என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "விஜயகாந்த் நினைவிடம்"

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • கேப்டன் விஜயகாந்த் உடல் நலக்குறைவு காரணமாக கடந்த டிசம்பர் 28-ந்தேதி காலமானார்.
    • வருகிற ஜன.19-ந்தேதி நடிகர் சங்கம் சார்பில் கேப்டன் விஜயகாந்துக்கு இரங்கல் கூட்டம் நடைபெறு

    தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் உடல்நலக்குறைவினால் கடந்த டிசம்பர் மாதம் 28-ந்தேதி காலமானார். அவரது உடல் கோயம்பேட்டில் உள்ள தே.மு.தி.க. அலுவலகத்தில் அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்டது.

    நினைவிடத்தில் தினந்தோறும் ஏராளமான பொதுமக்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

    இந்நிலையில் இன்று காலை விஜயகாந்த் நினைவிடத்திற்கு நடிகர்கள் சிவக்குமார், கார்த்தி நேரில் வந்து அஞ்சலி செலுத்தினர்.

    இதைத்தொடர்ந்து நடிகர் சங்க பொருளாளர் கார்த்தி அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    விஜயகாந்த் மறைவையொட்டி நடிகர் சங்கம் சார்பில் வருகிற 19-ந்தேதி இரங்கல் கூட்டம் நடைபெறும்.

    புதிதாக கட்டப்படும் நடிகர் சங்க கட்டிடத்திற்கு விஜயகாந்த் பெயர் சூட்ட வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. இந்த கோரிக்கை பற்றி அன்று நடக்கும் கூட்டத்தில் விவாதிக்கப்படும்.

    அரசுக்கும் சில கோரிக்கைகள் வைக்க இருக்கிறோம். அவர் ஒரு நல்ல ஆளுமை. நடிகர் சங்க தலைவராக இருக்கும்போது பல சவால்களை சந்தித்து சாதித்துள்ளார்.

    எந்த வேலை என்றாலும் முன்னின்று செய்வார். அவரது புகழ் என்றும் ஓங்கி நிலைத்திருக்கும். நம்மிடம் அவர் இல்லை என்பதை மனம் ஏற்றுக்கொள்ளவில்லை.

    வருங்கால முதலமைச்சராக வேண்டியவர் விதி வசத்தால் போய்விட்டார். அவருடன் நான் சில படங்களில் நடித்திருக்கிறேன். கடந்த 1996-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் சென்னை மெரினா அரங்கத்தில் கலைஞருக்கு மிகப்பெரிய விழாவை விஜயகாந்த் எடுத்தார்.

    விழாவில் 3½ லட்சம் பேர் கலந்து கொண்டனர். விழாவில் பேசிய கலைஞர் இன்னும் கொஞ்சம் தூரம் நீங்கள் என்னை கடந்து சென்றுவிட்டால் நான் முதலமைச்சராகி விடுவேன் என்றார். அவ்வாறே 1 மாதத்தில் கலைஞர் முதலமைச்சர் ஆனார். மலேசியாவில் கமல், ரஜினி உள்பட தமிழ் திரைப்பிரபலங்கள் கலந்து கொண்ட நட்சத்திர விழாவின் மூலம் நடிகர் சங்க கடனை அடைத்தார். அவருடைய புகழ் என்றும் நிலைத்திருக்கும் என்று கூறினார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • வெளியூர்களில் இருந்து சென்னைக்கு வரும் பொதுமக்கள் தே.மு.தி.க. அலுவலகத்திற்கு சென்று விஜயகாந்த் நினைவிடத்தில் தொடர்ந்து அஞ்சலி செலுத்தி வருகிறார்கள்.
    • விஜயகாந்தை பொருத்தவரையில் எல்லோருக்கும் உதவும் எண்ணம் கொண்டவராகவும் தன்னை தேடி வந்தவர்களை சாப்பாடு போட்டு அனுப்பும் பழக்கம் உள்ளவராகவே இருந்து வந்துள்ளார்.

    சென்னை:

    நடிகரும், தே.மு.தி.க தலைவருமான விஜயகாந்த் கடந்த ஆண்டு டிச. 28-ந்தேதி உடல் நலக்குறைவால் காலமானார். அவரது உடல் கோயம்பேட்டில் உள்ள தே.மு.தி.க. அலுவலகத்தில் அடக்கம் செய்யப்பட்டது.

    வெளியூர்களில் இருந்து சென்னைக்கு வரும் பொதுமக்கள் தே.மு.தி.க. அலுவலகத்திற்கு சென்று விஜயகாந்த் நினைவிடத்தில் தொடர்ந்து அஞ்சலி செலுத்தி வருகிறார்கள். நினைவிடத்தில் அஞ்சலி செலுத்த வருபவர்களுக்கு தொடர்ந்து அன்னதானமும் வழங்கப்பட்டு வருகிறது.

    விஜயகாந்தை பொருத்தவரையில் எல்லோருக்கும் உதவும் எண்ணம் கொண்டவராகவும் தன்னை தேடி வந்தவர்களை சாப்பாடு போட்டு அனுப்பும் பழக்கம் உள்ளவராகவே இருந்து வந்துள்ளார். மேலும் பல்வேறு நலத்திட்ட உதவிகளையும் அவர் செய்துள்ளார்.

    இதுபோன்ற நல்ல உள்ளம் கொண்டவராக அவர் திகழ்ந்ததன் காரணமாகவே விஜயகாந்த் மீது பொதுமக்கள் அளவு கடந்த அன்பு வைத்துள்ளனர். அவர் உயிரிழந்த பிறகும் அவரது நினைவை போற்றும் வகையில் பொதுமக்கள் அவருக்கு தொடர்ச்சியாக மரியாதை செய்து வருகின்றனர்.

    இந்நிலையில் விஜயகாந்தின் நினைவிடத்திற்கு லிங்கன் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் சார்பில் உலக சாதனை விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

    மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்த் நினைவிடத்தில் 125 நாட்களில் தமிழ்நாடு முழுவதும் 15 லட்சத்திற்கும் மேற்பட்டோர் அஞ்சலி செலுத்தி உள்ளனர். மேலும் பார்வையாளர்களுக்கு உணவு வழங்கும் உலகின் முதல் நினைவிடமாக இது போற்றப்படுகிறது.

    • தமிழ்நாடு மற்றும் புதுவையில் திமுக கூட்டணி 40 இடங்களிலும் தற்போது முன்னிலையில் உள்ளது.
    • விஜய பிரபாகரனை விட சொற்ப வாக்கு வித்தியாசத்தில் காங்கிரஸ் வேட்பாளர் முன்னிலையில் உள்ளார்.

    பாராளுமன்ற தேர்தல் முன்னிலை நிலவரங்கள் வெளியாகி வருகின்றன.

    மொத்தமுள்ள 543 பாராளுமன்ற தொகுதிகளில் 293 தொகுதிகளில் பாஜக கூட்டணி முன்னிலையில் உள்ளது. இந்தியா கூட்டணி 233 இடங்களில் முன்னிலையில் உள்ளது.

    தமிழ்நாடு மற்றும் புதுவையில் திமுக கூட்டணி 40 இடங்களிலும் தற்போது முன்னிலையில் உள்ளது.

    குறிப்பாக விருதுநகர் தொகுதியில் தேமுதிக வேட்பாளர் விஜய பிரபாகரனுக்கும் காங்கிரஸ் வேட்பாளர் மாணிக்கம் தாகூருக்கு கடும் போட்டி ஏற்பட்டுள்ளது. சொற்ப வாக்கு வித்தியாசத்தில் காங்கிரஸ் வேட்பாளர் முன்னிலையில் உள்ளார்.

    இந்நிலையில், விருதுநகர் தொகுதியில் தனது மகன் விஜய பிரபாகரன் வெற்றிபெற வேண்டி, விஜயகாந்த்தின் நினைவிடத்தில் தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் பிரார்த்தனை மேற்கொண்டு வருகிறார்.

    ×