என் மலர்
நீங்கள் தேடியது "Ilaiyaraaja"
- இசையமைப்பாளரும், எம்.பி.யுமான இளையராஜா திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் ரங்கநாதர் சவாமி கோவிலில் சாமி தரிசனம் செய்தார்.
- அவருக்கு ஸ்ரீரங்கம் கோவில் நிர்வாகம் சார்பில் இளையராஜாவுக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.
திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் ரங்கநாதர் சவாமி கோவிலில், இசையமைப்பாளரும், எம்.பி.யுமான இளையராஜா சாமி தரிசனம் செய்தார். அங்குள்ள ரங்கநாதர், சக்கரத்தாழ்வார் சன்னதிகளுக்குச் சென்று வழிபட்டார். முன்னதாக கோவில் நிர்வாகம் சார்பில் இளையராஜாவுக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

இளையராஜா
சமீபத்தில் இளையராஜாவின் இசையில் வெளியான விடுதலை திரைப்படத்தின் பாடல்கள் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. தொடர்ந்து இளையராஜாவின் இசையில் கஸ்டடி, மியூசிக் ஸ்கூல் உள்ளிட்ட படங்கள் வெளியாகி இருப்பது குறிப்பிடத்தக்கது.
- சில தவிர்க்க முடியாத காரணத்தினால் தன்னால் வர இயலவில்லை என ஜேசுதாஸ் வருந்தினார்.
- பாடலை முழுவதும் கேட்ட ஜேசுதாஸ் கண்கள் குளமானது.
அன்று இளையராஜாவின் ஸ்டுடியோவில் ஒரு ரெகார்டிங்.... பாடல் எல்லாம் தயார். கே.ஜே.ஜேசுதாஸ் பாடுவதாக இருந்தது. இளையராஜா முதல் எல்லா இசை கலைஞர்களும் வந்தாகி விட்டது. ஆனால் ஜேசுதாசை காணோம். சரி, அவர் வரும் வரையில் ஒரு ட்ரையல் பார்ப்போம் என முடிவு செய்து, இளையராஜா அந்த பாடலை பாடி ரெகார்டிங் செய்து பார்த்தார்.
பாடல் நன்றாக வந்திருந்தது. நீண்ட நேரம் ஆகியும் ஜேசுதாஸ் வரவில்லை. பிறகு ஒரு போன் வந்தது.. சில தவிர்க்க முடியாத காரணத்தினால் தன்னால் வர இயலவில்லை என ஜேசுதாஸ் வருந்தினார்.
இளையராஜா அதை பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. அடுத்த நாள் ரெகார்டிங்கை வைத்துகொள்ளலாம் என கூறினார்.
அடுத்த நாள், ஜேசுதாஸ் ஸ்டுடியோவுக்கு வந்தார். முன்தினம் தான் பாடிய பாடலை அவரிடம் இளையராஜா கொடுத்து, "இது தான் நீங்கள் பாட வேண்டிய பாடல், இதை ஒரு முறை கேட்டுக்கொள்ளுங்கள்" என கூறி சென்றார்.
பாடலை முழுவதும் கேட்ட ஜேசுதாஸ் கண்கள் குளமானது. நேராக இளையராஜாவிடம் சென்றார். இந்த பாடலை என்னால் பாட முடியாது என்று கூறினார். அதிர்ச்சி அடைந்த இளையராஜாவிடம் ஜேசுதாஸ் கூறியது இது தான்...
"இந்த அளவுக்கு என்னால் உணர்ச்சிபூர்வமாக இந்த பாடலை பாட முடியுமா என்று தெரியவில்லை. இந்த பாடல் மக்கள் மனதில் நிலைத்து நிற்கவேண்டும் என்றால், அது உங்கள் குரலில் இருந்தால் மட்டுமே முடியும்" என்று கூறினார்.
இளையராஜா எவ்வளவோ வற்புறுத்தியும் அந்த பாடலை பாட மறுத்து, இளையராஜாவின் குரலில் அந்த பாடலை வெளிவரவைத்தார் கே.ஜே.ஜேசுதாஸ்.
அந்த பாடல்.., "ஜனனி ஜனனி ஜகம் நீ அகம் நீ".
- இசையமைப்பாளர் இளையராஜா இன்று தனது 80வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார்.
- இவருக்கு திரைப்பிரலங்கள், அரசியல் பிரமுகர்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
இந்திய திரையுலகின் முன்னணி இசையமைப்பாளரான இளையராஜா இன்று தனது 80வது பிறந்தநாளை கொண்டி வருகிறார். இவருக்கு திரைப்பிரலங்கள், அரசியல் பிரமுகர்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இவரது பிறந்தநாள் விழா இன்று இளையராஜாவின் இல்லத்தில் கொண்டாடப்பட்டு வருகிறது.
இந்நிலையில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கோடம்பாக்கத்தில் உள்ள இளையராஜாவின் இல்லத்திற்கு நேரில் சென்று அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். மேலும் மூத்த அமைச்சர் கே.என்.நேரு உடன் சென்று வாழ்த்து தெரிவித்துள்ளார்.
அன்னக்கிளி படத்தின் மூலம் திரையுலகிற்கு இளையராஜா இசையமைப்பாளராக அறிமுகமானார் என்பது குறிப்பிடத்தக்கது.
காலைப் பொழுது இனிதாய் மலர - பயணங்கள் இதமாய் அமைய - மகிழ்ச்சிகள் கொண்டாட்டமாய் மாற - துன்பங்கள் தூசியாய் மறைய - இரவு இனிமையாய்ச் சாய தமிழ்நாட்டின் தேர்வு 'இசைஞானி' இளையராஜா!
— M.K.Stalin (@mkstalin) June 2, 2023
அவர் இசைக்கருவிகளை மீட்டுவதில்லை; நம் இதயங்களை வருடுகிறார். அவரே உணர்வாகி நம்முள் உருகுகிறார்.… pic.twitter.com/Os1dE1UJKH
- இசையமைப்பாளர் இளையராஜா இன்று தனது 80வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார்.
- இவருக்கு திரைப்பிரலங்கள், அரசியல் பிரமுகர்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
இசையமைப்பாளர் இளையராஜா இன்று தனது 80வது பிறந்தநாளை கொண்டி வருகிறார். இவருக்கு திரைப்பிரலங்கள், அரசியல் பிரமுகர்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இவரது பிறந்தநாள் விழா இன்று இளையராஜாவின் இல்லத்தில் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கோடம்பாக்கத்தில் உள்ள இளையராஜாவின் இல்லத்திற்கு நேரில் சென்று அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
- இசையமைப்பாளர் இளையராஜா இன்று தனது 80வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார்.
- நடிகரும் முன்னாள் எம்.பியுமான ராமராஜன் நேரில் சென்று இளையராஜாவிடம் ஆசிபெற்றார்.
அன்னக்கிளி படத்தின் மூலம் திரையுலகிற்கு இசையமைப்பாளராக அறிமுகமாகி தனது இசையின் மூலம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தவர் இளையராஜா. இவரது பாடல்கள் இன்றளவும் ரசிகர்கள் வாழ்க்கையில் பிணைந்திருக்கும் அளவிற்கு கால் ஊன்றியிருக்கிறது.
இளையராஜா இன்று தனது 80வது பிறந்தநாளை கொண்டி வருகிறார். இவருக்கு திரைப்பிரலங்கள், அரசியல் பிரமுகர்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இளையராஜாவின் பிறந்தநாள் விழா இன்று கோடம்பாக்கத்தில் உள்ள அவரது இல்லத்தில் கொண்டாடப்பட்டு வருகிறது. அவரை தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று வாழ்த்தி இருந்தார்.

இந்நிலையில் இளையராஜாவின் இல்லத்திற்கு நடிகரும் முன்னாள் எம்.பியுமான ராமராஜன் நேரில் சென்று வாழ்த்து தெரிவித்து ஆசிபெற்றார். அதன்பின்னர் செய்தியாளர்களை சந்தித்த ராமராஜன், ஒவ்வொரு பிறந்தநாளிலும் அண்ணன் இளையராஜாவை சந்தித்து ஆசிர்வாதம் வாங்கிக் கொண்டிருக்கிறேன். அவருடைய ஆசிர்வாதம் என்றும் எனக்கு இருக்கும். உலகம் முழுவதும் மயங்கக்கூடிய அளவிற்கு சுவையான பாடல்களை கொடுத்திருக்கிறார்.

இன்று ராமராஜன் என்று மக்கள் பேசுகிறார்கள் என்றால் அதற்கு முழு காரணம் இளையராஜா அண்ணன் எனக்கு அளித்த பாடல்கள். 23 வாருடங்களுக்கு பிறகு மீண்டும் சாமானியன் படத்தின் மூலம் அவருடன் இணைந்திருக்கிறேன். அடுத்தடுத்த படங்களிலும் அவர் எனக்கு இசையமைப்பார். எல்லா படங்களுக்கும் அவர் நன்றாக இசையமைத்துள்ளார். ஆனால் என் படங்களுக்கு பெண்கள் விரும்பும் படி கிராமத்து சாயல் கொண்ட பாடல்களை கொடுத்தார். இன்னாள் எம்.பி அண்ணன் இளையராவை முன்னாள் எம்.பி. ராமராஜன் வாழ்த்துவது எனக்கு மிக பெரிய பாக்கியமாக கருதுகிறேன் என்றார்.
தற்போது ராமராஜன் நடிப்பில் உருவாகி வரும் சாமானியன் படத்திற்கு இளையராஜா இசையமைத்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
- இளையராஜா இன்று தனது 80-வது பிறந்தநாளை கொண்டி வருகிறார்.
- இவருக்கு திரைப்பிரலங்கள், அரசியல் பிரமுகர்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
அன்னக்கிளி படத்தின் மூலம் திரையுலகிற்கு இசையமைப்பாளராக அறிமுகமாகி தனது இசையின் மூலம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தவர் இளையராஜா. இவரது பாடல்கள் இன்றளவும் ரசிகர்கள் வாழ்க்கையில் பிணைந்திருக்கும் அளவிற்கு கால் ஊன்றியிருக்கிறது.
இளையராஜா இன்று தனது 80-வது பிறந்தநாளை கொண்டி வருகிறார். இவருக்கு திரைப்பிரலங்கள், அரசியல் பிரமுகர்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இளையராஜாவின் பிறந்தநாள் விழா இன்று கோடம்பாக்கத்தில் உள்ள அவரது இல்லத்தில் கொண்டாடப்பட்டு வருகிறது. அவரை தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று வாழ்த்தினார்.

இளையராஜா -கமல்ஹாசன்
இந்நிலையில், இசையமைப்பாளர் இளையராஜாவுக்கு வாழ்த்து தெரிவித்து நடிகர் கமல்ஹாசன் பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில், "திரையிசைச் சகாப்தம் ஒன்று எட்டு தசாப்தங்களைக் கடந்து நிலைத்து மகிழ்வித்துக்கொண்டிருக்கிறது. இ, ளை, ய, ரா, ஜா ஆகிய ஐந்துதான் இந்தியத் திரையிசையின் அபூர்வ ஸ்வரங்கள் என்று சொல்லத்தக்க அளவில் தன் சிம்மாசனத்தை அழுத்தமாக அமைத்துக்கொண்டவர் என் அன்புக்கும் ஆச்சரியத்துக்கும் மிக உரிய உயரிய அண்ணன் இளையராஜா. இன்று பிறந்தநாள் காணும் இசையுலக ஏகச் சக்ராதிபதியை வாழ்த்துகிறேன்" என்று பதிவிட்டுள்ளார்.
திரையிசைச் சகாப்தம் ஒன்று எட்டு தசாப்தங்களைக் கடந்து நிலைத்து மகிழ்வித்துக்கொண்டிருக்கிறது. இ, ளை, ய, ரா, ஜா ஆகிய ஐந்துதான் இந்தியத் திரையிசையின் அபூர்வ ஸ்வரங்கள் என்று சொல்லத்தக்க அளவில் தன் சிம்மாசனத்தை அழுத்தமாக அமைத்துக்கொண்டவர் என் அன்புக்கும் ஆச்சரியத்துக்கும் மிக உரிய… pic.twitter.com/0csPLNnE7P
— Kamal Haasan (@ikamalhaasan) June 2, 2023
- இளையராஜா இன்று தனது 80-வது பிறந்தநாளை கொண்டி வருகிறார்.
- இவருக்கு திரைப்பிரலங்கள், அரசியல் பிரமுகர்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
அன்னக்கிளி படத்தின் மூலம் திரையுலகிற்கு இசையமைப்பாளராக அறிமுகமாகி தனது இசையின் மூலம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தவர் இளையராஜா. இவரது பாடல்கள் இன்றளவும் ரசிகர்கள் வாழ்க்கையில் பிணைந்திருக்கும் அளவிற்கு கால் ஊன்றியிருக்கிறது.
இளையராஜா இன்று தனது 80-வது பிறந்தநாளை கொண்டி வருகிறார். இவருக்கு திரைப்பிரலங்கள், அரசியல் பிரமுகர்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இளையராஜாவின் பிறந்தநாள் விழா இன்று கோடம்பாக்கத்தில் உள்ள அவரது இல்லத்தில் கொண்டாடப்பட்டு வருகிறது. அவரை தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று வாழ்த்தினார்.

இளையராஜா -செல்வராகவன்
இந்நிலையில், இசையமைப்பாளர் இளையராஜாவுக்கு வாழ்த்து தெரிவித்து இயக்குனர் செல்வராகவன் பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில், "காலையில் எழுந்தால் ராஜா. குளிக்கும் போது ராஜா. வேலைக்கு செல்லும் போது ராஜா. மதிய உணவு ராஜா. மாலை வந்தால் ராஜா. இரவு வந்தால் ராஜா. தூங்கும் முன் ராஜா. சோகம் மற்றும் மகிழ்ச்சிக்கு ராஜா. இப்படி வாழ்க்கை என்னும் வலைப்பின்னலில் நம்மை காப்பாற்ற இறைவனால் அனுப்பி வைக்கப்பட்ட தூதுவன் ராஜா. இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்" என்று பதிவிட்டுள்ளார்.
காலையில் எழுந்தால் ராஜா. குளிக்கும் போது ராஜா. வேலைக்கு செல்லும் போது ராஜா. மதிய உணவு ராஜா. மாலை வந்தால் ராஜா. இரவு வந்தால் ராஜா. தூங்கும் முன் ராஜா.
— selvaraghavan (@selvaraghavan) June 2, 2023
சோகம் மற்றும் மகிழ்ச்சிக்கு ராஜா.
இப்படி வாழ்க்கை என்னும் வலைப்பின்னலில் நம்மை காப்பாற்ற இறைவனால் அனுப்பி வைக்கப்பட்ட தூதுவன்…
- ‘பாட்டுக்கு நான் பாடுபட்டேன், அந்தப் பாட்டுக்கள் பலவிதம் தான்’ என்று ‘கரகாட்டக்காரன்’ டைட்டில் பாடலில் சொல்லிக்கொண்டவர் இசைஞானி.
- இளையராஜாவின் இசை ஏற்படுத்தும் உணர்வு அலைகளில் எவராலும் சிக்காமல் இருக்க முடியாது.
திரைப்படத்துறையில் 3 தலைமுறை சக இசையமைப்பாளர்களோடு இசைஞானி இசையமைத்து வருகிறார். கிட்டத்தட்ட 1000 படங்கள்.. 7000 பாடல்களுக்கு மேல் இசையமைத்துள்ளவருடைய இசை படைப்பூக்கத்தை வெளிப்படுத்த இவை போதுமானதாக இல்லை. அதனால்தான் இளையராஜா, சிம்பொனி, ஹவ் டு நேம் இட், நத்திங் பட் விண்ட், திருவாசகம், ரமணர் பாடல்கள் என மனம் விரும்பும்படி எல்லாம் ஒரு குழந்தையைப் போல இசையை உருவாக்கிக்கொண்டே செல்கிறார்...
"என்னோடு நண்பர்களாகப் பழகியவர்கள் எல்லாம் நண்பர்கள் இல்லை. எனக்கு ஆர்மோனியப் பெட்டி தான் நண்பன். இந்த ஆர்மோனியப் பெட்டியை கோவை மாநகரத்தை சேர்ந்த உக்கடத்தில் ரூ.60-க்கு எனது அண்ணன் வரதராஜன் வாங்கினார்.
இதில் பயிற்சி பெற்றுத்தான் இசை அமைப்பாளராக ஆனேன். என்னிடம் இருக்கும் விலைமதிப்பற்ற பொருள் இந்த ஆர்மோனியப் பெட்டிதான்" என்கிறார் இளையராஜா.
"இசையமைத்ததில் கரகாட்டக்காரன் படத்திலுள்ள 'மாங்குயிலே பூங்குயிலே' பாடலுக்கு மிகக்குறைந்த நேரத்தில் இசையமைத்துள்ளேன். அதிக நேரம் இசையமைக்க எடுத்துக் கொண்ட பாடல், உதயகீதம் படத்தின் 'பாடு நிலாவே' பாடல் என்று சொல்லி இருக்கிறார் இளையராஜா.
'பாட்டுக்கு நான் பாடுபட்டேன், அந்தப் பாட்டுக்கள் பலவிதம் தான்' என்று 'கரகாட்டக்காரன்' டைட்டில் பாடலில் சொல்லிக்கொண்டவர் இசைஞானி.
'அன்னக்கிளி உன்னத் தேடுதே' என்று குரலெடுத்து தமிழ்த்திரையில் 1976-இல் இளையராஜா நுழைந்தபிறகு, அவரது இசையை நாடத் தொடங்கியது தமிழ்த் திரை ரசிகர்களது மனம். 'மச்சானைப் பாத்தீங்களா' என்று எஸ்.ஜானகி வசீகரக் குரலில் இழைத்த கிராமிய மெட்டு, அவரை அதிகமாகக் கவனிக்க வைத்தது.
வாத்தியார் படம், தலைவர் படம் என்ற நிலைமாறி இயக்குனர் பெயரால் படங்கள் பேசப்படத் தொடங்கிய அதே கால கட்டத்தில், இசையை வைத்துப் படத்தை வெற்றி பெற வைப்பதில் பெரும் சாதனை படைத்தவர் இளையராஜா. இசைக்காகவே திரைப்படங்களைப் பார்ப்பதற்கு திரையரங்குகளை நோக்கி ரசிகர்களை வரவைத்தவர் இசைஞானி.
வழக்கமான பாட்டையில் போகாமல், வித்தியாசமான தளத்தில் பரிசோதனைகளை நிகழ்த்திக் கொண்டே இருந்தது அவரது இசைத்தேடல். சிட்டுக்குருவி படத்தில், 'என் கண்மணி உன் காதலி' பாடலையே எடுத்துக் கொள்ளுங்கள். எஸ்.பி. பாலசுப்பிரமணியம், பி சுசீலா இருவரது குரல்களில் அவர் செய்திருக்கும் ஜாலம், இடையே ஒலிக்கும் கண்டக்டர் குரல், விசில் ஒலி எல்லாமே ஒரு பேருந்து பயணத்தை கண்ணுக்குள் கொண்டு வந்து நிறுத்தும்.
அவரின் இசை ஏற்படுத்தும் உணர்வு அலைகளில் எவராலும் சிக்காமல் இருக்க முடியாது. மண்ணின் மணம் கமழும் இசையை அவர்தான்- அவரேதான் கொடுத்தார். மண்வாசனை படத்தில் 'அரிசி குத்தும் அக்கா மகளே' பாட்டுடைய இசையில் அவர் கொடுத்திருக்கும் ஒலிகள் அவ்வளவு நெருக்கமாக இருக்கும். இந்தப் படம் வந்த காலகட்டத்தில் கிராமங்களில் மட்டுமல்ல நகரங்களிலும் அரிசி குத்துவது, முறத்தில் புடைப்பது போன்றவை வீட்டில் அன்றாடம் நடக்கும் வேலைகளாக இருந்தன. அப்போது எழும் ஓசை, அப்படியே இந்தப் பாட்டில் இருக்கும். இளையராஜாவின் இசையில் வெளிப்படும் இந்த இயல்புநிலைதான் அவரின் தனித்தன்மை.
'அலைகள் ஓய்வதில்லை' படத்தில் வரும் 'ஆயிரம் தாமரை மொட்டுக்களே..' பாடலின் முகப்பு இசை முடிந்து, பாடல் தொடங்கும் போதே, பரவசம் நம்மைத் தொற்றிக் கொள்ளும் சுகானுபவம் உண்டாகும்.
தளபதி படத்தின் 'ராக்கம்மா கையத்தட்டு' பாடலினூடே ' குனித்த புருவமும்' என்று தேவார வரிகளைக் கொண்டு வந்து இணைக்கும் மாயம், ப்ரியா படத்தின் பாடல்கள் தமிழ்த்திரை இசையில் முதன்முறை ஸ்டீரியோ முறையில் பதிவு செய்யப்பட்டது, பின்னணி இசையில் கதையோட்டத்திற்கு ஏற்ப புதுமைகள் கொணர்ந்தது என இளையராஜாவின் சிறப்புக்கள் சொல்ல ஏராளமானவை.
கவிஞர் வைரமுத்து எழுதிய முதல் திரைப்பாடலுக்கு (இது ஒரு பொன்மாலைப் பொழுது – நிழல்கள்) இசையமைத்த ராஜாவின் இசையில் தான், கவியரசு கண்ணதாசனின் கடைசி பாடலும் (கண்ணே கலைமானே – மூன்றாம் பிறை) பிறந்தது.
1991-ஆம் ஆண்டு இளையராஜா இசையில் தளபதி படத்தில் எஸ்.பி.பாலசுப்பிரமனியம் மற்றும் சுவர்ணலதா பாடிய 'ராக்கம்மா கையத் தட்டு' பாடல் 2003-இல் பிபிசி நடத்திய 'வேர்ல்ட் டாப் 10 பாப்புலர் மியூசிக்' சர்வேயில் 165 நாடுகளைச் சேர்ந்த அரை பில்லியன் மக்கள் வாக்களிக்க, 4-ஆம் இடம் பெற்றது.
கவிதை வரிகளின் அழகு, சொற்கள் இசைக்கருவிகளின் ஒலியில் அடித்துக் கொண்டு செல்லப்படாது, தற்காத்து ரசிகர்களுக்குக் கொண்டு சேர்க்கும் இசையை நெய்துகொண்டே இருக்கும் விரல்கள் அவருடையவை.
அவரிடம் எத்தனையோ சர்ச்சைகள், முரண்பாடுகள், கருத்து வேறுபாடுகள் எல்லாம் கலந்திருந்தாலும் இளையராஜா என்ற மனிதனின் நெடிய பயணத்தில், மேலோங்கி நிற்பது ராஜாவின் இசை தான்! இசைதான்! இசையே தான்!
-அம்ரா பாண்டியன்
- தனுஷ் அமிதாப்பச்சன் நடிப்பில் வெளியான ஷமித்தாப் படத்தை இயக்கியவர் பால்கி.
- இவர் இளையராஜாவின் வாழ்க்கை கதையை படமாக்குவதே என் கனவு என்று நேர்காணல் ஒன்றில் கூறியுள்ளார்.
சீனி கும், பா, தனுஷ் அமிதாப்பச்சன் நடித்த ஷமித்தாப், பேட் மேன், மிஷன் மங்கள் உள்ளிட்ட பல படங்களை இயக்கியவர் பிரபல இயக்குனர் ஆர்.பால்கி. இவர் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வரும் லஸ்ட் ஸ்டோரிஸ் 2 என்ற ஆந்தாலஜி படத்தை இயக்கியிருந்தார்.

பிரபல இயக்குனராக வலம் வரும் பால்கி சமீபத்திய நேர்காணல் ஒன்றில் இளையராஜாவின் வாழ்க்கை கதையை படமாக்குவதே என் கனவு என்று கூறியுள்ளார். அதில், தனுஷ் நடிப்பில் இளையராஜாவின் வாழ்க்கைக் கதையை படமாக்குவதே என் கனவு. தனுஷ் இளையராஜாவைப் போல இருக்கிறார். இந்த கதை படமாக்கப்பட்டால், என்னை போன்ற ஒரு இளையராஜா ரசிகனுக்கு நான் கொடுக்கும் பரிசாக இருக்கும் என்று பால்கி தெரிவித்துள்ளார்.
- மெர்குரி மூவிஸ் என்ற சிறப்பு பிரிவு செயல்பட உள்ளது.
- இதன் முதல் திரைப்படமாக இளையராஜா வாழ்க்கை வரலாறு உருவாகவுள்ளது.
மெர்குரி குரூப் இந்தியா, தென்னிந்தியப் பொழுதுபோக்கு மற்றும் திரை வணிகங்களை மையமாகக் கொண்டு, கனெக்ட் மீடியாவுடன் இணைந்து மெர்குரி மூவிஸ் என்ற சிறப்புப் பிரிவாக செயல்பட உள்ளது. புதிய ஸ்ட்ரீமிங் கதைகள் , ஒரிஜினல் கதைகள், தென் சினிமாவில் பல புதிய வகை கதைகளின் வழியாக ஒரு புதிய உலகத்தை இந்த கூட்டணி ரசிகர்களுக்கு வழங்கும்.
இந்த கூட்டணி, தங்கள் முதல் திரைப்படமாக, தென்னிந்தியத் திரையுலகில் மாபெரும் சாதனையாளரான இசையமைப்பாளர் இளையராஜாவின் வாழ்க்கை வரலாற்றுத் திரைப்படத்தை உருவாக்க உள்ளது. இத்திரைப்படத்தில் பன்முக திறமையாளர், தென்னிந்தியாவின் பிரபல நடிகர் தனுஷ் இளையராஜாவாக நடிக்க இருக்கிறார். இதன் படப்பிடிப்பு அக்டோபர் 2024-இல் தொடங்க உள்ளது, 2025-ஆம் ஆண்டின் நடுப்பகுதியில் இத்திரைப்படம் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது.

கனெக்ட் மீடியா மற்றும் மெர்குரி குழுமத்தின் இணைவு குறித்து, கருத்து தெரிவித்த கனெக்ட் மீடியாவின் வருண் மாத்தூர் கூறியதாவது, உலகளாவிய பொழுதுபோக்கு திரைத்துறையில் மிகவும் பிரபலமான பெயர்களில் ஒன்று மெர்குரி. எங்களுக்கு ஒரு அற்புதமான கூட்டணியாக மெர்குரி இருந்து வருகிறது, மேலும் அவர்களுடன் இணைந்து பல மெகா பட்ஜெட் படங்களைத் தயாரிப்பதிலும் ஒரு மிகச்சிறந்த இசை மேதையின் வரலாற்றைத் திரைப்படமாக உருவாக்குவதிலும், நாங்கள் மகிழ்ச்சி அடைகிறோம் என்று கூறினார்.
பல நாட்களாக இளையராஜா வாழ்க்கை வரலாற்றில் தனுஷ் நடிப்பதாக தகவல் வெளியாகி வந்த நிலையில் தற்போது இது உறுதி செய்யப்பட்டுள்ளது ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது.
- அஜயன் பாலா 'ஆறு அத்தியாயம்' திரைப்படத்தில் இடம்பெறும் ஆறு கதைகளில் ஒன்றை இயக்கி உள்ளார்.
- திரைப்படத் தலைப்புகளின் உரிமையை முறைப்படுத்துவது மிகவும் அவசியம்.
திரைக்கதை எழுத்தாளர், வசனகர்த்தா மற்றும் நடிகர் என கடந்த 20 வருடங்களாக தமிழ் திரை உலகில் பல்வேறு பரிமாணங்களில் இயங்கி வரும் அஜயன் பாலா 2017-ம் ஆண்டு வெளிவந்த 'ஆறு அத்தியாயம்' திரைப்படத்தில் இடம்பெறும் ஆறு கதைகளில் ஒன்றை இயக்கி உள்ளார். தற்போது ' மைலாஞ்சி' திரைப்படத்தின் மூலம் முழு நீள திரைப்படம் ஒன்றை முதல் முறையாக எழுதி இயக்கியுள்ளார்.
அஜய் அர்ஜுன் புரொடக்ஷன்ஸ் தயாரித்துள்ள இப்படத்தில் 'கன்னிமாடம்' படத்தில் நடித்துள்ள ஸ்ரீராம் கார்த்திக் கதாநாயகனாக நடித்துள்ளார். 'கோலிசோடா 2' புகழ் கிரிஷா குருப் நாயகியாக நடித்துள்ளார். முனீஷ்காந்த், தங்கதுரை, சிங்கம்பிலி மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இளையராஜா இசையமைக்கும் இப்படத்திற்கு செழியன் ஒளிப்பதிவை மேற்கொண்டுள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு முழுவதும் நிறைவடைந்துள்ள நிலையில் அதன் தலைப்பான 'மைலாஞ்சி', தற்போது 'அஜயன் பாலாவின் மைலாஞ்சி' என்று மாற்றப்பட்டுள்ளது.

இப்படத்தின் தலைப்பு மாற்றம் குறித்து பேசிய அஜயன் பாலா, "திரைப்படத் தலைப்புகளின் உரிமையை முறைப்படுத்துவது மிகவும் அவசியம். இந்த நடைமுறையில் உள்ள சில சிக்கல்களில் காரணமாகவே பத்து வருடங்களுக்கு முன் பதிவு செய்திருந்தும் இதே தலைப்பில் வேறு ஒரு படம் திரைக்கு வந்த காரணத்தால் எங்கள் படத்தின் தலைப்பை மாற்ற வேண்டிய அவசியம் ஏற்பட்டது," என்றார்.
மேலும் பேசிய அவர், "பருவநிலை மாற்றத்தின் பாதிப்புகளை நாம் உணரத் தொடங்கியுள்ள இந்த காலகட்டத்தில் சுற்றுச்சூழலை பாதுகாப்பது மிகவும் அவசியம். இக்கருத்தை வலியுறுத்தும் காதல் கதையாக இப்படம் உருவாகியுள்ளது. செழியனின் ஒளிப்பதிவு மிகவும் பேசப்படும்" என்று கூறினார்.
காதலர் தினத்தை முன்னிட்டு பிப்ரவரி மாதம் 'அஜயன் பாலாவின் மைலாஞ்சி' திரையரங்குகளில் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தகக்து.
- திரைத்துறையில் முதன் முதலாக ஆரம்பித்த சங்கம் இது.
- இந்த சங்கத்தில் இரண்டு முறை தலைவராக இருக்கலாம் என்ற விதி உள்ளது.
தமிழ் திரைப்பட இசையமைப்பாளர்கள் சங்கத்தின் தலைவராக தற்போது இசையமைப்பாளர் தீனா உள்ளார். இந்த சங்கத்தின் தேர்தல் விரைவில் நடைபெறவுள்ளது. இரண்டு முறை தலைவராக இருந்த தீனா மூன்றாவது முறையும் தலைவர் பதவிக்கு போட்டியிடவுள்ளார். இது குறித்து தீனாவிடம் இளையராஜா பேசியுள்ள ஆடியோ வைரலாகியுள்ளது.
அந்த ஆடியோவில் "திரைத்துறையில் முதன் முதலாக ஆரம்பித்த சங்கம் இது. இந்த இசையமைப்பாளர்கள் சங்கத்தை ஆரம்பித்தது எம்.பி.ஸ்ரீனிவாசன். இந்த சங்கத்தில் இரண்டு முறை தலைவராக இருக்கலாம் என்ற விதி உள்ளது. நீ ஏற்கெனவே இரண்டு முறை தலைவராக இருந்து விட்டாய்.
மூன்றாவது முறையாகவும் ஏன் போட்டியிடுகிறாய்? அடுத்தத் தலைமுறைக்கு வாய்ப்புக் கொடுக்க வேண்டாமா? இந்த சங்கத்தில் தற்போது முறைகேடுகள் நடப்பதாகச் சொல்கிறார்கள். அதற்குள் நான் போக விரும்பவில்லை. ஆனால், அவர்கள் முன்வைக்கும் கோரிக்கையை ஒரு தலைவராக நீ ஏற்க வேண்டும் என்று நினைக்கிறேன். அதனால், இதைச் சொல்கிறேன். நீ இரண்டு முறை தலைவராக இருந்து பல நல்ல விஷயங்களை செய்திருக்கிறாய். அந்த மனநிறைவோடு தலைவர் பதவியை விட்டுக் கொடுக்க வேண்டும்" என அவர் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.
இளையராஜாவின் இந்த ஆடியோவிற்கு இசையமைப்பாளர் தீனா விளக்கம் கொடுத்துள்ளார். அதில், "1960-ம் ஆண்டு எம்.பி.ஸ்ரீனிவாசன் போட்ட உத்தரவு இது என்று அண்ணா சொல்கிறார். சங்க விதிமுறைகள் கால மாற்றத்திற்கேற்றபடி மாறும். அதன்படி, ஒருவர் எத்தனை முறை வேண்டுமானாலும் தேர்தலில் நிற்கலாம். இளையராஜாவிடம் யாரோ தவறாக சொல்லி இருக்கிறார்கள். அவரை நேரில் பார்த்து இதுகுறித்து புரிய வைக்கப் போகிறேன். தேர்தல் நிச்சயம் நடக்கும்" என தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.