என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஜான்வி கபூர்"

    • 'Un Certain Regard' பிரிவில் கேன்ஸ் திரைப்பட விழாவில் திரையிடுவதற்காக ஹோம்பவுண்ட் உள்ளது.
    • கய்வான் இயக்கிய முதல் படமான மாசான் திரைப்படம் 2015 கேன்ஸ் விழாவில் தேர்வானது.

    மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி கபூர் நடித்த ஹோம்பவுண்ட் திரைப்படம் 78வது கேன்ஸ் திரைப்பட விழாவிற்கு அதிகாரப்பூர்வமாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.

    நீரஜ் கய்வான் எழுதி இயக்கிய இப்படத்தில் ஜான்வி கபூருடன், இஷான் கட்டர், விஷால் ஜெத்வா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

    இந்நிலையில் 'Un Certain Regard' பிரிவில் கேன்ஸ் திரைப்பட விழாவில் திரையிடுவதற்காக ஹோம்பவுண்ட் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.

    ஆஸ்காருக்கு அடுத்தபடியாக உலக பிரசித்தி பெற்ற கேன்ஸ் திரைப்பட விழா பிரான்சில் வருகிற மே 13 முதல் மே 24 வரை இந்த கேன்ஸ் திரைப்பட விழா நடைபெறுகிறது.

    வெஸ் ஆண்டர்சென், ரிச்சர்ட் லிண்ட்கேர், அரி அஸ்டர் உள்ளிட்ட பிரபல இயக்குனர்களின் திரைப்படங்களும் இந்த வருட திரையிடலுக்கு தேர்வாகி உள்ளது.

    முன்னதாக ஹோம்பவுண்ட் இயக்குனர் கய்வான் இயக்கிய முதல் படமான மாசான் திரைப்படம் 2015 கேன்ஸ் விழாவில் தேர்வானது. இதில் விக்கி கௌஷல் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

    • இந்தப் படத்திற்கு ஏஆர் ரஹ்மான் இசையமைக்கிறார்.
    • கிரிக்கெட்டை மையமாக வைத்து அதிக பொருட்செலவில் இபபடம் உருவாகி வருகிறது.

    தெலுங்கில் தேசிய விருது பெற்ற இயக்குநர் புச்சி பாபு சனா இயக்கத்தில் ராம் சரண் நடிக்கும் புதிய படம் பெத்தி.

    ராம் சரணுடன் கன்னட சூப்பர் ஸ்டார் சிவராஜ்குமார், ஜான்வி கபூர் ஆகியோர் நடிக்கும் இந்தப் படத்திற்கு ஏஆர் ரஹ்மான் இசையமைக்கிறார்.

    கிரிக்கெட்டை மையமாக வைத்து அதிக பொருட்செலவில் இபபடம் உருவாகி வருகிறது. சுகுமார் ரைட்டிங்ஸ், வ்ரிதி சினிமாஸ், மைத்ரி மூவி மேக்கர்ஸ் ஆகியவை இப்படத்தை இணைந்து தயாரிக்கின்றன.

    இப்படத்தின் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் சில வாரங்களுக்கு முன் வெளியான நிலையில் இன்று படத்தின் முதல் பார்வை க்ளிம்ஸ் விடியோ வெளியாகியுள்ளது. இந்தப் படம் அடுத்தாண்டு மார்ச் 27 அன்று திரையரங்குகளில் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது. 

    • பாலிவுட்டில் இளம் நடிகையாக வலம் வருபவர் ஜான்வி கபூர்.
    • இவர் நடித்த ‘மிலி’ திரைப்படம் சமீபத்தில் வெளியானது.

    பிரபல தயாரிப்பாளரான போனிகபூரின் மகள் ஜான்வி கபூர் 'தடக்' திரைப்படத்தின் மூலம் பாலிவுட்டில் நடிகையாக அறிமுகமானார். இவர் தனது நடிப்பால் ரசிகர்களின் மத்தியில் வரவேற்பை பெற்றது மட்டுமல்லாமல் சிறந்த அறிமுக கதாநாயகிக்கான விருதையும் பெற்றுள்ளார்.


    ஜான்வி கபூர்

    சமீபத்தில் இவர் நடித்த 'மிலி' திரைப்படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இவர் விரைவில் தென்னிந்திய திரையுலகிலும் என்ட்ரீ கொடுக்கவுள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில், ஜான்வி கபூர் மும்பை பாந்த்ரா பகுதியில் ஒரு கட்டிடத்தின் முதல் மற்றும் இரண்டாவது தளங்களை விலைக்கு வாங்கியுள்ளார்.


    ஜான்வி கபூர்

    இதன் மதிப்பு ரூ.65 கோடி என்று கூறப்படுகிறது. 8,669 சதுர அடியில் 6421 சதுர அடி கட்டிட பரப்பளவை கொண்ட இந்த தளங்களில் பிரம்மாண்ட நீச்சல் குளம் மற்றும் ஐந்து கார்களை நிறுத்தும் அளவிற்கு பார்க்கிங் வசதியும் உள்ளது என்று தகவல் வெளியாகியுள்ளது.

    • பிரபல நடிகை ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி கபூர்.
    • இவர் தமிழ் படத்தில் நடிக்க விருப்பம் தெரிவித்துள்ளார்.

    மறைந்த பிரபல நடிகை ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி கபூர். இவர் இந்தி படங்களில் நடித்து வருகிறார். தற்போது தமிழில் விஜய் சேதுபதியுடன் நடிக்க விருப்பம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து ஜான்வி கபூர் அளித்துள்ள பேட்டியில், ''எனக்கு தென்னிந்திய சினிமாவில் நடிக்க ஆர்வம் உள்ளது. தமிழ் நடிகர் விஜய் சேதுபதி நடித்த 'நானும் ரவுடிதான்' படத்தைப் பார்த்து அவருக்கு ரசிகை ஆகிவிட்டேன். விஜய் சேதுபதியுடன் இணைந்து ஒரு படத்திலாவது நடிக்க வேண்டும் என எதிர்பார்த்து காத்திருக்கிறேன்.

     

    ஜான்வி கபூர்

    ஜான்வி கபூர்

    'நானும் ரவுடிதான்' படத்தை 100 முறை பார்த்திருக்கிறேன். அந்த படத்தை பார்த்த பிறகு அவரிடம் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு பேசினேன். சார் நான் உங்களுக்கு மிகப்பெரிய ரசிகை. நீங்கள் நடிக்கும் அடுத்த படத்தில் நடிக்க ஆசைப்படுகிறேன். வாய்ப்புக்காக காத்திருக்கிறேன் என்றேன். நான் பேசியதை கேட்ட அவர் ஐயோ ஐயோ என்று சொல்லிக்கொண்டே இருந்தார். அவர் வருத்தப்படுகிறாரா அல்லது வெட்கப்படுகிறாரா என்று எனக்கு புரியவில்லை. விஜய் சேதுபதியின் ரியாக் ஷனை பார்த்து நான் அதிசயித்து விட்டேன்" என்றார்.

    • மறைந்த பிரபல நடிகை ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி கபூர்.
    • ஜான்வி கபூர் தற்போது அரசியல் பிரமுகரின் பேரனை காதலித்து வருவதாக கிசுகிசுக்கள் வலம் வருகின்றன.

    தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகியாக கொடி கட்டி பறந்த ஸ்ரீதேவி, இந்தி பட உலகிலும் வெற்றி கொடி நாட்டினார். இந்தி தயாரிப்பாளர் போனி கபூரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஜான்வி கபூர், குஷி கபூர் என்று இரண்டு மகள்கள். சில வருடங்களுக்கு முன்பு ஸ்ரீதேவி மரணம் அடைந்தார்.

     

    ஜான்வி கபூர்

    தற்போது ஜான்வி கபூர் இந்தி படங்களில் நடித்து வருகிறார். தமிழ் படங்களில் நடிக்கவும் ஆர்வம் காட்டுகிறார். இவரது தந்தை போனிகபூர் தமிழில் அஜித்குமார் நடித்த நேர்கொண்ட பார்வை, வலிமை, துணிவு ஆகிய படங்களை தயாரித்துள்ளார்.

     

    இந்நிலையில் ஜான்வி கபூர் மராட்டிய முன்னாள் முதல்-மந்திரி சுஷில்குமார் ஷிண்டேயின் பேரனும், நடிகருமான ஷிகர் பஹாரியாவை காதலிப்பதாக கிசுகிசுக்கள் வந்துள்ளன. இருவரும் ஜோடியாக மாலத்தீவுக்கும் சென்று வந்துள்ளனர். காதலை உறுதிப்படுத்தும் வகையில் இருவரும் ஒன்றாக இருக்கும் புகைப்படங்கள் வலைத்தளத்தில் வெளியாகி வைரலாகிறது. இது தற்போது இணையத்தில் பேசுபொருளாகியுள்ளது.

    • இயக்குனர் லிங்குசாமி இயக்கத்தில் கடந்த 2010-ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் 'பையா'.
    • இப்படத்தின் இரண்டாம் பாகத்தில் மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி கபூர் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளதாக கூறப்பட்டது.

    லிங்குசாமி இயக்கத்தில் கார்த்தி, தமன்னா ஆகியோர் நடித்து 2010-ல் வெளியாகி பெரிய வரவேற்பை பெற்ற பையா படத்தின் இரண்டாம் பாகம் தயாராகவுள்ளது. பையா 2-ம் பாகத்தில் கார்த்தி நடிக்கவில்லை பதிலாக ஆர்யாவை ஒப்பந்தம் செய்துள்ளனர் என்றும் இதில் கதாநாயகியாக நடிக்க மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி கபூரிடம் பேசி வருவதாகவும் இணையத்தில் பேசப்பட்டது.

     

    ஜான்வி கபூர் - ஆர்யா

    ஜான்வி கபூர் - ஆர்யா


    ஏற்கனவே தமிழ் படத்தில் நடிக்க ஜான்வி கபூர் விருப்பம் தெரிவித்து வந்த நிலையில் பையா 2-ம் பாகத்தில் நடிக்க சம்மதிப்பார் என்று கூறப்பட்டது. ஆனால் இதனை அவரது தந்தையும் தயாரிப்பாளருமான போனிக் கபூர் மறுத்து சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார். அதில், "ஜான்வி கபூர் தமிழில் எந்த படத்திலும் நடிக்க ஒப்பந்தமாகவில்லை. வதந்திகளை பரப்ப வேண்டாம் என கேட்டுக்கொள்கிறேன்" என்று குறிப்பிட்டுள்ளார்.

    • இந்திய திரையுலகின் முன்னனி நட்சத்திரமாக திகழ்ந்தவர் நடிகை ஸ்ரீதேவி.
    • கடந்த 2018-ம் ஆண்டு பிப்ரவரி 24-ந்தேதி ஸ்ரீதேவி உயிரிழந்தார்.

    இந்திய திரையுலகின் முன்னனி நட்சத்திரமாக திகழ்ந்தவர் நடிகை ஸ்ரீதேவி. இவர் தமிழ், இந்தி, தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் நடித்து புகழ்பெற்றார். கலைத்துறையில் நடிகை ஸ்ரீதேவி ஆற்றிய பணிக்காக அவருக்கு 2013-ம் ஆண்டு பத்மஸ்ரீ விருது வழங்கப்பட்டது.




    கடந்த 2018-ம் ஆண்டு பிப்ரவரி 24-ந்தேதி ஸ்ரீதேவி உயிரிழந்தார். அவர் கடைசியாக நடித்த 'மாம்' திரைப்படத்திற்காக ஸ்ரீதேவிக்கு சிறந்த நடிகைக்கான தேசிய விருது வழங்கப்பட்டது. இவரது மகள் ஜான்வி கபூர், தற்போது பல்வேறு இந்தி திரைப்படங்களில் நடித்து வருகிறார். 


    ஜான்வி கபூர்

    ஜான்வி கபூர்


    இந்நிலையில் ஸ்ரீதேவியின் 5-வது ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு ஜான்வி கபூர், தனது சமூக வலைத்தல்பப்பக்கத்தில் உருக்கமான பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த பதிவில், "இன்னும் உங்களை எல்லா இடங்களிலும் நான் தேடிக்கொண்டிருக்கிறேன். உங்களை பெருமைப்படுத்த வேண்டும் என்ற எண்ணத்தில் அனைத்து செயல்களையும் செய்கிறேன். நான் எங்கு சென்றாலும், என்ன செய்தாலும் அனைத்தும் உங்களிடம் தொடங்கி, உங்களிடமே முடிகிறது" என்று பதிவிட்டுள்ளார்.

    • கொரடலா சிவா இயக்கத்தில் ஜூனியர் என்டிஆர் நடிப்பில் உருவாகவுள்ள திரைப்படம் என்டிஆர்30.
    • இப்படத்தின் படப்பிடிப்பு இன்று பூஜையுடன் துவங்கியுள்ளது.

    ஆர்.ஆர்.ஆர் படத்தின் வெற்றியை தொடர்ந்து ஜூனியர் என்டிஆர் அடுத்ததாக கொரடலா சிவா இயக்கத்தில் நடிக்கவுள்ளார். இப்படத்திற்கு தற்காலிகமாக என்டிஆர்30 என்று பெயரிடப்பட்டுள்ளது. இப்படத்தின் கதாநாயகியாக மறைந்த நடிகை ஸ்ரீ தேவியின் மகள் ஜான்வி கபூர் நடிக்கிறார். இப்படத்தை என்டிஆர்ட்ஸ் மற்றும் யுவசுதா ஆர்ட்ஸ் சார்பில் சுதாகர் மிக்கிலினேனி மற்றும் ஹரிகிருஷ்ணா கே தயாரிக்கின்றனர். இப்படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைக்கிறார்.


    என்டிஆர்30

    என்டிஆர்30


    இந்நிலையில் இப்படத்தின் படப்பிடிப்பு இன்று பூஜையுடன் தொடங்கியது. இதில் சிறப்பு விருந்தினராக ஆர்.ஆர்.ஆர். படத்தின் இயக்குனர் ராஜமவுலி மற்றும் கேஜிஎஃப் படத்தின் இயக்குனர் பிரசாந்த் நீல் கலந்துக் கொண்டனர். மேலும் ராஜமவுலி கிளாப் போர்ட் அடித்து படத்தை தொடங்கி வைத்தார். இது தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

    • கொரடலா சிவா இயக்கத்தில் ஜூனியர் என்டிஆர் நடிப்பில் உருவாகி வரும் என்டிஆர்30 படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் தொடங்கியது.
    • இப்படத்தின் படப்பிடிப்பில் நடிகர் சைஃப் அலிகான் இணைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

    ஆர்.ஆர்.ஆர் படத்தின் வெற்றியை தொடர்ந்து ஜூனியர் என்டிஆர் தற்போது கொரடலா சிவா இயக்கத்தில் நடித்து வருகிறார். இப்படத்திற்கு தற்காலிகமாக என்டிஆர்30 என்று பெயரிடப்பட்டுள்ளது. இப்படத்தின் கதாநாயகியாக மறைந்த நடிகை ஸ்ரீ தேவியின் மகள் ஜான்வி கபூர் நடிக்கிறார். இப்படத்தை என்டிஆர்ட்ஸ் மற்றும் யுவசுதா ஆர்ட்ஸ் சார்பில் சுதாகர் மிக்கிலினேனி மற்றும் ஹரிகிருஷ்ணா கே தயாரிக்கின்றனர். அனிருத் இசையமைக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு சில தினங்களுக்கு முன்பு பூஜையுடன் தொடங்கியது.


    என்டிஆர்30

    என்டிஆர்30

    இந்நிலையில் இப்படத்தின் படப்பிடிப்பில் நடிகர் சைஃப் அலிகான் இணைந்துள்ளதாக புகைப்படம் வெளியிட்டு படக்குழு அறிவித்துள்ளது. பெரும் எதிர்பார்ப்பில் உருவாகி வரும் இப்படத்தின் அடுத்தடுத்த அறிவிப்புகள் வெளியாகி ரசிகர்களின் எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. இந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.

    • கொரடலா சிவா இயக்கத்தில் ஜூனியர் என்டிஆர் நடிப்பில் உருவாகி வரும் என்டிஆர்30 படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் தொடங்கியது.
    • இப்படத்தின் டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட் லுக்கை ஜூனியர் என்டிஆர் படக்குழு வெளியிடவுள்ளது.

    ஆர்.ஆர்.ஆர் படத்தின் வெற்றியை தொடர்ந்து ஜூனியர் என்டிஆர் தற்போது கொரடலா சிவா இயக்கத்தில் நடித்து வருகிறார். இப்படத்திற்கு தற்காலிகமாக என்டிஆர்30 என்று பெயரிடப்பட்டுள்ளது. இப்படத்தின் கதாநாயகியாக மறைந்த நடிகை ஸ்ரீ தேவியின் மகள் ஜான்வி கபூர் நடிக்கிறார்.


    என்டிஆர்30 படக்குழு

    என்டிஆர்30 படக்குழு

    இப்படத்தை என்டிஆர்ட்ஸ் மற்றும் யுவசுதா ஆர்ட்ஸ் சார்பில் சுதாகர் மிக்கிலினேனி மற்றும் ஹரிகிருஷ்ணா கே தயாரிக்கின்றனர். அனிருத் இசையமைக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு சில தினங்களுக்கு முன்பு பூஜையுடன் தொடங்கியது. இப்படத்தின் படப்பிடிப்பில் நடிகர் சைஃப் அலிகான் சில தினங்களுக்கு முன்பு இணைந்துள்ளதாக புகைப்படம் வெளியிட்டு படக்குழு அறிவித்திருந்தது.


    என்டிஆர்30

    என்டிஆர்30

    இந்நிலையில் ஜூனியர் என்டிஆரின் பிறந்தநாளான மே 19ம் தேதியன்று இப்படத்தின் டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகும் என படக்குழு போஸ்டர் வெளியிட்டு அறிவித்துள்ளது. பெரும் எதிர்பார்ப்பில் உருவாகி வரும் இப்படத்தின் அடுத்தடுத்த அறிவிப்புகள் வெளியாகி ரசிகர்களின் எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. 

    • ராப் மார்ஷல் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் 'தி லிட்டில் மெர்மெய்ட்’.
    • இந்த திரைப்படம் வருகிற 26-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

    ராப் மார்ஷல் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் 'தி லிட்டில் மெர்மெய்ட்'. இப்படத்தில் ஏரியல் வேடத்தில் ஹாலே பெய்லி, உர்சுலாவாக மெலிசா மெக்கார்த்தி, இளவரசர் எரிக்காக ஜோனா ஹவுர்-கிங், கிங் ட்ரைட்டனாக ஜேவியர் பார்டெம், செபாஸ்டியனாக டேவிட் டிக்ஸ், ப்ளோண்டராக ஜேக்கப் ட்ரெம்ப்ளே, ஸ்கட்டிளாக அவ்குவாபினா, நோமாவாக டுமேஸ்வேனி ஆகியோர் நடித்துள்ளனர்.


    தி லிட்டில் மெர்மெய்ட்

    ஏரியல் என்ற கடல் கன்னி நிலத்தில் வசிக்கும் இளவரசர் எரிக்கிடம் காதல் வசப்படுகிறாள். இவள் கடல் சூனியக்காரி உர்சுலாவுடன் ஒப்பந்தம் செய்து நிலத்தில் வாழும் வாய்ப்பைப் பெறுகிறாள். இதன் பின்னர் இவள் வாழ்க்கையில் என்ன நடக்கிறது என்பதை மையமாக வைத்து உருவாகியுள்ள இந்த திரைப்படம் வருகிற 26-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.


    ஜான்வி கபூர்

    இந்நிலையில், நடிகை ஜான்வி கபூர் தனது சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்துள்ள ஒரு மாயாஜால வீடியோ அவரது ரசிகர்கள் மத்தியில் ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளது. இளவரசி ஏரியலின் மாயாஜால உலகில் ஒரு ரசிகராக ஜான்வி கபூர் காலடி எடுத்து வைத்து ஏரியலாக மாறி தனது இளம் ரசிகர்களுக்கு உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளார். இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.




    • தென்னிந்திய சினிமாவும் இந்தி திரை உலகமும் ஒரே பாதையில் தான் பயணம் செய்து கொண்டிருக்கின்றன.
    • நான் நடிப்பதற்கு சவாலான கதாபாத்திரங்களை தேடிக் கொண்டிருக்கிறேன்.

    நடிகை ஸ்ரீதேவி- போனி கபூர் தம்பதியரின் மகள் ஜான்வி கபூர். 2018-ம் ஆண்டில் 'தடாக்' என்ற படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார்.

    தொடர்ந்து பல படங்களில் நடித்து பாலிவுட் திரை உலகில் முன்னணி நடிகையாக வளர்ந்து வருகிறார். அடுத்த கட்டமாக தெலுங்கு சினிமாவில் கால் பதித்து ஜூனியர் என்.டி.ஆர். உடன் ஒரு படத்தில்ஜோடி சேர்ந்து நடித்தார்.

    இந்தநிலையில் ஜான்வி கபூர் கூறியதாவது:-

    தென்னிந்திய சினிமாவும் இந்தி திரை உலகமும் ஒரே பாதையில் தான் பயணம் செய்து கொண்டிருக்கின்றன. மொழியாலும் இனத்தாலும் சினிமாவை பிரிக்க முடியாது. தற்போது டப்பிங் படங்கள் ஏராளமாக வருகின்றன. இதனால் மொழி ரசிகர்களுக்கு முட்டுக்கட்டையாக இல்லை. ஓ.டி.டி. தளங்கள் இருப்பதனால் நல்ல கதைகள் தலைப்புகள் கிடைக்கின்றன. அதை நாங்கள் நன்றாக பயன்படுத்திக் கொள்கிறோம்.

    நான் நடிப்பதற்கு சவாலான கதாபாத்திரங்களை தேடிக் கொண்டிருக்கிறேன். எவ்வளவு தூரம் என்னால் நடிக்க முடியுமோ அந்த அளவுக்கு நடித்து வருகிறேன். அப்போதுதான் என்னுடைய நடிப்பு திறமையை கண்காணிக்க முடியும். சினிமாவில் நல்ல முறையில் நடனம் ஆடவும், நகைச்சுவை பண்ணவும் ஆசை. எனது அம்மாவிற்கு தென்னிந்திய சினிமாவில் தான் அறிமுகம் கிடைத்தது. அதனால் அவருக்கு அங்கு அன்பும் கிடைத்தது. எனது தகுதியை நிரூபிக்க இதுதான் சரியான நேரம்.

    இவ்வாறு அவர் கூறினார்

    ×