என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வெங்கட்பிரபு"

    • இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் தற்போது உருவாகி வரும் திரைப்படம் என்.சி.22.
    • இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

    இயக்குனர் வெங்கட் பிரபு அடுத்து இயக்கும் புதிய படம் என்சி22. இப்படத்தில் நாக சைதன்யா கதாநாயகனாக நடிக்கிறார். தற்காலிகமாக 'என்சி22' என பெயரிடப்பட்டுள்ள இப்படத்தை ஸ்ரீநிவாஸா சித்தூரி தயாரிக்கிறார். தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் உருவாகும் இந்த படத்தில் நாக சைதன்யாவுக்கு ஜோடியாக கீர்த்தி ஷெட்டி நடிக்கிறார்.


    என்.சி.22

    மேலும், இதில் சரத்குமார், அரவிந்த் சாமி, வென்னேலா கிஷோர், பிரேம்ஜி, சம்பத் ராஜ், பிரியாமணி மற்றும் பிரேமி விஷ்வநாத் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், என்சி22 படம் குறித்து புதிய தகவல் வெளியாகியுள்ளது.


    என்.சி.22

    அதன்படி, நடிகை பிரியாமணி இந்த படத்தில் அரசியல்வாதியாக நடிப்பதாகவும் இடைவேளைக்கு பிறகு முதலமைச்சராவது போல் திரைக்கதை அமைத்துள்ளதாகவும் கூறப்படுகிறது. மேலும், பெண் முதலமைச்சர் ஆனால் என்னென்ன நன்மைகள் செய்ய முடியும் என்பது போன்று அவரது கதாபாத்திரம் அமைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    • இயக்குனர் வெங்கட் பிரபு தற்போது என்சி22 படத்தை இயக்கி வருகிறார்.
    • இவரின் பதிவு சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

    இயக்குனர் வெங்கட் பிரபு தற்போது இயக்கி வரும் புதிய படம் என்சி22. இப்படத்தில் நாக சைதன்யா கதாநாயகனாக நடிக்கிறார். தற்காலிகமாக 'என்சி22' என பெயரிடப்பட்டுள்ள இப்படத்தை ஸ்ரீனிவாசா சில்வர் ஸ்கிரீன் பேனரின் சார்பா ஸ்ரீனிவாசா சித்தூரி தயாரிக்கிறார். தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் உருவாகும் இந்த படத்தில் நாக சைதன்யாவுக்கு ஜோடியாக கீர்த்தி ஷெட்டி நடிக்கிறார்.


    என்சி22

    இப்படத்தின் வில்லனாக அரவிந்த் சாமி நடிக்கிறார். இப்படத்திற்கு இளையராஜா மற்றும் யுவன் ஷங்கர் ராஜா இருவரும் இணைந்து இசையமைக்கின்றனர். மேலும், இதில் சரத்குமார், வென்னேலா கிஷோர், பிரேம்ஜி, சம்பத் ராஜ், பிரியாமணி மற்றும் பிரேமி விஷ்வநாத் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.


    பிரேம்ஜி - யுவன் ஷங்கர் ராஜா - வெங்கட் பிரபு

    இந்நிலையில், நடிகர் பிரேம்ஜிக்கு இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா புதிய மொபைல் போனை பரிசளித்துள்ளார். இதனை தனது சமூக வலைதளப் பக்கத்தில் புகைப்படத்தை பகிர்ந்து தெரிவித்துள்ள பிரேம்ஜி, " எனக்கு பரிசளித்ததற்கு நன்றி என் இசைக்குரு யுவன் ஷங்கர் ராஜா.. லவ் யூ.." என்று பதிவிட்டுள்ளார்.

    இதற்கு இயக்குனர் வெங்கட் பிரபு, 'அப்போ எனக்கு பரிசு இல்லை' என்று கவலையுடன் பதிவிட்டுள்ளார். இதற்கு யுவன் ஷங்கர் ராஜா 'உங்களுக்காக சில இசைகளை குக் செய்து வருகிறேன்' என்று பதிலளித்துள்ளார். இந்த பதிவு தற்போது ரசிகர்களின் கவனம் ஈர்த்து வருகிறது.



    • இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் ‘கஸ்டடி’.
    • இப்படம் வருகிற மே 12-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

    இயக்குனர் வெங்கட் பிரபு தற்போது இயக்கி வரும் படம் 'கஸ்டடி'. இப்படத்தில் நாக சைதன்யா கதாநாயகனாக நடிக்கிறார். இப்படத்தை ஸ்ரீனிவாசா சில்வர் ஸ்கிரீன் பேனரின் சார்பாக ஸ்ரீனிவாசா சித்தூரி தயாரிக்கிறார். தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் உருவாகும் இந்த படத்தில் நாக சைதன்யாவுக்கு ஜோடியாக கீர்த்தி ஷெட்டி நடிக்கிறார்.


    கஸ்டடி

    'கஸ்டடி' திரைப்படத்தில் வில்லனாக அரவிந்த் சாமி நடிக்கிறார். இப்படத்திற்கு இளையராஜா மற்றும் யுவன் ஷங்கர் ராஜா இருவரும் இணைந்து இசையமைக்கின்றனர். மேலும், இதில் சரத்குமார், வென்னேலா கிஷோர், பிரேம்ஜி, சம்பத் ராஜ், பிரியாமணி மற்றும் பிரேமி விஷ்வநாத் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.


    கஸ்டடி படக்குழு

    இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் கிளிம்ஸ் வீடியோ சமீபத்தில் வெளியாகி கவனம் பெற்றது. இந்நிலையில், இப்படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது. அதன்படி, 'கஸ்டடி' திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவு பெற்றுள்ளது. இதனை நடிகர் நாக சைதன்யா தனது சமூக வலைதளத்தில் வீடியோ ஒன்றை பகிர்ந்து தெரிவித்துள்ளார்.

    'கஸ்டடி' திரைப்படம் வருகிற மே 12-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.


    • திரைப்படம் வரும் செப்டம்பர் 5 ஆம் தேதி வெளியாகவுள்ளது.
    • கோட் திரைப்படம் ஐமேக்ஸ் மற்றும் எபிக் தொழில் நுட்பத்திலும் வெளியாக இருக்கிறது.

    நடிகர் விஜய், இயக்குநர் வெங்கட் பிரபு கூட்டணியில் உருவாகி வரும் படம் தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் (தி கோட்). ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்தில் பிரசாந்த், பிரபு தேவா, அஜ்மல், மீனாட்சி சௌத்ரி மற்றும் பலர் நடித்துள்ளனர்.

    தி கோட் படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு நிறைவுபெற்று பின்னணி வேலைகள் நடைபெற்று வருகின்றன. இந்த படத்தில் இடம் பெற்றுள்ள மூன்று பாடல்கள் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றன. திரைப்படம் வரும் செப்டம்பர் 5 ஆம் தேதி வெளியாகவுள்ளது.

    கோட் திரைப்படம் ஐமேக்ஸ் மற்றும் எபிக் தொழில் நுட்பத்திலும் வெளியாக இருக்கிறது. இந்த நிலையில், இந்த படத்தின் அதிகம் எதிர்பார்க்கப்படும் டிரைலர் குறித்த அப்டேட் தற்பொழுது வெளியாகியுள்ளது. படத்தின் டிரைலர் ஆகஸ்ட் 17 ஆம் தேதி வெளியாகும் என படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.

    இதனால் ரசிகர்கள் மிகவும் உற்சாகத்துடனும் எதிர்பார்ப்புடனும் காத்துக் கொண்டு இருகின்றனர்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • இப்பாடல் மிகவும் எனெர்ஜடிகாக இருக்கும் எனவும், திரிஷா இப்பாடலில் இடம் பெற்றுள்ளார் எனவும் தகவல்.
    • மங்காத்தா படம் வெளியான தேதியில் கோட் படத்தின் 4வது பாடல் வெளியீடு.

    வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் கோட் திரைப்படத்தில் நடித்துள்ளார். திரைப்படம் ரிலீசுக்கு தயாராகியுள்ளது. திரைப்படம் வரும் செப்-5 ஆம் தேதி வெளியாகவுள்ளது. படத்தின் ப்ரோமோஷன் பணிகள் தீவிரமாக நடைப்பெற்று வருகிறது.

    படத்தின் 3 பாடல்கள் இதற்கு முன் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. நாளை படத்தின் 4- வது பாடல் வெளியாகவுள்ளதாக படக்குழு அறிவித்தனர். இப்பாடல் ஒரு ஸ்பெஷல் சாங் எனவும். இப்பாடல் மிகவும் எனெர்ஜடிகாக இருக்கும் எனவும், திரிஷா இப்பாடலில் இடம் பெற்றுள்ளார் எனவும் தகவல் வெளிவந்த வண்ணம் உள்ளன.

    மேலும், மங்காத்தா படம் வெளியான தேதியில் கோட் படத்தின் 4வது பாடல் வெளியாகவுள்ளதாகவும், இதற்கு மேல் என்ன வேண்டும் எனவும் இயக்குனர் வெட்கெட் பிரபு நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.

    இந்நிலையில், கோட் படத்தின் 4வது பாடலான "மட்ட" நாளை மாலை 6 மணிக்கு வெளியாகவுள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகியுள்ளது.

    இதுகுறித்து, அச்சனா கல்பாதி தனது எக்ஸ் பக்கத்தில், " பல்வேறு காரணங்களுக்காக இது எனக்கும் மிகவும் பிடித்த பாடல்" என்றும் மட்ட பாடல் நாளை மாலை 6 மணிக்கு வெளியாகவுள்ளதாகவும் குறிப்பிட்டிருந்தார்.

    மேலும், பாடலாசிரியர் விவேக்," இது இளையதளபதியின் ப்ளாஸ்ட்.. ஆட்டநாயகன் நடனத்திற்காக காத்திருங்கள்" என்றும் குறிப்பிட்டிருந்தார்.

    • மாநாடு, மன்மத லீலை படங்களின் வெற்றியைத் தொடர்ந்து இயக்குனர் வெங்கட்பிரபு, நாக சைதன்யாவை வைத்து புதிய படம் இயக்க ஆயத்தமாகி வருகிறார்.
    • வெங்கட் பிரபு தற்போது ஐக்கிய அமீரகத்தின் கெளரவத்தை பெற்றுள்ளார்.

    வெங்கட் பிரபுவின் இயக்கத்தில் வெளியான 'மாநாடு', 'மன்மத லீலை' போன்ற படங்கள் வெற்றியடைந்ததை அடுத்து தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகரான நாக சைதன்யாவை நடிக்கும் புதிய படத்தை இயக்க ஆயத்தமாகி வருகிறார். இதைத் தொடர்ந்து ஐக்கிய அமீரகத்தின் கெளரவத்தை வெட்கட் பிரபு பெற்றுள்ளார்.

    ஐக்கிய அமீரகம் இந்தியாவின் திரைத்துறையைச் சேர்ந்த பலருக்கு கோல்டன் விசா வழங்கி கௌரவித்து வருகின்றனர். அதன்படி, பாலிவுட் நடிகர்கள் சஞ்சய் தத், ஷாருக்கான், துஷார் கபூர், ஊர்வசி ரவுதலா உட்பட பலர் இந்த விசாவை பெற்றுள்ளனர்.


    வெங்கட்பிரபு

    வெங்கட்பிரபு

    இதைத்தொடர்ந்து, தென்னிந்தியாவைச் சேர்ந்த மம்மூட்டி, மோகன்லால், பிருத்விராஜ், துல்கர் சல்மான், பார்த்திபன், மீரா ஜாஸ்மின், த்ரிஷா, அமலா பால், லட்சுமி ராய், காஜல் அகர்வால், பிரணிதா, ஆண்ட்ரியா உட்பட பலருக்கு இந்த கோல்டன் விசா வழங்கப்பட்டுள்ளது. சமீபத்தில் நடிகர் விஜய் சேதுபதி, மீனா ஆகியோர் இந்த விசாவை பெற்றிருந்தனர்.

    தற்போது வெங்கட் பிரபுவுக்கு ஐக்கிய அமீரகம் கோல்டன் விசாவை வழங்கியுள்ளது. இதனை சிறப்பிக்கும் விதமாக வெங்கட் பிரபு கேக் வெட்டி கொண்டியுள்ளார். இந்த புகைப்படங்கள் இணையத்தில் ரசிகர்களால் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.

    கோல்டன் விசா ஐக்கிய அமீரகத்தின் குடியுரிமை போன்றது. இந்த விசாவை வைத்திருப்பவர்கள் பத்து வருடங்களுக்கு அந்நாட்டின் குடிமகன்களாக கருதப்படுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

    • மன்மத லீலை படத்தைத் தொடர்ந்து வெங்கட் பிரபு அடுத்ததாக இயக்கி வரும் படம் என்சி22.
    • இப்படத்தின் படப்பிடிப்பு முழு வீச்சுடன் நடைபெற்று வருகிறது.

    இயக்குனர் வெங்கட் பிரபு அடுத்து இயக்கும் புதிய படம் என்சி22. இப்படத்தில் நாக சைதன்யா கதாநாயகனாக நடிக்கிறார். தற்காலிகமாக 'என்சி22' என பெயரிடப்பட்டுள்ள இப்படத்தை ஸ்ரீநிவாஸா சித்தூரி தயாரிக்கவுள்ளார்.


    என்சி 22

    தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் உருவாகும் இந்த படத்தில் நாக சைதன்யாவுக்கு ஜோடியாக கீர்த்தி ஷெட்டி நடிக்கிறார். மேலும், இப்படத்திற்கு இந்திய திரையுலகின் முன்னணி இசையமைப்பாளராக வலம் வரும் இளையராஜா மற்றும் யுவன் சங்கர் ராஜா இசையமைக்கின்றனர்.


    என் சி 22 படப்பிடிப்பு

    இந்நிலையில், இப்படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது. அதன்படி, என்சி22 படத்தின் படப்பிடிப்பு மைசூரில் முழு வீச்சுடன் நடைபெற்று வருகிறது. இதனை வெங்கட் பிரபு தனது சமூக வலைதளப் பக்கத்தில் புகைப்படங்களை பகிர்ந்து தெரிவித்துள்ளார்.


    • 'விக்டிம்' ஆந்தாலஜி படம் ஆகஸ்ட் 5-ஆம் தேதி ஓடிடியில் வெளியாகவுள்ளது.
    • இதன் டிரைலர் தற்போது வெளியாகி சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது

    பா.ரஞ்சித், வெங்கட்பிரபு, சிம்புதேவன், எம்.ராஜேஷ் ஆகியோர் இயக்கத்தில் உருவாகியுள்ள ஆந்தாலஜி படம் 'விக்டிம்'. இதில், அமலாபால், பிரியா பவானி சங்கர், குரு சோமசுந்தரம், பிரசன்னா, தம்பி ராமையா, கலையரசன், நாசர் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கின்றனர்.


    விக்டிம் போஸ்டர்

    இயக்குனர் வெங்கட்பிரபுவின் ப்ளாக் டிக்கெட் கம்பெனி மற்றும் ஆக்ஸஸ் ஃபிலிம் பேக்டரி இணைந்து தயாரித்துள்ள இந்த ஆந்தாலஜி படத்தில் இயக்குனர் எம்.ராஜேஷ், 'மிரேஜ்' கதையையும் இயக்குனர் சிம்பு தேவன் 'கொட்டை பாக்கு வத்தலும் மொட்டை மாடி சித்தரும்' என்ற கதையும் பா.ரஞ்சித், 'தம்மம்' மற்றும் வெங்கட்பிரபு 'கன்ஃபெஷன்' ஆகிய கதைகளை இயக்கியுள்ளனர்.

    நான்கு கதைக்களத்தை மையமாக வைத்து உருவாகியுள்ள 'விக்டிம்' ஆந்தாலஜி படம் ஆகஸ்ட் 5-ஆம் தேதி சோனி லைவ் ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளது.

    இந்நிலையில், இப்படத்தின் டிரைலர் தற்போது வெளியாகியுள்ளது. டிரைலரை பொறுத்தவரை தனக்கே உரிய பாணியில் இயக்குனர்கள் கதைகளை உருவாக்கியுள்ளனர். இந்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.


    • 'மாநாடு', 'மன்மத லீலை' வெற்றியைத் தொடர்ந்து இயக்குனர் வெங்கட் பிரபு, நாக சைதன்யா நடிக்கும் புதிய படத்தை இயக்க ஆயத்தமாகி வருகிறார்.
    • வெங்கட் பிரபு இயக்கத்தில் அஜித், விஜய் இணையவுள்ளதாக இசையமைப்பாளர் கங்கை அமரன் கூறியுள்ளார்.

    வெங்கட் பிரபுவின் இயக்கத்தில் வெளியான 'மாநாடு', 'மன்மத லீலை' போன்ற படங்கள் வெற்றியடைந்ததை அடுத்து தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகரான நாக சைதன்யா நடிக்கும் புதிய படத்தை இயக்க ஆயத்தமாகி வருகிறார்.

    தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களான அஜித், விஜய் இணையும் புதிய படத்தை வெங்கட் பிரபு இயக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அஜித் குமாரின் மங்காத்தா படப்பிடிப்பின் போது நடிகர் விஜய் படப்பிடிப்பு தளத்திற்கு சர்ப்ரைஸ் விசிட் செய்தார். இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலானது.

    அஜித் - வெங்கட்பிரபு - விஜய் 

    அஜித் - வெங்கட்பிரபு - விஜய் 


    இதையடுத்து ரசிகர்கள் அஜித்தும் விஜய்யும் இணைந்து நடிக்க வேண்டும் என விருப்பம் தெரிவித்து வந்தனர். இந்நிலையில் இயக்குனர் வெங்கட்பிரபு இயக்கத்தில் அஜித், விஜய் இருவரும் இணைந்து நடிக்க ஒரு கதையை உருவாக்கி உள்ளதாகவும், இப்படம் பான் இந்தியா படமாக உருவாக இருப்பதாகவும் இது குறித்த அறிவிப்பு விரைவில் அதிகாரபூர்வமாக வெளியாகும் எனவும் கங்கை அமரன் தெரிவித்துள்ளார். இந்த அறிவிப்பால் அஜித், விஜய் ரசிகர்கள் உற்சாகத்தில் ஆழ்ந்துள்ளனர்.

    ×