என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "vijay babu"

    • இந்த கூட்டத்தில் மூன்றாண்டுகளுக்கு ஒரு முறை புதிய ஆட்சிக்குழு உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்படுவது உண்டு .
    • அவரது பின் தொடர்ச்சியாக நடிகர் சித்திக் தேர்தலில் போட்டியிட்டார்.

    கோகுலம் கருத்தரங்க மையத்தில் நேற்று மாலை நடந்த அம்மா அமைப்பின் வருடாந்திர பொதுக்குழு கூட்டத்தில் மலையாள நடிகர் சங்கம் தேர்தல்  நடைபெற்றது . இந்த கூட்டத்தில் மூன்றாண்டுகளுக்கு ஒரு முறை புதிய ஆட்சிக்குழு உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்படுவது உண்டு . இந்நிகழ்வில் பங்கேற்பதற்காக திரைப்பிரபலங்கள் பல நாடுகளில் இருந்து வந்து கலந்துக் கொண்டனர்.

    மோகன்லால், மஞ்சு வாரியர், விஜய் பாபு, லால், இந்திரஜித், டொவினோ தாமஸ், கிரேஸ் ஆண்டனி, மதுபால் போன்றவர்கள் கலந்துக் கொண்டனர்,

    இம்முறை மோகன்லால் எதிர்ப்பின்றி அம்மா அமைப்பின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

    கடந்த எட்டு முறை அம்மா அமைப்பின் பொதுச் செயலாளராக இருந்த நடிகர் பாபு தானாக முன்வந்து தனது பதவியை நிறைவு செய்ததுடன் இனி தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என்று அறிவித்ததை அடுத்து அவரது பின் தொடர்ச்சியாக நடிகர் சித்திக் தேர்தலில் போட்டியிட்டார். இவரை எதிர்த்து நடிகை குக்கு பரமேஸ்வரன் , உண்ணி சிவபால் ஆகியோர் போட்டியிட்டனர் . இந்த தேர்தலில் நடிகர் சித்திக் , நடிகர் சங்கத்தின் அதிகாரப்பூர்வ வேட்பாளராக போட்டியிட்டு வெற்றி பெற்றார் . இவரை எதிர்த்துப் போட்டியிட்ட குக்கு பரமேஸ்வரன் மற்றும் உண்ணி சிவபால் ஆகியோர் தோல்வி அடைந்தனர்.

     

    அத்துடன் கடந்த காலங்களில் நான்கு முறை செயற்குழு உறுப்பினராக பதவி வகித்தவர் நடிகை குக்கு பரமேஸ்வரன். துணை தலைவர் பதவிக்கு போட்டியிட்ட நடிகை மஞ்சு பிள்ளை தோல்வி அடைந்தார் . அனூப் சந்திரன், ஜெயன் சேர்த்தலா ஆகியோர் தலைவர் பதவிக்கு போட்டியிட பத்திரிக்கை தாக்கல் செய்து இருந்தாலும், நடிகர் மோகன்லால் தேர்தலில் போட்டியிட தயாரானவுடன் அவர்கள் தங்களது மனுவை வாபஸ் பெற்றது குறிப்பிடத்தக்கது.

    நடிகர் உண்ணி முகுந்தன் இந்த அமைப்பின் பொருளாளர் பதவிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். நடிகர் இடைவேளை பாபு கடந்த 2018 -ம் ஆண்டு முதல் தொடர்ந்து பொதுச் செயலாளர் பதவி வகித்து வருகிறார். இம்முறை நடந்த தேர்தலில் நடிகர்கள் ஜெகதீஷ் மற்றும் ஜெயன் சேர்த்தலா ஆகியோர் துணைத் தலைவர்களாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.

    நடிகர் சங்கத்தின் தலைவராக மோகன்லால் தொடர்ந்து  மூன்றாம் முறை வெற்றிப் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    நடிகை கற்பழிப்பு புகாரால் வெளிநாட்டுக்கு தப்பி சென்ற நடிகர் விஜய் பாபு 39 நாட்களுக்கு பிறகு இன்று கேரளா திரும்பினார்.
    கேரளாவை சேர்ந்த நடிகரும், சினிமா தயாரிப்பாளருமான விஜய்பாபு மீது மலையாள நடிகை ஒருவர் பாலியல் புகார் கூறியிருந்தார். விஜய்பாபு, தன்னை வீட்டுக்கு அழைத்து பாலியல் பலாத்காரம் செய்ததாக புகாரில் கூறியிருந்தார். இதையடுத்து நடிகர் விஜய்பாபு, அந்த நடிகையை பற்றி சமூக ஊடகங்களில் கருத்து பதிவிட்டார்.

    இது தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விஜய்பாபுவை விசாரணைக்கு ஆஜராகுமாறு சம்மன் அனுப்பினர். போலீசார் தேடுவதை அறிந்ததும் விஜய்பாபு, வெளிநாட்டுக்கு தப்பி சென்றார். அதன்பின்பு அவர் நாடு திரும்பவில்லை.  39 நாட்களுக்கு பிறகு இன்று அவர் திரும்பினார் . கடந்த ஏப்ரல் மாதம் 22ஆம் தேதி தலைமறைவான விஜய்பாபு அதன்பின்பு கேரளா திரும்பவில்லை. அங்கிருந்தபடியே அவர் முன்ஜாமீன் கேட்டு மனு தாக்கல் செய்தார்.
     இந்த மனுவை விசாரித்த கோர்ட்டு அவர் கேரளா திரும்பி விசாரணை அதிகாரிகள் முன்பு ஆஜராகும்படி உத்தரவிட்டது. மேலும் இந்த வழக்கை நாளை விசாரணைக்கு எடுத்து கொள்வதாகவும், அதுவரை விஜய்பாபுவை கைது செய்ய கூடாது எனவும் கூறியது.

    விஜய் பாபு
    விஜய் பாபு

    இதையடுத்து நடிகர் விஜய்பாபு வெளிநாட்டில் இருந்து 39 நாட்களுக்கு பிறகு இன்று காலை 9.30 மணிக்கு கொச்சி விமான நிலையம் வந்தார்.  நாளை அவர் போலீஸ் அதிகாரிகள் முன்பு விசாரணைக்கு ஆஜராகிறார். இது பற்றி அவர் கொச்சி விமான நிலையத்தில் நிருபர்களிடம் கூறியதாவது:-  இந்த வழக்கில் வேண்டுமென்றே என்னை சிக்கவைத்து உள்ளனர். வழக்கு விசாரணையின் போது நான் நிரபராதி என்பதை நிரூபிப்பேன் என்றார்.
    ×