என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "யமஹா"

    • 150cc திறன் கொண்டதாக இந்த பைக் வடிவமைக்கப்பட்டுள்ளது.
    • இந்த மோட்டார் சைக்கிள் 149cc ப்ளூ கோர் எஞ்சின் மூலம் இயக்கப்படுகிறது

    யமஹா நிறுவனம் FZ-S Fi ஹைப்ரிட் பைக்கை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது.

    நாட்டில் முதல் முறையாக அறிமுகமாகியுள்ள 150cc திறன் கொண்ட இந்த பைக்கின் விலை ₹1.45 லட்சமாக (Ex-Showroom) நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

    யமஹா FZ-S Fi ஹைப்ரிட் பைக் ரேசிங் ப்ளூ மற்றும் சியான் மெட்டாலிக் கிரே ஆகிய இரண்டு வண்ணங்களில் விற்பனைக்கு கிடைக்கிறது.

    இந்த மோட்டார் சைக்கிள் 149cc ப்ளூ கோர் எஞ்சின் மூலம் இயக்கப்படுகிறது. இந்த பைக் என்ஜின் 7,250 ஆர்.பி.எம். இல் 12.2 குதிரைத்திறனையும் 5,500 ஆர்.பி.எம். இல் 13.3 Nm டார்க் விசையையும் வெளிப்படுத்தும்.

    • யமஹா நிறுவனத்தின் புதிய மேக்சி ஸ்கூட்டர் மாடல் ஐரோப்பா சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது.
    • புதிய 2023 மாடலில் ஏராளமான புது அம்சங்கள், டிசைன் அப்டேட்கள் வழங்கப்பட்டுள்ளன.

    யமஹா நிறுவனத்தின் எக்ஸ்மேக்ஸ் மேக்சி ஸ்கூட்டர்கள் ஐரோப்பா உள்பட பல்வேறு நாடுகளில் சிறப்பான விற்பனையை பதிவு செய்து வருகிறது. ஐரோப்பாவில் மட்டும் சுமார் 4 லட்சத்து 50 ஆயிரத்திற்கும் அதிகமான ஸ்கூட்டர்களை யமஹா விற்பனை செய்து இருக்கிறது. இந்த ஸ்கூட்டரை மேலும் கவர்ச்சிகரமானதாக மாற்ற எக்ஸ்மேக்ஸ் மாடல்களில் புது அப்டேட் செய்யப்பட்டு இருக்கிறது.

    2023 யமஹா எக்ஸ்மேக்ஸ் மாடல்கள் ஏராளமான மாற்றங்களுடன் அறிமுகமாகி இருக்கிறது. இந்த 300சிசி மாடல் தற்போது ஸ்டாண்டர்டு மற்றும் டெக் மேக்ஸ் வேரியண்ட்களில் கிடைக்கிறது. இதில் 4.2 இன்ச் கலர் டிஎப்டி டிஸ்ப்ளே, 3.2 இன்ச் எல்சிடி டிஸ்ப்ளே யூனிட் வழங்கப்பட்டு இருக்கிறது.

    இதன் டிஎப்டி யூனிட் ஸ்மார்ட்போன் கனெக்டிவிட்டி வசதி கொண்டிருக்கிறது. இதன் காரணமாக குறுந்தகவல் மற்றும் மின்னஞ்சல் நோட்டிபிகேஷன்களை பார்க்க முடியும். வாடிக்கையாளர்கள் ஸ்மார்ட்போனில் யமஹா மைரைடு செயலி மூலம் மோட்டார்சைக்கிளை கனெக்ட் செய்து கொள்ள வேண்டும். இது மியூசிக் கண்ட்ரோல் வசதியையும் கொண்டுள்ளது. இதன் பேஸ் வேரியண்டில் எல்சிடி டேஷ் மற்றும் ப்ளூடூத் கனெக்டிவிட்டி வழங்கப்பட்டு இருக்கிறது.

    புதிய ஸ்கூட்டரின் என்ஜினில் எந்த மாற்றமும் மேற்கொள்ளப்படவில்லை. அந்த வகையில் இந்த மாடலில் 292சிசி,சிங்கில் சிலிண்டர் என்ஜின், CVT டிரான்ஸ்மிஷன் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் 27.6 ஹெச்பி பவர் வெளிப்படுத்துகிறது. சஸ்பென்ஷனுக்கு முன்புறம் டெலிஸ்கோபிக் ஃபோர்க்குகள், பின்புறம் டூயல் ஸ்ப்ரிங்குகள், இருபுறமும் சிங்கில் டிஸ்க் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த மாடல் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்படுவது கேள்விக்குறியான விஷயம் தான்.

    • யமஹா மோட்டார் இந்தியா நிறுவனம் புளூ ஸ்கொயர் பெயரில் பிரத்யேக விற்பனை மையங்களை கட்டமைத்து வருகிறது.
    • நாடு முழுக்க யமஹா புளூ ஸ்கொயர் விற்பனை மையங்கள் மூலம் சர்வதேச மாடல்களை விற்பனை செய்ய யமஹா திட்டமிட்டுள்ளது.

    இந்தியா யமஹா மோட்டார் நிறுவனம் நாடு முழுக்க 100 புளூ ஸ்கொயர் விற்பனை மையங்களை கட்டமைத்துள்ளது. இந்திய சந்தையில் ரிடெயில் விற்பனையை உறுதிப்படுத்த 3s நெட்வொர்க்கை யமஹா புளூ தீமிற்குள் கொண்டு வரவும் யமஹா திட்டமிட்டுள்ளது.

    இதுமட்டுமின்றி புளூ ஸ்கொயர் விற்பனை மையங்கள் யமஹா சர்வதேச சந்தையில் விற்பனை செய்யும் மாடல்களை இந்தியாவுக்கு கொண்டுவரும் என யமஹா தெரிவித்துள்ளது. எந்தெந்த மாடல்கள் அறிமுகம் செய்யப்படும் என்பது குறித்து எந்த தகவலும் வெளியிடப்படவில்லை. எனினும், யமஹா டெனர் 700 அட்வென்ச்சர் பைக் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

    வாடிக்கையாளர்கள் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யும் ஒற்றை களமாக புளூ ஸ்கொயர் விற்பனை மையம் துவங்கப்பட்டது. யமஹாவின் ரேசிங் டிஎன்ஏவுடன் வாடிக்கையாளர்கள் இணையும் நோக்கில் புளூ ஸ்கொயர் விற்பனை மையங்கள் உருவாக்கப்பட்டு இருக்கின்றன. யமஹா உருவாக்கி இருக்கும் புளூ ஸ்டிரீக்ஸ் ரைடர் குழுவில் வாடிக்கையாளர்கள் இணையவும் புளூ ஸ்கொயர் விற்பனை மையங்கள் பாலமாக செயல்படுகின்றன.

    இந்தியாவில் ஒவ்வொரு புளு ஸ்கொயர் விற்பனையகமும் யமஹா நிறுவனத்தின் பிரீமியம் மோட்டார்சைக்கிள் மற்றும் ஸ்கூட்டர்கள்- யமஹா YZF R15M, யமஹா ஏரோக்ஸ் 155 போன்ற மாடல்களை காட்சிப்படுத்தி வருகின்றன. இத்துடன் புளூ ஸ்கொயர் விற்பனை மையங்களில் யமஹாவின் சர்வதேச மாடல்களை அறிமுகம் செய்யவும் திட்டமிடப்பட்டுள்ளது.

    • இந்திய இருசக்கர வாகன சந்தையில் யமஹா மோட்டார் இந்தியா முன்னணி நிறுவனமாக இருக்கிறது.
    • இருசக்கர வாகனம் மட்டுமின்றி சமூக நல்லிணக்க செயல்களிலும் யமஹா அவ்வப்போது தன்னை ஈடுப்படுத்திக் கொண்டு வருகிறது.

    சமூக வளர்ச்சியை வளர்க்கவும் அவர்களின் நல்வாழ்வுக்கு பங்களிப்பை வழங்குவதற்கும் சமூகப் பொறுப்பின் ஒரு பகுதியாக, இந்திய இரு சக்கர வாகனத் துறையில் முன்னணி நிறுவனமான இந்தியா யமஹா மோட்டார் (IYM) ரூ. 10 லட்சம் மதிப்புள்ள மருத்துவ உபகரணங்களை வழங்கி இருக்கிறது.

    தமிழ்நாட்டின் ஸ்ரீபெரும்புதூர் மாவட்டத்தில் உள்ள வல்லம் மற்றும் பண்ருட்டியில் உள்ள பொது சுகாதார மையங்களுக்கு 10 லட்சம் ரூபாய் மதிப்பிலான கருவிகளில் இரத்த அணுக் கவுண்டர் இயந்திரத்தின் இரண்டு அலகுகள் மற்றும் செமி அனலைசர் இயந்திரத்தின் இரண்டு அலகுகள் உள்ளன.

    இம்முயற்சியைக் குறிக்கும் வகையில், யமஹாவின் சிரேஷ்ட மருத்துவ உறுப்பினர்கள் முன்னிலையில் உபகரணங்கள் வழங்கப்பட்டன. இந்த நிகழ்ச்சியில் தலைவர் திரு. ஈஷின் சிஹானா, இயக்குநர் திரு. மசடோ டகேயாமா மற்றும் துணைத் தலைவர் (HR மற்றும் ER) திரு. P S கணேசன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    நிகழ்ச்சியில், பொது சுகாதார மையங்கள் (வல்லம் மற்றும் பண்ருட்டி) சார்பில், பொது சுகாதாரத் துறை (டிபிஎச்) துணை இயக்குனர் டாக்டர் பிரியாராஜ், வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் ஷியாம் குமார் ஆகியோர் கலந்து கொண்டு நன்கொடையை பெற்றுக் கொண்டனர். இரண்டு மையங்களிலும் மருத்துவப் பரிசோதனைகளை விரைவுபடுத்த நன்கொடை நிச்சயமாக பயனுள்ளதாகவும் முக்கியமானதாகவும் இருக்கும்.

    IYM தனது செயல்பாடுகளின் பகுதிகளிலும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் சமூக மற்றும் சுற்றுச்சூழல் நல்வாழ்வை உறுதிப்படுத்த கடந்த காலங்களிலும் இதேபோன்ற முயற்சிகளை எடுத்துள்ளது. சுகாதாரம், கல்வி, சாலைப் பாதுகாப்பு மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு ஆகிய துறைகளில் நன்கொடைகள் மற்றும் பிற முயற்சிகள் மூலம் பிந்தையவர்களின் நலனுக்காக, நிர்வாகம் மற்றும் சமூகங்களுடன் நிறுவனம் தொடர்ந்து நெருக்கமாக பணியாற்றும்.

    • யமஹா நிறுவனத்தின் RX100 மாடல் இந்திய சந்தையில் அமோக வரவேற்பை பெற்று விற்பனையில் அசத்தியது.
    • இன்றும் பயன்படுத்திய வாகனங்கள் சந்தையில் யமஹா RX100 மாடலுக்கு நல்ல வரவேற்பு உள்ளது.

    யமஹா RX100 மோட்டார்சைக்கிள் மீண்டும் அறிமுகம் செய்யப்படும் என யமஹா மோட்டார் இந்தியா நிறுவன தலைவர் எய்ஷின் சிஹானா தனியார் செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில் தெரிவித்து இருக்கிறார். எனினும், புதிய மாடல் பழைய 2-ஸ்டிரோக் வெர்ஷன் போன்று இல்லாமல் அதிநவீன ரெட்ரோ தோற்றம் கொண்டிருக்கும்.

    யமஹா இந்தியா நிறுவனத்தின் பிரபல பிளாட்ஃபார்மாக யமஹா FZ பிளாட்ஃபார்ம் உள்ளது. அந்த வகையில் இதே பிளாட்ஃபார்மில் புது மாடலை உருவாக்கி அதில் இருந்து லாபம் பார்க்க யமஹா இந்தியா முடிவு செய்து இருக்கலாம். இவ்வாறு செய்யும் பட்சத்தில் மாடலின் உற்பத்தி செலவீனங்கள் குறையும். ஆனால், யமஹா நிறுவனம் இவ்வாறு செய்யாது என்றும் புது மாடலில் 149சிசி அல்லது FZ 25 மாடலில் உள்ள என்ஜின் எதுவும் புது மாடலுக்கு பொருந்த்தமாக இருக்காது என்றும் கூறப்படுகிறது.

    அந்த வகையில் புது மாடலுக்காக யமஹா நிறுவனம் முற்றிலும் புது பிளாட்ஃபார்மை உருவாக்கும் என்றே தெரிகிறது. தற்போதைய 155சிசி, லிக்விட் கூல்டு மோட்டார் விற்பனையில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. 2008 ஆம் அறிமுகம் செய்யப்பட்டதில் இருந்தே இந்த மோட்டார் அதிக விற்பனையை பெற்று கொடுக்கிறது. அந்த வகையில் இந்த என்ஜின் புதிய RX100 மாடலில் வழங்கப்படும் என எதிர்பார்க்கலாம். 2026 வரை புதிய யமஹா RX100 மாடல் அறிமுகம் பற்றி எந்த தகவலும் வெளியாகாது என்றே தெரிகிறது.

    • யமஹா நிறுவனத்தின் புதிய அட்வான்ஸ்டு மோட்டார்சைக்கிள் ஸ்டேபிலிட்டி அசிஸ்ட் சிஸ்டம் அறிமுகமாகி இருக்கிறது.
    • வாகனத்தை கீழே விழாமல் பார்த்துக் கொள்ளும் திறன் கொண்ட புது தொழில்நுட்பம் அதன் துவக்க கால உற்பத்தியில் உள்ளது.

    யமஹா நிறுவனம் இருசக்கர வாகன பாதுகாப்பை கருத்தில் கொண்டு புது தொழில்நுட்பத்தை உருவாக்கி இருக்கிறது. அட்வான்ஸ்டு மோட்டார்சைக்கிள் ஸ்டேபிலிட்டி அசிஸ்ட் சிஸ்டம் (AMSAS) என அழைக்கப்படும் புது தொழில்நுட்பம் எலெக்ட்ரிக் R3 டம்மி யூனிட்டில் பொருத்தப்பட்டு இருக்கிறது.

    எலெக்ட்ரிக் R3 மாடலின் தோற்றம் அதன் பெட்ரோல் மாடலை போன்றே ட்சியளிக்கிறது. எனினும், இதன் முன்புறம் இரண்டு மோட்டார்கள் இடம்பெற்றுள்ளன. முன்புற சக்கரம் மற்றும் ஸ்டீரிங் ஹெட் உள்ளிட்டவைகளில் இவை பொருத்தப்பட்டு இருக்கின்றன. மோட்டார்சைக்கிளுக்கு இவற்றில் உள்ள ஆக்டுவேட்டர்கள் வாகனம் கீழே விழாமல் இருக்க வலது, இடது, முன்புறம் மற்றும் பின்புறம் என எந்த பக்கம் சாய வேண்டும் என்ற தகவலை வழங்குகிறது.

    இதில் உள்ள AMSAS பைக்கை பேலன்ஸ் செய்து அதிகபட்சம் மணிக்கு 5 கிலோமீட்டர் வேகம் வரை நிலையாக வைத்துக் கொள்கிறது. இதில் 6-ஆக்சிஸ் இனர்ஷியல் மெஷர்மெண்ட் யூனிட் வழங்கப்பட்டு இருக்கிறது. இதுபோன்று மேம்பட்ட தொழில்நுட்பத்தை அறிமுகம் செய்வது யமஹா நிறுவனத்திற்கு முதல் முறை ஆகும். முன்னதாக 2015 மோட்டோபாட் மற்றும் 2017 மோட்டோராய்டு நிகழ்வுகளில் இந்த தொழில்நுட்பம் காட்சிப்படுத்தப்பட்டு இருந்தது.

    தற்போதும் இந்த AMSAS தொழில்நுட்பம் அதன் துவக்க கட்டத்திலேயே உள்ளது. யமஹா மட்டுமின்றி ஹோண்டா நிறுவனமும் பாதுகாப்பை வழங்கும் சிஸ்டம்களை உருவாக்கி வருகிறது. ஹோண்டா நிறுவனம் செமி ஆட்டோனோமஸ் ரைடிங் மற்றும் ஏர்பேக் சிஸ்டம்களை உருவாக்கும் பணிகளில் ஈடுபட்டு வருகிறது.

    • யமஹா நிறுவனம் தமிழ் நாட்டில் தனது வாடிக்கையாளர்களுக்கு சிறப்பு சலுகைகளை அறிவித்து இருக்கிறது.
    • பொங்கல் பண்டிகையை ஒட்டி அறிவிக்கப்பட்டு இருக்கும் சிறப்பு சலுகைகள் இம்மாத இறுதிவரை வழங்கப்பட இருக்கின்றன.

    இந்திய சந்தையில் முன்னணி இருசக்கர வாகனங்கள் உற்பத்தியாளராக இருக்கும் யமஹா மோட்டார் இந்தியா தமிழ் நாட்டு வாடிக்கையாளர்களுக்கு பொங்கல் பண்டிகையை ஒட்டி சிறப்பு சலுகைகளை அறிவித்து இருக்கிறது. இந்த சலுகைகள் ஜனவரி 31 ஆம் தேதி வரை அமலில் இருக்கும். தற்போது பொங்கல் பண்டிகை சிறப்பு சலுகைகள் யமஹா FZ மற்றும் ஃபசினோ 125சிசி ஹைப்ரிட் மாடலின் டிரம் வேரியண்டிற்கு அறிவிக்கப்பட்டு இருக்கிறது.

    சலுகை விவரங்கள்:

    யமஹா FZ மாடலை வாங்குவோருக்கு ரூ. 7 ஆயிரம் வரை கேஷ்பேக், ரூ. 7 ஆயிரத்து 999 முன்பணம், மாதம் ரூ. 1999 எனும் குறைந்த மாத தவணை முறை மற்றும் 0 சதவீத வட்டி வழங்கப்படுகிறது.

    யமஹா ஃபசினோ 125 Fi ஹைப்ரிட் டிரம் மாடலை வாங்கும் போது ரூ. 1500 வரை கேஷ்பேக், ரூ. 3 ஆயிரத்து 999 எனும் மிக குறைந்த முன்பணம், மாதம் ரூ. 1999 எனும் மாத தவணை, 0 சதவீத வட்டி போன்ற சலுகைகள் வழங்கப்படுகிறது.

    பொங்கல் பண்டிகையை ஒட்டி அறிவிக்கப்பட்டு இருக்கும் சலுகைகள் தமிழ் நாட்டு வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே பிரத்யேகமாக அறிவிக்கப்பட்டு இருக்கிறது. சலுகைகள் யமஹா விற்பனை மையங்களில் பெற முடியும். இதுபற்றிய கூடுதல் விவரங்களை யமஹா விற்பனை மையங்களில் அறிந்து கொள்ள முடியும்.

    150சிசி யமஹா FZ சீரிசில் சக்திவாய்ந்த ஏர் கூல்டு 4 ஸ்டிரோக் 149சிசி, SOHC, 2 வால்வுகள் கொண்ட சிங்கில் சிலிண்டர் ஃபியூவல் இன்ஜெக்ட் செய்யப்பட்ட என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் 12.4 பிஎஸ் பவர், 13.3 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும் திறன் கொண்டிருக்கிறது.

    யமஹா ஃபசினோ ஹைப்ரிட் மாடலில் ஏர் கூல்டு, 4 ஸ்டிரோக் SOHC, இரண்டு வால்வுகள் கொண்ட என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் 8.2 பிஎஸ் பவர், 10.3 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. இதுதவிர ஏராளமான பயனுள்ள அம்சங்கள் இந்த மாடலில் வழங்கப்பட்டு இருக்கிறது.

    • யமஹா நிறுவனத்தின் புதிய FZ-X மாடல் விரைவில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது.
    • 2023 யமஹா FZ-X மாடலில் புது விண்ட்ஸ்கிரீன், டூயல் சேனல் ஏபிஎஸ் போன்ற அம்சங்களை கொண்டிருக்கிறது.

    யமஹா நிறுவனம் 2023 FZ-X மோட்டார்சைக்கிளை இந்திய சந்தையில் அறிமுகம் செய்ய இருக்கிறது. புது FZ-X மாடல் சோதனை செய்யப்படும் போது எடுக்கப்பட்ட ஸ்பை படங்கள் இணையத்தில் வெளியாகி உள்ளது. புது மாடலின் டிசைனில் மாற்றங்கள் செய்யப்பட்டு இருக்கும் என்றே தெரிகிறது. இத்துடன் புது விண்ட்ஸ்கிரீன், வட்ட வடிவம் கொண்ட ஹெட்லைட், டியுபுலர் ஸ்டீல் ஃபிரேம் வழங்கப்படுகிறது.

    இதன் முன்புறம் ஹை-மவுண்ட் ஃபெண்டர் வழங்கப்படுகிறது. இதுதவிர 2023 FZ-X மாடல் புது நிறங்களில் கிடைக்கும் என்றும் தெரிகிறது. ஸ்பை படங்களில் உள்ள மாடல் கோல்டன் நிற அலாய் வீல்கள், ஆரஞ்சு நிற பாடி வொர்க் கொண்டிருக்கிறது. இதே போன்ற கோல்டு நிற ரிம்கள் FZS 25 போன்ற மாடல்களிலும் யமஹா ஏற்கனவே வழங்கி இருக்கிறது.

    இவற்றுடன் புதிய யமஹா 2023 FZ-X மாடலில் டூயல் சேனல் ஏபிஎஸ் வழங்கப்படுகிறது. இந்த மாடலின் மெக்கானிக்கல் அம்சங்களில் எவ்வித மாற்றமும் மேற்கொள்ளப்படாது என்றே தெரிகிறது. அந்த வகையில், இந்த பைக் 149சிசி, ஏர் கூல்டு, சிங்கில் சிலிண்டர் என்ஜின் கொண்டிருக்கும்.

    இது 12.4 ஹெச்பி பவர், 13.3 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும் திறன் கொண்டுள்ளது. வரும் வாரங்களில் புதிய யமஹா FZ-X மாடல் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்படும் என கூறப்படுகிறது.

    Photo Courtesy: Rushlane

    • யமஹா நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்கு அவ்வப்போது மைலேஜ் சேலஞ்ச் செயல்பாட்டை நடத்தி வருகிறது.
    • இதற்கான போட்டியில் கலந்து கொண்டு வெற்றி பெறும் வாடிக்கையாளர்களுக்கு சிறப்பு பரிசுகள் வழங்கப்படுகின்றன.

    யமஹா இந்தியா நிறுவனம் நாடு முழுக்க மைலேஜ் சேலஞ்ச் பெயரில் தனது வாடிக்கையாளர்களுக்கு அவ்வபோது போட்டிகளை நடத்துவதை வாடிக்கையாக கொண்டிருக்கிறது. அந்த வகையில், சமீபத்தில் யமஹா சேலஞ்ச் போட்டி சென்னையில் நடைபெற்றது. இதில் ஏராளமான யமஹா வாடிக்கையாளர்கள் கலந்து கொண்டனர்.

    125சிசி ஹைப்ரிட் ஸ்கூட்டர் மாடல்கள் வழங்கும் சிறந்த மைலேஜ் குறித்து வாடிக்கையாளர்கள் இடையே விழிப்புணர்வை ஏற்படுத்த, இந்தியா யமஹா மோட்டார் (IYM) நிறுவனம் தனது அங்கீகரிக்கப்பட்ட டீலர் மூலம் 'மைலேஜ் சேலஞ்ச் ஆக்டிவிட்டி'யை நடத்தியது. யமஹாவின் 125cc ஹைப்ரிட் ஸ்கூட்டர் சீரிசில் ஃபசினோ 125 Fi ஹைப்ரிட், ரே ZR 125 Fi ஹைப்ரிட் மற்றும் ஸ்ட்ரீட் ரேலி 125 Fi ஹைப்ரிட் போன்ற மாடல்கள் உள்ளன.

    இந்த முறை நடைபெற்ற போட்டியில் மொத்தம் 24 யமஹா வாடிக்கையாளர்கள் பங்கேற்றனர். முதற்கட்டமாக மைலேஜ் சவால் செயல்பாடுகள் குறித்து பங்கேற்பாளர்களுக்கு சுருக்கமான அமர்வுடன் தொடங்கியது. அமர்வின் போது, போட்டியாளர்களுக்கு திறமையான சவாரி நடத்தை மற்றும் சவாரிக்கு திட்டமிடப்பட்ட பாதை பற்றிய வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டன.

    இதைத் தொடர்ந்து அவர்கள் 30-கிலோமீட்டர் பயணத்தைத் தொடங்குவதற்கு முன் அவர்களின் ஸ்கூட்டர்களுக்கு எரிபொருள் நிரப்பப்பட்டது. பின் நகர போக்குவரத்து மற்றும் திறந்த சாலைகள் ஆகியவற்றின் கலவையை உள்ளடக்கிய பாதையில் போட்டியாளர்கள் ஸ்கூட்டரை இயக்கினர். இதில் ஸ்கூட்டரின் சஸ்பென்ஷன், சூழ்ச்சி, பிரேக்கிங், மற்றும் ஆரம்ப பிக்-அப் உள்ளிட்டவைகளை அனுபவிக்க முடியும்.

    வெற்றிகரமாக திரும்பிய பின், ஸ்கூட்டர்களின் முந்தைய எரிபொருள் அளவுக்கு ஏற்ப எரிபொருள் மீண்டும் நிரப்பப்பட்டன. மேலும் மைலேஜ் கணக்கீட்டிற்காக பயன்படுத்தப்பட்ட எரிபொருளின் அளவு பதிவு செய்யப்பட்டது. கலந்து கொண்ட அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் நினைவுப் பரிசுகள் வழங்கப்பட்டன.

    யமஹா மைலேஜ் சேலஞ்ச் போட்டியில் இந்த முறை முதலிடம் பிடித்த சுரேந்தர் தனது ஸ்கூட்டரில் லிட்டருக்கு 135.5 கிமீ மைலேஜ் பெற்றார். இரண்டு மற்றும் மூன்றாவது இடத்தை பிடித்தவர்கள் முறையே லிட்டருக்கு 124.18 மற்றும் 121.6 கிமீ மைலேஜ் பெற்றுள்ளனர்.

    இத்துடன் இலவச வாட்டர் வாஷ் மற்றும் அவர்களின் வாகனங்களை 10 பாயிண்ட் இன்ஸ்பெக்ஷன் செய்வதற்கான ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. மைலேஜ் சவால் செயல்பாட்டில் பங்கேற்ற வாடிக்கையாளர்களிடம் இருந்து, இரண்டு செயல்பாடுகளிலும் அதிக மைலேஜைப் பெற்ற முதல் 5 வெற்றியாளர்களுக்கு கோப்பைகள், சான்றிதழ்கள் மற்றும் பரிசு அட்டைகள் வழங்கப்பட்டன.

    • யமஹா நிறுவனத்தின் 2023 R15, FZX மற்றும் MT15 மாடல்கள் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட உள்ளன.
    • சமீபத்தில் இந்தோனேசிய சந்தையில் யமஹா R15 அக்ரசிவ் கிரே வேரியண்ட் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது.

    யமஹா நிறுவனம் பிரீமியம் இருசக்கர வாகனங்கள் மீது அதிக ஈர்ப்பு கொண்டுள்ளது. மற்ற நிறுவனங்களுடன் ஒப்பிடும் போது பட்ஜெட் ரக கம்யுட்டர் மற்றும் ஸ்கூட்டர்களை வழங்காமல் இருக்கும் ஒரே நிறுவனமாக யமஹா இருக்கிறது. இந்திய சந்தையில் யமஹாவின் பிரீமியம் மாடல்களில் R15, FZX மற்றும் MT15 உள்ளிட்டவை இடம்பெற்றுள்ளன. இவைதவிர யமஹா நிறுவனம் தனது பாரம்பரியம் மிக்க RX போன்ற பிராண்டுகளை இந்தியாவில் மீண்டும் அறிமுகம் செய்யும் பணிகளில் ஈடுபட்டு வருகிறது.

    இத்துடன் 125 முதல் 155சிசி பிரிவில் அட்வென்ச்சர் மோட்டார்சைக்கிளை அறிமுகம் செய்யும் பணிகளிலும் யமஹா ஈடுபட்டு வருகிறது. இதனிடையே யமஹா தனது பிரீமியம் மோட்டார்சைக்கிள் மாடல்களை 2023 ஆண்டிற்கு அப்டேட் செய்யும் பணிகளை தீவிரப்படுத்தி இருக்கிறது. இதன் காரணமாக 2023 யமஹா R15, FZX மற்றும் MT15 மாடல்கள் விரைவில் அறிமுகம் செய்யப்பட உள்ளன.

    இந்த நிலையில், புதிய 2023 மாடல்களின் ஸ்பை படங்கள் இணையத்தில் வெளியாகி உள்ளன. அதன்படி 2023 யமஹா R15 மாடலில் கிரே நிற பெயிண்டிங், ஆங்காங்கே எல்லோ நிறம் மற்றும் கோல்டன் நிற யுஎஸ்டி ஃபோர்க்குகள் வழங்கப்பட்டுள்ளன. இது யமஹா R15M வொர்ல்டு ஜிபி 60th எடிஷன் மாடலில் உள்ளதை போன்றே காட்சியளிக்கிறது.

    புதிய 2023 MT15 மாடல் கிளாஸ் பிளாக் நிறம் கொண்டிருக்கிறது. இது யமஹா ஏற்கனவே வழங்கி வரும் மெட்டாலிக் பிளாக் நிறம் போன்றே காட்சியளிக்கிறது. எனினும், புதிய எடிஷனில் ரெட் அலாய் வழங்கப்பட்டு இருக்கிறது. மெட்டாலிக் பிளாக் மற்றும் ஃபுளுரோசெண்ட் ரெட் வீல்களை கொண்ட நிறத்தை யமஹா இதுவரை வழங்கியது இல்லை. 2023 FZX மாடலும் விற்பனையகம் வரத்துவங்கி இருக்கிறது.

    2023 FZX மாடலில் முற்றிலும் புதிய புளூ நிறம் வழங்கப்பட்டு இருக்கிறது. இது யமஹா தனது FZX மெட்டாலிக் புளூ ஆப்ஷனில் வழங்கியதை போன்று காட்சியளிக்கவில்லை. மாறாக இது MT15 மற்றும் R15 மாடல்களில் வழங்கப்படும் ரேசிங் புளூ நிறம் போன்று காட்சியளிக்கிறது. புதிய நிறம் தவிர 2023 FZX மாடல் டூயல் சேனல் ஏபிஎஸ் வசதியை பெற இருக்கிறது.

    Photo Courtesy: Rushlane

    • யமஹா நிறுவனம் ப்ளூ ஸ்கொயர் விற்பனை மையங்கள் எண்ணிக்கையை அதிகப்படுத்தி வருகிறது.
    • யமஹா ஏரோக்ஸ் மேக்சி ஸ்கூட்டர் ப்ளூ ஸ்கொயர் விற்பனை மையங்களில் பிரத்யேகமாக விற்பனை செய்யப்படுகின்றன.

    இந்தியா யமஹா மோட்டார் (IYM) பிரைவேட் லிமிடெட் நிறுவனம் தமிழ்நாட்டில் இரண்டு புதிய "ப்ளூ ஸ்கொயர்" விற்பனை மையங்களைத் திறந்து இருப்பதாக அறிவித்து இருக்கிறது. அறந்தாங்கி, புதுக்கோட்டை மற்றும் காரைக்குடி, சிவகங்கையில் இந்த இரண்டு ப்ளூ ஸ்கொயர் ஷோரூம்களும் திறக்கப்பட்டுள்ளன.

    இந்த ப்ளூ ஸ்கொயர் ஷோரூம்களில் விற்பனை, சேவை மற்றும் உதிரிபாகங்கள் கிடைக்கும். ப்ளூ ஸ்கொயர் ஷோரூம்கள் வாடிக்கையாளர்களுக்கு யமஹா ரேசிங் உலகிற்கு ஒரு அறிமுகத்தை வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. மேலும் பிரீமியம் அவுட்லெட்டில் உள்ள ஒவ்வொரு பகுதியும் சர்வதேச மோட்டார் ஸ்போர்ட்ஸில் வலுவான வேர்களைக் கொண்ட உலகளாவிய பிராண்டுடன் தொடர்புடைய பெருமையின் உணர்வைத் தூண்டும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

    'ப்ளூ' என்பது யமஹாவின் பெருமைமிக்க பந்தயப் பாரம்பரியத்தின் பிரதிநிதித்துவம் மற்றும் 'ஸ்கொயர்' என்பது வாடிக்கையாளர்களுக்கு உற்சாகமான, விளையாட்டு மற்றும் ஸ்டைலான தயாரிப்புகளின் வரம்பு மற்றும் ப்ளூ ஸ்ட்ரீக்ஸ் ரைடர் சமூகத்திற்கான ஒரு தளமாகவும் செயல்படுகிறது.

    இது வாடிக்கையாளர்கள் மற்ற யமஹா ரைடர்களுடன் சவாரி செய்ய அனுமதிக்கிறது. ப்ளூ ஸ்கொயர் ஷோரூம்களில் ஏரோக்ஸ் 155 மேக்ஸி ஸ்போர்ட் ஸ்கூட்டர் பிரத்தியேகமாக விற்பனை செய்யப்படுகிறது. இவை தவிர YZF-R15 4.0 ABS, YZF-R15S 3.0 ABS, ஏபிஎஸ் வசதி கொண்ட MT-15 2.0, FZ 25, ABS உடன் FZ-S FI, ABS உடன் FZ-FI, FZ-X போன்ற மாடல்கள் காட்சிப்படுத்தப்படுகின்றன.

    இத்துடன் ஃபசினோ 125 FI ஹைப்ரிட், RayZR 125 FI ஹைப்ரிட், ஸ்ட்ரீட் ரேலி 125 FI ஹைப்ரிட் போன்ற ABS மற்றும் UBS ஸ்கூட்டர்களும் இங்கு காட்சிப்படுத்தப்படுகின்றன. பிரீமியம் விற்பனை நிலையமான ப்ளூ ஸ்கொயரில் ஒரிஜினல் யமஹா உதிரிபாகங்கள், ஆடைகள் மற்றும் உதிரி பாகங்களின் கவர்ச்சிகரமான காட்சியையும் காட்சிப்படுத்துகின்றன.

    புதிதாக தொடங்கப்பட்ட இந்த விற்பனை நிலையங்களுடன், யமஹா இப்போது இந்தியா முழுவதும் 165 ப்ளூ ஸ்கொயர் ஷோரூம்களைக் கொண்டுள்ளது, தமிழ்நாடு, பாண்டிச்சேரி, கர்நாடகா, தெலுங்கானா, ஆந்திரப் பிரதேசம், கேரளா, ஜார்க்கண்ட், மேற்கு வங்காளம், ஒரிசா, அசாம், சத்தீஸ்கர், பீகார், மத்தியப் பிரதேசம், மகாராஷ்டிரா, குஜராத் , ஜம்மு மற்றும் காஷ்மீர், டெல்லி, ராஜஸ்தான் மற்றும் பிற வடகிழக்கு மாநிலங்களில் யமஹாவின் ப்ளூ ஸ்கொயர் விற்பனை மையங்கள் செயல்பட்டு வருகின்றன.

    • யமஹா நிறுவனம் தனது மோட்டார்சைக்கிள்களின் 2023 ஆண்டிற்கு அப்டேட் செய்து இருக்கிறது.
    • மேம்பட்ட புதிய மாடல்களில் டிராக்ஷன் கண்ட்ரோல் சிஸ்டம் தொழில்நுட்பம் வழங்கப்பட்டு இருக்கிறது.

    யமஹா மோட்டார் இந்தியா நிறுவனம் அதன் வாடிக்கையாளர்களுக்கு சுவாரஸ்ய மற்றும் அலாதியான ரைடிங் அனுபவத்தை வழங்கும் நோக்கில் 2023 FZS-Fi V4 டீலக்ஸ், FZ-X, MT-15 V2 டீலக்ஸ் மற்றும் R15M மாடல்களை முற்றிலும் புதிய தோற்றம், அசத்தலான அம்சங்களுடன் அறிமுகம் செய்து இருக்கிறது.

    150சிசி பிரிவில் நல்ல வரவேற்பை பெற்று வரும் FZS-Fi V4 டீலக்ஸ், FZ-X, MT-15 V2 டீலக்ஸ் மற்றும் R15M மாடல்களில் தற்போது டிராக்ஷன் கண்ட்ரோல் சிஸ்டம் ஸ்டாண்டர்டு அம்சமாக வழங்கப்பட்டு இருக்கிறது. புதிய மாடல்களில் உள்ள டிராக்ஷன் கண்ட்ரோல் சிஸ்டம் என்ஜின் செயல்திறன் அதிகளவில் ஸ்லிப் ஆகாமல் இருக்க இக்னிஷன் டைமிங் மற்றும் ஃபியூவல் இன்ஜெக்ஷன் வால்யுமை கண்ட்ரோல் செய்கிறது. இதன் மூலம் வீல்களுக்கு அனுப்பப்படும் பவர் சீராக வினியோகம் செய்யப்பட்டு, வீஸ்ஸ்பின் பெருமளவு குறைக்கப்படுகிறது.

    2023 FZS-Fi V4 டீலக்ஸ் மாடலில் முற்றிலும் புதிய ஹெட்லைட் டிசைன், எல்இடி ஃபிளாஷர்கள் வழங்கப்பட்டுள்ளன. இவை மோட்டார்சைக்கிள் தோற்றத்தை மேலும் பிரீமியமாக மாற்றுகிறது. இத்துடன் Y-கனெக்ட் செயலி மூலம் ப்ளூடூத் கனெக்டிவிட்டி வசதியும் வழங்கப்படுகிறது. FZ-X மாடலிலும் டிராக்ஷன் கண்ட்ரோல் சிஸ்டத்துடன் எல்இடி ஃபிளாஷர்கள், முற்றிலும் புதிய டார்க் மேட் புளூ மற்றும் கோல்டன் நிற ரிம் வேரியண்ட் வழங்கப்படுகிறது.

    புதிய FZS-Fi V4 டீலக்ஸ் மற்றும் FZ-X மாடல்களில் சிங்கில் சேனல் ஏபிஎஸ், மல்டி-ஃபன்ஷன் எல்சிடி இன்ஸ்ட்ரூமெண்ட் கிளஸ்டர், எல்இடி ஹெட்லைட், டையரை சுற்றி ரியர் மட்கார்டு, லோயர் என்ஜின் கார்டு வழங்கப்பட்டுள்ளன. இரு மாடல்களிலும் 12.5 பிஎஸ் பவர், 13.3 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும் 149சிசி என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது.

    2023 R15M மாடலில் YZF-R1 சார்ந்த டிஎஃப்டி மீட்டர் மற்றும் கியர் ஷிஃப்ட் இண்டிகேட்டர், டிராக்& ஸ்டிரீட் மோட் செலக்டர், எல்இடி ஃபிளாஷர்கள், புதிய டார்க் நைட் நிற வேரியண்டில் கிடைக்கிறது. இத்துடன் டூயல் சேனல் ஏபிஎஸ் உள்ளது. புதிய MT-15 V2 டீலக்ஸ் மாடல் தற்போது மேட் பிளாக் நிறத்தில் கிடைக்கிறது. இதுதவிர ஃபுளோ-வெர்மிலன், சியான் ஸ்டாம் மற்றும் ரேசிங் புளூ போன்ற நிறங்களிலும் கிடைக்கிறது.

    புதி்ய MT-15 V2 டீலக்ஸ் மற்றும் R15M மாடல்களிலும் யமஹாவின் லிக்விட் கூல்டு, 4 ஸ்டிரோக், SOHC, 4 வால்வுகள் கொண்ட 155சிசி ஃபியூவல் இன்ஜெக்ட் செய்யப்பட்ட என்ஜின் மற்றும் வேரியபில் வால்வு ஆக்டுவேஷன் சிஸ்டம் வழங்கப்பட்டு இருக்கிறது. இத்துடன் 6 ஸ்பீடு கியர்பாக்ஸ், அசிஸ்ட் மற்றும் ஸ்லிப்பர் கிளட்ச் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் 18.4 பிஎஸ் பவர், 14.2 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது.

    விலை விவரங்கள்:

    யமஹா FZS-Fi V4 டீலக்ஸ் ரூ. 1 லட்சத்து 27 ஆயிரத்து 400

    யமஹா FZ-X டார்க் மேட் புளூ ரூ. 1 லட்சத்து 36 ஆயிரத்து 900

    யமஹா R15M ரூ. 1 லட்சத்து 93 ஆயிரத்து 900

    யமஹா R15 V4 டார்க் நைட் ரூ. 1 லட்சத்து 81 ஆயிரத்து 900

    யமஹா MT-15 V2 டீலக்ஸ் மெட்டாலிக் பிளாக் ரூ. 1 லட்சத்து 68 ஆயிரத்து ௪௦௦

    அனைத்து விலைகளும் எக்ஸ்-ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது.

    சுற்றுச்சூழலில் ஏற்படும் காற்று மாசு அளவை கட்டப்படுத்தும் வகையில், யமஹா நிறுவனம் புதிய யமஹா FZS-Fi V4 டீலக்ஸ் மற்றும் FZ-X மாடல்களை E20 ஃபியூவல் கம்பேடபிலிட்டியை வழங்கி இருக்கிறது. இது செயல்திறனை பாதிக்காமல், காற்று மாசு அளவை குறைக்கும் திறன் கொண்டிருக்கிறது. இந்த ஆண்டு இறுதிக்குள் யமஹா நிறுவனம் தனது அனைத்து மோட்டார்சைக்கிள் மாடல்களையும் E20 எரிபொருளுக்கு ஏற்றவகையில் மாற்ற திட்டமிட்டு வருகிறது.

    இத்துடன் புதிய 2023 யமஹா மாடல்களில் ஆன்-போர்டு டயக்னாஸ்டிக்ஸ் (OBD-II) சிஸ்டம் வழங்கப்பட்டு இருக்கிறது. இவை காற்று மாசு அளவுகளை ரியல்டைமில் மாணிட்டர் செய்யும் வசதி கொண்டுள்ளது. 

    ×