என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "ஆர்.கே.சுரேஷ்"
- ஆர்.கே.சுரேஷ் இயக்கி நடிக்க உள்ள 'தென்மாவட்டம்' படத்திற்கு நான் இசை அமைக்கவில்லை
- “யுவன் சார் நீங்கள் படத்திற்கும், லைவ் கான்சர்ட்டிற்கும் ஒப்பந்தமாகி இருக்கிங்க
பிரபல தயாரிப்பாளரும் நடிகருமான ஆர்.கே.சுரேஷ் தர்மதுரை, சலீம் உள்ளிட்ட பல படங்களை தயாரித்துள்ளார். மேலும் விநியோகஸ்தராக நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம், பரதேசி, தங்கமீன்கள் உள்ளிட்ட படங்களிலும், பாலாவின் தாரைதப்பட்டை, மருது, ஹர ஹர மஹாதேவகி, இப்படை வெல்லும், காளி, நம்ம வீட்டு பிள்ளை, விருமன், பட்டத்து அரசன் ஆகிய படங்களிலும் நடித்துள்ளார்.
இந்நிலையில் 'தென்மாவட்டம்' என்ற புதிய படத்தை இயக்கி அதில் நடிக்க உள்ளார்.இந்த படத்தின் முதல் 'லுக் போஸ்டர்' வெளியாகி உள்ளது. இப்படத்தில் யுவன்சங்கர் ராஜா இசையமைக்கிறார் என்று குறிப்பிடப்பட்டு இருந்தது. இந்த 'போஸ்டர்' சமூக வலைதளங்களில் பரவியது. இந்நிலையில் இப்படத்திற்கு தான் இசையமைக்கவில்லை என்று யுவன் சங்கர் ராஜா மறுப்பு தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து யுவன்சங்கர் ராஜா கூறியதாவது:-
ஆர்.கே.சுரேஷ் இயக்கி நடிக்க உள்ள 'தென்மாவட்டம்' என்ற புதிய படத்திற்கு நான் இசை அமைக்கவில்லை. இப்படத்திற்காக யாரும் என்னை அணுகவில்லை. இவ்வாறு அவர் கூறி உள்ளார்.
இந்நிலையில் 'எக்ஸ்' தளத்தில் ஆர்.கே. சுரேஷ் பதிலளித்துள்ளார். அதில் "யுவன் சார் நீங்கள் படத்திற்கும், லைவ் கான்சர்ட்டிற்கும் ஒப்பந்தமாகி இருக்கிங்க. ஒப்பந்தத்தை தெளிவாக சரிபார்க்கவும்"என்று குறிப்பிட்டுள்ளார். யுவன் சங்கர் ராஜா பதிவை பார்த்து ஆர்.கே.சுரேஷை ரசிகர்கள் விமர்சித்தனர். தற்போது ஆர்.கே.சுரேஷ் வெளியிட்ட பதிவால் மீண்டும் ரசிகர்கள் குழப்பம் அடைந்துள்ளனர். யுவன்சங்கர் ராஜா தற்போது விஜயின் 'GOAT' படத்திற்கு இசையமைக்கும் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
- கயல் ஆனந்தி தற்போது நடித்துள்ள படம் 'ஒயிட் ரோஸ்'.
- இப்படம் சைக்கலாஜிக்கல் திரில்லராக உருவாகி உள்ளது.
தென்னிந்திய திரையுலகின் முன்னணி நடிகையாக வலம் வரும் கயல் ஆனந்தி தற்போது கதாநாயகியாக நடித்துள்ள படம் 'ஒயிட் ரோஸ்'. இப்படத்தை இயக்குனர் சுசி கணேசனிடம் முன்னாள் அசோசியேட்டாக பணியாற்றிய ராஜசேகர் இப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகிறார். சைக்கலாஜிக்கல் திரில்லர் கதையாக உருவாகியுள்ள இப்படத்தில் ஆர்.கே.சுரேஷ் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார்.
இப்படம் குறித்து இயக்குனர் ராஜசேகர் கூறும்போது, "ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் ஒரு மிருகம் நிச்சயம் இருக்கும். அது நம்மைச் சுற்றியுள்ள மிருகங்களை விட ஆபத்தானது என்று பலர் கூறுவதை நாம் கேள்விப்படுகிறோம். ஒரு நடுத்தரக் குடும்பத்தைச் சேர்ந்த ஒரு சாதாரணப் பெண், இப்படிப்பட்ட ஒரு மிருகத்திடம் மாட்டி எப்படி பிரச்சனைகளை எதிர்கொள்கிறார் என்று இறுதி வரை பல திருப்பங்களுடன் கூடிய சைக்கலாஜிக்கல் திரில்லராக இந்தப்படம் இருக்கும்.
கயல் ஆனந்தி பல படங்களில் தனது அழகான நடிப்பால் நம்மைக் கவர்ந்துள்ளார். ஆனால், இது அவரது சினிமா பயணத்தில் நிச்சயம் ஒரு சிறந்த படமாக இருக்கும். ஆர்.கே.சுரேஷ் வில்லனாக நடிக்கிறார். அவர் தனது அற்புதமான நடிப்பால் பார்வையாளர்களை நடுங்க வைப்பார் என்று நான் உறுதியாக சொல்வேன். இதில் பார்வையாளர்கள் அவரின் வேறு வெர்ஷனைப் பார்ப்பார்கள். இன்னும் பல முக்கிய நடிகர்களை நாங்கள் இறுதி செய்து வருகிறோம். விரைவில் அது குறித்தான அதிகாரப்பூர்வ அறிவிப்புகளை வெளியிடுவோம்" என்றார்.
- ஆருத்ரா நிதி நிறுவனம், மோசடியில் ஈடுபட்டது அம்பலமானது தொடர்பாக 16 பேர் மீது பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- இதுதொடர்பாக 11 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் 5 பேரை போலீசார் தேடி வருகிறார்கள்.
சென்னையை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வரும் ஆருத்ரா நிதி நிறுவனம், மோசடியில் ஈடுபட்டது அம்பலமானது தொடர்பாக 16 பேர் மீது பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். பொதுக்களிடமிருந்து ரூ.2 ஆயிரத்து 400 கோடிக்கு மேல் பணத்தை சுருட்டி இருப்பதாக அரூத்ரா நிறுவனம் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
பொதுமக்களிடம் வசூல் செய்த பணத்துக்கு 25 சதவீதத்தில் இருந்து 30 சதவீதம் வரை வட்டி தருவதாக கூறியதால் ஏராளமானோர் போட்டி போட்டுக் கொண்டு முதலீடு செய்திருந்தனர். ஆனால் சொன்னபடி பணத்தை கொடுக்காததாலேயே ஆருத்ரா நிறுவனம் மோசடி புகாரில் சிக்கியது.
இதுதொடர்பாக 11 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் 5 பேரை போலீசார் தேடி வருகிறார்கள். இந்த வழக்கில் நடிகரும் தயாரிப்பாளருமான ஆர்.கே.சுரேஷ் மீதும் குற்றம் சாட்டப்பட்டது. காஞ்சீபுரம் மாவட்டத்தில் ஆருத்ரா நிறுவனம் ஏஜெண்டாக செயல்பட்டு வந்த ரூசோ என்பவரிடம் இருந்து ஆர்.கே.சுரேஷ் ரூ.15 கோடி வரையில் பணம் வாங்கி இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இது தொடர்பாக பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் அவருக்கு சம்மன் அனுப்பியுள்ளனர். வெளிநாட்டில் இருக்கும் ஆர்.கே. சுரேஷ் கடந்த 5 மாதமாக சென்னை திரும்பாமலேயே உள்ளார். போலீஸ் விசாரணைக்கு பயந்து அவர் அங்கேயே தலைமறைவாக இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இதையடுத்து ஆர்.கே.சுரேசின் வங்கி கணக்குகள் ஆய்வு செய்துள்ள பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
ஆருத்ரா நிதி நிறுவன மோசடி தொடர்பாக பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் முதல்கட்ட குற்றப்பத்திரிகையை கடந்த சில நாட்களுக்கு முன்பு தாக்கல் செய்துள்ளனர். அப்போது ஆருத்ரா நிதி நிறுவனம் தொடர்பான ஆவணங்கள் மற்றும் ஆதாரங்கள் ஆகியவையும் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. இதே போன்று மோசடி நிதி நிறுவனங்கள் தொடர்பான வழக்கு விசாரணைகள் அனைத்தையும் விரைந்து முடிக்க பொருளாதார குற்றப்பிரிவு ஐ.ஜி.ஆசியம்மாள் தலைமையிலான போலீசார் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்கள்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்