என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Indian Oil"

    • தமிழகத்தில் இதுவரை 26 பெட்ரோல் நிலையங்களில் இ - 20’ எனப்படும் 20 சதவீத எத்தனால் கலந்த பெட்ரோல் விற்கப்படுகிறது.
    • வீடுகளுக்கு குறைந்த எடையில் அதிக பாதுகாப்பு நிறைந்த ‘காம்போ சிட் சிலிண்டர்கள் விற்கப்படுகின்றது.

    சென்னை:

    இந்தியன் ஆயில் நிறுவனத்தின் தமிழகம் - புதுச்சேரி மாநிலங்களுக்கான மண்டல தலைவர் வி.சி.அசோகன் சென்னையில், நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    இந்தியன் ஆயில் நிறுவனத்துக்கு, தமிழகம் மிக முக்கிய சந்தையாக உள்ளது. எங்கள் நிறுவனத்தால், கடந்த ஆண்டில் 10 சதவீதம் எத்தனால் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பெட்ரோலுடன், சேர்க்கப்பட்டுள்ளது. 2025 -க்குள், 20 சதவீத எத்தனால் கலந்த பெட்ரோலை தயாரிக்க அரசு ஆணைக்கு ஏற்ப செயல்பட்டு வருகிறோம்.

    தமிழகத்தில் இதுவரை 26 பெட்ரோல் நிலையங்களில் இ - 20' எனப்படும் 20 சதவீத எத்தனால் கலந்த பெட்ரோல் விற்கப்படுகிறது. வரும் மார்ச்சுக்குள் கூடுதலாக, 8 பெட்ரோல் நிலையங்களில் விற்கப்படும்.

    தமிழகத்தில் விரைவில் பல்வேறு திட்டங்களில் 54,000 கோடி ரூபாய் முதலீடு செய்யப்படும். அதில், 35,580 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நாகையில் 1,300 ஏக்கரில் ஆண்டுக்கு 90 லட்சம் டன் கச்சா எண்ணெய் சுத்தி கரிக்கும் திறனில் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்படும்.

    அங்கு பி.எஸ். 4 திறனில் பெட்ரோல், டீசல், 'பாலி புரோப்லீன்' உற்பத்தி செய்யப்படும்.

    விழுப்புரம், ஆசனூரில், 466 கோடி ரூபாயில் பெட்ரோல், டீசல் முனை யம் அமைக்கப்பட்டுள்ள நிலையில், திருவள்ளூர் வல்லூரில், 724 கோடி ரூபாயில் ஒரு முனையம் அமைக்கப்பட்டு வருகிறது. எண்ணூர் துறைமுகத் தில் பெட்ரோல், டீசல், சமையல் காஸ் முனையம், 921 கோடி ரூபாயில் அமைக்கப்படுகிறது.

    வீடுகளுக்கு குறைந்த எடையில் அதிக பாதுகாப்பு நிறைந்த 'காம்போ சிட் சிலிண்டர்கள் விற்கப்படுகின்றது.

    இவ்வாறு அவர்கூறினார்.

    பேட்டியின் போது இந்தியன் ஆயிலின் தென் மண்டல, மண்டல சேவைகள் செயல் இயக்குனர் தனபாண்டியன், தலைமை பொது மேலாளர் வெற்றி செல்வகுமார் ஆகியோர் உடன் இருந்தனர்.

    • வெடி விபத்து காரணமாக 2 கி.மீ உயரத்துக்கு கரும்புகை சூழ்ந்துள்ளது.
    • தீயை அணைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

    குஜராத் மாநிலம் வதோதராவில் உள்ள இந்தியன் ஆயில் நிறுவனத்தின் சுத்திகரிப்பு ஆலையில் பயங்கர வெடி விபத்து ஏற்பட்டுள்ளது.

    இந்த விபத்து காரணமாக 2 கி.மீ உயரத்துக்கு கரும்புகை சூழ்ந்துள்ள நிலையில், தீயை அணைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

    ஊழியர்கள் அனைவரும் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டதால், உயிரிழப்பு எதுவும் ஏற்படவில்லை. தீ விபத்துக்கான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை.

    உலகின் முன்னணி செஸ் வீரர்களை வீழ்த்தி செஸ்ஸபிள் மாஸ்டர்ஸ் தொடரில் பிரக்ஞானந்தா 2வது இடத்தை பிடித்தார்.
    புது டெல்லி:

    உலக அளவில் சிறந்த 16 வீரர்கள் பங்கேற்ற செஸ்ஸபிள் மாஸ்டர் ஆன்லைன் செஸ் போட்டிகள் கடந்த பிப்ரவரி மாதம் முதல் நடைபெற்று வந்தது. இந்த தொடரில் பங்கேற்ற சென்னையை சேர்ந்த 16 வயது இளம் வீரர் பிரக்ஞானந்தா 2-வது சுற்றில் உலகின் நம்பர் 1 வீரர் மேக்னஸ் கார்ல்சனை வீழ்த்தினார்.

    பின் காலிறுதியில் சீனாவின் வெய் யி, அரையிறுதியில் நெதர்லாந்து வீரர் அனிஷ் கிரியை வீழ்த்திய பிரக்ஞானந்தா, இறுதி போட்டியில் சீன வீரர் திங் லிரனுடன் மோதி தோல்வியை தழுவினார். வெற்றி பெற வாய்ப்பு இருந்தும், அவரது சிறிய தவறினால் தோல்வியுற்று 2வது இடத்தை பிடித்தார்.

    இந்த நிலையில் உலகின் முன்னணி செஸ் வீரர்களை வீழ்த்தி செஸ்ஸபிள் மாஸ்டர்ஸ் தொடரில் 2வது இடம் பிடித்த இந்திய இளம் செஸ் வீரர் பிரக்ஞானந்தாவுக்கு இந்தியன் ஆயில் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு வழங்கப்படுவதாக அந்த நிறுவனம் அறிவித்துள்ளது. 

    இப்போது 16 வயதாகும் பிரக்ஞானந்தா பணிக்கால அடிப்படையில் தனது 18 வது வயதில் பணியில் சேர்வார் என்றும் இந்தியன் ஆயில் நிறுவனம் தெரிவித்துள்ளது.

    தற்போது பிளஸ் 1 வகுப்பு படித்து வரும் பிரக்ஞானந்தா, பொதுத்தேர்வு எழுதி வருவது குறிப்பிடத்தக்கது.
    ×