என் மலர்
நீங்கள் தேடியது "E Scooter"
இந்திய சந்தையில் எலெக்ட்ரிக் வாகனங்கள் விற்பனை மெல்ல அதிகரிக்க தொடங்கி இருக்கிறது. இந்தியாவில் நீண்ட ரேன்ஜ் வழங்கும் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடல்கள் எவை தெரியுமா?
இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை ரூ. 100-ஐ கடந்து விட்டன. பெட்ரோல், டீசல் விலை பிரச்சினை மட்டுமின்றி பலர் இந்த வாகனங்கள் சுற்றுச்சூழலுக்கு கேடானது என்பதை புரிந்து கொண்டுள்ளனர். இந்த ஆண்டு துவக்கம் முதலே பல்வேறு எலெக்ட்ரிக் வாகன உற்பத்தியாளர்களும் தங்களின் எலெக்ட்ரிக் வாகன மாடல்களை அறிமுகம் செய்ய துவங்கி இருக்கின்றன.
பெட்ரோல், டீசல் விலை உயர்வை அடுத்து குறைந்த செலவில் அதிக தூரம் பயணிக்க எலெக்ட்ரிக் வாகனங்கள் சிறப்பானதா என ஆய்வு செய்ய துவங்கி உள்ளனர். மேலும் அதிக ரேன்ஜ் வழங்கும் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை வாங்கவே விரும்புகின்றனர். இந்தியாவில் அதிக ரேன்ஜ் வழங்கும் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடல்கள் எவை என தொடர்ந்து பார்ப்போம்.

இந்திய எலெக்ட்ரிக் வாகன சந்தையில் கிடைக்கும் குறைந்த விலை எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடல்களில் ஒன்றாக ஹீரோ Nyx Hx இருக்கிறது. இதன் விலை ரூ. 62 ஆயிரத்து 954 ஆகும். இந்த ஸ்கூட்டர் முழு சார்ஜ் செய்தால் 165 கிலோமீட்டர் ரேன்ஜ் வழங்குகிறது. மேலும் இந்த ஸ்கூட்டர் மணிக்கு அதிகபட்சம் 42 கிலோமீட்டர் வேகத்தில் செல்கிறது.
ஓலா நிறுவனத்தின் S1 ப்ரோ எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் முழு சார்ஜ் செய்தால் 181 கிலோமீட்டர் ரேன்ஜ் வழங்கும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. இந்த ஸ்கூட்டரில் 3.97 கிலோவாட் ஹவர் பேட்டரி வழங்கப்பட்டு உள்ளது. இந்தியாவில் ஓலா S1 ப்ரோ விலை ரூ. 1 லட்சத்து 29 ஆயிரத்து 999 ஆகும்.

பெங்களூரை சேர்ந்த சிம்பில் எனர்ஜி நிறுவனம் உருவாக்கி இருக்கும் சிம்பில் ஒன் ஸ்கூட்டர் முழு சார்ஜ் செய்தால் 300-க்கும் அதிக கிலோமீட்டர்கள் வரை செல்லும். இந்த மாடலின் வினியோகம் அடுத்த மாதம் துவங்க இருந்த நிலையில், தற்போது வினியோகம் செப்டம்பர் மாதம் துவங்கும் என தெரிவித்து இருக்கிறது.
கிராவ்டன் குவாண்டா எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் 3 கிலோவாட் BLDC மோட்டார் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த ஸ்கூட்டர் முழு சார்ஜ் செய்தால் 320 கிலோமீட்டர் ரேன்ஜ் வழங்குகிறது. இந்த ஸ்கூட்டர் மணிக்கு 70 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும். இது இந்தியாவின் நீண்ட ரேன்ஜ் வழங்கும் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் ஆகும்.