என் மலர்
நீங்கள் தேடியது "பாமக எம்எல்ஏக்கள்"
- பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ், அன்புமணி ராமதாஸ், ஜி.கே. மணி உள்ளிட்ட பா.ம.க.வின் எம்.எல்.ஏ.க்கள் தன்னை நேரடியாக சந்தித்து பலமுறை கோரிக்கை வைத்துள்ளனர்.
- உங்களுக்கு சாதகமாகவே நடந்து வருகிறோம்.
சென்னை:
தமிழக சட்டசபையில் இன்று நேரமில்லா நேரத்தில் சாதி வாரி கணக்கெடுப்பு குறித்து பா.ம.க. எம்.எல்.ஏ.க்கள் கேள்வி எழுப்பினார்கள்.
இதற்கு விளக்கம் அளித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:-சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என தெரிவித்து பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ், அன்புமணி ராமதாஸ், ஜி.கே. மணி உள்ளிட்ட பா.ம.க.வின் எம்.எல்.ஏ.க்கள் தன்னை நேரடியாக சந்தித்து பலமுறை கோரிக்கை வைத்துள்ளனர்.
சாதிவாரி கணக்கெடுப்பு கொள்கைக்கு நாங்கள் எதிரானவர்கள் அல்ல. உங்களுக்கு சாதகமாகவே நடந்து வருகிறோம். இந்த விளக்கத்திற்கு பின்னரும் நீங்கள் என்ன முடிவெடுத்தாலும் அதற்கு எதுவும் கூற முடியாது.
இவ்வாறு அவர் பேசினார்.