என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வி"

    • வி (வோடபோன் ஐடியா) நிறுவனம் சமீபத்தில் தான் போஸ்ட்பெயிட் பிரிவில் ரெட்எக்ஸ் சலுகைகளை நீக்கியது.
    • தற்போது போஸ்டபெயிட் சலுகை பலன்களை மாற்றியமைக்கும் பணிகளில் வி நிறுவனம் ஈடுபட்டு வருகிறது.

    வி (வோடபோன் ஐடியா) சமீபத்தில் தனது ரெட்எக்ஸ் போஸ்ட்பெயிட் சலுகைகள் அனைத்தையும் திடீரென நிறுத்தியது. தனது போஸ்ட்பெயிட் சலுகை பலன்களை சந்தையில் ரிலையன்ஸ் ஜியோ மற்றும் ஏர்டெல் நிறுவனங்களுக்கு கடும் போட்டியை ஏற்படுத்தும் வகையில் மாற்ற வி முடிவு செய்து இருக்கிறது.

    அந்த வரிசையில் வோடபோன் ஐடியா நிறுவனம் வி மேக்ஸ் போஸ்ட்பெயிட் சலுகைகளை அறிவித்து இருக்கிறது. புதிய வி மேக்ஸ் சலுகைகளின் விலை ரூ. 401-இல் இருந்து துவங்குகிறது. ரிலையன்ஸ் ஜியோ மற்றும் ஏர்டெல் நிறுவன போஸ்ட்பெயிட் பலன்களின் விலை ரூ. 401-இல் இருந்து துவங்குகிறது.

    பெயருக்கு ஏற்றார் போல் புதிய வி மேக்ஸ் போஸ்ட்பெயிட் சலுகைகளில் அதிக ஒடிடி பலன்கள் சேர்க்கப்பட்டு உள்ளன. இத்துடன் பிரத்யேக வாடிக்கையாளர் சேவை வழங்கப்டுகிறது. வி மேக்ஸ் போஸ்ட்பெயிட் சலுகைகளுடன் அதிக டேட்டா, எஸ்எம்எஸ் உள்ளிட்ட பலன்கள் வழங்கப்படுகிறது. இதன் மூலம் பயனர்கள் தங்களின் சேவைகளுக்கு ஏற்ப கட்டணத்தை சிறப்பாக கையாள முடியும்.

    வி மேக்ஸ் போஸ்ட்பெயிட் சலுகைகளில் தற்போது ரூ. 401 இல் துவங்கி அதிகபட்சம் ரூ. 1101 வரை கட்டணங்களில் நான்கு சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இவை அனைத்திலும் அன்லிமிடெட் காலிங், இலவச ரோமிங், மாதாந்திர எஸ்எம்எஸ் மற்றும் ஒடிடி பலன்கள் வழங்கப்படுகின்றன. போஸ்ட்பெயிட் சலுகை கட்டணத்திற்கு ஏற்ப ஒடிடி பலன்கள் மட்டும் வேறுபடும்.

    வி மேக்ஸ் ரூ. 401 போஸ்ட்பெயிட் சலுகையில் மாதம் 50 ஜிபி டேட்டா, 30 நாட்கள் வேலிடிட்டியுடன் வழங்கப்படுகிறது. இதில் 200 ஜிபி வரை டேட்டா ரோல்ஒவர் வசதி வழங்கப்படுகிறது. நள்ளிரவு 12 மணி முதல் அதிகாலை 6 மணி வரை தினசரி டேட்டா அளவில் எவ்வித பாரபட்சமுமின்றி இணைய சேவைகளை பயன்படுத்தலாம். இத்துடன் மாதம் 3000 எஸ்எம்எஸ் வழங்கப்படுகிறது. இத்துடன் ரூ. 599 மதிப்புள்ள 12 மாத சோனி லிவ் சேவை கிடைக்கும்.

    ரூ. 501 வி மேக்ஸ் சலுகையில் மாதம் 90 ஜிபி டேட்டா, 200 ஜிபி வரை டேட்டா ரோல் ஓவர் வசதி வழங்கப்படுகிறது. இதில் எஸ்எம்எஸ் மற்றும் காலிங் பலன்களில் எவ்வித மாற்றமும் மேற்கொள்ளப்படவில்லை. இதில் ஆறு மாதங்களுக்கான இலவச அமேசான் பிரைம் வீடியோ சந்தா, விளம்பர இடைவெளி இல்லா ஹங்காமா மியூசிக், ஒரு வருடத்திற்கான டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் சந்தா வழங்கப்படுகிறது.

    வி மேக்ஸ் ரூ. 701 சலுகையில் அன்லிமிடெட் டேட்டா, வாய்ஸ் கால் வழங்கப்படுகிறது. இத்துடன் மாதம் 3000 எஸ்எம்எஸ் வழங்கப்படுகிறது. இதில் ஒரு வருடத்திற்கான டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் சந்தா, ஆறு மாதங்களுக்கு அமேசான் பிரைம் சந்தா, ஆறு மாதங்களுக்கு தி வால் ஸ்டிரீட் ஜர்னல் டிஜிட்டல் அக்சஸ், விளம்பர இடைவெளி இல்லா ஹங்காமா மியூசிக், ஆயிரத்திற்கும் அதிக கேம்கள் வழங்கப்படுகிறது.

    வி மேக்ஸ் பிரிவில் விலை உயர்ந்த சலுகை ரூ. 1101 ஆகும். இதில் அன்லிமிடெட் டேட்டா, வாய்ஸ் காலிங், மாதம் 3000 எஸ்எம்எஸ், ஆறு மாதங்களுக்கு அமேசான் பிரைம் நச்தா, 12 மாதங்களுக்கு சோனி லிவ் சந்தா, 12 மாதங்களுக்கு டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் சந்தா உள்ளிட்டவை வழங்கப்படுகிறது. இத்துடன் உள்நாடு மற்றும் சர்வதேச விமான நிலைய லாஞ்ச்களில் நான்கு முறை இலவச பயன்பாடு, விமான முன்பதிவுகளுக்கு 6 முதல் 10 சதவீதம் அதிகபட்சம் ரூ. 2 ஆயிரம் வரை தள்ளுபடி, மேக்மை ட்ரிப் மூலம் தங்கும் விடுதி முன்பதிவுகளுக்கு ரூ. 5 ஆயிரம் தள்ளுபடி வழங்கப்படுகிறது.

    ரூ. 2 ஆயிரத்து 999 மதிப்புள்ள சர்வதேச ரோமிங் பேக், ஒரு வருடத்திற்கு தி வால் ஸ்டிரீட் ஜர்னல் டிஜிட்டல் சந்தா, 5 கோல்டு கேம் உள்பட ஆயிரத்திற்கும் மேற்பட்ட கேம்களை விளையாடும் வசதி, விளம்பர இடைவெளி இல்லா ஹங்காமா மியூசிக் சந்தா உள்ளிட்டவை வழங்கப்படுகிறது.

    • வி நிறுவனம் இந்திய சந்தையில் 4ஜி மொபைல் டேட்டா வழங்கும் இரண்டு புது சலுகைகளை அறிவித்து இருக்கிறது.
    • இரு சலுகைகளிலும் மொபைல் டேட்டா மட்டுமின்றி விளம்பர இடைவெளி இல்லா மியூசிக் சேவையை வழங்குகிறது.

    இந்திய டெலிகாம் சந்தையில் மூன்றாவது பெரிய டெலிகாம் நிறுவனமாக இருக்கும் வி (வோடபோன் ஐடியா) நிறுவனம் இரண்டு புது பிரீபெயிட் சலுகைகளை அறிவித்து இருக்கிறது. 4ஜி டேட்டா வவுச்சர் பிரிவில் அறிவிக்கப்பட்டு இருக்கும் இரு சலுகைகளின் விலை ரூ. 25 மற்றும் ரூ. 55 ஆகும். இரு சலுகைகளும் வி நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ வலைதளத்தில் பட்டியலிடப்பட்டு விட்டன.

    எனினும், இரு சலுகைகளில் ஒன்றை பெற பயனர்கள் ஏற்கனவே வேறு ஏதேனும் சலுகையை ரிசார்ஜ் செய்திருக்க வேண்டும். ரூ. 25 விலையில் கிடைக்கும் 4ஜி டேட்டா வவுச்சரில் 24 மணி நேரத்திற்கு 1.1 ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது. இதே காலக்கட்டத்திற்கு 1 ஜிபி டேட்டாவை ரூ. 19 விலையில் வி நிறுவனம் வழங்கி வருகிறது. இதுதவிர ஏழு நாட்களுக்கு விளம்பர இடைவெளி இல்லாத மியூசிக் சேவையும் வழங்கப்படுகிறது.

    வி நிறுவனம் இலவச மியூசிக் சேவையை வழங்க ஹங்காமா மியூசிக் உடன் கூட்டணி அமைத்து இருக்கிறது. இதில் பயனர்கள் குறிப்பிட்ட காலத்திற்கு மியூசிக் சேவையை அனுபவிக்க முடியும். ரூ. 25 வி சலுகையில் 24 மணி நேரத்திற்கு 1.1 ஜிபி டேட்டாவும், ஏழு நாட்களுக்கு இலவச மியூசிக் சேவையும் வழங்கப்படுகிறது. இலவச மியூசிக் வேண்டாம் என்போர் ரூ. 19 சலுகையில் இதே வேலிடிட்டியில் 1 ஜிபி டேட்டாவை பெற்றுக் கொள்ளலாம்.

    மற்றொரு சலுகையான ரூ. 55 பயனர்களுக்கு ஏழு நாட்களுக்கு 3.3 ஜிபி டேட்டாவை வழங்குகிறது. இதில் ஒரு மாதத்திற்கு விளம்பர இடைவெளி இல்லா மியூசிக் சேவை வழங்கப்படுகிறது. எனினும், இதனை பயன்படுத்த பயனர்கள் 4ஜி டேட்டா வைத்திருப்பது அவசியம் ஆகும். இரு சலுகைகள் தவிர வி நிறுவனம் ரூ. 108 விலை சலுகையில் 90 நாட்களுக்கு மியூசிக் சேவையை வழங்குகிறது. எனினும், இதில் 15 நாட்களுக்கு 6 ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது.

    • வி நிறுவனத்தின் புது பிரீபெயிட் சலுகை ரூ. 99 விலையில் அறிவிக்கப்பட்டு இருக்கிறது.
    • தேர்வு செய்யப்பட்ட சலுகைகளில் வி நிறுவனம் 5 ஜிபி வரை கூடுதல் டேட்டா வழங்கி வருகிறது.

    வி (வோடபோன் ஐடியா) நிறுவனம் டிஜிட்டல் இந்தியா வளர்ச்சியை கருத்தில் கொண்டு புதிதாக எண்ட்ரி லெவல் ரிசார்ஜ் சலுகையை அறிவித்து இருக்கிறது. புது வி சலுகை விலை ரூ. 99 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

    இது தவிர நள்ளிரவு 12.00 மணி முதல் அதிகாலை 6.00 மணி வரை இலவச, அன்லிமிடெட் அதிவேக டேட்டா வழங்கி வருகிறது. எனினும், இந்த பலன்கள் வி ரூ. 249 மற்றும் அதற்கும் அதிக விலை கொண்ட சலுகைகளுக்கு ரிசார்ஜ் செய்திருப்பது அவசியம் ஆகும்.

    இந்த விலையில் டேட்டா மற்றும் வாய்ஸ் பலன்களை பயனர்களுக்கு வழங்கிய ஒரே அதிவேக டேட்டா நெட்வொர்க் ஆக வி இருக்கிறது. சமீபத்தில் வி நிறுவனம் அறிவித்த சலுகையில் அதிகபட்சம் 5 ஜிபி கூடுதல் டேட்டா வழங்கப்படுகிறது.

    வி ரூ. 99 சலுகையில் 200MB டேட்டா, அழைப்புகள் நொடிக்கு 2.5 பைசா கட்டணத்தில் உள்ளூர் மற்றும் தேசிய அழைப்புகளை மேற்கொள்ளும் வசதி வழங்கப்படுகிறது. இந்த சலுகையின் வேலிடிட்டி 28 நாட்கள் ஆகும். இதில் எஸ்எம்எஸ் பலன்கள் எதுவும் வழங்கப்படவில்லை.

    புது சலுகை கொண்டு பயனர்கள் குறைந்த செலவில் கனெக்டிவிட்டி பெற முடியும். இந்த சலுகை வி வலைதலம் மற்றும் செயலியில் வழங்கப்படுகிறது. 

    • காதலர் தினத்தை ஒட்டி பிரீபெயிட் ரிசார்ஜ்களுக்கு புதிய சலுகைகளை அறிவித்து இருக்கிறது.
    • பல்வேறு ரிசார்ஜ் சலுகைகளில் அதிகபட்சம் 5 ஜிபி வரையிலான கூடுதல் டேட்டா வழங்கப்படுகிறது.

    இந்திய டெலிகாம் சந்தையில் முன்னணி நிறுவனமாக இருக்கும் வி காதலர் தினத்தை ஒட்டி இரண்டு புதிய சலுகைகளை அறிவித்து இருக்கிறது. பல்வேறு ரிசார்ஜ் சலுகைகளில் வி நிறுவனம் அதிகபட்சம் 5 ஜிபி வரை கூடுதல் டேட்டா வழங்குகிறது. புதிய சலுகைகள் வி ஆப் பயன்படுத்தும் சந்தாதாரர்களுக்கு பிரத்யேகமாக வழங்கப்படுகிறது. இவை பிப்ரவரி 14 ஆம் தேதி வரை வழங்கப்படும்.

    சிறப்பு சலுகைகள் மட்டுமின்றி "Vi Love Tunes Contest" பெயரில் பரிசு திட்டம் அறிவித்து இருக்கிறது. இதில் வெற்றி பெறும் பயனர்கள் அதிகபட்சம் ரூ. 5 ஆயிரம் வரையிலான பரிசு வவுச்சர்கள் வழங்கப்பட இருக்கிறது.

    ரூ. 299 மற்றும் அதற்கும் அதிக தொகை கொண்ட ரிசார்ஜ் சலுகைகளில் அதிகபட்சம் 5 ஜிபி வரையிலான கூடுதல் டேட்டாவை எவ்வித தயக்கமும் இன்றி வழங்கப்படுகிறது. எனினும், கூடுதல் டேட்டாவுக்கான வேலிடிட்டி 28 நாட்கள் ஆகும். வி ரூ. 199 முதல் ரூ. 299 வரையிலான ரிசார்ஜ்களை செய்வோருக்கு அதிகபட்சம் 2 ஜிபி வரையிலான கூடுதல் டேட்டா எவ்வித கூடுதல் கட்டணமும் இன்றி வழங்கப்படுகிறது.

    இதற்கான வேலிடிட்டியும் 28 நாட்கள் ஆகும். அனைத்து சலுகைகளிலும் கூடுதல் டேட்டா பெறுவதற்கு பயனர்கள் இந்த சலுகைகளை வி ஆப் மூலம் ரிசார்ஜ் செய்ய வேண்டும். மேலும் இவை பிப்ரவரி 14 ஆம் தேதி வரை மட்டுமே கூடுதல் டேட்டா வழங்கப்படுகிறது.

    பரிசு கூப்பன் விவரங்கள்:

    காதலர் தினத்தை ஒட்டி வி அறிவித்து இருக்கும் "Vi Love Tunes Contest"-இல் கலந்து கொண்டு பயனர்கள் ரூ. 5 ஆயிரம் மதிப்புள்ள பரிசு கூப்பனை வெல்ல முடியும். சமூக வலைதளங்களில் நடைபெறும் #ViLoveTunes போட்டிகளில் வி பயனர்கள் மட்டுமே கலந்து கொள்ள முடியும். இதில் பயனர்கள் ஹங்காமா மியூசிக் காதலர் தின பிளேலிஸ்ட்-இல் மாற்றப்பட்ட வரிகள் கொண்ட பாடல்களை சரியாக கண்டுபிடிக்க வேண்டும்.

    போட்டியில் கலந்து கொள்வோர் சரியான விடையை #ViLoveTunes எனும் ஹேஷ்டேக் பயன்படுத்தி கமெண்ட் செய்ய வேண்டும். ஒவ்வொரு நாளும் ஒரு வெற்றியாளர் தேர்வு செய்யப்பட்டு ரூ. 5 ஆயிரம் மதிப்புள்ள கிஃப்ட் கார்ட் ஆக வெற்றி பெற முடியும்.

    • பயனர்கள் புதிய சிம் கார்டு வாங்கும் போது தாங்களாகவே KYC செய்து கொள்ளும் வசதி 2021-இல் அறிவிக்கப்பட்டு இருந்தது.
    • சுயமாக KYC செய்து கொள்ளும் வசதியை பயனர்களுக்கு அறிமுகம் செய்த முதல் நிறுவனமாக வி இருக்கிறது.

    மத்திய தொலைத்தொடர்பு துறை அமைச்சகம் 2021 பயனர்கள் தாங்களாகவே KYC செய்து கொள்ளும் வசதியை அறிவித்து இருந்தது. தற்போது இதனை பயனர்களுக்கு அறிமுகம் செய்த முதல் நிறுவனம் என்ற பெருமையை வி பெற்றுள்ளது.

    வி நிறுவனத்தின் Self-KYC வழிமுறை முதற்கட்டமாக கொல்கத்தா மற்றும் கர்நாடக மாநிலங்களை சேர்ந்த அனைத்து போஸ்ட்பெயிட் பயனர்களுக்கும் வழங்கப்படுகிறது. வி Self KYC பயனர்கள் புதிய சிம் கார்டு ஒன்றை ஆன்லைனில் ஆர்டர் செய்து, தாங்கள் விரும்பும் சலுகையை தேர்வு செய்து தங்களின் வீட்டில் இருந்தபடி KYC வழிமுறையை நிறைவு செய்து கொள்ளலாம்.

     

    இந்த வழிமுறையின் மூலம் பயனர்கள் நேரடியாக ரிடெயில் மையத்திற்கு செல்ல வேண்டிய அவசியத்தை போக்குகிறது. புதிய சேவை மத்திய தொலைத்தொடர்பு துறை வெளியிட்டு இருக்கும் விதிகளுக்கு உட்பட்டு வழங்கப்படுவதாக வி நிறுவனம் தெரிவித்துள்ளது. படிப்படியாக இந்த சேவை நாட்டின் அனைத்து பகுதிகள் மற்றும் பிரீபெயிட் மற்றும் போஸ்ட்பெயிட் பயனர்களுக்கும் நீட்டிக்கப்படும்.

    வி நிறுவனத்தின் Self KYC வழிமுறையை மேற்கொள்வது எப்படி?

    வி வலைத்தளம் சென்று விரும்பிய சலுகையை தேர்வு செய்து கொள்ள வேண்டும்.

    தேர்வு செய்த சலுகையை உறுதிப்படுத்தி ஆர்டர் செய்யவும். இதற்கு மற்றொரு மொபைல் நம்பர் மூலம் ஒருமுறை பயன்படுத்தக்கூடிய கடவுச்சொல் அனுப்பப்படும்.

    இனி Self KYC மேற்கொள்ள UIDAI வலைத்தளத்தில் ஆதார் சமர்பித்தல் வழிமுறையை நிறைவு செய்ய வேண்டும்.

    அடுத்து குறைந்தபட்சம் பத்து நொடிகளுக்கு லைவ் புகைப்படம் அல்லது வீடியோ பதிவு செய்ய வேண்டும்.

    ஆர்டர் செய்தபின் டிஜிட்டல் வெரிஃபிகேஷனை முடித்ததும், வாடிக்கையாளர்களுக்கு சிம் கார்டு அவர்களின் வீட்டிற்கே டெலிவரி செய்யப்பட்டுவிடும். 

    • வி நிறுவனத்தின் புதிய பிரீபெயிட் சலுகை பயனர்களுக்கு தினசரி டேட்டா பலன்களை வழங்குகிறது.
    • 30 நாட்கள் வேலிடிட்டி கொண்டிருக்கும் புதிய வி சலுகை சற்றே குறைந்த விலையில் கிடைக்கிறது.

    இந்திய டெலிகாம் சந்தையில் ஜியோ மற்றும் ஏர்டெல் நிறுவனங்கள் இடையே வி நிறுவனம் கடும் போட்டியை எதிர்கொண்டு வருகிறது. ஜியோ மற்றும் ஏர்டெல் நிறுவனங்கள் நாடு முழுக்க 5ஜி சேவைகளை வெளியிடுவதில் மும்முரம் காட்டி வருகின்றன. இதன் காரணமாக வி நிறுவன வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை கனிசமாக குறைந்து கொண்டே வருகிறது.

    இதனிடையே போட்டியை எதிர்கொள்ளும் வகையில், வி நிறுவனம் தற்போது புதிய பிரீபெயிட் சலுகையை அறிவித்து இருக்கிறது. ரூ. 181 விலையில் கிடைக்கும் புதிய பிரீபெயிட் சலுகை தினசரி பலன்களை வழங்குகிறது. ஏற்கனவே பயன்படுத்தி வரும் சலுகையுடன் கூடுதலாக இதனை சேர்த்துக் கொள்ளலாம். இவ்வாறு செய்யும் போது அதிக டேட்டா பெற முடியும்.

     

    வி நிறுவனத்தின் புதிய ரூ. 181 பிரீபெயிட் சலுகை 30 நாட்கள் வேலிடிட்டி கொண்டிருக்கிறது. இதில் தினமும் 1 ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது. வழங்கப்படும் 1 ஜிபி டேட்டா தீர்ந்து போகும் பட்சத்தில் மறுநாள் தான் 1 ஜிபி டேட்டா வழங்கப்படும். ஏற்கனவே ரிசார்ஜ் செய்த சலுகையில் அன்றாட டேட்டாவை விரைந்து தீர்ப்போருக்காக புதிய சலுகை அறிவிக்கப்பட்டு இருக்கிறது.

    புதிய ரூ. 181 சலுகையில் தினமும் 1 ஜிபி டேட்டா தவிர வாய்ஸ் கால், எஸ்எம்எஸ் போன்ற பலன்கள் எதுவும் வழங்கப்படவில்லை. முன்னதாக வி நிறுவனம் டேட்டா, வாய்ஸ் காலிங், எஸ்எம்எஸ் போன்ற பலன்கள் வழங்கும் இரண்டு பிரீபெயிட் சலுகைகளை அறிவித்து இருந்தது. இவற்றின் விலை முறையே ரூ. 289 மற்றும் ரூ. 429 என்று நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளன.

    • வி நிறுவனம் தனது இரண்டு பிரீபெயிட் சலுகை பலன்களை மாற்றியமைத்து இருக்கிறது.
    • வி மாற்றியமைத்து இருக்கும் இரு சலுகைகளும் தற்போது அதிக பலன்களை வழங்குகின்றன.

    வி நிறுவனம் தனது ரூ. 129 மற்றும் ரூ. 298 விலையில் வழங்கி வரும் இரண்டு பிரீபெயிட் சலுகை பலன்களை மாற்றியமைத்து இருக்கிறது. டேட்டா மற்றும் காலிங் பலன்களுடன் வி சமீபத்தில் அறிவித்த ரூ. 181 சலுகையை தொடர்ந்து, இரு சலுகை பலன்கள் மாற்றப்பட்டுள்ளது.

    ரூ. 129 விலையில் கிடைக்கும் வி சலுகைகள் தற்போது அதிக டேட்டா மற்றும் பொழுதுபோக்கு தரவுகளை வழங்குகின்றன. மாற்றப்பட்ட பலன்களை பொருத்தவரை ரூ. 129 சலுகை தற்போது அன்லிமிடெட் காலிங், 200 எம்பி டேட்டா உள்ளிட்டவை 18 நாட்கள் வேலிடிட்டியுடன் வழங்கப்படுகிறது. இதில் எஸ்எம்எஸ் பலன்கள் எதுவும் வழங்கப்படவில்லை.

     

    வி ரூ. 298 சலுகை தற்போது 50 ஜிபி 4ஜி டேட்டா, வி திரைப்படங்கள் மற்றும் டிவி, பிரீமியம் திரைப்படங்கள், ஒரிஜினல்ஸ், செய்திகள் மற்றும் நேரலை டிவி போன்ற பலன்கள் வழங்கப்படுகின்றன. இந்த சலுகை வேலிடிட்டி 28 நாட்கள் ஆகும்.

    சமீபத்தில் வி நிறுவனம் ரூ. 181 பிரீபெயிட் சலுகையை அறிவித்தது. இந்த சலுகை 30 ஜிபி டேட்டா வழங்குகிறது. இதன் வேலிடிட்டி 30 நாட்கள் ஆகும். எனினும், இதில் தினமும் 1 ஜிபி டேட்டா அடிப்படையில் வழங்கப்படவில்லை. இவை ஏற்கனவே உள்ள பிரீபெயிட் சலுகையுடன் சேர்த்து பயன்படுத்த முடியும். இது தனி சலுகை என்பதை விட பூஸ்டர் பேக் ஆகும். 

    • வி நிறுவனத்தின் புதிய சலுகைகளில் ஒடிடி பலன்கள் சேர்க்கப்பட்டு உள்ளன.
    • புதிய வி சலுகைகள் பயனர்களுக்கு தினமும் 2 ஜிபி டேட்டா வழங்குகின்றன.

    வி நிறுவனம் தனது வாடிக்கையாளர்களை தக்க வைத்துக் கொள்ளவும், அதிக வாடிக்கையாளர்களை ஈர்க்கும் வகையிலும், இரண்டு புதிய சலுகைகளை அறிவித்து இருக்கிறது. இரு சலுகைகளிலும் ஒடிடி சந்தா பலன்கள் சேர்க்கப்பட்டுள்ளன. இவற்றின் விலை ரூ. 368 மற்றும் ரூ. 369 என்று நிர்ணயம் செய்யப்பட்டுள்ளன. சிறு மாற்றங்கள் தவிர, இரு சலுகைகளிலும் ஒரே மாதிரியான பலன்களே வழங்கப்படுகின்றன.

    அதன்படி இரண்டு சலுகைகளிலும் தினமும் 2 ஜிபி டேட்டா, 30 நாட்களுக்கு வழங்கப்படுகிறது. இத்துடன் தினமும் 100 எஸ்எம்எஸ் மற்றும் அன்லிமிடெட் அழைப்புகள் வழங்கப்படுகின்றன. வி ரூ. 368 சலுகையில் 30 நாட்களுக்கான சன் நெக்ஸ்ட் சந்தா, ரூ. 369 சலுகையில் 30 நாட்களுக்கான சோனிலிவ் சந்தா வழங்கப்படுகிறது.

     

    இரு சலுகைகளின் இதர பலன் விவரங்கள்:

    நள்ளிரவு 12 மணி முதல் அதிகாலை 6 மணி நேர எவ்வித கூடுதல் கட்டணம் இன்றி அன்லிமிடெட் இணைய வசதி.

    வார இறுதியில் டேட்டா ரோல் ஓவர் - திங்கள் முதல் வெள்ளி வரை பயன்படுத்தாத டேட்டாவை சனி மற்றும் ஞாயிறு கிழமைகளில் பயன்படுத்திக் கொள்ளலாம்.

    வி மூவிஸ் மற்றும் டிவி சேவையின் விஐபி சந்தா வழங்கப்படுகிறது.

    ஒவ்வொரு மாதமும் அதிகபட்சம் 2 ஜிபி வரை பேக்கப் டேட்டா எவ்வித கூடுதல் கட்டணமின்றி வழங்கப்படுகிறது. இதனை பெற வி ஆப் அல்லது 121249 என்ற எண்ணிற்கு டயல் செய்ய வேண்டும்.

    • வி ரூ. 549 சலுகை பயனர்களுக்கு 1 ஜிபி டேட்டா, 180 நாட்கள் வேலிடிட்டி வழங்குகிறது.
    • வி ரூ. 368 மற்றும் ரூ. 369 விலை சலுகைகளில் பயனர்களுக்கு தினமும் 2 ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது.

    வி (வோடபோன் ஐடியா) நிறுவனம் தனது வாடிக்கையாளர்கள் எண்ணிக்கையை அதிகப்படுத்தும் நோக்கில், பிரீபெயிட் சலுகை பலன்களில் அதிகளவு மாற்றங்களை மேற்கொண்டு வருகிறது. இதுதவிர புதிய பிரீபெயிட் சலுகைகளையும் அறிவித்து வருகிறது. இந்த வரிசையில் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கும் வி ரூ. 549 சலுகை மொத்தத்தில் 180 நாட்கள் வேலிடிட்டி கொண்டிருக்கிறது.

    அதிக பலன்களுக்கு மாற்றாக நீண்ட நாட்கள் வேலிடிட்டி வழங்கும் வகையில், இந்த சலுகை அறிவிக்கப்பட்டு இருக்கிறது. சமீபத்தில் தான் வி நிறுவனம் ரூ. 368 மற்றும் ரூ. 369 விலையில் சலுகைகளை அறிவித்தது. இதைத் தொடர்ந்து தற்போது நீண்ட கால வேலிடிட்டி வழங்கும் புதிய சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது.

     

    வி ரூ. 549 சலுகை பயனர்களுக்கு 1 ஜிபி டேட்டா, 180 நாட்கள் வேலிடிட்டி வழங்குகிறது. 1 ஜிபி தவிர்த்து கூடுதல் டேட்டா வேண்டுமெனில் பயனர்கள் மற்ற டேட்டா வவுச்சர்களை வாங்கிக் கொள்ள வேண்டும். இந்த சலுகையில் அன்லிமிடெட் வாய்ஸ் கால் பலன்கள் வழங்கப்படவில்லை என்பதால், அழைப்புகளுக்கான கட்டணம் நொடிக்கு 2.5 பைசா என்று நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

    இவைதவிர இந்த சலுகையில் எஸ்எம்எஸ் பலன்கள் எதுவும் வழங்கப்படவில்லை. வி சிம் கார்டை இரண்டாவது இணைப்பாக பயன்படுத்துவோருக்கு இந்த சலுகை பயனுள்ளதாக இருக்கும். முந்தைய ரூ. 368 மற்றும் ரூ. 369 விலை சலுகைகளில் பயனர்களுக்கு தினமும் 2 ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது. இவை தவிர ஒடிடி பலன்களும் வழங்கப்படுகிறது.

    • வி நிறுவனம் தொடர்ச்சியாக தனது சலுகைகளை மாற்றியமைத்து வருகிறது.
    • வி நிறுவனத்தின் 5ஜி சேவை வெளியீடு தொடர்ந்து தாமதமாகி வருகிறது.

    இந்திய சந்தையில் ரிலையன்ஸ் ஜியோ மற்றும் ஏர்டெல் போன்ற நிறுவனங்களிடம் கடுமையான போட்டியை எதிர்கொள்ளும் வி நிறுவனத்தின் பயனர்கள் எண்ணிக்கை தொடர்ந்து குறைந்து கொண்டே வருகிறது. தொடர் நஷ்டம் காரணமாகவும், பயனர்கள் எண்ணிக்கை குறைவதாலும் வி நிறுவனத்தின் 5ஜி வெளியீடு தாமதமாகி வருகிறது.

    எனினும், வி நிறுவனம் தொடர்ச்சியாக புதிய சலுகைகளை அறிவித்தும், அவ்வப்போது சிறப்பான சலுகைகளையும் அறிவித்து வருகிறது. அந்த வரிசையில் தேர்வு செய்யப்பட்ட பிரீபெயிட் சலுகைகளை பயனர்கள் வி செயலி மூலம் ரிசார்ஜ் செய்தால் கூடுதல் கட்டணம் இன்றி இலவச டேட்டா வழங்கப்படுகிறது.

    முன்னதாக இதே போன்ற சலுகையை வி நிறுவனம் குறுகிய காலக்கட்டத்திற்கு வழங்கி வந்தது. இந்த சலுகையின் கீழ் பயனர்கள் வி செயலி மூலம் பிரீபெயிட் ரிசார்ஜ் செய்தால் அதிகபட்சம் 5ஜிபி வரை கூடுதல் டேட்டா பெற முடியும். பயனர்கள் ரூ. 299 அல்லது இதைவிட அதிக தொகைக்கு ரிசார்ஜ் செய்யும் போது கூடுதல் டேட்டாவை பெற்றுக் கொள்ள முடியும். இதற்கான வேலிடிட்டி மூன்று நாட்கள் ஆகும். 

    • வோடபோன் ஐடியா ரூ. 839 சலுகையில் பயனர்களுக்கு தினமும் 2 ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது.
    • இதில் மூன்று மாதங்களுக்கு டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் மொபைல் சந்தாவும் வழங்கப்படுகிறது.

    வோடபோன் ஐடியா நிறுவனத்தின் புதிய பிரீபெயிட் சலுகை மூன்று மாதங்களுக்கு டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் மொபைல் சந்தா வழங்குகிறது. புதிய பிரீபெயிட் சலுகை விலை ரூ. 839 என்று நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

    முன்னதாக வோடபோன் ஐடியா நிறுவனம் ரூ. 17 விலையில் சோட்டா ஹீரோ பேக் சலுகைகளை அறிவித்த நிலையில், தற்போது இந்த சலுகை அறிவிக்கப்பட்டு இருக்கிறது. டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் சந்தா வழங்கும் புதிய சலுகை வி செயலியில் இருந்து ரிசார்ஜ் செய்யும் வகையில் மட்டுமே வழங்கப்படுகிறது. அந்த வகையில், பயனர்கள் இதனை வலைதளம் மற்றும் இதர செயலிகளில் ரிசார்ஜ் செய்ய முடியாது.

    பலன்கள்:

    வோடபோன் ஐடியா ரூ. 839 சலுகையில் பயனர்களுக்கு தினமும் 2 ஜிபி டேட்டா, தினமும் 100 எஸ்எம்எஸ் போன்ற பலன்கள் 84 நாட்கள் வேலிடிட்டியுடன் வழங்கப்படுகிறது. இதில் மூன்று மாதங்களுக்கு டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் மொபைல் சந்தாவும் வழங்கப்படுகிறது. இவைதவிர இந்த சலுகையில் மேலும் சில பலன்களும் வழங்கப்படுகிறது.

    அதன்படி நள்ளிரவு 12 மணி முதல் காலை 6 மணி வரை இலவச டேட்டா வழங்கப்படுகிறது. திங்கள் முதல் வெள்ளி கிழமை வரை பயன்படுத்தாத டேட்டாவினை சனி மற்றும் ஞாயிறு கிழமைகளில் பயன்படுத்தும் வசதி வழங்கப்படுகிறது.

    வி மூவிஸ் மற்றும் டிவி ஆப் பிரீமியம் சந்தா இந்த சலுகையுடன் வழங்கப்படுகிறது. மேலும் ஒவ்வொரு மாதமும் அதிகபட்சம் 2ஜிபி வரையிலான டேட்டா பேக்கப் வழங்கப்படுகிறது. இதற்கு எவ்வித கூடுதல் கட்டணமும் இல்லை. இந்த சலுகை வி வலைதளம் மற்றும் அதிகாரப்பூர்வ செயலியில் வழங்கப்படுகிறது.

    • வோடபோன் ஐடியா நிறுவனம் பயனர்களுக்கு அசத்தல் சலுகைகளை மிக குறைந்த விலையில் அறிவித்தது.
    • புதிய வோடபோன் ஐடியா சலுகைகள் பயனர்களுக்கு டேட்டா பலன்களை வழங்குகின்றன.

    வோடபோன் ஐடியா நிறுவனம் இந்திய பயனர்களுக்கு இரண்டு புதிய சாஷெட்களை அறிவித்து இருக்கிறது. இவை சூப்பர் ஹவர் மற்றும் சூப்பர் டே என்று அழைக்கப்படுகின்றன. இந்த சலுகைகள் பிரீபெயிட் பயனர்கள் தங்களின் தினசரி டேட்டா அளவை கடந்த பிறகும், எவ்வித இடையூறும் இன்றி டேட்டா பயன்படுத்த அனுமதிக்கிறது.

     

    சூப்பர் ஹவர் பேக் விலை ரூ. 24 என்று நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இதில் பயனர்களுக்கு ஒர மணி நேரத்திற்கு அன்லிமிடெட் டேட்டா வழங்கப்படுகிறது. சூப்பர் டே சலுகை விலை ரூ. 49 ஆகும். இதில் ஒரு நாள் வேலிடிட்டியில் 6 ஜிபி வரையிலான டேட்டா வழங்கப்படுகிறது.

    டேட்டா தவிர இரு சலுகைகளிலும், வாய்ஸ் கால், எஸ்எம்எஸ் போன்ற பலன்கள் எதுவும் வழங்கப்படவில்லை. சாஷெட் சலுகை என்பதால் இதில், டேட்டா பலன் மட்டுமே வழங்கப்படுகிறது. பயனர்கள் அவசர காலத்திற்கு டேட்டா பயன்படுத்த இவைகளை ரிசார்ஜ் செய்து கொள்ளலாம்.

    இரு சலுகைகளையும் பெறுவதற்கு பயனர்கள் வேறு ஏதேனும் சலுகையை ரிசார்ஜ் செய்திருப்பது அவசியம் ஆகும். இந்த சலுகைகளை பயனர்கள் வி அதிகாரப்பூர்வ வலைதளம் மற்றும் செயலியில் ரிசார்ஜ் செய்து கொள்ள முடியும். இரு சலுகைகளும் நாடு முழுக்க அனைத்து வட்டாரங்களிலும் கிடைக்கிறது.

    ×