என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "bommai"

    ராதா மோகன் இயக்கத்தில் எஸ்.ஜே.சூர்யா, பிரியா பவானி சங்கர் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘பொம்மை’ பட டிரைலர் வெளியாகி வைரலாகி வருகிறது.
    இயக்குனர் ராதா மோகன் இயக்கத்தில் மிகுந்த எதிர்பார்ப்புகளுடன் உருவாகி உள்ள படம் ‘பொம்மை’. எஸ்.ஜே.சூர்யா கதாநாயகனாக நடிக்கும் இப்படத்தில் அவருக்கு ஜோடியாக பிரியா பவானி சங்கர் நடித்துள்ளார். ஏஞ்சல் ஸ்டுடியோஸ் வழங்கும் இப்படத்தை வி.மருது பாண்டியன், டாக்டர்.ஜாஸ்மின் சந்தோஷ், டாக்டர்.தீபா டி.துரை ஆகியோர் தயாரித்துள்ளனர். யுவன் சங்கர் ராஜா இசையமைக்கும் இப்படத்தில் சாந்தினி, டவுட் செந்தில், ஆரோல் சங்கர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். 

    பொம்மை
    பொம்மை

    இந்நிலையில் பெரும் எதிர்ப்பார்ப்பில் உருவாகி இருக்கும் எஸ்.ஜே.சூர்யாவின் 'பொம்மை' படத்தின் டிரைலர் தற்போது வெளியாகி உள்ளது. இந்த டிரைலரை நடிகர் சிவகார்த்திகேயன் தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். விறுவிறுப்பாக இடம்பெற்றிருக்கும் இந்த டிரைலர் தற்போது வைரலாகி வருகிறது.


    லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல், விஜய் சேதுபதி, பகத் பாசில் நடிப்பில் நாளை வெளியாக இருக்கும் படத்தின் புதிய தகவல் வெளியாகியுள்ளது.
    லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி நாளை (03.06.2022) வெளியாக இருக்கும் திரைப்படம் 'விக்ரம்'. கமல்ஹாசன் கதாநாயகனாக நடிக்கும் இப்படத்தில் விஜய் சேதுபதி, பகத் பாசில், நரேன், அர்ஜுன் தாஸ், காளிதாஸ் ஜெயராம் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இதில் சூர்யா கவுரவ வேடத்தில் நடித்துள்ளார். இப்படத்தை கமல்ஹாசன் தனது சொந்த தயாரிப்பு நிறுவனமான ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் மூலம் தயாரிக்கிறார். அனிருத் இசையமைக்கும் இப்படத்திற்கு கிரிஷ் கங்காதரன் ஒளிப்பதிவு செய்துள்ளார். 

    பொம்மை
    பொம்மை

    விக்ரம் திரைப்படம் நாளை திரையரங்குகளில் வெளியாகவுள்ள நிலையில் இயக்குனர் ராதா மோகன் இயக்கத்தில் எஸ்.ஜே.சூர்யா, பிரியா பவானி சங்கர் நடித்துள்ள ‘பொம்மை’ படத்தின் டிரைலரை உலகம் முழுக்க 600 திரை அரங்குகளில் 'விக்ரம்' படத்துடன் வெளியாகிறது என்று படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

    ‘பொம்மை’ படத்தின் டிரைலரை நேற்று சிவகார்த்திகேயன் வெளியிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
    ×