என் மலர்
நீங்கள் தேடியது "குங்குமாலா"
பிரம்மாஸ்திரா படத்தின் கேசரியா பாடல் ஒரு மாதத்திற்கு முன்பு வெளிவந்த நிலையில், தற்போது கேசரியாவின் தெலுங்கு பதிப்பு குங்குமாலா பாடலின் டீசர் வெளியாகியுள்ளது.
‘ஏ தில் கே முஸ்கில்’ படத்தை தொடர்ந்து ஆலியாபாட், ரன்பீர் கபூர் இணைந்து நடிக்கும் படம் பிரம்மாஸ்திரா. கற்பனை, சாகசம் நிறைந்த இத்திரைப்படமானது தமிழ், கன்னடம், இந்தி, மலையாளம் என நான்கு மொழிகளிலும் செப்டம்பர் 9-ந் தேதி வெளியாகவுள்ளது.

அமிதாப்பச்சன், மெளனி ராய், நாகார்ஜூனா என பிரபலங்கள் பலர் நடிக்கும் இத்திரைப்படத்தினை அயன் முகர்ஜி இயக்கியுள்ளார். பிரீத்தம் இதற்கு இசையமைத்துள்ளார். பிரமாஸ்திராமின் இந்தி பதிப்பை கரண் ஜோகரின் தர்மா புரொடக்ஷனும் தமிழ், கன்னடம், மலையாளம் பதிப்பை எஸ்.எஸ்.ராஜமெளலியும் வழங்கவுள்ளனர்.
இந்த படத்தின் கேசரியா பாடல் ஒரு மாதத்திற்கு முன்பு வெளியாகி மக்களிடையே வரவேற்பை பெற்றது. இந்நிலையில் தற்போது கேசரியா பாடலின் தெலுங்கு பதிப்பான கும்குமாலா என்ற பாடலின் டீசர் வெளியாகியுள்ளது. சித்ஸ்ரீராம் பாடியிருக்கும் இந்த பாடல் ரசிகர்களை கவர்ந்து வருகிறது.