என் மலர்
நீங்கள் தேடியது "kamalhassan"
- . 28 வருடங்களுக்கு பிறகு ஷங்கர் இயக்கத்தில் நடித்துள்ளார் கமல்ஹாசன்
- அனிருத் இசையமைத்துள்ள இந்த படத்தின் பாடல்கள் சில நாட்களுக்கு முன் வெளியாகி இணையத்தில் வைரலாகியது.
நடிகர் கமல்ஹாசன் மற்றும் இயக்குநர் சங்கர் கூட்டணியில் உருவாகி இருக்கும் படம் இந்தியன் 2. இந்த படத்தில் பிரியா பவானி சங்கர், காஜல் அகர்வால், ரகுல் பிரீத் சிங், சித்தார்த், பாபி சிம்ஹா, சமுத்திரக்கனி மற்றும் பலர் நடித்துள்ளனர். 28 வருடங்களுக்கு பிறகு ஷங்கர் இயக்கத்தில் நடித்துள்ளார் கமல்ஹாசன் என்பது குறிப்பிடத்தக்கது.
அனிருத் இசையமைத்துள்ள இந்த படத்தின் பாடல்கள் சில நாட்களுக்கு முன் வெளியாகி இணையத்தில் வைரலாகியது. இப்படத்தில் இடம்பெற்றுள்ள 'கதறல்ஸ்' மற்றும் 'பாரா பாரா' என்ற பாடல்கள் மக்கள் மனதில் நீங்காது ஒலித்து கொண்டு இருக்கிறது. வரும் ஜூலை 12 ஆம் தேதி இந்தியன் 2 வெளியாகவுள்ளது.அதை முன்னிட்டு படக்குழுவினர் ப்ரோமோஷன் பணிகளில் ஈடுப்பட்டு வருகின்றனர். சமீபத்தில் படக்குழுவினர் மலேஷியாவில் ப்ரோமோஷன் விழாவில் கலந்துக் கொண்டனர்.
அண்மையில் படத்தின் டிரைலர் வெளியாகி மிகவும் வைரலாகியது. படத்தில் கமல்ஹாசன் 7 கெட்டப்பில் வரவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதிரடி ஆக்ஷன் திரைப்படமாக இது அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. எஸ்.ஜே சூர்யா இரண்டாம் பாகத்தில் சில காட்சியில் வரப்போவதாகவும் மூன்றாம் பகுதியில் நிறைய காட்சிகளில் வருவேன் என்று ப்ரோமோஷன் விழாவில் கூறினார்.
படத்தின் பாடலான கால்ண்டர் பாடலின் வீடியோ நாளை வெளியாகும் என படக்குழிவினர் அறிவித்துள்ளனர்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- இந்தியன் 2 திரைப்படத்தை பார்த்த பிறகு செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.
- நமக்கு எதற்கு பிரச்சனை, நமக்கு எதற்கு வம்பு என்று கடந்து செல்பவர்களால்தான் நாட்டுக்கே பிரச்சனை.
சென்னை ராயப்பேட்டையில், நாம் தமிழகர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். இந்தியன் 2 திரைப்படத்தை பார்த்த பிறகு செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.
அப்போத அவர் பேசியதாவது:-
பொதுவாக நாம் திரைக் கலையை ஒரு பொழுதுபோக்காக தான் நினைக்கிறோம். சினிமா பொழுதை போக்குவதற்கு அல்ல. நல்ல பொழுதாக ஆக்குவதற்கு போன்ற நல்ல படைப்புகளும் இருக்கிறது.
திரைக்கலை என்பது அறிவியலின் ஒரு அழகான குழந்தை. ஒவ்வொரு தேசினத்தின் அழகான கலை முகம். குறிப்பாக இந்தியன் 2 திரைப்படம் ஒரு திரைக்கதை அமைத்து எடுக்கப்பட்ட படம் என்று கூற முடியாது.
அன்றாட நிகழ்வுகளில் நாம் சந்திக்கின்ற, எதிர்கொள்கிற அவலங்கள் இந்த படத்தில் மிக ஆழமாக அழகாக வடிவமைக்கப்பட்டுள்ளது.
நமக்கு எதற்கு பிரச்சனை, நமக்கு எதற்கு வம்பு என்று கடந்து செல்பவர்களால்தான் நாட்டுக்கே பிரச்சனை.
திரைப்படத்தில் ஒவ்வொரு உரையாடலும் ஒவ்வொரு தத்துவம் போல உள்ளது.
கமல்ஹாசன் உடல்தோற்றங்களை மாற்றி நடித்திருக்கிற விதம், அனைத்து கதாப்பாத்திரங்களும் சிறப்பாக செய்திருக்கின்றனர்.
நீ உன் வீட்டை சரி செய்.. நாடு சரியாகும் என்பேதே இந்தியன் 2 சொல்கிறது.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
- தமிழகம் முழுவதும் நேற்று காலை 9 மணியளவில் இந்தியன் 2 படம் வெளியானது.
- ரசிகர்கள் மத்தியில் ஒரு கவலையான விமர்சனங்களையே பெற்று வருகிறது.
நடிகர் கமல்ஹாசன், இயக்குநர் சங்கர் கூட்டணியில் உருவாகி இருக்கும் படம் இந்தியன் 2. சுமார் 28 வருடங்களுக்கு பிறகு சங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தியன் முதல் பாகம் இன்னும் பலரால் ரசிக்கப்பட்டு வரும் நிலையில் இந்தியன் 2 பெரும் எதிர்பார்பை ஏற்படுத்தியது.
அனிருத் இசையமைத்துள்ள இந்த படத்தின் பாடல்கள் சில நாட்களுக்கு முன் வெளியாகி இணையத்தில் வைரலாகியது. இந்த படத்தில் பாபி சிம்ஹா, சித்தார்த், சமுத்திரக்கனி, பிரியா பவானி சங்கர், காஜல் அகர்வால், ரகுல் பிரீத் சிங் மற்றும் பலர் நடித்துள்ளனர். லைகா நிறுவனம் இப்படத்தை தயாரித்து உள்ளது.
இப்படத்திற்கு தடை கோரிய மனுவை தள்ளுபடி செய்த உயர்நீதிமன்ற மதுரை கிளை இந்தியன் 2 படத்தை வெளியிட தடையில்லை என்று உத்தரவு பிறப்பித்தது.
இதையடுத்து, தமிழகம் முழுவதும் நேற்று காலை 9 மணியளவில் இந்தியன் 2 படம் வெளியானது. உலகம் முழுவதும் பல்வேறு திரையரங்குகளில் நேற்று இந்தியன் 2 வெளியானது. படம் வெளியான திரையங்குகள் முன்பு கூடிய ரசிகர்கள் ஆட்டம், பாட்டம் என கொண்டாடினர்.
இருப்பினும், ரசிகர்கள் மத்தியில் ஒரு கவலையான விமர்சனங்களையே பெற்று வருகிறது.
இந்நிலையில், இப்படத்தின் முதல் நாள் வசூல் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
அதன்படி, இப்படம், இந்தியா முழுவதும் ரூ.26 கோடி வசூலித்துள்ளது. தமிழில் ரூ.17 கோடியும், தெலுங்கில் ரூ.7.9 கோடியும், இந்தியில் 1.1 கோடியும் வசூலித்துள்ளது.
முன்னதாக, கமல் நடிப்பில் வெளியான 'விக்ரம்' ரூ.32 கோடியும், சமீபத்தில் வெளியான 'கல்கி 2898 ஏடி' ரூ. 95 கோடியும் முதல் நாளில் வசூலித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் வாழ்த்து வெளியிட்டுள்ளார்.
- பேரறிஞர் அண்ணா அவர்களைப் பார்த்ததும், அவரது வெள்ளம் போன்ற மேடை உரையை நேரடியாகக் கேட்டதும் இல்லை.
பேரறிஞர் அண்ணாவின் 116-வது பிறந்த நாள் இன்று சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது.
இந்நிலையில், அண்ணா பிறந்தநாளை முன்னிட்டு, மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் வாழ்த்து வெளியிட்டுள்ளார்.
இதுகுறித்து கமல்ஹாசன் தனது எக்ஸ் பக்கத்தில் கூறியிருப்பதாவது:-
பல முதல்வர்களோடு பழகியிருக்கிறேன்; பார்த்திருக்கிறேன்.
இந்த வகையில் என் மனதோரம் ஒரு குறை இருந்தது. பேரறிஞர் அண்ணா அவர்களைப் பார்த்ததும், அவரது வெள்ளம் போன்ற மேடை உரையை நேரடியாகக் கேட்டதும் இல்லை என்கிற குறை.
அவருடனான என் தொடர்பெல்லாம் அவரின் எழுத்துக்களை வாசிப்பதன் மூலமாகத்தான் அமைந்தது.
இன்றைய அவரது பிறந்தநாளில் அவரை வாழ்த்தும் நேரத்தில் முன்பொரு நிகழ்ச்சியில் என் அக்கா சொன்ன இந்த இனிய சம்பவம் நினைவுக்கு வந்தது.
பேரறிஞர் அண்ணா புகழ் ஓங்குக.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
- மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தலைமையில் பொதுக்குழு கூட்டம்.
- மநீம தலைவராக மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள கமல்ஹாசனுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து.
மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தலைமையில் பொதுக்குழு கூட்டம் சென்னை, தேனாம்பேட்டையில் உள்ள காமராஜர் அரங்கில் நடைபெற்றது.
இந்தக் கூட்டத்தில் கட்சி தொடர்பான எந்த முடிவையும் எடுப்பதற்குரிய அதிகாரம் தலைவர் கமல்ஹாசனுக்கு மக்கள் நீதி மய்யம் கட்சியின் அனைத்து பொதுக்குழு உறுப்பினர்களாலும் ஏகமனதாக அளிக்கப்படுவது உட்பட முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்ட உள்ளன.
இந்நிலையில், மக்கள் நீதி மய்யம் தலைவராக மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள கமல்ஹாசனுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து முதலமைச்சர் தனது எக்ஸ் பக்கத்தில் கூறியிருப்பதாவது:-
பகுத்தறிவுச் சிந்தனையும் சமத்துவ நோக்கமும் கொண்டு பணியாற்றிவரும் அருமை நண்பர் கமல்ஹாசன்
அவர்கள் மீண்டும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டதற்கும் - அவரது அரசியல் பயணம் மென்மேலும் சிறக்கவும் என்னுடைய வாழ்த்துகள்!
இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.
- நடிகர் சித்தார்த்தும், நடிகை அதிதி ராவ் ஹைதாரியும் கடந்த செப்டம்பர் மாதம் திருமணம் செய்துக் கொண்டனர்.
- தல தீபாவளி கொண்டிய தம்பதிக்கு இணையத்தில் ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
நடிகர் சித்தார்த் இயக்குநர் மணிரத்தினத்தின் ஆயுத எழுத்து படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார். பின்னர் ஷங்கர் இயக்கத்தில் `பாய்ஸ்' படத்தில் கதாநாயகனாக நடித்தார். தமிழ், தெலுங்கு மற்றும் இந்தியில் தொடர்ந்து பல படங்களில் நடித்து வந்தார்.
கடந்த ஆண்டு வெளிவந்த சித்தா படம் வெற்றியை கொடுத்தது.
இதற்கிடையே, நடிகர் சித்தார்த்தும், நடிகை அதிதி ராவ் ஹைதாரியும் காதலில் இருப்பதாக செய்திகள் பரவியது.
இதைதொடர்ந்து, நடிகர் சித்தார்த்தும், நடிகை அதிதி ராவ் ஹைதாரியும் கடந்த செப்டம்பர் மாதம் திருமணம் செய்துக் கொண்டனர்.
இந்நிலையில், நடிகர் சித்தார்த்தும், நடிகை அதிதி ராவும் தங்களது தல தீபாவளியை கொண்டாடியுள்ளனர்.
நடிகர் கமல்ஹாசன், இயக்குனர் மணிரத்னம் மற்றும் குடும்பத்தினருடன் சித்தார்த் மற்றும் அதிதி ராவ் தீபாவளி கொண்டாடிய புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
தல தீபாவளி கொண்டிய தம்பதிக்கு இணையத்தில் ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- அமரன் கமல்ஹாசனின் ராஜ்கமல் புரொடக்ஷன் தயாரித்துள்ளது.
- அமரன் உலகமுழுவதும் இதுவரை 42.3 கோடி ரூபாய் வசூலித்துள்ளது.
இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயன், நடிகை சாய் பல்லவி ஆகியோர் நடித்துள்ள திரைப்படம் 'அமரன்'. இப்படத்தை கமல்ஹாசனின் ராஜ்கமல் புரொடக்ஷன் தயாரித்துள்ளது.
இப்படத்தில் சிவகார்த்திகேயன் 'முகுந்தன்' என்ற கதாபாத்திரத்தில் ராணுவ வீரராக நடித்துள்ளார். இந்த படம் நேற்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியானது. படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பு கிடைத்துள்ளது.
அமரன் உலகமுழுவதும் இதுவரை 42.3 கோடி ரூபாய் வசூலித்துள்ளது.
இந்நிலையில், திரையிட்ட இடங்களில் எல்லாம் அமரன் படத்திற்கு மகத்தான வரவேற்பு கிடைத்துள்ளது என கமல்ஹாசன் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
அதில், திரையிட்ட இடங்களில் எல்லாம் அமரன் படத்திற்கு மகத்தான வரவேற்பு கிடைத்துள்ளது. நல்ல படத்தை மக்கள் கொண்டாடுவார்கள் எனும் எனது நம்பிக்கை உறுதியாகியுள்ளது. ரசிகர்களுக்கு என் நன்றி" என குறிப்பிட்டுள்ளார்.
- நடிகர் டெல்லி கணேஷ் சென்னையில் உள்ள அவரது இல்லத்தில் நேற்றிரவு உயிரிழந்தார்.
- பிரபல எழுத்தாளர் இந்திரா செளந்தர்ராஜன் (65) மதுரையில் உள்ள தன் இல்லத்தில் குளியலறையில் வழுக்கி விழுந்து உயிரிழந்தார்.
பிரபல நடிகர் டெல்லி கணேஷ் சென்னையில் உடல்நலக்குறைவு காரணமாக உயிரிழந்தார். 80 வயதான நடிகர் டெல்லி கணேஷ் சென்னையில் உள்ள அவரது இல்லத்தில் நேற்றிரவு உயிரிழந்தார்.
டெல்லி கணேஷின் மறைவுக்கு திரைத்துறையை சேர்ந்த பலர் நேரிலும், சமூக வலைதளங்களில் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
பிரபல எழுத்தாளர் இந்திரா செளந்தர்ராஜன் (65) மதுரையில் உள்ள தன் இல்லத்தில் குளியலறையில் வழுக்கி விழுந்து உயிரிழந்தார். இவரது மறைவுக்கு திரையுலகமும், ரசிகர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், நடிகர் டெல்லி கணேஷ் மறைவுக்கம், எழுத்தாளர் இந்திரா சொளந்தரராஜன் மறைவுக்கும் நடிகர் கமல்ஹாசன் இரங்கல் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து டெல்லி கணேஷின் மறைவுக்கு வெளியிட்டுள்ள பிதிவில், " டெல்லி கணேஷ் மறைந்தார் என்ற செய்தி பெரும் துயரத்தை ஏற்படுத்துகிறது.
நகைச்சுவையை நுட்பமாகக் கையாளும் அரிய குணச்சித்திர நடிகர். அவரது இடத்தை ஈடு செய்வது எளிதல்ல. அவரோடு நான் செலவிட்ட தருணங்கள் இனியவை; நினைவில் நிற்பவை.
அண்ணன் கணேஷை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு என ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக்கொள்கிறேன். அவர் மீது பற்று கொண்ட திரையுலக நண்பர்களின் வேதனையைப் பகிர்ந்து கொள்கிறேன்" என்றார்.
தொடர்ந்து, எழுத்தாளர் இந்திரா சௌந்தரராஜன் மறைவுக்கு கமல்ஹாசன் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், " பத்திரிகை வாசகர்கள், தொலைக்காட்சி ரசிகர்கள் எனப் பல தரப்பினரையும் தன் எழுத்துகளால் வசீகரித்த எழுத்தாளர் திரு. இந்திரா சௌந்தரராஜனின் திடீர் மறைவு வருந்தத்தக்கது.
தன் இறுதி நாள் வரை எழுத்துத் துறையில் இடையறாமல் இயங்கி வந்த அவர் இன்று இறுதி ஓய்வு அடைந்திருக்கிறார்.
அவரது குடும்பத்தாருக்கும் வாசகர்களுக்கும் என் இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்" என்றார்.
- எந்த மொழி வேண்டும், எந்த மொழி வேண்டாம் என்பது தமிழர்களுக்கு நன்றாகவே தெரியும்.
- மக்கள் நீதி மய்யத் தொண்டர்கள் தங்களை தகுதி உள்ளவர்களை வளர்த்துக்கொள்ள வேண்டும்.
சென்னை ஆழ்வார்பேட்டையில் மக்கள் நீதி மய்ய தலைவர் கமல்ஹாசன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.
அப்போது அவர் கூறியதாவது:-
நம்மை இணைப்பது தமிழ்மொழி தான். நான் தன்னம்பிக்கையுடன் உயிர்த்திருப்பதற்கு காரணம் தமிழக மக்கள்தான்.
வானுயர்ந்த தமிழ் மொழியை எவராலும் கீழே இறக்கிவிட முடியாது. 20 ஆண்டுகளுக்கு முன்பே அரசியலுக்கு வந்திருந்தால் இன்று நாம் நின்றிருக்கும் இடமே வேறாக இருந்திருக்கும்.
எந்த மொழி வேண்டும், எந்த மொழி வேண்டாம் என்பது தமிழர்களுக்கு நன்றாகவே தெரியும்.
இந்தாண்டு நாடாளுமன்றத்தில் நமது குரல் ஒலிக்கும். அடுத்தாண்டு மக்கள் நீதி மய்யத்தின் குரல் சட்டமன்றத்திலும் ஒலிக்கும்.
மக்கள் நீதி மய்யத் தொண்டர்கள் தங்களை தகுதி உள்ளவர்களை வளர்த்துக்கொள்ள வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- மநீம கட்சிக் கொடியை ஏற்றி வைத்த அவர் பின்னர் தொண்டர்கள் மத்தியில் கமல்ஹாசன் பேசினார்.
- நான் என்ன மொழியில் படிக்க வேண்டும் என்பதை யாரும் சொல்லக் கூடாது.
அங்கு கட்சிக் கொடியை ஏற்றி வைத்த அவர் பின்னர் தொண்டர்கள் மத்தியில் கமல்ஹாசன் பேசினார்.
அப்போது, மத்திய அரசின் மும்மொழிக் கொள்கை தொடர்பாக கருத்து தெரிவித்தார்.
இதுகுறித்து கமல்ஹாசன் கூறியதாவது:-
வானுயர்ந்த தமிழ் மொழியை எவராலும் கீழே இறக்கிவிட முடியாது.
இந்தியை திணிக்க முயன்றவர்களை தடுத்தவர்கள் இன்று நரைத்த தாடியுடன் கூட்டத்தில் இங்கே நின்று கொண்டு இருப்பார்கள். மொழிக்காக உயிரையே தமிழகத்தில் விட்டுள்ளனர்.
பச்சைக்குழந்தைக்கு என்ன வேண்டும் என்று தெரியும். தமிழனுக்கு தெரியாதா? என்ன மொழி வேண்டும், வேண்டாம் என்று. எது தேவை என்று முடிவு செய்யும் அறிவு தமிழனுக்கு உண்டு.
மாணவர்களுக்கு என்ன இஷ்டமோ அதை தான் கற்றுக் கொடுக்க வேண்டும். அதை விட்டு விட்டு, நான் சொல்வதை கற்றுக் கொள்ளவில்லை என்றால் கைச்செலவுக்கு காசு கொடுக்க மாட்டேன் என்று சொல்லும் அரசு எந்த நிலைக்கு தள்ளப்படும் என்பதை சரித்திரம் சொல்லும்.
இது ஒரு நாடு, இதை பிரித்தாள முடியாது. அப்படி நினைப்பவர்கள் எல்லாம் நாட்டை விட்டு செல்ல வேண்டும். இதை நீங்கள் பல மொழிகளில் சொல்ல வேண்டும்.
ஆனால் நான் என்ன மொழியில் படிக்க வேண்டும் என்பதை யாரும் சொல்லக் கூடாது. நான் மொழி போராட்டத்தில் அரைடவுசர் போட்டுக் கொண்டு பங்கேற்ற பையன். இனிமேல் வலியுறுத்த மாட்டேன் என்று மேல் தலைமை வலியுறுத்திய பிறகு அமைதி அடைந்தோம். அதன்பிறகு நான் இந்தி படம் கூட நடித்தேன். ஆனால் எனக்கு ஒரு வார்த்தை கூட இந்தி தெரியாது.
அதுமாதிரி, உங்கள் சாய்ஸ் என்னவென்று தமிழனிடம் விட்டுவிட்டால் சீன மொழி கற்றுக் கொள்ள வேண்டும் என்று ஆசைப்படுவான். அதற்காக ஆவண செய்ய வேண்டியது அரசாக இருக்க வேண்டுமே தவிர அரசியல் செய்யக்கூடாது.
இவ்வாறு அவர் கூறினார்.
