என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "விஜயேந்திரா"

    • வருணா பா.ஜனதாவின் கோட்டை.
    • கர்நாடக சட்டசபை தேர்தல் களம் சூடுபிடிக்க தொடங்கி உள்ளது.

    பெங்களூரு :

    கர்நாடக சட்டசபை தேர்தல் களம் சூடுபிடிக்க தொடங்கி உள்ளது. அரசியல் கட்சியினர் பம்பரம் போல சுழன்று வாக்கு சேகரித்து வருகிறார்கள். பா.ஜனதா ஆட்சியை தக்க வைக்கவும், காங்கிரஸ், ஜனதாதளம்(எஸ்) கட்சிகள் மீண்டும் ஆட்சியை பிடிக்க தீவிர முயற்சி மேற்கொண்டு வருகிறது. காங்கிரசின் முதல்-மந்திரி வேட்பாளர் என கருதப்படும் சித்தராமையா, மைசூரு மாவட்டம் வருணா தொகுதியில் போட்டியிட உள்ளார்.

    இதனால், சித்தராமையாவை வீழ்த்த பா.ஜனதா, ஜனதாதளம்(எஸ்) கட்சியினர் தீவிர முயற்சி மேற்கொண்டு வருகிறார்கள். சித்தராமையாவுக்கு எதிராக பலமான வேட்பாளரை நிறுத்த அக்கட்சிகள் ஆலோசித்து வருகிறது. பா.ஜனதா சார்பில் எடியூரப்பாவின் மகன் விஜயேந்திரா நிறுத்தப்படலாம் என தகவல் வெளியானது. ஆனால், எடியூரப்பா இதனை மறுத்துள்ளார். விஜயேந்திரா வருணாவில் போட்டியிட மாட்டார் என அவர் தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து விஜயேந்திரா கூறுகையில், வருணா பா.ஜனதாவின் கோட்டை. அங்கு பா.ஜனதா சார்பில் யார் போட்டியிட்டாலும் 30 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவார்கள். வருணாவில் சித்தராமையாவை விட பா.ஜனதாவுக்கு அதிக செல்வாக்கு உள்ளது. இதை யாரும் உடைக்க முடியாது. வருணாவில் என்னை போட்டியிடும்படி கட்சி மேலிடம் கூறினால், கட்டாயம் போட்டியிடுவேன். ஆனால் எனது தந்தை, சிகாரிப்புரா தொகுதியில் போட்டியிட வேண்டும் என்று விரும்புகிறார். ஆனால் நான் எங்கு போட்டியிட வேண்டும் என்பதை கட்சி மேலிடம் தான் முடிவு செய்யும் என்றார்.

    • கர்நாடகத்தின் எதிர்காலத்தை தீர்மானிக்கும் தேர்தல் இது.
    • இந்தியாவை காங்கிரஸ் கட்சி சுமார் 60 ஆண்டுகள் ஆட்சி செய்தது.

    சிவமொக்கா :

    முன்னாள் முதல்-மந்திரி எடியூரப்பாவின் மகன் விஜயேந்திரா. கர்நாடக பா.ஜனதா துணை தலைவராக இருக்கும் இவர், சிகாரிப்புரா தொகுதி பா.ஜனதா வேட்பாளராகவும் உள்ளார். இந்த நிலையில் நேற்று விஜயேந்திரா சிவமொக்காவில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    சுதந்திரத்திற்கு பிறகு இந்தியாவை காங்கிரஸ் கட்சி சுமார் 60 ஆண்டுகள் ஆட்சி செய்தது. அந்த 60 ஆண்டுகளில் நாடு எந்த வளர்ச்சியும் அடையவில்லை. மோடி பிரதமரான பிறகு இந்தியாவின் பாதையையே மாற்றிவிட்டார். இன்று உலக நாடுகள் இந்தியாவை திரும்பி பார்க்கிறது. கொரோனா காலத்தில் பிரதமர் மோடி சிறப்பாக பணியாற்றி, மக்களை பாதுகாத்தார். கொரோனா காலத்தில் ராகுல்காந்தி பிரதமராக இருந்திருந்தால் இலங்கை மற்றும் பாகிஸ்தானுக்கு முன்பாக நம் இந்தியா திவாலாகி இருக்கும்.

    கர்நாடகத்தின் எதிர்காலத்தை தீர்மானிக்கும் தேர்தல் இது. நாட்டின் வளர்ச்சியில் கர்நாடகத்தின் பங்கு முக்கியமானது. மாநில மக்கள் பா.ஜனதாவுக்கு ஆசி வழங்குவார்கள். தற்போதைய நிலையில் எதிர்பார்த்ததை விட பா.ஜனதா அதிக இடங்களில் வெற்றி பெறும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • ஏழை மக்களுக்கு காங்கிரஸ் கட்சி கொடுத்த வாக்குறுதிகளின்படி 10 கிலோ அரிசியை கொடுக்க வேண்டும்.
    • மத்திய அரசு மீது காங்கிரஸ் குற்றச்சாட்டு கூறுவது சரி இல்லை.

    பெங்களூரு :

    பெங்களூருவில் பா.ஜனதா துணை தலைவரான விஜயேந்திரா எம்.எல்.ஏ. நிருபர்களுக்கு அளித்த பேட்டியின் போது கூறியதாவது:-

    சட்டசபை தேர்தலுக்கு முன்பாக காங்கிரஸ் கட்சி பி.பி.எல்.(வறுமை கோட்டுக்கு கீழ் உள்ளவர்கள்) குடும்ப அட்டைதாரர்களுக்கு 10 கிலோ இலவச அரிசி வழங்கப்படும் என்று அறிவித்திருந்தது. அதன்படி, ஏழை மக்களுக்கு காங்கிரஸ் கட்சி கொடுத்த வாக்குறுதிகளின்படி 10 கிலோ அரிசியை கொடுக்க வேண்டும்.

    இந்த விவகாரத்தில் மத்திய அரசு மீது காங்கிரஸ் குற்றச்சாட்டு கூறுவது சரி இல்லை. வெளிமாநிலங்களில் இருந்து அரிசி கொள்முதல் செய்வதன் மூலமாக கமிஷன் பெறுவதற்கு முயற்சிகள் நடக்கிறது. நமது மாநிலத்தில் உள்ள விவசாயிகள் மற்றும் அரிசி ஆலைகளில் இருந்தே அரிசியை வாங்கி மக்களுக்கு கொடுக்கலாம். அவ்வாறு கொடுத்தால் கமிஷன் பெற முடியாது.

    இதன் காரணமாக தான் மத்திய அரசு மீது குற்றச்சாட்டுகளை கூறி வெளிமாநிலங்களில் இருந்து அரிசி கொள்முதல் செய்து கமிஷன் பெறும் முயற்சிகள் நடக்கிறது. காங்கிரஸ் கட்சி கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியாமல் தவித்து வருகிறது. இதில் இருந்து மக்களை திசை திருப்பும் நோக்கத்தில் மதமாற்றம் தடை சட்டம், ஏ.பி.எம்.சி. திருத்த சட்டத்தை காங்கிரஸ் ரத்து செய்திருக்கிறது. இலவச திட்டங்களை நிறைவேற்றுவதில் இருந்து தப்பிக்க மக்களை திசை திருப்புவதுடன், மத்திய அரசு மீது குற்றச்சாட்டுகளை காங்கிரஸ் தலைவர்கள் கூறி வருகிறார்கள்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    கர்நாடக மேல்-சபை தேர்தலில் எடியூரப்பாவின் மகன் விஜயேந்திராவுக்கு பா.ஜனதா சார்பில் போட்டியிட டிக்கெட் கிடைக்கும் என்று அனைவரும் எதிர்பார்த்தனர்.
    பெங்களூரு:

    விஜயேந்திராவிற்கு தேர்தலில் டிக்கெட் வழங்காததால் எடியூரப்பா அதிருப்தியில் உள்ளாரா என்பது குறித்து பரபரப்பு பேட்டியளித்துள்ளார். கர்நாடக மேல்-சபை தேர்தலில் எடியூரப்பாவின் மகன் விஜயேந்திராவுக்கு பா.ஜனதா சார்பில் போட்டியிட டிக்கெட் கிடைக்கும் என்று அனைவரும் எதிர்பார்த்தனர். ஆனால் அவருக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. இதனால் எடியூரப்பா அதிருப்தியில் இருப்பதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் எடியூரப்பா பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

    எங்கள் கட்சி யாருக்கு டிக்கெட் கொடுத்துள்ளதோ அதை ஏற்கிறோம். எனது மகன் விஜயேந்திராவுக்கு டிக்கெட் கிடைக்காததால் எனக்கு எந்த அதிருப்தியும் இல்லை. அவரது பணியை பார்த்து கட்சி அவருக்கு முதலில் இளைஞர் அணி பொதுச் செயலாளர் பதவியும், பிறகு கட்சியின் மாநில துணைத்தலைவர் பதவியும் வழங்கியுள்ளன.

    வரும் நாட்களிலும் அவருக்கு நல்ல பதவி கிடைக்கும். அவர் கட்சிக்காக விசுவாசமாக பணியாற்றி வருகிறார். இந்த விவகாரத்தில் எனக்கு அதிருப்தி இல்லை. யாரும் அதிருப்தி தெரிவிக்க கூடாது. குழப்பத்தை ஏற்படுத்த கூடாது. கட்சி மேலிடம் எடுத்த முடிவை அனைவரும் மதிக்க வேண்டும். கர்நாடக சட்டசபைக்கு அடுத்த ஆண்டு (2023) தேர்தல் நடக்கிறது. இதில் கட்சியை மீண்டும் ஆட்சி கட்டிலில் அமர்த்த அனைவரும் சேர்ந்து பாடுபட வேண்டும்.

    இவ்வாறு எடியூரப்பா கூறினார்.
    எடியூரப்பாவின் போராட்ட குணத்தை சிறுவயது முதலே பார்த்து வருகிறேன் என்று தந்தை குறித்து விஜயேந்திரா பெருமிதம் அடைந்தார்.
    ஹாசன்:

    ஹாசன் மாவட்டம் ஒலேநரசிப்புராவில் சிவக்குமார சுவாமிஜியின் 115-வது பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. இதில் பா.ஜனதா மாநில துணைத்தலைவரும், எடியூரப்பாவின் மகனுமான விஜயேந்திரா கலந்து கொண்டார். இந்த நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது:-

    கர்நாடக மாநிலம் பல முதல்-மந்திரிகளை கண்டுள்ளது. அதில் எடியூரப்பா ஒரு தனித்துவமானவர். கர்நாடகத்தில் பா.ஜனதாவின் ஆட்சி சிறப்பாக உள்ளது. விவசாயிகள், தலித் மக்களின் துயரத்தை துடைத்தவர் எடியூரப்பா.

    அவரது அரசியல் வாழ்க்கை மற்றும் போராட்ட குணத்தை சிறுவயது முதல் இருந்தே பார்த்து வருகிறேன். அவர், மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ளார். மடாதிபதிகள் மற்றும் பொதுமக்களால் 4 முறை அவர் முதல்-மந்திரி பொறுப்பு வகித்தார்.

    இதுவரை எந்த முதல்-மந்திரியும் செய்யாத நலத்திட்டங்களை எடியூரப்பா செய்துள்ளார். அவரது வாழ்க்கை வரலாற்றை யாரும் மறக்க முடியாது.

    இவ்வாறு அவர் பேசினார்.
    ×