search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வெலாசிட்டி"

    சூப்பர்நோவாஸ் அணி 18 ரன்னுக்குள் 3 விக்கெட் இழந்து தத்தளித்த நிலையில், 4வது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த பாட்டியா, ஹர்மன்பிரீத் கவுர் ஜோடி 82 ரன்கள் சேர்த்தது.
    புனே:

    மூன்று அணிகள் இடையிலான பெண்கள் டி20 சேலஞ்ச் கிரிக்கெட் போட்டி புனேவில் நடைபெற்று வருகிறது. நேற்று நடந்த 2-வது போட்டியில் சூப்பர்நோவாஸ், வெலாசிட்டி அணிகள் மோதின. டாஸ் வென்ற வெலாசிட்டி அணி முதலில் பவுலிங் தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் பேட் செய்த சூப்பர்நோவாஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 150 ரன்கள் எடுத்தது. கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர் அதிரடியாக ஆடி 51 பந்தில் 71 ரன்கள் எடுத்தார்.

    இதையடுத்து, 151 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் வெலாசிட்டி அணி களமிறங்கியது. தொடக்க வீராங்கனை ஷபாலி வர்மா அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அவர் 33 பந்தில் 51 ரன்கள் குவித்தார்.

    லாரா வால்வார்ட், கேப்டன் தீப்தி சர்மா ஜோடி பொறுப்புடன் ஆடி அணியை வெற்றிப்பாதைக்கு அழைத்து சென்றது.

    இறுதியில், வெலாசிட்டி அணி 18.2 ஓவர்களில் 3 விக்கெட்டுக்கு 151 ரன்கள் வெற்றி பெற்றது. இதன்மூலம் அந்த அணி 7 விக்கெட்கள் வித்தியாசத்தில் சூப்பர்நோவாஸ் அணியை வீழ்த்தியது. ஆட்ட நாயகி விருது ஷபாலி வர்மாவுக்கு அளிக்கப்பட்டது.
    வெலாசிட்டி அணியில் அதிகபட்சமாக லாரா வெல்வெட் 65 ரன்கள் குவித்தார்.
    புனே:

    மகளிருக்கான 4-வது சேலஞ்ச் டி20 கிரிக்கெட் போட்டி தொடர் மகாராஷ்டிரா மாநிலம் புனே நகரில் நடைபெற்று வந்தது.

    மகாராஷ்டிரா கிரிக்கெட் சங்க மைதானத்தில் நேற்று நடைபெற்ற இறுதி ஆட்டத்தில்,  சூப்பர் நோவாஸ் மற்றும் வெலாசிட்டி அணிகள் மோதின. 

    டாஸ் வென்ற வெலாசிட்டி பந்து வீச்சை தேர்வு செய்தது. இதை அடுத்து களமிறங்கிய சூப்பர் நோவாஸ் அணி 20 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 165 ரன்கள் குவித்தது.  

    அந்த அணியில் அதிகபட்சமாக டாட்டின் 44 பந்துகளில் 4 சிக்சர்கள் 1 பவுண்டரி உள்பட 62 ரன்கள் குவித்தார். கேப்டன்  ஹர்மன்பிரீத் கவுர் 43 ரன்கள் அடித்தார்.

    இதை அடுத்து 166 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய வெலாசிட்டி அணியில் அதிகபட்சமாக லாரா வெல்வெட் 65 ரன்கள் குவித்தார். மற்ற வீராங்கனைகள் சொற்ப ரன்களுடன் வெளியேறினர். 

    20 ஓவர் முடிவில் வெலாசிட்டி அணி 8 விக்கெட்டுகளை இழந்து 161 ரன்கள் மட்டுமே எடுத்தது. 

    இதன் மூலம் 4 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற சூப்பர் நோவாஸ் அணி 3-வது முறையாக சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.  

    ×