என் மலர்
நீங்கள் தேடியது "ஃபகத் பாசில்"
- துடரும் திரைப்படத்தை தருண் மூர்த்தி இயக்கியுள்ளார்.
- தருண் மூர்த்தி இயக்கும் அடுத்த திரைப்படத்தின் அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது.
பிரபல மலையாள நடிகர் மோகன்லாலுடன் ஷோபனா `துடரும்' படத்தில் நடித்துள்ளார். இப்படம் கடந்த வாரம் வெளியாகி மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்று வெற்றி திரைப்படமாக அமைந்துள்ளது. ரசிகர்கள் இப்படத்தை கொண்டாடி வருகின்றனர். திரைப்படம் இதுவரை வசூலில் உலகளவில் 100 கோடி ரூபாயை கடந்துள்ளது.
துடரும் திரைப்படத்தை தருண் மூர்த்தி இயக்கியுள்ளார். இப்படத்தை தொடர்ந்து தருண் மூர்த்தி இயக்கும் அடுத்த திரைப்படத்தின் அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது. இவர் அடுத்ததாக டார்பிடோ என்ற திரைப்படத்தை இயக்கவுள்ளார்.
இப்படத்தில் ஃபகத் ஃபாசில், நஸ்லென், அர்ஜுன் தாஸ் மற்றும் கணபதி முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கவுள்ளனர். நஸ்லென் நடிப்பில் அண்மையில் வெளியான ஆலப்புழா ஜிம்கானா திரைப்படம் வெற்றிப்பெற்றது. படத்தில் கமிட் ஆகியிருக்கும் நடிகர்களின் காம்போவே மிகப்பெரிய எதிர்ப்பார்ப்பை உருவாக்கியுள்ளது. மேலும் எம்மாதிரியான கதைக்களத்தில் உருவாக இருக்கிறது என தெரியவில்லை.

டார்பிடோ என்ற சொல்லுக்கு கடலுக்கு அடியில் செல்லும் தானியங்கி ஏவுகணை என்பது பொருள்.
இப்படத்தை ஆஷிக் உஸ்மான் தயாரிக்கவுள்ளார். படத்தின் ஒளிப்பதிவை ஜிம்ஷி காலித் செய்கிறார். படத்தின் இசையை சுஷின் ஷ்யாம் மெற்கொள்கிறார். திரைப்படத்தின் பிற தகவல்கள் விரைவில் வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
- நடிகர் ரஜினிகாந்த் மற்றும் இயக்குநர் நெல்சன் கூட்டணியில் வெளியான திரைப்படம் "ஜெயிலர்
- கேரளாவில் உள்ள அட்டப்பாடி பகுதியில் 35 நாட்கள் ஜெயிலர் 2 படப்பிடிப்பு நடைப்பெறுகிறது.
நடிகர் ரஜினிகாந்த் மற்றும் இயக்குநர் நெல்சன் கூட்டணியில் வெளியான திரைப்படம் "ஜெயிலர்." இந்தப் படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. மேலும், வசூலிலும் பல கோடிகளை குவித்தது. இந்த நிலையில், ஜெயிலர் வெற்றியைத் தொடர்ந்து இந்தப் படத்தின் இரண்டாம் பாகம் உருவாகவுள்ளதாக படக்குழு சமீபத்தில் ப்ரோமோ வீடியோவை வெளியிட்டு அறிவித்தனர்.
தற்பொழுது படப்பிடிப்பு கோவை மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் நடைப்பெற்று வருகிறது. கேரளாவில் உள்ள அட்டப்பாடி பகுதியில் 35 நாட்கள் படப்பிடிப்பு நடைப்பெறுகிறது.
இந்நிலையில் படத்தில் தற்பொழுது நடிகர் ஃபகத் ஃபாசில் இணைந்துள்ளார். இதற்கு முன் ரஜினிகாந்த் மற்றும் ஃபகத் ஃபாசில் இருவரும் இணைந்து கடைசியாக வேட்டையன் திரைப்படத்தில் நடித்து இருந்தனர்.
இவர்கள் இருவரும் இடையே உள்ள காட்சிகள் மக்களால் கொண்டாடப்பட்டது.
ஜெயிலர் 2 திரைப்படத்தில் எம்மாதிரியான கதாப்பாத்திரத்தில் நடிக்கிறார் என தெரியவில்லை. இந்த காம்போ மீண்டும் ஒன்றாக சேர்ந்ததால் ரசிகர்கள் மத்தியில் எதிர்ப்பார்ப்பை அதிகரித்துள்ளது. படத்தின் இசையை அனிருத் மேற்கொள்கிறார் மற்றும் படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. இதுக்குறித்த அதிகாரப்பூர்வ தகவல் விரைவில் வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
- அல்லு அர்ஜுன் நடிப்பில் 'புஷ்பா 2' திரைப்படம் உருவாகி வருகிறது.
- இப்படத்தில் ஃபகத் பாசில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கிறார்.
இயக்குனர் சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா, ஃபகத் பாசில், ஜகதீஷ், சுனில், ராவ் ரமேஷ் உள்ளிட்ட பலர் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியாகி மிகப்பெரிய ஹிட் அடித்த படம் 'புஷ்பா'. இப்படம் தெலுங்கு மொழியில் உருவாக்கப்பட்டு தமிழ், இந்தி, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட இந்திய மொழிகளில் வெளியாகி ரூ.350 கோடி வரை வசூலை ஈட்டியது.

தற்போது இப்படத்தின் இரண்டாம் பாகமான 'புஷ்பா-தி ரூல்' படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. சமீபத்தில் இப்படத்தின் முதல் தோற்ற போஸ்டர் மற்றும் டைட்டில் டீசர் வெளியாகி கவனம் பெற்றது. இதையடுத்து இப்படத்தில் நடிகர் பகத் பாசில் காட்சிகள் நிறைவு பெற்றுள்ளதாக இயக்குனர் சுகுமார் தனது சமூக வலைதளப் பக்கத்தில் புகைப்படம் பகிர்ந்து தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், நடிகர் பகத் ஃபாசிலின் பிறந்தநாளான இன்று அவருக்கு வாழ்த்து தெரிவித்து 'புஷ்பா-தி ரூல்' படத்தின் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. இந்த போஸ்டர் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
- நடிகர் ஃபகத் பாசிலின் பிறந்தநாளான இன்று அவருக்கு வாழ்த்து தெரிவித்து பலரும் பதிவிட்டு வருகின்றனர்.
- இயக்குனர் மாரி செல்வராஜ், ஃபகத் பாசிலுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து பதிவிட்டுள்ளார்.
மலையாள திரையுலகின் முன்னணி நடிகரான ஃபகத் பாசில், சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான வேலைக்காரன் படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார். அதன்பின்னர் சூப்பர் டீலக்ஸ், விக்ரம் படங்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்தார். சமீபத்தில் மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளியான மாமன்னன் படத்தில் ரத்தினவேல் என்ற கதாப்பாத்திரத்தில் நடித்து ரசிகர்களை கவர்ந்தார்.
ஃபகத் பாசிலின் பிறந்தநாளான இன்று அவருக்கு வாழ்த்து தெரிவித்து சமூக வலைத்தளத்தில் பதிவிட்டு வருகின்றனர். அதன்படி இயக்குனர் மாரி செல்வராஜ், ஃபகத் பாசிலுக்கு வாழ்த்து தெரிவித்து நெகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ளார். அதில், வணக்கம் பகத் சார்!!! உங்கள் இரண்டு கண்களும் எனக்கு அவ்வளவு பிடிக்கும்.

அந்த இரண்டு கண்களை வைத்துதான் என் ரத்தினவேல் கதாபாத்திரத்தை உருவாக்கினேன். ஒரு கண்ணில் பல தலைமுறைகளாக சொல்லிக்கொடுக்கப்பட்ட வாழ்க்கைமுறை சரி என்ற நம்பிக்கையை தீர்க்கமாக வையுங்கள் என்றேன். மற்றொரு கண்ணில் புதிய தலைமுறைகள் முளைத்து வந்து கேட்கும் வாழ்வியல் முரணுக்கான ஆக்ரோஷ கேள்விகளையும் குழப்பங்களையும் வையுங்கள் என்றேன்.

மிகச்சரியாக இரண்டு கண்களிலும் இரண்டு நேரெதிர் வாழ்வை வைத்து என் படம் முழுக்க அப்படியே பயணித்தீர்கள். இறுதியாக இரண்டு கண்களையும் மூட சொன்னேன். ஏனென்று கேட்காமல் மூடினீர்கள். உங்கள் நெஞ்சுக்கூட்டுக்குள் டாக்டர்.அம்பேத்கரின் குரலை ஒங்கி ஒலிக்க விட்டேன். அவ்வளவுதான் உடல் சிலிர்த்து நீங்கள் ஓடிவந்து என்னை அணைத்துக்கொண்ட அந்த நொடி தீரா பரவசத்தோடு சொல்கிறேன். இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் பகத் சார் என்று பதிவிட்டுள்ளார்.
- மாநகரம்' படத்தின் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களை கவர்ந்த இயக்குநர் லோகேஷ் கனகராஜ்,
- இப்படத்தை ரெமோ மற்றும் சுல்தான் பட புகழ் இயக்குனர் பாக்கியராஜ் கண்ணன் இயக்குகிறார்.
மாநகரம்' படத்தின் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களை கவர்ந்த இயக்குநர் லோகேஷ் கனகராஜ், `கைதி', `மாஸ்டர்', `விக்ரம்' மற்றும் `லியோ' படங்களை இயக்கி குறுகிய காலத்திலேயே பிரபல இயக்குனரானார்.
தற்போது ரஜினியின் 171 -வது படமான கூலி திரைப்படத்தை இயக்கவுள்ளார். திரைப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் அடுத்த மாதம் தொடங்கவுள்ளது. படங்கள் இயக்குவது மட்டுமல்லாமல் ஜி ஸ்குவாட் (G Squad)' தயாரிப்பு என்ற பெயரிலான சொந்த தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கி 2023 -ல் 'பைட் கிளப்' மூலம் தயாரிப்பாளரானார்.
அதைத்தொடர்ந்து 'பென்ஸ்' என்ற புதிய படத்தை தயாரிக்கவுள்ளார் லோகேஷ். இப்படத்தில் ராகவா லாரன்ஸ் கதாநாயகனாக நடிக்கிறார்.
இப்படத்தை ரெமோ மற்றும் சுல்தான் பட புகழ் இயக்குனர் பாக்கியராஜ் கண்ணன் இயக்குகிறார். இப்படத்தின் கூடுதல் அப்டேட் தற்பொழுது வெளியாகியுள்ளது. படத்தில் ஃபகத் பாசில் மற்றும் எஸ்.ஜே சூர்யா முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகிவுள்ளது. இதுக்குறித்த அதிகாரப்பூர்வ தகவல் விரைவில் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- மலையாளத்தில் ஃபகத் ஃபாசில் பொகெயின்வில்லா திரைப்படத்தில் நடித்துள்ளார்.
- இத்திரைப்படத்தை ஃபகத்தின் நெருங்கிய நண்பரான அமல் நீரட் இயக்குகிறார்.
மலையாள ரசிகர்களால் ஃபாஃபா என்று அன்புடன் அழைக்கப்படுபவர் ஃபகத் ஃபாசில். மலையாள சினிமா மட்டுமன்றி, தென்னிந்திய திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருகிறார்.
தமிழில் வேலைக்காரன், சூப்பர் டீலக்ஸ், விக்ரம் மற்றும் தெலுங்கில் புஷ்பா உள்ளிட்ட படங்களில் தனது தனித்துவமான நடிப்பினால் ரசிகர்களை கவர்ந்தார். அடுத்ததாக ரஜினிகாந்த் நடிக்கும் வேட்டையன் திரைப்படத்தில் நடித்துள்ளார்.
இதைத்தொடர்ந்து மலையாளத்தில் ஃபகத் ஃபாசில் பொகெயின்வில்லா திரைப்படத்தில் நடித்துள்ளார். இத்திரைப்படத்தை ஃபகத்தின் நெருங்கிய நண்பரான அமல் நீரட் இயக்குகிறார். மலையாளத்தில் மமூட்டி நடிப்பில் 2022 ஆம் ஆண்டு வெளியான பீஷ்மா பர்வம் திரைப்படத்தை அமல் நீரட் இயக்கினார்.
இப்படத்தில் ஃபஹத் ஃபாசிலுடன் , குஞ்சாக்கோ போபன், வீணா நந்த குமார், ஜோதிர்மயி, ஸ்ரீண்டா, முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படம் ஒரு அதிரடி ஆக்ஷன் நிறைந்த படமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஆனந்த சந்திரன் ஒளிப்பதிவை மேற்கொள்ள, சுஷின் ஷியாம் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு அறிவித்துள்ளது. திரைப்படம் வரும் அக்டோபர் 17 ஆம் தேதி வெளியாகவுள்ளது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்ஐ க்ளிக் செய்யவும்.