என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "ஹலிதா ஷமீம்"
- இயக்குநர் நித்திலன் சுவாமிநாதன், "'மின்மினி' படத்தின் பாடல்கள், டிரெய்லர் எல்லாமே சூப்பராக உள்ளது"
- ’மின்மினி’ திரைப்படம் ஆகஸ்ட் மாதம் 9 ஆம் தேதி வெளியாகிறது.
ஸ்டேஜ் அன்ரியல், பேபி ஷூ புரொடக்ஷன்ஸ் & ஆங்கர் பே ஸ்டுடியோஸ் வழங்கும் ஹலிதா ஷமீம் இயக்கத்தில், கதிஜா ரஹ்மான், கௌரவ் காளை, எஸ்தர் அனில் மற்றும் பலர் நடித்துள்ள 'மின்மினி' திரைப்படம் ஆகஸ்ட் மாதம் 9 ஆம் தேதி வெளியாகிறது. படத்தின் டிரெய்லர் மற்றும் ஆடியோ வெளியீட்டு விழா இன்று நடைபெற்றது.
இயக்குநர் நித்திலன் சுவாமிநாதன், "'மின்மினி' படத்தின் பாடல்கள், டிரெய்லர் எல்லாமே சூப்பராக உள்ளது. பெரிய மெனக்கெடல் இந்தப் படத்திற்கு தேவைப்படுகிறது. ஹலிதா படங்களின் டைட்டிலுக்கு நான் மிகப்பெரிய ரசிகன். சில்லுக்கருப்பட்டி, மின்மினி என டைட்டில் எல்லாமே ஹைக்கூ போல இருக்கும். படத்தில் நடித்திருக்கும் நடிகர்கள், ரஹ்மான் சார் குடும்பத்தின் இசை இளவரசி கதிஜாவுக்கும் வாழ்த்துக்கள்" என்றார்.
ஒளிப்பதிவாளர், தயாரிப்பாளர் மனோஜ் பரமஹம்சா, "ஆட்டோ சங்கர் எடுத்தபோது என்னைப் பலரும் திட்டினார்கள். ஆனால், அதற்கு பதிலடியாக நிச்சயம் நல்ல படம் கொடுப்பேன் என்ற நம்பிக்கை இருந்தது. அப்படியான ஒரு படமாக 'மின்மினி' அமைந்திருக்கிறது. லாபம் தர வேண்டும் என்ற நோக்கத்தில் இந்தப் படம் எடுக்கவில்லை. நல்ல படம் கொடுக்க வேண்டும் என்ற ஆசைதான். இளையராஜா இசை தரும் உணர்வை கதிஜா கொடுத்திருக்கிறார். " என்றார்.
நடிகை எஸ்தர், "நான் சின்ன பொண்ணாக இருந்தபோது இந்தப் படத்தில் கமிட் ஆனேன். பல லொகேஷன்ஸ் பல நினைவுகள் இருக்கிறது. ஹலிதாவுக்கு நன்றி. இந்தப் படத்தின் இசை கேட்கும்போது எமோஷனல் ஆகிவிடுவேன். கதிஜா அந்தளவு நல்ல இசையைக் கொடுத்துள்ளார். எனது நண்பர்கள், குடும்பம் என எல்லோரும் 'மின்மினி'க்காக காத்துக் கொண்டிருக்கின்றனர். மறக்க முடியாத அனுபவமாக இந்தப் படம் அமைந்திருக்கிறது".
இசையமைப்பாளர் கதிஜா ரஹ்மான், "இது நடக்கிறது என்று நம்ப முடியவில்லை. இந்தப் படத்திற்காக கடந்த 2022-ல் ஹலிதா மேம் என்னை அணுகினார். அவருக்கும் என் இசை பிடித்திருந்தது. ஹலிதா மேம் தனக்கு என்ன வேண்டும் என்பதில் தெளிவாக இருந்தது எனக்கு வேலை செய்ய இன்னும் எளிதாக இருந்தது. ".
இயக்குநர் ஹலிதா ஷமீம், "'மின்மினி' படத்திற்காக ஷங்கர் சார் வரை ரீச் ஆகி இருக்கிறது. குழந்தைகளை சின்ன வயதில் வைத்து படம் எடுத்து பின்னர் அதற்காக காத்திருந்தார்களே அந்தப் படமா என பலரும் கேட்கிறார்கள். இதைப் புதுமுயற்சியாக செய்ய வேண்டும் என்று நினைத்து நாங்கள் செய்யவில்லை. படம் எடுக்க ஆரம்பித்தபோது கூட இப்படி காத்திருப்போம் என்று நாங்களும் நினைக்கவில்லை. ஏனெனில், குழந்தைகளாக இவர்கள் சின்சியராக நடித்துக் கொடுத்ததை இவர்கள் வளர்ந்த பிறகு வந்த போர்ஷனை பிற நடிகர்கள் நடித்துக் கொடுப்பார்களா எனத் தெரியவில்லை. அதனால்தான், அவர்களுக்காகக் காத்திருந்தேன். இந்தப் படத்தை நம்பி இத்தனை வருடங்கள் கழித்தும் முதலீடு செய்த தயாரிப்பாளர்கள், படத்தை வெளியிடுபவர்கள் எல்லோருக்கும் நன்றி. கண்டிப்பாக நீங்கள் படத்தை திரையரங்குகளில் பார்த்துவிட்டு உங்கள் கருத்துகளை சொல்ல வேண்டும்" என்றார்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- அடுத்ததாக ஹலிதா `மின்மினி' என்ற படத்தை இயக்கியுள்ளார்.
- படத்தின் ஒளிப்பதிவை மனோஜ் பரமஹம்சா மேற்கொண்டுள்ளார்.
பூவரசம் பீபீ , ஏலே போன்ற படங்களை தனக்கென ஒரு வித்தியாசமான கண்ணோட்டத்தில் படங்களை இயக்கி மக்கள் மனத்தில் இடம் பிடித்தவர் ஹலிதா ஷமீம். இவர் இயக்கத்தில் வெளியான சில்லு கருப்பட்டி படம் மக்களிடம் பரவலான பாராட்டைப் பெற்றது.
அடுத்ததாக ஹலிதா `மின்மினி' என்ற படத்தை இயக்கியுள்ளார். எஸ்தர் அனில், கௌரவ் காளை மற்றும் பிரவின் கிஷோர் ஆகியோர் முன்னணி கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். படத்தின் முதல் பாதியின் படப்பிடிப்பை 2015 ஆம் ஆண்டு தொடங்கியுள்ளார் ஹலிதா. அதில் நடித்த நடிகர்கள் நிஜ காலத்திலேயே வளர வேண்டும் என்பதற்காக, 7 ஆண்டுகள் காத்து இருந்து அவர்கள் வளர்ந்தப் பிறகு இரண்டாம் பாதியை படமாக்கியுள்ளார்.
படத்தின் ஒளிப்பதிவை மனோஜ் பரமஹம்சா மேற்கொண்டுள்ளார். படத்தின் இசையை ஏ.ஆர் ரகுமானின் மகளான கதிஜா ரகுமான் இசையமைத்துள்ளார். படத்தை முரளி கிருஷ்ணன் உடன் இணைந்து ஒளிப்பதிவாளர் மனோஜ் பரமஹம்சா தயாரித்துள்ளார்.
படத்தை உலகளவில் டெண்ட் கொட்டா மற்றும் சிம்பா நிறுவனம் வெளியிடவுள்ளது. திரைப்படம் வரும் ஆகஸ்ட் மாதம் வெளியாகவுள்ளது. சில மாதங்களுக்கு முன் படத்தின் சிறப்பு திரையிடல் நடைப்பெற்று நல்ல விமர்சனத்தை பெற்றுள்ளது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- சூர்யா - ஜோதிகா இருவரும் 2006ம் ஆண்டு இருவீட்டாரின் சம்மதத்தோடு திருமணம் செய்து கொண்டனர்
- திருமணத்திற்கு பிறகு நடிப்பதில் இருந்து விலகி இருந்த ஜோதிகா '36 வயதினிலே' திரைப்படம் மூலம் ரீ- என்ட்ரி கொடுத்தார்
சூர்யா - ஜோதிகா 1999ம் ஆண்டு வெளியான 'பூவெல்லாம் கேட்டுப்பார்' திரைப்பத்தில் முதன் முதலாக இணைந்து நடித்தனர். அதை தொடர்ந்து இந்த ஜோடி உயிரிலே கலந்தது, பேரழகன், காக்க காக்க, சில்லுனு ஒரு காதல், மாயாவி உள்ளிட்ட திரைப்படங்களை ஒன்றாக இணைந்து நடித்தனர்.
இதனையடுத்து சூர்யா - ஜோதிகா இருவரும் 2006ம் ஆண்டு இருவீட்டாரின் சம்மதத்தோடு திருமணம் செய்து கொண்டனர்.
திருமணத்திற்கு பிறகு நடிப்பதில் இருந்து விலகி இருந்த ஜோதிகா '36 வயதினிலே' திரைப்படம் மூலம் ரீ- என்ட்ரி கொடுத்தார். அதை தொடர்ந்து காற்றின் மொழி, பொன்மகள் வந்தாள், நாச்சியார், மகளிர் மட்டும் போன்ற கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்களில் நடித்து வந்தார். அண்மையில் மலையாளத்தில் மம்மூட்டி ஜோடியாக 'காதல் தி கோர்' மற்றும் அஜய் தேவ்கன் ஜோடியாக பாலிவுட்டில் 'ஷைத்தான்' படத்திலும் நடித்திருந்தார்.
நடிகர் சூர்யா தற்போது சிவா இயக்கத்தில் 'கங்குவா' படத்தில் நடித்துள்ளார். இப்படம் இந்த ஆண்டில் வெளியாக உள்ளது.
அண்மையில் சூர்யா மற்றும் ஜோதிகா இருவரும் ஒன்றாக இணைந்து ஜிம்மில் கடுமையாக உடற்பயிற்சி செய்யும் வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலானது.
இந்நிலையில், 18 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் சூர்யா - ஜோதிகா ஜோடி மீண்டும் இனியானது நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
அந்த படத்தை சில்லு கருப்பட்டி படத்தை இயக்கிய ஹலிதா ஷமீம் அல்லது பெங்களூர் டேஸ் என்ற மலையாள படத்தை இயக்கிய அஞ்சலி மேனன் இயக்குவார் என சொல்லப்படுகிறது.
விரைவில் இப்படம் குறித்த அதிகாரபூர்வமான அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- இயக்குனர் ஹலிதா ஷமீம் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் ‘மின்மினி’.
- இப்படத்தின் மூலம் ஏ.ஆர்.ரகுமானின் மகள் கதீஜா ரகுமான் இசையமைப்பாளராக அறிமுகம் ஆகிறார்.
பூவரசம் பீப்பீ படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானவர் ஹலிதா ஷமீம். அதன்பின் சில்லு கருப்பட்டி, ஏலே போன்ற படங்களை இயக்கி தனக்கான இடத்தை ரசிகர்கள் மத்தியில் தக்கவைத்துக் கொண்டார். கடந்த 2015-ஆம் ஆண்டு இவர் இயக்கத்தில் 'மின்மினி' திரைப்படம் தொடங்கப்பட்டது. இப்படம் குழந்தைகளாக இருந்து, இளம் வயதினராக மாறுபவர்களின் கதையாக உருவானது.
இப்படத்தின் முதல் பகுதியான குழந்தை பருவ பகுதிகளை அவர் 2015-ஆம் ஆண்டில் படமாக்கினார் மற்றும் அவர்கள் வளர்ந்த தோற்றத்தைக் காண 7 வருட இடைவெளியை இப்படத்திற்காக எடுத்துக்கொண்டார். அந்த கதாபாத்திரங்கள் முதிர்ச்சியடைந்த தோற்றத்தை தத்ரூபமாக திரையில் கொண்டுவரும் வகையில் கடந்த ஆண்டு 'மின்மினி' படப்பிடிப்பு மீண்டும் தொடங்கப்பட்டது. இப்படத்தின் மூலம் ஏ.ஆர்.ரகுமானின் மகள் கதீஜா ரகுமான் இசையமைப்பாளராக அறிமுகம் ஆகிறார்.
மின்மினி போஸ்டர்
இந்நிலையில், 'மின்மினி' படத்தின் புதிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. இதனை இயக்குனர் ஹலிதா ஷமீம் தனது சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார்.
Here is the FL poster of #Minmini. Thank you, each one of you who is looking forward to the film. pic.twitter.com/r3lqk3Dc8i
— Halitha (@halithashameem) September 12, 2023
- இயக்குனர் ஹலிதா ஷமீம் 2015-ஆம் ஆண்டு 'மின்மினி' படத்தை இயக்கினார்.
- 7 வருட இடைவெளிக்கு பிறகு கதாபாத்திரங்கள் முதிர்ச்சியடைந்த தோற்றத்தை படமாக்கி வருகிறார்.
பூவரசம் பீப்பீ படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானவர் ஹலிதா ஷமீம். அதன்பின் சில்லு கருப்பட்டி, ஏலே போன்ற படங்களை இயக்கி தனக்கான இடத்தை ரசிகர்கள் மத்தியில் தக்கவைத்துக் கொண்டார். இவர் இயக்கிய "புத்தம் புது காலை விடியாதா" என்ற ஆந்தாலஜி தொகுப்பின் ஒரு பகுதியான "லோனர்ஸ்" அனைவரையும் கவர்ந்து நல்ல வரவேற்பை பெற்றது.
இதனிடையே இவர் இயக்கத்தில் தயாரான 'மின்மினி' திரைப்படம் 2015-ல் தொடங்கப்பட்டது. இப்படம் குழந்தைகளாக இருந்து, இளம் வயதினராக மாறுபவர்களின் கதையாக உருவானது. இப்படத்தின் முதல் பகுதியான குழந்தை பருவ பகுதிகளை அவர் 2015-ஆம் ஆண்டில் படமாக்கினார் மற்றும் அவர்கள் வளர்ந்த தோற்றத்தைக் காண 7 வருட இடைவெளியை இப்படத்திற்காக எடுத்துக்கொண்டார்.
ஹலிதா ஷமீம்- கதீஜா ரகுமான்
இதையடுத்து அந்த கதாபாத்திரங்கள் முதிர்ச்சியடைந்த தோற்றத்தை தத்ரூபமாக திரையில் கொண்டுவரும் வகையில் கடந்த ஆண்டு 'மின்மினி' படப்பிடிப்பு மீண்டும் தொடங்கப்பட்டது. இப்படத்தின் மூலம் ஏ.ஆர்.ரகுமானின் மகள் கதீஜா ரகுமான் இசையமைப்பாளராக அறிமுகம் ஆகிறார். இதனை ஹலிதா ஷமீம் தனது சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார்.
கதீஜா ரகுமான் ஷங்கர் இயக்கத்தில் 2010-ஆம் ஆண்டு வெளியான 'எந்திரன்' படத்தில் இடம்பெற்ற 'புதிய மனிதா' என்ற பாடலில் ஒரு சிறிய பகுதியை பாடியிருந்தார். மேலும், சமீபத்தில் வெளியான 'பொன்னியின் செல்வன் 2' படத்தில் இடம்பெற்ற 'சின்னஞ்சிறு நிலவே' பாடலையும் கதீஜா பாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
- சில்லு கருப்பட்டி, ஏலே போன்ற படங்களை ஹலிதா ஷமீம் இயக்கியுள்ளார்.
- ஹலிதா ஷமீம் இயக்கத்தில் உருவான “மின்மினி” படத்தின் படப்பிடிப்பு 7 வருட இடைவேளைக்கு பிறகு மீண்டும் துவங்குகிறது.
பூவரசம் பீப்பீ படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானவர் ஹலிதா ஷமீம். அதன்பின் சில்லு கருப்பட்டி, ஏலே போன்ற படங்களை இயக்கி தனக்கான இடத்தை ரசிகர்கள் மத்தியில் தக்கவைத்துக் கொண்டார். இவர் இயக்கிய "புத்தம் புது காலை விடியாதா" என்ற ஆந்தாலஜி தொகுப்பின் ஒரு பகுதியான "லோனர்ஸ்" அனைவரையும் கவர்ந்து நல்ல வரவேற்பை பெற்றது.
இதனிடையே இவர் இயக்கத்தில் தயாரான மின்மினி திரைப்படம் 2015-ல் தொடங்கப்பட்டது. இப்படம் குழந்தைகளாக இருந்து, இளம் வயதினராக மாறுபவர்களின் கதையாக உருவானது. இப்படத்தின் முதல் பகுதியான குழந்தை பருவ பகுதிகளை அவர் 2015 ஆம் ஆண்டில் படமாக்கினார் மற்றும் அவர்கள் வளர்ந்த தோற்றத்தைக் காண 7 வருட இடைவெளியை இப்படத்திற்காக எடுத்துக்கொண்டார். மின்மினி படத்தில் எஸ்தர் அனில், பிரவின் கிஷோர் மற்றும் கௌரவ் காளை ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இப்படத்தின் ஒளிப்பதிவை மனோஜ் பரமஹம்சா மேற்கொள்ள ரேமண்ட் டெரிக் க்ராஸ்டா படத்தொகுப்பாளராக பணியாற்றுகிறார். மேலும், இந்தப் படத்தை ஒளிப்பதிவாளர் மனோஜ் பரமஹம்சா, ஆங்கர் பே ஸ்டுடியோஸ் நிறுவனத்துடன் இணைந்து தயாரித்துள்ளார்.
இந்நிலையில் தற்போது இப்படப்பிடிப்பை ஹலிதா ஷமீம் மீண்டும் தொடங்கியுள்ளார். இவர் இப்படத்திற்காக எடுத்துக்கொண்ட புது முயற்சி அனைவரின் கவனத்தையும் ஈர்த்து பாராட்டுக்களை பெற்று வருகிறது. பெரும் எதிர்ப்பார்ப்பில் உருவாகி வரும் இப்படத்தின் அறிவிப்பு ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்