என் மலர்
நீங்கள் தேடியது "ஹன்சிகா"
- எங்கேயும் காதல், மாப்பிள்ளை, வேலாயுதம், சிங்கம் 2, பிரியாணி, அரண்மனை உள்ளிட்ட பல படங்களில் நடித்து பிரபலமடைந்தவர் ஹன்சிகா.
- தனது திருமணத்தை உறுதி செய்து நடிகை ஹன்சிகா இணையத்தில் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.
தமிழில் எங்கேயும் காதல், மாப்பிள்ளை, வேலாயுதம், சிங்கம் 2, பிரியாணி, அரண்மனை உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ள ஹன்சிகா தெலுங்கிலும் முன்னணி கதாநாயகியாக வலம் வந்தார். தற்போது தமிழில் 4 படங்கள், தெலுங்கில் 2 படங்கள் கைவசம் வைத்து நடித்து வருகிறார்.
கடந்த 2020-ல் ஹன்சிகாவும், சோகேல் என்பவரும் இணைந்து புதிய தொழில் ஒன்றை தொடங்கினார்கள். அப்போது இருவரும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. சோகேலும் ஹன்சிகாவும் காதலித்து வருவதாகவும் விரைவில் இருவரும் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்து இருப்பதாகவும் தகவல் வெளியானது.

இந்நிலையில் ஹன்சிகாவிடம் சோகேல் தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு பூங்கொத்து கொடுத்து தன்னுடைய காதலை வெளிப்படுத்தும் புகைப்படங்களை ஹன்சிகா தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இந்த தம்பதியினருக்கு திரையுலகினர்கள் ரசிகர்கள் என பலரும் வாழ்த்து தெரிவித்து பதிவிட்டு வருகின்றனர்.
இவர்களின் திருமணம் வருகிற டிசம்பர் மாதம் 04-ம் தேதி நடைபெறவுள்ளதாக கூறப்படுகிறது.
- நடிகை ஹன்சிகா சமீபத்தில் தொழிலதிபரும் நெருங்கிய நண்பருமான சோகேலை திருமணம் செய்யவுள்ளதை அறிவித்திருந்தார்.
- இவர்களின் திருமணம் வருகிற டிசம்பர் 4-ஆம் தேதி நடைபெறவுள்ளதாக கூறப்பட்டது.
தமிழில் எங்கேயும் காதல், மாப்பிள்ளை, வேலாயுதம், சிங்கம் 2, பிரியாணி, அரண்மனை உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ள ஹன்சிகா தெலுங்கிலும் முன்னணி கதாநாயகியாக வலம் வந்தார். தற்போது தமிழில் 4 படங்கள், தெலுங்கில் 2 படங்கள் கைவசம் வைத்து நடித்து வருகிறார்.

ஹன்சிகா - சோகேல்
இவர் சமீபத்தில் தன்னுடைய நெருங்கிய நண்பரும் தொழிலதிபருமான சோகேலை திருமணம் செய்யவுள்ளதை சமூக வலைதளத்தில் புகைப்படங்களை வெளியிட்டு உறுதிப்படுத்தியிருந்தார். மேலும், இவர்களது திருமணம் வருகிற டிசம்பர் மாதம் 04-ம் தேதி நடைபெறவுள்ளதாக கூறப்பட்டது.

சோகேல் திருமணத்தில் ஹன்சிகா
இந்நிலையில், சோகேலுக்கும் ஹன்சிகாவின் தோழிக்கும் ஏற்கனவே திருமணமாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதாவது, தொழிலதிபர் சோகேல் கடந்த 2016-ஆம் ஆண்டு ஹன்சிகாவின் தோழி ரிங்கு என்பவரை திருமணம் செய்ததாகவும் பின்னர் கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் விவாகரத்து பெற்றதாகவும் செய்தி பரவி வருகிறது. அதுமட்டுமல்லாமல் இவர்களின் திருமண நிகழ்ச்சியில் நடிகை ஹன்சிகா பங்கேற்றுள்ளார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.
- தமிழ் திரையுலகின் முன்னணி நடிகையான ஹன்சிகாவின் திருமணம் டிசம்பர் 4-ந் தேதி நடைபெறவுள்ளது.
- திருமணத்தை ஒளிபரப்பும் உரிமையை பெரிய தொகைக்கு ஓ.டி.டி.க்கு ஹன்சிகா விற்றுவிட்டதாக இணைய தளங்களில் தகவல் பரவி வருகிறது.
தமிழில் விஜய், சூர்யா, கார்த்தி, தனுஷ், விஷால், ஜெயம் ரவி, உதயநிதி ஸ்டாலின், சிம்பு, சிவகார்த்திகேயன் உள்ளிட்ட பலருடன் நடித்து முன்னணி கதாநாயகியாக உயர்ந்த ஹன்சிகா, தெலுங்கு படங்களிலும் நடித்து இருக்கிறார். ஹன்சிகாவுக்கு தற்போது திருமணம் முடிவாகி உள்ளது.

தனது நீண்ட கால நண்பரும், தொழில் பங்குதாரருமான மும்பையை சேர்ந்த சோஹேல் கதுரியா என்பவரை மணக்கிறார். இவர்கள் திருமணம் அடுத்த மாதம் (டிசம்பர்) 4-ந் தேதி ஜெய்ப்பூரில் உள்ள 450 ஆண்டுகள் பழமையான அரண்மனையில் நடக்க உள்ளது. திருமணத்தில் நெருங்கிய உறவினர்கள், நண்பர்கள் கலந்து கொள்கிறார்கள். ஹன்சிகாவின் திருமணத்தை ஒளிபரப்பும் உரிமையை பெற பிரபல ஓ.டி.டி. தளம் விலை பேசி வந்தது.

இந்நிலையில் பெரிய தொகைக்கு ஓ.டி.டி.யில் திருமணத்தை ஒளிபரப்பும் உரிமையை ஹன்சிகா விற்றுவிட்டதாக இணைய தளங்களில் தகவல் பரவி வருகிறது. இவர்களின் திருமணம் ஒளிபரப்பாகவுள்ளதால் ரசிகர்கள் பெரும் எதிர்பார்ப்பில் உள்ளது.
ஏற்கனவே நயன்தாராவும் தனது திருமண ஒளிபரப்பு உரிமையை ஓ.டி.டி.க்கு விற்று இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
- ஹன்சிகா இயக்குனர் ஆர்.கண்ணன் இயக்கத்தில் புதிய படத்தில் நடித்து வருகிறார்.
- இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் பூஜையுடன் தொடங்கியது.
தமிழ் திரையுலகில் அறிமுகமான குறுகிய காலத்திலேயே, விஜய், சூர்யா, தனுஷ், சிம்பு போன்ற பிரபலங்களுக்கு ஜோடியாக நடித்து முன்னணி ஹீரோயினாக வலம் வந்தவர் ஹன்சிகா. 'சின்ன குஷ்பு' என்று அன்போடு அழைக்கப்பட்ட ஹன்சிகா பட வாய்ப்புகள் குறைய தொடங்கியதும், தற்காலிகமாக சினிமாவுக்கு சிறிது காலம் ஓய்வு கொடுத்தார்.

ஹன்சிகா
சிறிய இடைவெளிக்குப் பிறகு 'மஹா' என்ற படத்தில் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். கலவையான விமர்சனம் பெற்ற இப்படத்தில் சிம்பு கவுரவ வேடத்தில் நடித்திருந்தார். தற்போது ஆர்.கண்ணன் இயக்கும் புதிய திரைப்படத்தில் ஹன்சிகா நடிக்கிறார். இப்படத்தில் முதன் முறையாக இரட்டை வேடத்தில் ஹன்சிகா நடிக்கிறார். இதில் மெட்ரோ சிரிஷ், மயில்சாமி, தலைவாசல் விஜய், பிரிகிடா உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.

சாமி தரிசனம் செய்த ஹன்சிகா மற்றும் ஆர்.கண்ணன்
எமோஷனல், ஹாரரை அடிப்படையாக கொண்ட காமெடி த்ரில்லராக உருவாக இருக்கும் இப்படத்தை இயக்குனர் ஆர்.கண்ணன் தனது மசாலா பிக்ஸ் பேனரில் புரொடக்ஷன் நம்பர் 10 ஆக தயாரிக்கிறார். சமீபத்தில் இப்படத்தின் பூஜையுடன் படப்பிடிப்பு தொடங்கியது. இப்படத்தின் படப்பிடிப்பு இடைவிடாமல் நடத்தப்பட்டு 3 மாதங்களில் முடிவடையும் என்று படக்குழு தெரிவித்துள்ளது.
இந்நிலையில் ஹன்சிகா மற்றும் இயக்குனர் ஆர்.கண்ணன் காளிகாம்பாள் கோவிலில் சாமி தரிசனம் செய்துள்ளனர். இதுதொடர்பான புகைப்படங்கள் வெளியாகி வைரலாகி வருகிறது.
- நடிகை ஹன்சிகா, தொழில் அதிபர் சோகைல் கதுரியா என்பவரை திருமணம் செய்துக் கொள்ளவுள்ளார்.
- இவர்களின் திருமண நிகழ்ச்சிகள் 3 நாட்களாக கோலாகலமாக ஜெய்ப்பூர் அரண்மனையில் களைகட்டி வருகின்றன.
தமிழில் அதிக படங்களில் கதாநாயகியாக நடித்துள்ள ஹன்சிகா, தொழில் அதிபர் சோகைல் கதுரியா என்பவரை திருமணம் செய்து கொள்ள இருப்பதாக சமீபத்தில் அறிவித்தார். பிரான்சில் ஈபிள் டவர் முன்னால் நின்று சோகைல் கதுரியா தன்னிடம் காதலை வெளிப்படுத்தும் புகைப்படத்தையும் ஹன்சிகா பகிர்ந்து இருந்தார். இவர்கள் திருமணம், 450 ஆண்டுகள் பழமையான புகழ்பெற்ற ஜெய்ப்பூர் அரண்மனையில் நாளை (டிசம்பர்) 4-ந் தேதி நடக்க உள்ளது.

ஹன்சிகா - சோகைல் கதுரியா
இதனையொட்டி 3 நாட்களாக கோலாகலமாக ஜெய்ப்பூர் அரண்மனையில் திருமண நிகழ்ச்சிகள் களைகட்டி வருகின்றன. வியாழனன்று நடைபெற்ற மெஹந்தி ஃபங்ஷன் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி ரசிகர்களை சந்தோஷத்தில் ஆழ்த்தின. மருதாணி சிவந்த கையுடன் ஹன்சிகா அழகாக போஸ் கொடுத்த புகைப்படங்கள் வெளியாகின.

ஹன்சிகா - சோகைல் கதுரியா
இதைத்தொடர்ந்து இவருடைய திருமண சடங்குகள் தற்போது துவங்கி உள்ள நிலையில், இவர்களுடைய திருமண கொண்டாட்டம் சுபி இசை கச்சேரியுடன் தொடங்கியுள்ளது. ஹன்சிகா மணமகள் கோலத்தில் இருக்கும் வீடியோ இணையத்தில் வைராலகி வருகிறது. இதில் ஹன்சிகா மணமகள் உடையில் சோஹைல் கதுரியாவுடன் நடந்து வருகிறார்.
- நடிகை ஹன்சிகா, தொழில் அதிபர் சோகைல் கதுரியா என்பவரை திருமணம் செய்துக் கொள்ளவுள்ளார்.
- இவர்களின் திருமண நிகழ்ச்சிகள் 3 நாட்களாக கோலாகலமாக ஜெய்ப்பூர் அரண்மனையில் களைகட்டி வருகின்றன.
தமிழில் முன்னணி நடிகையான ஹன்சிகா, தொழில் அதிபர் சோகைல் கதுரியா என்பவரை திருமணம் செய்து கொள்ளவுள்ளார். இவர்களது திருமணம், 450 ஆண்டு பழமையான ஜெய்ப்பூர் அரண்மனையில் டிசம்பர் 4-ந்தேதி (இன்று) நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது.
இதையடுத்து புகழ் பெற்ற ஜெய்ப்பூர் அரண்மனையில் கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு திருமண நிகழ்ச்சிகள் தொடங்கியது. இதன் மெஹந்தி நிகழ்ச்சி புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகின. மருதாணி வைக்கப்பட்ட சிவந்த கைகளுடன் ஹன்சிகா போஸ் கொடுத்த புகைப்படம் வெளியானது.

அதன்பின் திருமண சடங்குகள் தொடங்கியது. இதில் இசை கச்சேரி கொண்டாட்டம் நடந்தது. மணக்கோலத்தில் நடிகை ஹன்சிகா-சோகைல் கதுரியா நடந்து வரும் வீடியோ இணைய தளத்தில் வைரல் ஆனது. மணமகள் உடையில் உள்ள ஹன்சிகா, சோகைல் கதுரியாவுடன் நடந்து வந்தார். பின்னர் இசைக்கு ஏற்ப உற்சாகத்துடன் ஹன்சிகா நடனமாடினார்.
நேற்று மாலை போலோ போட்டிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதை காண ஹன்சிகா, சோகைல் தங்களது குடும்பத்தினர், நண்பர்களுடன் சென்றனர். இருவரும் வெள்ளை நிற உடையில் பழமையான காரில் போலோ மைதா னத்துக்கு சென்றனர். பின்னர் இரவில் திருமண கொண்டாட்ட நிகழ்ச்சிகள் நடந்தது.

ஹன்சிகா-சோகைல் கதுரியா திருமணம் இன்று மாலை ஜெய்ப்பூர் அரண்மனையில் உள்ள முண்டோடா கோட்டையில் நடக்கிறது. முன்னதாக இன்று காலை ஹல்தி விழா தொடங்கியது. இதில் மணமக்கள் குடும்பத்தினர், நண்பர்கள் கலந்து கொண்டனர்.
- நடிகை ஹன்சிகா, தொழில் அதிபர் சோகைல் கதுரியா என்பவரை காதலித்து வந்தார்.
- இவர்களது திருமணம் ஜெய்ப்பூர் அரண்மனையில் நடைபெற்றது.
தமிழில் முன்னணி நடிகையான ஹன்சிகா, தொழில் அதிபர் சோகைல் கதுரியா என்பவரை திருமணம் செய்து கொள்ளவுள்ளார். இவர்களது திருமணம், 450 ஆண்டு பழமையான ஜெய்ப்பூர் அரண்மனையில் டிசம்பர் 4-ந்தேதி (இன்று) நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது.

இதையடுத்து புகழ் பெற்ற ஜெய்ப்பூர் அரண்மனையில் கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு திருமண நிகழ்ச்சிகள் தொடங்கியது. இதன் மெஹந்தி நிகழ்ச்சி புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகின. மருதாணி வைக்கப்பட்ட சிவந்த கைகளுடன் ஹன்சிகா போஸ் கொடுத்த புகைப்படம் வெளியானது.

அதன்பின் திருமண சடங்குகள் தொடங்கியது. இதில் இசை கச்சேரி கொண்டாட்டம் நடந்தது. மணக்கோலத்தில் நடிகை ஹன்சிகா-சோகைல் கதுரியா நடந்து வரும் வீடியோ இணைய தளத்தில் வைரல் ஆனது.

இதையடுத்து ஹன்சிகா-சோகைல் கதுரியா திருமணம் நேற்று மாலை ஜெய்ப்பூர் அரண்மனையில் உள்ள முண்டோடா கோட்டையில் நடந்தது. இதில் நெருங்கிய நண்பர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்கள் மட்டுமே கலந்துகொண்டனர். இவர்களது திருமண புகைப்படங்கள் மற்றும் வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.
- நடிகை ஹன்சிகா - சோகைல் கதுரியா திருமணம் கடந்த டிசம்பர் 4-ஆம் தேதி நடைபெற்றது.
- இவர்களது திருமணத்தில் நண்பர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்கள் மட்டுமே கலந்துகொண்டனர்.
தமிழில் முன்னணி நடிகையான ஹன்சிகா, தொழில் அதிபர் சோகைல் கதுரியா என்பவரை கடந்த டிசம்பர் 4-ஆம் தேதி திருமணம் செய்து கொண்டார். இவர்களது திருமணம் 450 ஆண்டு பழமையான ஜெய்ப்பூர் அரண்மனையில் உள்ள முண்டோடா கோட்டையில் நடந்தது. இதில் நெருங்கிய நண்பர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்கள் மட்டுமே கலந்துகொண்டனர்.

ஹன்சிகா - சோகைல் கதுரியா
இந்நிலையில், நடிகை ஹன்சிகா திருமண புகைப்படங்களை தனது சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார். இந்த புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது. மேலும், இவர்களுக்கு திரைப்பிரபலங்கள், ரசிகர்கள் என பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
- தமிழில் முன்னணி கதாநாயகியாக வலம் வந்த ஹன்சிகா கடந்த டிசம்பர் 4-ந் தேதி தொழில் அதிபர் சொஹைல் கத்தூரியாவை திருமணம் செய்து கொண்டார்.
- ஹன்சிகா ஆதரவற்ற குழந்தைகளை தத்தெடுத்தும் வளர்த்து வருகிறார்.
தமிழில் முன்னணி கதாநாயகியாக வலம் வந்த ஹன்சிகா கடந்த டிசம்பர் 4-ந் தேதி தொழில் அதிபர் சொஹைல் கத்தூரியாவை திருமணம் செய்து கொண்டார். ஆதரவற்ற குழந்தைகளை தத்தெடுத்தும் வளர்க்கிறார். ஹன்சிகா அளித்துள்ள பேட்டியில், ''பண்டிகை நாட்களில் மற்றவர்களுக்கு உதவ வேண்டும் என்று எனது அம்மா சிறுவயதிலேயே எனக்கு சொல்லி கொடுத்து இருக்கிறார். நாம் நல்லது செய்தால் நமக்கு நல்லது நடக்கும் என்றும் அவர் கூறுவார். அதனால்தான் நான் கதாநாயகி ஆன பிறகு குழந்தைகளை தத்தெடுத்துக் கொண்டேன்.

இப்போது 31 குழந்தைகள் என்னிடம் இருக்கிறார்கள். அவர்களை தத்தெடுத்து வளர்ப்பது மகிழ்ச்சியாக உள்ளது. பொங்கலை முன்னிட்டு அந்த குழந்தைகளுக்கு புத்தாடை எடுத்துக்கொடுத்தேன். குழந்தைகளின் சந்தோஷத்தை வார்த்தைகளால் சொல்லவே முடியாது.

கடவுளின் ஆசி இருப்பதால்தான் என் வாழ்க்கை நல்லபடியாக போய்க் கொண்டிருக்கிறது. திருமணமான பிறகு சினிமாவுக்கு கொஞ்சம் ஓய்வு கொடுத்தேன். சமீபத்தில் ஒரு விளம்பர படப்பிடிப்பில் பங்கேற்றேன். 20-ந் தேதி முதல் இடைவெளி இல்லாமல் படப்பிடிப்பில் ஈடுபட போகிறேன். கிட்டத்தட்ட ஏழு படங்களில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறேன். இரண்டு வெப் தொடர்கள் உள்ளன. எனவே நான் மிகவும் பிசி'' என்றார்.
- தமிழில் முன்னணி கதாநாயகியாக வலம் வந்த ஹன்சிகா கடந்த டிசம்பர் 4-ந் தேதி தொழில் அதிபர் சொஹைல் கத்தூரியாவை திருமணம் செய்து கொண்டார்.
- இவர்களது திருமணத்தில் நண்பர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்கள் மட்டுமே கலந்துகொண்டனர்.
தமிழில் முன்னணி நடிகையான ஹன்சிகா, தொழில் அதிபர் சோகைல் கதுரியா என்பவரை கடந்த டிசம்பர் 4-ஆம் தேதி திருமணம் செய்து கொண்டார். இவர்களது திருமணம் 450 ஆண்டு பழமையான ஜெய்ப்பூர் அரண்மனையில் உள்ள முண்டோடா கோட்டையில் நடந்தது. இதில் நெருங்கிய நண்பர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்கள் மட்டுமே கலந்துகொண்டனர்.

ஹன்சிகா -சோகைல் கதுரியா
இந்நிலையில், நடிகை ஹன்சிகாவின் திருமணம் 'லவ் ஷாதி டிராமா' என்ற தலைப்பில் டிஸ்னி பிளஸ் ஹாட் ஸ்டார் ஓடிடி தளத்தில் விரைவில் வெளியாகவுள்ளது. இதனை ஹன்சிகா தனது சமூக வலைதளத்தில் வீடியோ ஒன்றை பகிர்ந்து தெரிவித்துள்ளார்.
What is a shaadi without a little drama? #HotstarSpecials #HansikasLoveShaadiDrama coming soon!
— Hansika (@ihansika) January 18, 2023
#Uttam_Domale @nowme_datta @sajeed_a @Avinaash_Offi @ajaym7
@DisneyPlusHS pic.twitter.com/PbebMagivN
- இயக்குனர் ராஜு துசா இயக்கத்தில் ஹன்சிகா நடித்துள்ள திரைப்படம் 'ஒன்றல்ல ஐந்தே நிமிடம்'.
- இப்படம் சிங்கிள் ஷாட்டில் எடுக்கப்பட்ட திரைப்படம் ஆகும்.
இயக்குனர் ராஜு துசா எழுதி இயக்கியுள்ள திரைப்படம் 'ஒன்றல்ல ஐந்தே நிமிடம்'. இப்படத்தை ருத்ரன்ஷ் செல்லுலாய்ட்ஸ் சார்பில் பொம்மக் சிவா தயாரித்துள்ளார். ஹன்சிகா நடிப்பில் சிங்கிள் ஷாட்டில் எடுக்கப்பட்ட இந்த படத்தின் கால அளவு ஒரு மணி நேரம் மற்றும் நாற்பத்தைந்து நிமிடங்கள் ஆகும். இந்த நேரத்தை ஒரே ஷாட்டில் சுவாரசியமான முறையில் படமாக்கியிருக்கிறார்கள்.

ஒன்றல்ல ஐந்தே நிமிடம்
சைக்கலாஜிக்கல் த்ரில்லராக உருவாக்கியிருக்கும் இந்தப் படத்துக்கு சாம் சிஎஸ் இசையமைத்துள்ளார். கிஷோர் பாய்தாபு ஒளிப்பதிவு மேற்கொண்டுள்ளார். 'ஒன்றல்ல ஐந்தே நிமிடம்' படத்தின் டிரைலரை விரைவில் வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது. இப்படம் தெலுங்கு மற்றும் பிற மொழிகளில் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.
- நடிகை ஹன்சிகா தொழில் அதிபர் சோகைல் கதுரியாவை சமீபத்தில் திருமணம் செய்து கொண்டார்.
- இவரின் திருமணம் 'லவ் ஷாதி டிராமா' என்ற தலைப்பில் வெளியாகவுள்ளது.
தமிழில் முன்னணி நடிகையான ஹன்சிகா, தொழில் அதிபர் சோகைல் கதுரியா என்பவரை கடந்த டிசம்பர் 4-ஆம் தேதி திருமணம் செய்து கொண்டார். இவர்களது திருமணம் 450 ஆண்டு பழமையான ஜெய்ப்பூர் அரண்மனையில் உள்ள முண்டோடா கோட்டையில் நடந்தது. இதில் நெருங்கிய நண்பர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்கள் மட்டுமே கலந்துகொண்டனர்.

ஹன்சிகா
நடிகை ஹன்சிகாவின் திருமணம் 'லவ் ஷாதி டிராமா' என்ற தலைப்பில் டிஸ்னி பிளஸ் ஹாட் ஸ்டார் ஓடிடி தளத்தில் வருகிற பிப்ரவரி 10-ஆம் தேதி வெளியாகவுள்ளது. இந்நிலையில் இதன் டீசர் தற்போது வெளியாகியுள்ளது. இதனை நடிகை ஹன்சிகா தனது சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
Lots of Love, Lots of Happiness and a bit of Drama… #HotstarSpecials #HansikasLoveShaadiDrama Streams from 10th Feb only on @disneyplushotstar@ihansika @Avinaash_Offi #Uttam_Domale @nowme_datta @sajeed_a @ajaym7 #Hansika #HansikaMotwani pic.twitter.com/tdPGcYhkr3
— Hansika (@ihansika) January 30, 2023