என் மலர்
நீங்கள் தேடியது "ஹேர் மாஸ்க்"
- ஆண், பெண் இருபலருக்கும் பொதுவான பிரச்சனைகளில் ஒன்று பொடுகு.
- தலையில் ஏற்படும் பொடுகு பிரச்சனையை எப்படி சரிசெய்வது.
பொடுகு பிரச்சனை என்பது ஆண், பெண் என இருபலருக்கும் ஏற்படும் பொதுவான பிரச்சனைகளில் ஒன்று. இந்த பிரச்சனையைச் சரி செய்ய பல முயற்சிகள் மற்றும் முறைகளைப் பின்பற்றியும் அது சரியாகவில்லை. தலையில் ஏற்படும் பொடுகு பிரச்சனையை எப்படி சரிசெய்வது என பார்க்கலாம். இந்த பொடுகு பிரச்சனை என்பது எளிதில் தீர்க்க முடியாது. மிகவும் அதிகமாக இருந்தால் இந்த முறையை விடாமல் சில நாட்கள் பயன்படுத்தினால் மட்டுமே சரியாகும்.
தேவையான பொருள்கள்:
மருதாணி இலை – 1 கப்
எலுமிச்சை பழம் – 1
தயிர் – 2 ஸ்பூன்
முதலில் எலுமிச்சை பழத்தை எடுத்து அதை இரண்டாக வெட்டி நன்றாகப் பிழிந்து கொள்ள வேண்டும். அந்த எலுமிச்சை சாற்றை இரண்டு ஸ்பூன் அளவிற்கு எடுத்துக் கொள்ள வேண்டும். அத்துடன் சுத்தமான தயிர் இரண்டு ஸ்பூன் சேர்த்துக் கொள்ள வேண்டும். மருதாணி இலையை அரைத்து நான்கு ஸ்பூன் அளவிற்குச் சேர்த்துக் கொள்ள வேண்டும். இவை அனைத்தையும் நன்றாக பேஸ்ட் போல் கலக்கிக் கொள்ள வேண்டும்.
இந்த பேக்கை முதலில் தலையில் தேய்த்து ஐந்து நிமிடங்கள் மசாஜ் செய்ய வேண்டும். அதன்பிறகு அப்படியே 15 முதல் 30 நிமிடங்கள் வரை ஊற வைக்க வேண்டும். பின்னர், அமிலம் மற்றும் ரசாயனம் அதிகம் சேர்க்காத ஷாம்பு அல்லது சீயக்காய் மற்றும் அரப்பு போன்றவை கூட பயன்படுத்தலாம்.
இதை வாரத்தில் இரண்டு அல்லது மூன்று நாட்களுக்குப் பயன்படுத்தினால் விரைவில் பொடுகுகள் முழுவதுமாக போகும் எந்த விதமான பிரச்சனைகளும் இருக்காது.
எலுமிச்சை பழத்தில் சிட்ரஸ் அமிலம் உள்ளதால் அது கிருமிநாசினியான பண்புகள் கொண்டது அது தலையில் நோய்த் தொற்றுகள் இருந்தால் குணமாக்கும். பொடுகு பிரச்சனையைச் சரிசெய்வதற்கு உதவியாக இருக்கும். தலையில் பித்தம் போன்ற பிரச்சனைகள் இருந்தாலும் சரிசெய்யும்.
தயிரை தலைமுடியில் தேய்ப்பதால் தலையில் உள்ள முடிகளில் பொலிவு இல்லாமல் மற்றும் முடி அடர்த்தி குறைவாக இருந்தாலும் இது குணமாக்கித் தரும். தலைமுடி மிகவும் கருமையாகவும் மற்றும் பெலிவுடனும் வைத்து கொள்ளும்.
மருதாணி உடலுக்கு ஆரோக்கியம் தரும் ஒரு மருத்துவம் குணம் கொண்டது. இதை தலைக்குப் பயன்படுத்தினால் தலையில் உள்ள சூட்டை முழுவதுமாக நீக்கி குளிர்ச்சியாக வைத்திருக்கும். பித்தம் போன்ற பல பிரச்சனைகளை குணப்படுத்தும்.
இந்த மூன்றையும் பயன்படுத்தி ஒரு ஆரோக்கியமான ஹேர் பேக் தயார் செய்து பயன்படுத்தினால் பொடுகு மற்றும் தலையில் முடி உதிர்வு மற்றும் அடர்த்தி குறைவு என அனைத்து பிரச்சனைகளை சரிசெய்ய முடியும்.
- வாரம் ஒரு முறை ஹேர் பேக் அப்ளை செய்வது அவசியம்.
- முடியின் வேர்களை உறுதியாக்கும்.
தலைமுடி உதிர்வுக்கு பல காரணங்களை இருக்கலாம். பலரும் முடி உதிர்வு பிரச்சனையால் அவதிப்படுகின்றனர். ஹார்மோன் சமநிலையின்மை, பிசிஓடி, பிசிஓஎஸ் பிரச்னை, தலையில் அதிக கெமிக்கல் பயன்பாடு என இந்த தலைமுடி உதிர்வுக்கு பல காரணங்களை அடுக்கலாம். பொதுவாக கொய்யா பழத்தில் சத்துக்கள் அதிகம் இருப்பதால் அதை நம் உணவில் சேர்த்து வருவது வழக்கம். அப்படி சத்துக்களை அள்ளித்தரும் கொய்யா இலையை வைத்து இன்று நாம் சூப்பரான ஹேர் பேக் தயாரிப்பது எப்படி என்று பார்க்கலாம் வாங்க. வாரம் ஒரு முறை ஹேர் பேக் அப்ளை செய்வது அவசியம். கொய்யா இலை ஹேர் பேக்கை அரைத்து முடியில் தடவுங்கள். நன்கு ஊறியதும் தலைக்கு குளித்துவிடுங்கள். இது முடியின் வேர்களை உறுதியாக்கும். இதனால் முடி உதிர்வு பிரச்னையும் இருக்காது.
தேவையான பொருட்கள்:
கொய்யா இலை – 1 கைப்பிடி
முட்டை – 1
கடுகு எண்ணெய் – 2 டீஸ்பூன்
செய்முறை:
இந்த ஹேர் பேக் தயாரிப்பதற்கு ஒரு கைப்பிடி கொய்யா இலையை கழுவி சுத்தம் செய்து மிக்சி ஜாரில் போட்டு கொள்ள வேண்டும். பின்னர் அதோடு ஒரு முட்டை மஞ்சள் கருவுடன் சேர்த்து போட்டு கொள்ள வேண்டும். மேலும் அதில் 2 டீஸ்பூன் கடுகு எண்ணெய் ஊற்றி நன்றாக பேஸ்ட் பக்குவத்திற்கு அரைத்து கொள்ள வேண்டும்.

இப்போது நாம் தயார் செய்து வைத்துள்ள இந்த பேக்கை நம் உச்சந்தலை முதல் முடி முழுவதும் அப்ளை செய்து கொள்ள வேண்டும். அதன் பின்னர் ஒரு 30 நிமிடங்கள் கழித்து மைல்டான ஷாம்பு பயன்படுத்தி தலைமுடியை வாஷ் செய்து கொள்ள வேண்டும். இந்த ஹேர்பேக்கை வாரத்தில் ஒரு முறை என்ற கணக்கில் 3 மாதங்கள் தொடர்ந்து பயன்படுத்தி வந்தால் புதிதாக முடி வளர உதவியாக இருக்கும். அடர்த்தியாகவும் முடி கருமையாகவும் வளரும்.
- சிறு வயதினருக்கு கூட முடி கொட்டும் பிரச்சினை ஏற்படுகிறது.
- ஆலிவ் ஆயில் நிறைய மருத்துவ குணங்களைக் கொண்டது.
பெண்ணுக்கும், ஆணுக்கும் முடிகொட்டும் பிரச்சினை என்பது பெரும் பிரச்சினையாக உள்ளது. அதிலும் ஆண்களுக்கு முடி கொட்டி வழுக்கை வந்துவிட்டால் தன்னம்பிக்கை இழந்து அதனால் மிகவும் வறுத்த படுகிறார்கள். தற்சமயம் சிறு வயதினருக்கு கூட முடி கொட்டும் பிரச்சினை ஏற்படுகிறது.
எந்த பிரச்சினையாக இருந்தாலும் சமாளிக்க முடியும். ஆனால் தலை முடி உதிர்வதை தடுப்பதும், அதனால் தலையில் வழுக்கை ஏற்படுவதையும் நம்மால் சமாளிக்கவே முடியாது.
அவ்வாறு முடி உதிர்ந்து வழுக்கை ஏற்பட்ட அந்த இடத்தில் எவ்வாறு மீண்டும் முடி வளர வைப்பது என்பது பற்றி பார்க்கலாம் வாங்க...

வெங்காயம் ஹேர் பேக்
சின்ன வெங்காயத்தை நன்ற அரைத்து பேஸ்டாக்கிக் கொள்ளுங்கள். பின்னர் அந்த பேஸ்டை உங்கள் தலையில் நன்கு மசாஜ் செய்து தலையில் நன்கு படும் படி ஊற வைக்க வேண்டும். அரைமணிநேரம் கழித்து ஷாம்பூ போட்டு தலையை அலசுங்கள். இவ்வாறு செய்வதன் மூலம் முடி உதிர்ந்து வழுக்கை ஏற்பட்ட இடத்தில் மீண்டும் முடி வளர வாய்ப்புள்ளது.

ஆலிவ் ஆயில் மசாஜ்
ஆலிவ் ஆயில் நிறைய மருத்துவ குணங்களைக் கொண்டது. இதனைத் தொடர்ந்து தலையில் தேய்த்து வர, நல்ல முன்னேற்றம் இருக்கும்.
ஆலிவ் ஆயில்- 1 டேபிள் ஸ்பூன்
தேன்- 1 டேபிள் ஸ்பூன்
பட்டை பொடி- 1 டேபிள் ஸ்பூன்
இதை நன்றாக கலந்து லேசாக சூடாக்கி கொள்ள வேண்டும். இந்த பேஸ்ட்டை தலையில் தடவி மசாஜ் செய்து அரை மணி நேரம் விட்டு விட வேண்டும். பிறகு மைல்டு சாம்பு கொண்டு தலைமுடியை அலசி விடுங்கள்.

முட்டை ஹேர்மாஸ்க்:
முட்டையின் மஞ்சள் கருவில் ரத்த மருத்துவ குணங்கள் உள்ளது. ஒரு முட்டையை எடுத்துக்கொள்ளுங்கள். அதில் உள்ள மஞ்சள் கரு மற்றும் வெள்ளைக் கருவை தனித்தனியாக பிரித்துக்கொள்ளுங்கள். பின்னர் மஞ்சள் கருவில் ஒரு டீ ஸ்பூன் ஆலிவ் ஆயில் மற்றும் கொஞ்சம் லெமன் ஜூஸ் சேர்த்து நன்கு கலக்கி கொள்ள வேண்டும்.
இதனை தலையில் தேய்த்து மசாஜ் செய்து செய்து பின்னர் தலைக்கு குளித்து விட வேண்டும். இவ்வாறு செய்வதன் மூலமும் வழுக்கை விழுந்த இடத்தில் மீண்டும் முடி வளர வாய்ப்புள்ளது.
- சுட்டெரிக்கும் கோடைக்காலங்களில் முடி உதிர்வு, முடி வறட்சி போன்ற எத்தனையோ பிரச்சனைகளை சந்திக்க நேரிடும்.
- கேரட்டின் ஆரோக்கிய நன்மைகளைப் பெற, மாஸ்க் வடிவில் நேரடியாக உங்கள் தலைமுடியில் தடவி வரலாம்.
ஆண்கள், பெண்கள் என எந்த பாரபட்சமும் இல்லாமல் அனைவரும் சந்திக்கும் ஒரு தொல்லை, முடி உதிர்வு. குறிப்பாக, இந்த சுட்டெரிக்கும் கோடைக்காலங்களில் முடி உதிர்வு, முடி வறட்சி போன்ற எத்தனையோ பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். அந்தவகையில், கூந்தலை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள இந்த கேரட் ஹேர் மாஸ்கை ஒரு முறை பயன்படுத்திப் பாருங்கள்.
உடலில் ஊட்டச்சத்து குறைவாக இருந்தால்தான், தலைமுடி ஆரோக்கியத்தை இழக்கும். எனவே, அதற்கேற்றவாரு செயற்கை பொருட்களைப் பயன்படுத்தாமல், நாம் வீட்டில் இருந்தப்படியே கூந்தலை கவனிப்பது மிகவும் அவசியம். கேரட்டில் வைட்டமின் ஏ சத்து அதிகம் உள்ளதால், இது உங்கள் தலை முடி ஆரோக்கியத்திற்கு பெரிதும் உதவுகிறது. மேலும், இது உங்கள் தலைமுடியின் வேர்களுக்கு இரத்த ஓட்டத்தை மேம்படுத்தவும் உதவுகிறது. நல்ல முடி வளர்ச்சியைத் தூண்டவும் கேரட் உதவும். ஒருவேளை உங்களுக்கு கேரட் சாப்பிட பிடிக்கவில்லை என்றால், கவலைப்பட வேண்டாம். கேரட்டின் ஆரோக்கிய நன்மைகளைப் பெற, மாஸ்க் வடிவில் நேரடியாக உங்கள் தலைமுடியில் தடவி வரலாம். இது அவ்வளவு ஆரோக்கிய நன்மைகளைத் தரும்.

கேரட் மாஸ்க் செய்ய தேவையானப் பொருட்கள்:
கேரட் – 1 அல்லது 2
வாழைப்பழம் – 1
தயிர் – மூன்று டேபிள் ஸ்பூன்
பாதாம் எண்ணெய் – 1 டேபிள் ஸ்பூன்
தயாரிப்பு மற்றும் பயன்படுத்தும் முறை:
முதலில் கேரட்டுகளின் தோல்களை சீவி, சிறு துண்டுகளாக நறுக்கி, மிக்ஸி ஜாரில் போட்டு அரைக்க வேண்டும். பின்னர் வாழைப்பழத்தை உரித்து, அதனையும் ஜாரில் சேர்த்து மென்மையாக அரைக்க வேண்டும். இறுதியாக அந்தக் கலவையில், தயிர் மற்றும் பாதாம் சேர்த்து தலை முடியில் நன்றாக தடவ வேண்டும். பின்னர் 20 நிமிடங்கள் கழித்து தலைக்குக் குளிக்க வேண்டும். கோடைக்காலம் முழுவதும் வாரம் ஒருமுறை தொடர்ந்து இதனை செய்து வந்தால், கூந்தல் ஆரோக்கியமாக இருக்கும்.
இந்த கேரட் மாஸ்க், உங்கள் முடி வறட்சி ஆகாமல் தடுக்கும். அதேபோல் உச்சந்தலையில் வெப்பத்தால் ஏற்படும் வறட்சியை போக்கி, பொடுகை நீக்கும். மேலும் கூந்தலை மென்மையாகவும், பளபளப்பாகவும் வைத்துக்கொள்வதோடு, முடி உதிராமாலும் பாதுகாக்கும்.
- ஆளிவிதை ஜெல்லை ஹேர் மாஸ்க் அல்லது கண்டிஷனராகப் பயன்படுத்தலாம்.
- ஆளிவிதைகளில் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் நிறைந்து காணப்படுகிறது.
சருமம் மற்றும் முடி ஆரோக்கியத்தை மேம்படுத்த ஆளிவிதை ஜெல் பெரிதும் உதவுகிறது. இந்த ஜெல்லை பயன்படுத்து முறைகள் குறித்து பார்க்கலாம்.
இன்றைய காலகட்டத்தில் மோசமான வாழ்க்கை முறை, ஆரோக்கியமற்ற உணவுமுறைகள் போன்றவற்றால் பல்வேறு பிரச்சனைகளை சந்தித்து வருகிறோம். இதில் சருமம் மற்றும் முடி சார்ந்த பிரச்சனைகளும் அடங்கும். முடி வறட்சி, முடி உதிர்தல், முடி உடைதல் போன்ற பிரச்சனைகள் ஏற்படலாம்.

இயற்கையான பொருட்களை தேர்வு செய்து பயன்படுத்துவதன் மூலம் முடி ஆரோக்கியத்தை மேம்படுத்தலாம். இதற்கு ஆளிவிதை ஜெல் பெரிதும் உதவுகிறது
ஆளி விதைகள் உடல் நலத்தைக் காப்பது மட்டுமல்லாமல், அழகு மற்றும் ஆரோக்கியத்திற்கும் நன்மை பயக்கும் வகையில் உதவுகிறது. இதில் வைட்டமின் பி மற்றும் ஈ, மக்னீசியம், இரும்பு மற்றும் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் போன்றவை நிறைந்துள்ளது. இவை முடி மற்றும் சரும ஆரோக்கியத்தை கணிசமாக மேம்படுத்த உதவுகிறது.

ஆளிவிதை ஜெல்லின் நன்மைகள்
ஆளி விதை ஜெல் மயிர்க்கால்களுக்கு ஊட்டமளிப்பதன் மூலம் முடியை வேகமாகவும், நீளமாகவும் வளர உதவுகிறது. இதில் உள்ள வைட்டமின் ஈ ஊட்டச்சத்துக்கள் உச்சந்தலையில் ஊட்டச்சத்தை அளிக்கவும், ஃப்ரீ ரேடிக்கல் சேதத்தை குறைக்கவும் உதவுகிறது.
இதற்கு ஆளிவிதை ஜெல்லை முடிக்கு பயன்படுத்தும் முன்னும், பின்னும் முடி வளர்ச்சியைக் கண்காணித்து வித்தியாசத்தைக் கவனிக்கலாம். ஆளிவிதை ஜெல்லை ஹேர் மாஸ்க் அல்லது கண்டிஷனராகப் பயன்படுத்தலாம்.
உச்சந்தலை வீக்கத்தைக் குறைக்க
ஆளிவிதைகளில் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் நிறைந்து காணப்படுகிறது. மேலும், இதில் அழற்சி எதிர்ப்புப் பண்புகள் நிறைந்துள்ளது. இவை அழற்சி உறுப்பு மாற்றத்தைத் தடுக்க உதவுவதாக ஆராய்ச்சியில் கூறப்பட்டுள்ளது. எனவே, ஆளிவிதை ஜெல்லை உச்சந்தலையில் பயன்படுத்துவது உச்சந்தலையில் ரத்த ஓட்டத்தை மேம்படுத்த உதவுகிறது.

சுருள் முடிக்கு ஆளிவிதை ஜெல்
ஆளிவிதைகளில் உள்ள வைட்டமின் ஈ ஒரு பிரபலமான ஆக்ஸிஜனேற்ற மாய்ஸ்சரைசராக செயல்படுகிறது. இது முடிக்கு தீங்கு விளைவிக்கக் கூடிய ஃப்ரீ ரேடிக்கல்களை எதிர்த்துச் செயல்பட்டு சுருள் முடியை நிர்வகிக்க உதவுகிறது. எனவே இது இயற்கையாகவே சுருள் முடிக்கு மிகுந்த நன்மை பயக்கும். சுருள் முடிகளின் ஆரோக்கியத்தை மேம்படுத்த ஆளிவிதை ஜெல்லைப் பயன்படுத்தலாம்.
நரைமுடியை தடுக்கிறது
ஆளிவிதைகளில் வைட்டமின் ஈ, மெக்னீசியம், மாங்கனீசு போன்ற ஊட்டமளிக்கும் ஊட்டச்சத்துக்கள் நிறைந்திருப்பதால், இது ஃப்ரீ ரேடிக்கல்களால் ஏற்படும் சேதத்தை குறைக்க உதவுகிறது. இது முடி உதிர்தல், முடி முதுமை அடைவது, முடி நரைத்தல் போன்ற பிரச்சனைகளைத் தடுக்கிறது.
செம்பருத்தி ஹேர் மாஸ்க்
செம்பருத்தி இலை அல்லது பூ - 4
தேங்காய் எண்ணெய் - 2 தேக்கரண்டி
தண்ணீர் சேர்த்து செம்பருத்தி இலை அல்லது பூக்களை நன்றாக அரைக்கவும். அதனுடன் தேங்காய் எண்ணெய் கலந்து தலைக்கு மசாஜ் செய்யவும். 2 மணி நேரம் கழித்து வெதுவெதுப்பான நீரில் தலைக்கு குளிக்கவும்.
வெந்தயம் மாஸ்க்
வெந்தயம் - ¼ தேக்கரண்டி
தயிர் - 1 தேக்கரண்டி
நெல்லிக்காய் - 1
கறிவேப்பிலை - 1 கைப்பிடி அளவு
வெந்தயம், தயிர், நெல்லிக்காய், கறிவேப்பிலை அனைத்தையும் தண்ணீர் சேர்த்து அரைத்து இரவு முழுவதும் ஊறவைக்கவும். காலையில் தலையில் தடவி, 1 மணி நேரம் கழித்து வெதுவெதுப்பான தண்ணீரில் தலைக்கு குளிக்கவும்.
எலுமிச்சை மாஸ்க்
தேங்காய் எண்ணெய் - ½ கப்
எலுமிச்சம் பழச்சாறு - 1 தேக்கரண்டி
வெதுவெதுப்பான தேங்காய் எண்ணெய்யில் எலுமிச்சை சாறு கலந்து, தலையில் தடவ வேண்டும். 10 முதல் 15 நிமிடங்கள் மசாஜ் செய்து, 30 நிமிடம் ஊற வைத்து, பின்பு வெதுவெதுப்பான நீரில் தலைக்கு குளிக்கவும்.
கொத்தமல்லி மாஸ்க்
கொத்தமல்லி இலை - 1 கப்
விளக்கெண்ணெய் - 3 மேசைக்கரண்டி
கொத்தமல்லியை அரைத்து, அதில் விளக்கெண்ணெய் ஊற்றி கலக்க வேண்டும். அதைத் தலையில் தடவி 15 நிமிடம் ஊற வைத்துக் குளித்தால் நல்ல பலன் கிடைக்கும்.
தயிர் மாஸ்க்
தயிர் - 1 கப்
எலுமிச்சம் பழச்சாறு - 1 மேசைக்கரண்டி
தயிரில் எலுமிச்சம் பழச்சாறு கலந்து, தலையில் தடவி 45 நிமிடம் ஊற வைக்க வேண்டும். பின்பு குளிர்ந்த நீரில் தலைக்கு குளிக்கவும்.
வேப்பிலை மாஸ்க்
வேப்பிலை - 1 கைப்பிடி
மிளகுத் தூள் - 1 சிட்டிகை
வெந்தயப் பொடி - ¼ தேக்கரண்டி
கற்பூரம் - ¼ தேக்கரண்டி
எலுமிச்சம் பழச்சாறு - ¼ தேக்கரண்டி
வேப்பிலையை அரைத்து அதில் மிளகுத்தூள், வெந்தயப் பொடி, கற்பூரம், எலுமிச்சம் பழச்சாறு சேர்த்துக் கலக்க வேண்டும். இந்தக் கலவையைத் தலையில் தடவி, 30 நிமிடம் ஊற வைத்து, குளிர்ச்சியான நீரில் குளிக்க வேண்டும்.