என் மலர்
நீங்கள் தேடியது "Poochorithal festival"
- கடந்த மாதம் 12-ந் தேதி பூச்சொரிதல் விழா தொடங்கியது.
- ஏராளமான பக்தர்கள் கோவிலுக்கு வந்து அம்மனுக்கு பூக்களை சாற்றி வழிபட்டனர்.
சமயபுரம் மாரியம்மன் கோவிலில் கடந்த மாதம் 12-ந் தேதி பூச்சொரிதல் விழா தொடங்கியது. அதனை தொடர்ந்து 9-ந் தேதி பங்குனி கடைசி வார ஞாயிற்றுக் கிழமையையொட்டி 5-வது பூச்சொரிதல் விழா நடைபெற்றது.
இதில் திருச்சி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் டிராக்டர்கள் உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் அலங்கரிக்கப்பட்ட அம்மன் படத்தை வைத்து பூக்களை தட்டு மற்றும் கூடைகளில் எடுத்து ஊர்வலமாக சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்கு சென்று அம்மனுக்கு சாற்றி வழிபட்டனர்.
மேலும் பாதயாத்திரையாகவும், ஏராளமான பக்தர்கள் கோவிலுக்கு வந்து அம்மனுக்கு பூக்களை சாற்றி வழிபட்டனர். இதைதொடர்ந்து இந்த ஆண்டுக்கான பூச்சொரிதல் விழா நிறைவு பெற்றது.
- நேற்று இரவு காப்புக்கட்டுதல் நிகழ்ச்சியுடன் வசந்த பெருவிழா தொடங்கியது.
- தினந்தோறும் சிறப்பு அலங்காரத்தில் அம்பாள் வீதி உலா நடக்கிறது.
திருப்பத்தூர் தென்மாப்பட்டு பகுதியில் அமைந்துள்ளது பூமாயி அம்மன் கோவில். இக்கோவிலில் ஆண்டுதோறும் பூச்சொரிதல் விழா சிறப்பாக நடைபெறுவது வழக்கம். இந்தாண்டு 89-வது பூச்சொரிதல் விழா நடைபெற்றது. விழாவையொட்டி காலை முதல் திருப்பத்தூர் சுற்றுவட்டார பகுதியில் உள்ள பல்வேறு பகுதியில் இருந்து பக்தர்கள் அம்பாளுக்கு பூத்தட்டு எடுத்தும், பால்குடம், கரகம், மது எடுத்தும் ஊர்வலமாக வந்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.
தொடர்ந்து பால், சந்தனம், பன்னீர், மஞ்சனம் உள்ளிட்ட 16 விதமான திரவியங்கள் மூலம் அம்பாளுக்கு அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து அம்பாள் சந்தனகாப்பு அலங்காரத்தில் பூக்களால் அலங்கரிக்கப்பட்டு அருள்பாலித்தார்.
இரவு பல்வேறு இடங்களில் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. தொடர்ந்து நேற்று இரவு கொடியேற்றத்துடன் காப்புக்கட்டுதல் நிகழ்ச்சியுடன் வசந்த பெருவிழா தொடங்கியது. விழாவையொட்டி தினந்தோறும் இரவு சிறப்பு அலங்காரத்தில் அம்பாள் எழுந்தருளி வீதி உலா வரும் நிகழ்ச்சி நடக்கிறது. மேலும் பல்வேறு மண்டகபடிதாரர்கள் சார்பில் அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்கார தீபாராதனை நடைபெறுகிறது. 10-ம் நாளன்று காலையில் தீர்த்தவாரி மற்றும் மஞ்சள் நீராட்டு நிகழ்ச்சியும், மாலையில் கோவில் வளாகத்தில் பெண்கள் பொங்கல் வைத்து வழிபடும் நிகழ்ச்சி நடக்கிறது. அன்றிரவு தெப்பத்திருவிழா நடைபெறுகிறது.
- 12-ந் தேதி தீமிதி உற்சவம் நடக்கிறது.
- 14-ந் தேதி விடையாற்றி விழா நடைபெறுகிறது.
திருமருகலில் பிரசித்தி பெற்ற மகாமாரியம்மன் கோவில் உள்ளது.இந்த கோவிலில் ஆண்டுதோறும் வைகாசி திருவிழா நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டு விழா நேற்று கஞ்சி வார்த்தல், பூச்சொரிதல் நிகழ்ச்சியுடன் தொடங்கியது. முன்னதாக திரளான பக்தர்கள் பூக்களை தட்டுகளில் எடுத்து கொண்டு முக்கிய வீதிகளின் வழியாக ஊர்வலமாக சென்று கோவிலை அடைந்தனர்.
பின்னர் அம்மன் பாதத்தில் பூக்களைகொட்டி பூச்சொரிதல் செய்தனர். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். வருகிற 12-ந் தேதி தீமிதி உற்சவமும், 14-ந் தேதி விடையாற்றி விழாவும் நடைபெறுகிறது.இதற்கான ஏற்பாடுகளை விழாக்குழுவினர், கிராம மக்கள் செய்து வருகின்றனர்.
- 14-ந்தேதி பூச்சொரிதல் விழா நடக்கிறது.
- 7-ந்தேதி மாலை பூக்குழி இறங்கும் நிகழ்ச்சி நடக்கிறது.
சிவகங்கை பையூர் பகுதியில் சிவகங்கை நகர் மக்களுக்கு வேண்டும் வரம் தரும் அம்மனாக பிள்ளைவயல் காளியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் ஆண்டுதோறும் பூச்சொரிதல் விழா நடைபெறுவது வழக்கம். இந்தாண்டு 69-வது ஆண்டு திருவிழாவாக வருகிற ஜூலை மாதம் 7-ந்தேதி தொடங்குகிறது.
முன்னதாக காலை 9.15 மணி முதல் 10.15 மணிக்குள் காப்புக்கட்டுதல் மற்றும் கொடியேற்றத்துடன் விழா தொடங்குகிறது. மாலை 5 மணிக்கு தெப்பக்குளத்தில் இருந்து பூக்கரகம் எடுத்து வந்து கோவில் முன்பு பூக்குழி இறங்கும் நிகழ்ச்சி நடக்கிறது. விழாவையொட்டி ஒருவார காலம் அம்மன் தினந்தோறும் பக்தர்களுக்கு பல்வேறு சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலிக்கிறார்.
தொடர்ந்து பக்தர்கள் பால்குடம் எடுத்தல், மாவிளக்கு எடுத்தல், அக்னி சட்டி எடுத்தல், கரும்பு தொட்டில் எடுத்தல் உள்ளிட்ட பல்வேறு நேர்த்திக்கடன் செலுத்தும் நிகழ்ச்சி நடக்கிறது. தொடர்ந்து 14-ந்தேதி பூச்சொரிதல் விழா காலை 10.30 மணி முதல் மதியம் 12 மணிக்குள் அம்மனுக்கு பால் மற்றும் பல்வேறு திரவிய பொருட்கள் மூலம் அபிஷேகம் நடக்கிறது. மாலையில் பூக்களால் அலங்கரிக்கப்பட்டு சந்தனகாப்பு அலங்காரத்தில் அம்பாள் எழுந்தருளி காட்சியளிக்கிறார்.
இரவு முழுவதும் சிவகங்கை நகரில் இருந்து பல்வேறு பகுதியில் இருந்து பெண்கள் மற்றும் பக்தர்கள் பூத்தட்டு எடுத்து ஊர்வலமாக கோவிலுக்கு வந்து பூ காணிக்கை செலுத்தும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.
விழாவிற்கான ஏற்பாடுகளை கொல்லங்குடி கோவில் செயல் அலுவலர் நாராயணி தலைமையில் கோவில் நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.
- சிவகங்கை தெப்பக்குளத்தில் இருந்து பூ கரகம் எடுத்து வந்தனர்.
- அம்மன் சன்னதி முன்பு பூக்குழி இறங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
சிவகங்கை பஸ் நிலையம் எதிரில் உள்ள பிள்ளை வயல் காளி கோவிலில் பூச்சொரிதல் விழா ஒவ்வொரு ஆண்டும் ஆனி மாதம் 8 நாட்கள் நடைபெறும். இந்த ஆண்டும் விழா கடந்த 7-ந்தேதி காப்பு கட்டுதலுடன் தொடங்கியது. இதை தொடர்ந்து அம்மனுக்கு சிறப்பு அபிஷேக அலங்காரம் நடைபெற்றது. சிவகங்கை தெப்பக்குளத்தில் இருந்து பூ கரகம் எடுத்து வந்தனர்.
பின்னர் அம்மன் சன்னதி முன்பு பூக்குழி இறங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதையொட்டி காளியம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் வழிபாடுகள் நடந்தது. ஆனி கடைசி வெள்ளியான நேற்று பூச்சொரிதல் விழா நடைபெற்றது. அம்மனுக்கு பாலாபிஷேகம் மற்றும் அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து அம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார். இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
இதையொட்டி அன்னதானம் வழங்கப்பட்டது. மாலையில் காளியம்மன் சந்தன காப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார். இரவு பூச்சொரிதல் விழா நடைபெற்றது. இதையொட்டி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செல்வராஜ் உத்தரவின் பேரில் சிவகங்கை போலீஸ் சூப்பிரண்டு சிபி சாய் சவுந்தர்யன், இன்ஸ்பெக்டர் கோட்டைச்சாமி ஆகியோர் தலைமையில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.
அப்படி வரும் போது அம்மன் பல்வேறு அவதாரங்கள் எடுத்தது போல் பக்தர்களுக்கு காட்சி தருவார். இந்த காட்சியை காண கண் கோடி வேண்டும். கரூர் பகுதியில் இருந்து 46 பூத்தட்டு ஊர்வலம் கோவிலை அடைந்ததும்.
கொண்டு வந்த பூக்களை கோவிலில் வழங்கி பக்தர்கள் சாமிதரிசனம் செய்வார்கள். அக்னி சட்டி எடுத்தல், அலகு குத்துதல், காவடி எடுத்தல் போன்ற நேர்த்திக்கடன்களை பக்தர்கள் செலுத்துவார்கள். இந்த விழாவை காண பிற மாநிலங்களில் இருந்தும் பல லட்சம் பக்தர்கள் கரூரை நோக்கி படையெடுப்பார்கள்.
முக்கிய நிகழ்ச்சியான கொடை விழா கடந்த 24-ந்தேதி நடந்தது. அன்று பொங்கலிடுதல், முளைப்பாரி, பூந்தட்டு ஊர்வலம், சப்பர வீதிஉலா உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடந்தன. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். இந்த நிலையில் 8-ம் நாள் பூஜையன்று காலை ஹோமங்கள் நடந்தது.
தொடர்ந்து அம்பாளுக்கு நறுமண பொருட்களால் அபிஷேகம், சிறப்பு அலங்காரத்துடன் தீபாராதனை ஆகியவை நடந்தது. இரவில் அம்பாளுக்கு பல்வேறு வண்ண மலர்களால் சிறப்பு புஷ்பாஞ்சலி நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டனர்.