்து நடிகர் பாலாவிற்கு கடந்த சில நாட்களுக்கு முன் திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டுள்ளது. அதற்காகச் சிகிச்சைப் பெற்று வந்துள்ளார். இந்நிலையில், நேற்று முன்தினம் கடுமையான வயிற்று வலி ஏற்பட்டதை அடுத்து கொச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

    அவருக்கு கல்லீரலில் பிரச்சினை இருப்பதாகவும் இதனால் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் கல்லீரல் மாற்று அறுவைச் சிகிச்சை செய்யப்பட இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. மேலும், பாலாவின் தாய் மற்றும் மனைவி எலிசபெத் அவரை உடனிருந்து கவனித்து வருவதாக கூறப்படுகிறது.

    • சேது, நந்தா, பிதாமகன், நான் கடவுள், அவன் இவன் உள்ளிட்ட பல படங்களை இயக்கிய பாலா, தற்போது வணங்கான் என்ற படத்தை இயக்கி வருகிறார்.
    • இப்படத்தின் படப்பிடிப்பில் துணை நடிகை ஒருவர் தாக்கப்பட்டதாக காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

    சேது, நந்தா, பிதாமகன், நான் கடவுள், அவன் இவன் உள்ளிட்ட பல படங்களை இயக்கிய பாலா, தற்போது வணங்கான் என்ற படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தில் முதலில் நடிகர் சூர்யா ஒப்பந்தமாகி நடித்து வந்தார். அதன்பின்னர் இப்படத்தில் இருந்து சூர்யா விலகியதாக அறிவிப்பு வெளியானது. தற்போது இப்படம் அருண் விஜய் மற்றும் ரோஷினி நடிப்பில் பாலா இயக்கி வருகிறார்.

    வணங்கான் படப்பிடிப்பு கன்னியாகுமரி சுற்று வட்டார பகுதிகளில் நடைபெற்று வருகிறது. இதில் கேரளாவை சேர்ந்த துணை நடிகர், நடிகைகள் நடித்து வருகின்றனர். ஜிதின் என்பவர் ஒருங்கிணைப்பாளராக இருந்து, துணை நடிகர் நடிகைகளை அழைத்து வந்து நடிக்க வைத்து வருகிறார்.

     

    துணை நடிகை லிண்டா

    துணை நடிகை லிண்டா

    இப்படத்தின் படப்பிடிப்பு 3 நாட்கள் முடிந்த நிலையில், துணை நடிகர் மற்றும் நடிகைகளுக்கு கூறப்பட்ட சம்பளம் கொடுக்கவில்லை என கூறப்படுகிறது. இதனை துணை நடிகை லிண்டா என்பவர், ஒருங்கிணைப்பாளர் ஜிதினிடம் கேட்டுள்ளார். அப்போது ஆத்திரமடைந்த அவர், லிண்டாவை கடுமையாக தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் காயமடைந்த லிண்டா, காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

    • நடிகர் பாலா தமிழ் ரசிகர்களிடம் பரவலான அறிமுகத்தைப் பெற்றவர்.
    • இவர் கல்லீரல் பிரச்சினை காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

    அஜித்தின் தம்பியாக 'வீரம்' படத்தில் நடித்து தமிழ் ரசிகர்களிடம் பரவலான அறிமுகத்தைப் பெற்றவர் நடிகர் பாலா. தமிழில் குறைந்த படங்களே நடித்திருந்தாலும் மலையாளத்தில் கலாபம் தொடங்கி பிக் பி, ஹிட் லிஸ்ட், புலி முருகன், லூசிபர் போன்ற பல படங்களில் நடித்துள்ளார்.


    இதையடுத்து நடிகர் பாலாவிற்கு கடந்த சில நாட்களுக்கு முன் கல்லீரல் பிரச்சினை ஏற்பட்டு தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார். இவரை இயக்குனர் சிறுத்தை சிவா நேரில் சென்று பார்த்தார். இந்நிலையில், நடிகர் பாலா தனது திருமண நாளை கேக் வெட்டிக் கொண்டாடினார்.

    இதையடுத்து அவர் கூறியதாவது, "எல்லாருடைய பிரார்த்தினையால் மீண்டு வருகிறேன். எனக்கு 2 அல்லது 3 நாட்களில் மிக முக்கிய அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்படவிருக்கிறது. மரணம் கூட நேரலாம். ஆனால் உங்கள் அனைவரது பிரார்த்தனையால் பிழைத்துக்கொள்ளவும் அதிக வாய்ப்பு இருக்கிறது" என்று கூறினார்.

    • இயக்குனர் பாலா இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் ‘வணங்கான்’.
    • இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

    சேது, நந்தா, பிதாமகன், நான் கடவுள், அவன் இவன் உள்ளிட்ட பல படங்களை இயக்கிய பாலா, தற்போது 'வணங்கான்' என்ற படத்தை இயக்கி வருகிறார். அருண் விஜய் கதாநாயகனாக நடிக்கும் இந்தப் படத்தில், ரோஷினி பிரகாஷ் கதாநாயகியாக நடிக்கிறார். மேலும், சமுத்திரக்கனி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.


    ரோஷினி பிரகாஷ் - அருண் விஜய்

    ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கும் இப்படத்திற்கு கவிப்பேரரசு வைரமுத்து பாடல்களை எழுதுகிறார். ஆர்.பி.குருதேவ் ஒளிப்பதிவு செய்ய, சில்வா இந்த படத்திற்கு ஆக்ஷன் காட்சிகளைக் கையாண்டுள்ளார். இப்படத்தின் முதல்கட்டப் படப்பிடிப்பு கன்னியாகுமரியில் நடைபெற்று வந்தது.

    இந்நிலையில், இப்படத்தின் முதல்கட்டப் படப்பிடிப்பை முடித்து விட்டதாக படக்குழுவினர் மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளனர். மேலும் இந்த முதல் ஷெட்யூலில் படக்குழு முக்கிய காட்சிகளை படமாக்கியுள்ளது. அடுத்தக்கட்ட படப்பிடிப்பு திருவண்ணாமலையில் ஏப்ரல் 17-ஆம் தேதி தொடங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

    • நடிகர் ராகவா லாரன்ஸ் தற்போது ‘ருத்ரன்’ திரைப்படத்தில் நடித்துள்ளார்.
    • இப்படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது.

    நடன இயக்குனர், நடிகர், இயக்குனர் என பன்முகத்தன்மை கொண்ட ராகவா லாரன்ஸ் தற்போது நடித்திருக்கும் படம் ருத்ரன். இப்படத்தின் மூலம் ஃபைவ் ஸ்டார் கதிரேசன் இயக்குனராக அறிமுகமாகிறார். இதில் சரத்குமார், பிரியா பவானி சங்கர், பூர்ணிமா பாக்யராஜ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ள இப்படத்திற்கு ஆர்.டி.ராஜசேகர் ஒளிப்பதிவு செய்கிறார்.

    ருத்ரன் இசை வெளியீட்டு விழா

    இப்படம் வருகிற 14-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ள நிலையில், 'ருத்ரன்' திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று சென்னை டிரேட் சென்டரில் நடைபெற்றது. இதில் 3000-க்கும் மேற்பட்ட ரசிகர்கள் கலந்துகொண்டனர். இந்த படத்தின் இசை வெளியீட்டில் சிறப்பு விருந்தினராக இயக்குனர்கள் வெற்றி மாறன், லோகேஷ் கனகராஜ் கலந்து கொண்டனர்.


    ருத்ரன் இசை வெளியீட்டு விழா

    இந்த நிகழ்ச்சியில் பல ஏழை குழந்தைகளை படிக்க வைத்து வரும் விஜய் டிவி பாலாவிற்கு ராகவா லாரன்ஸ் மேடையில் அவரது தாயார் கையில் ரூ. 10 லட்சம் நன்கொடையாக வழங்கினார். ராகவா லாரன்ஸ் ஏற்கனவே அவரது தாயார் பெயரில் அறக்கட்டளை ஒன்று நடத்தி ஊனமுற்றோர்களுக்கு உதவி செய்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • தன் காமெடியால் ரசிகர்களை கவர்ந்தவர் நடிகர் பாலா.
    • இவர் பல படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

    சின்னத்திரையில் தனது காமெடியால் ரசிகர்களை கவர்ந்தவர் நடிகர் பாலா. 'கலக்கப்போவது யாரு' எனும் நிகழ்ச்சி மூலம் திரையுலகிற்கு அறிமுகமான பாலா 'குக் வித் கோமாளி' என்ற நிகழ்ச்சி மூலம் புகழ் பெற்றார். தொடர்ந்து பல திரைப்படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இவர் நடிப்பதோடு மட்டுமல்லாமல் பல குழந்தைகளின் படிப்பிற்கு உதவி வருகிறார். மேலும், சமூக சேவையும் செய்து வருகிறார்.

    இந்நிலையில், நகைச்சுவை நடிகர் பாலா ஈரோடு மாவட்டம் குன்றி ஊராட்சி மலை கிராமத்திற்கு தன்னார்வ அமைப்பின் மூலம் இலவச ஆம்புலன்ஸ் வாகனத்தை வழங்கியுள்ளார். மருத்துவ அவசர காலங்களில் மிகவும் அவதிப்பட்டு வந்த இக்கிராம மக்களின் கோரிக்கைக்கு இணங்க தன்னார்வ அமைப்பினர் மூலம் ரூ. 10 லட்சம் செலவில் இலவச ஆம்புலன்ஸ் சேவையை நடிகர் பாலா, மாவட்ட எஸ்.பி, மாநகராட்சி மேயர் ஆகியோர் துவக்கி வைத்தனர்.


    மலை கிராம மக்களுக்கு ஆம்புலன்ஸ் வழங்கிய பாலா

    இது குறித்து நடிகர் பாலா பேசியதாவது, ஈரோடு மாவட்டம் குன்றியை சுற்றியுள்ள 12 கிராமங்களில், எட்டாயிரம் பேர் வசித்து வருகின்றனர். இங்குள்ள மக்களுக்கு பாம்பு உள்ளிட்ட வன விலங்களால் பாதிப்பு ஏற்பட்டாலோ, உடல் நலன் பாதிப்பு ஏற்பட்டாலோ, சிகிச்சைக்கு அழைத்துச் செல்ல, 16 கி.மீட்டர் தொலைவில் இருந்து தான் ஆம்புலன்ஸ் வர வேண்டும்.

    இதையறிந்ததும், இவர்களுக்கும் ஆம்புலன்ஸ் வாகனம் வாங்கி தர வேண்டும் என எண்ணினேன். இதற்காக யாரிடமும் பணம் வாங்காமல், என்னிடம் இருந்த பணத்தை சேர்த்து வைத்து இந்த ஆம்புலன்ஸ் வாகனத்தை வாங்கிக் கொடுத்துள்ளேன் என்று பேசினார்.

    • இயக்குனர் பாலா 'வணங்கான்' படத்தை இயக்கி வருகிறார்.
    • இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

    சேது, நந்தா, பிதாமகன், நான் கடவுள், அவன் இவன் உள்ளிட்ட பல படங்களை இயக்கிய பாலா, தற்போது 'வணங்கான்' படத்தை இயக்கி வருகிறார். அருண் விஜய் கதாநாயகனாக நடிக்கும் இந்தப் படத்தில், ரோஷினி பிரகாஷ் கதாநாயகியாக நடிக்கிறார். மேலும், சமுத்திரக்கனி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

    இந்நிலையில், இயக்குனர் பாலா பெயரில் போலியாக கணக்கு தொடங்கப்பட்டுள்ளது. இது குறித்து அவர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், "எனக்கு எந்த ஒரு இன்ஸ்டாகிராம் கணக்கும் இல்லை.. மோசடி நபர்களிடம் ஏமாற வேண்டாம்… பாலா எச்சரிக்கை.


    பாலா அறிக்கை

    தற்போது இயக்குனர் பாலாவின் பெயரில் யாரோ ஒரு மர்ம நபர் போலி இன்ஸ்டாகிராம் பக்கத்தை உருவாக்கி புகைப்படங்கள் மற்றும் தகவல்களை வெளியிட்டு வருகிறார்.

    பாலசுப்பிரமணியன் பழனிச்சாமி என்ற கணக்கில் இயக்குனர் பாலா எனக் கூறிக்கொண்டு முறையற்ற செயல்களில் ஈடுபட்டு வருவதாகவும், குறிப்பாக திரைப்படங்களில் நடிக்கும் ஆர்வமுள்ள பெண்களிடம் தனிப்பட்ட முறையில் குறுஞ்செய்திகள் மூலமாக உரையாடி அவர்களுக்கு வாய்ப்பு தருவதாக கூறி தவறான நோக்கத்தில் பேசியதுடன் மட்டுமல்லாமல் கவர்ச்சியான புகைப்படங்களையும் கேட்டுள்ளார். இதுகுறித்து உறுதிப்படுத்தப்பட்ட தகவல்கள் இயக்குனர் பாலாவின் கவனத்திற்கு வந்தன.


    பாலா போலி கணக்கு

    இதனைத் தொடர்ந்து சம்பந்தப்பட்ட நபர் மீது நடவடிக்கை எடுக்கும்படியும் தன் பெயரில் உள்ள போலியான அந்த கணக்கை முடக்கும்படியும் இயக்குனர் பாலா சென்னை கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.

    பொதுவாக தனது திரைப்படங்களில் நடிப்பவர்களுக்கான தேர்வை அவரின் உதவி இயக்குனர்கள் மற்றும் மேலாளர்கள் மட்டுமே நேரடியாக தொடர்புகொண்டு வருகிறார்கள். அதனால் சினிமா ஆர்வம் உள்ளவர்கள், குறிப்பாக தனது திரைப்படங்களில் நடிக்க விரும்புபவர்கள் இது போன்ற போலியான நபர்களை நம்பி ஏமாற வேண்டாம்.. விழிப்புணர்வுடன் இருங்கள்" என்று இயக்குனர் பாலா கேட்டுக் கொண்டுள்ளார்" என்று குறிப்பிட்டுள்ளார்.

    • இயக்குனர் பாலா இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் ‘வணங்கான்’.
    • இப்படத்தில் அருண் விஜய் கதாநாயகனாக நடிக்கிறார்.

    சேது, நந்தா, பிதாமகன், நான் கடவுள், அவன் இவன் உள்ளிட்ட பல படங்களை இயக்கிய பாலா, தற்போது 'வணங்கான்' என்ற படத்தை இயக்கி வருகிறார். அருண் விஜய் கதாநாயகனாக நடிக்கும் இந்தப் படத்தில், ரோஷினி பிரகாஷ் கதாநாயகியாக நடிக்கிறார். மேலும், சமுத்திரக்கனி, மிஷ்கின் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.


    ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கும் இப்படத்திற்கு கவிப்பேரரசு வைரமுத்து பாடல்களை எழுதுகிறார். ஆர்.பி.குருதேவ் ஒளிப்பதிவு செய்ய, சில்வா இந்த படத்திற்கு ஆக்ஷன் காட்சிகளைக் கையாண்டுள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.


    வணங்கான் போஸ்டர்

    இதையடுத்து 'வணங்கான்' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று காலை வெளியாகும் என படக்குழு அறிவித்திருந்தது. அதன்படி, இப்படத்தின் போஸ்டர் வெளியாகியுள்ளது. அருண் விஜய் ஒரு கையில் பெரியார் மற்றும் இன்னொரு கையில் விநாயகர் வைத்துள்ள இந்த போஸ்டரை ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர்.


    • அருண் விஜய் நடிக்கும் திரைப்படம் ‘வணங்கான்’.
    • இந்த படத்தில் ரோஷினி பிரகாஷ் கதாநாயகியாக நடிக்கிறார்.

    இயக்குனர் பாலா தற்போது இயக்கி வரும் திரைப்படம் 'வணங்கான்'. அருண் விஜய் கதாநாயகனாக நடிக்கும் இந்தப் படத்தில், ரோஷினி பிரகாஷ் கதாநாயகியாக நடிக்கிறார். மேலும், சமுத்திரக்கனி, மிஷ்கின் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

    வி ஹவுஸ் ப்ரோடக்ஷன்ஸ் மற்றும் பி ஸ்டூடியோஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார். கவிப்பேரரசு வைரமுத்து பாடல்களை எழுதுகிறார். ஆர்.பி.குருதேவ் ஒளிப்பதிவு செய்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதையடுத்து இப்படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் இன்று வெளியானது. ஒரு கையில் பெரியாரும் மற்றொரு கையில் விநாயகரும் இருக்கும் இந்த போஸ்டரை ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர்.


    இந்நிலையில், இந்த போஸ்டர் குறித்து இயக்குனர் சுரேஷ் காமாட்சி பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில், "இங்கு காலத்தை வெல்வது முக்கியம். நம் முன்னே எத்தனை சமர் வரினும் நின்று எதிர்கொண்டு இன்று தனக்கென படைப்பாற்றலில் மிகச் சிறந்த இடத்தை தக்க வைத்திருக்கும் நம் தமிழ்சினிமாவின் வரம், இயக்குனர் அண்ணன் பாலா அவர்கள்.

    அவரது இதுவரையிலான படைப்புகள் மக்கள் மத்தியில் அதிர்வுகளை உருவாக்கியுள்ளன. அதேபோல இன்று வணங்கான் படத்தின் முதல் பார்வை வெளியாகி உள்ளது. பெரும் அதிர்வை ஏற்படுத்தும் ஒரு கதையைத் தொட்டிருக்கிறார் என்பது மட்டும் நிச்சயம். சகோதரர் அருண்விஜய்க்கு இது மற்றுமொரு பெயர் சொல்லும் அவதாரம். இனி உங்கள் கோணத்திற்கே விட்டுவிடுகிறேன்" என்று பதிவிட்டுள்ளார்.


    ×