என் மலர்
முகப்பு » tag 331970
நீங்கள் தேடியது "vignesh sivan"
நயன்தாரா - விக்னேஷ் சிவன் இருவருக்கும் விரைவில் திருமணம் நடைபெற இருக்கும் நிலையில், அவர்களின் திருமண அழைப்பிதழ் இணையத்தில் வைரலாகி வருகிறது,.
சிம்புவின் ‘போடா போடி’ படம் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் விக்னேஷ் சிவன். இதையடுத்து 2015-ம் ஆண்டு அவர் இயக்கிய ‘நானும் ரவுடி தான்’ படத்தின் போது, நயன்தாராவுக்கும், விக்னேஷ் சிவனுக்கும் இடையே காதல் மலர்ந்தது. இவர்களது காதல் 6 ஆண்டுகளாக நீடித்து வருகிறது.
இதையடுத்து, ரசிகர்கள் நயன்தாரா - விக்னேஷ் சிவனின் திருமணம் குறித்து சமூக வலைதளங்களில் தொடர்ந்து கேள்விகளை எழுப்பி வந்தனர். ரசிகர்களுக்கு பதிலளிக்கும் விதமாக இருவருக்கும் ஜூன் 9-ஆம் தேதி திருப்பதியில் வைத்து திருமணம் நடைபெறும் என்று தகவல் வெளியானது.
நயன்தாரா - விக்னேஷ் சிவன் திருமண அழைப்பிதழ்
மேலும், சமீபத்தில் விக்னேஷ் சிவனின் குல தெய்வம் கோவிலுக்கு சென்று நயன்தாராவும் விக்னேஷ் சிவனும் வழிபாடு நடத்திய புகைப்படங்களும் சமூக வலைதளத்தில் வைரலானதைத் தொடர்ந்து இருவரின் திருமணத்திற்காக தான் இந்த வழிபாடு என்று ரசிகர்கள் கருத்து தெரிவித்து வந்தனர்.
இந்நிலையில், தற்போது சென்னை, மகாபலிபுரத்தில் இருவரின் திருமணமும் நடைபெற இருப்பதாக கூறப்படுகிறது. மேலும் இதன் அழைப்பிதழ் சமூக வலைத்தள பக்கத்தில் வைரலாகி வருகிறது.
×
X