என் மலர்
நீங்கள் தேடியது "fingertip"
பிரசன்னா நடித்துள்ள ‘ஃபிங்கர்டிப்’ தொடர் இரண்டாவது சீசனின் ரிலீஸ் தேதியை படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
கடந்த 2019-ஆம் ஆண்டு ‘ஃபிங்கர்டிப்’ இணையதளத் தொடர் ஜீ5 ஓடிடி தளத்தில் வெளியானது. கிரைம் த்ரில்லராக வெளியான இந்த இணையதளத் தொடர் ரசிகர்களை கவர்ந்து நல்ல வரவேற்பை பெற்றது. இத்தொடரில் அக்ஷரா ஹாசன், அஸ்வின், சுனைனா உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். இத்தொடருக்கு கிடைத்த வரவேற்பை தொடர்ந்து, தற்போது ‘ஃபிங்கர்டிப்’ இரண்டாவது சீசன் உருவாகியுள்ளது.
இக்கதை, வேட்டையாடுபவர்கள், டிஜிட்டல் குற்றங்கள் அல்லது டிஜிட்டல் மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டவர்கள் என ஆறு கதாபாத்திரங்களின் வாழ்க்கையை மையமாக கொண்டு எடுக்கப்பட்டுள்ளது. இதில், பிரசன்னா, ரெஜினா கசாண்ட்ரா, அபர்ணா பாலமுரளி, வினோத் கிஷன், கண்ணா ரவி மற்றும் ஷரத் ரவி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இவர்களுடன் ராஜா கிருஷ்ணமூர்த்தி (கிட்டி), மாரிமுத்து மற்றும் ஹரிணி ஆகியோர் இணைந்து நடித்துள்ளனர்.

ஃபிங்கர்டிப்
இத்தொடரை ஷிவாகர் ஸ்ரீனிவாசன் இயக்கியுள்ளார். ஃபிலிம் க்ரூ புரெடக்ஷன் சார்பில் அருண் குமார் மற்றும் ஜார்ஜ் சி வில்லியம்ஸ் ஆகியோர் தயாரித்துள்ளனர். தீன தயாளன் இசையமைத்துள்ள இத்தொடருக்கு பிரசன்னா ஒளிப்பதிவு செய்ய, ஜி.கே.பிரசன்னா படதொகுப்பு கேற்கொண்டுள்ளார். இத்தொடர் வரும் ஜூன் 17-ஆம் தேதி முதல் ஜீ5-ல் தளத்தில் ஒளிபரப்பப்படும் என்று படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.