search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "இந்தோனேசியாவை வீழ்த்தியது இந்தியா"

    அதிக கோல்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றால் மட்டுமே அடுத்த சுற்றுக்கு தகுதி பெற முடியும் என்ற நெருக்கடியான சூழலில் இந்திய அணி விளையாடியது.

    ஜகார்த்தா:

    11-வது ஆசிய கோப்பை ஆக்கி போட்டி இந்தோனேசியா தலைநகர் ஜகார்த்தாவில் நடைபெற்ற வருகிறது. இதில் 8 அணிகள் பங்கேற்றுள்ளன.

    'ஏ' பிரிவில் இடம் பெற்றுள்ள பிரேந்திர லாக்ரா தலைமையிலான  இந்திய அணி முதல் ஆட்டத்தில் பாகிஸ்தானுடன் 1-1 என்ற கோல் கணக்கில் 'டிரா'  செய்தது.

    அடுத்த ஆட்டத்தில் ஜப்பானிடம் 2-5 என்ற கோல் கணக்கில் அதிர்ச்சி தோல்வியை தழுவியது. இந்திய அணி தனது கடைசி லீக்கில் நேற்று இந்தோனேசியாவை எதிர்கொண்டது. 

    இந்த ஆட்டத்தில் மிக அதிகமான கோல்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றால் மட்டுமே அடுத்த சுற்றுக்கு தகுதி பெற முடியும் என்ற நெருக்கடியான சூழலில் இந்திய அணி விளையாடியது.

    ஆட்டத்தின் முதல் பாதியில் 6-0 என்ற கோல் கணக்கில் இந்திய அணி முன்னிலை பெற்றிருந்தது. இரண்டாவது பாதியில் திப்சன் டிர்கி மற்றும் அபாரன் சுதேவ் ஆகியோர் அடுத்தடுத்து கோல்கள் அடித்தனர். 

    திப்சன் டிர்கி 4 கோல்களும்,  சுதேவ் ஹாட்ரிக் கோல் அடித்தனர். மேலும் இந்திய வீரர்கள் செல்வம், பவன், எஸ்.வி.சுனில் பிரேஸ் கோல் அடித்து அசத்தினார். 

    இதனால் இந்திய அணி இந்தோனேசியாவை 16-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியதுடன் சூப்பர் 4 சுற்றுக்கு தகுதி பெற்றது.
    ×