என் மலர்
நீங்கள் தேடியது "இமான்"
- இந்த ஜென்மத்தில் சிவகார்த்திகேயனுடன் சேர்ந்து பயணிப்பது கடினம்.
- அந்த துரோகத்தை நான் மிகவும் தாமதமாகத்தான் புரிந்து கொண்டேன்.
முன்னணி இசையமைப்பாளரான டி.இமான் சமீபத்திய நேர்காணல் ஒன்றில், "இந்த ஜென்மத்தில் சிவகார்த்திகேயனுடன் சேர்ந்து பயணிப்பது கடினம். அவர் எனக்கு செய்தது ஒரு மிகப்பெரிய துரோகம். அதை என்னால் வெளியே சொல்ல முடியாது. அதனால் இனி வரும் காலங்களில் அவருடன் சேர்ந்து பயணிக்க இயலாது.
ஒருவேளை அடுத்த ஜென்மத்தில் நானும் இசையமைப்பாளராக இருந்து, அவரும் நடிகராக இருந்தால் நடக்க வாய்ப்புள்ளது. இது நான் மிகவும் கவனத்துடன் எடுத்த முடிவு. அந்த துரோகத்தை நான் மிகவும் தாமதமாகத்தான் புரிந்து கொண்டேன். இது குறித்து அவரிடம் நேரடியாகவே கேட்டுவிட்டேன். ஆனால் அவரது பதிலை என்னால் சொல்லமுடியாது" என்று கூறினார். இதன் பிறகு இமான் விவாகரத்திற்கு சிவகார்த்திகேயன் தான் காரணம் என்று கிசுகிசுக்கப்பட்டது.

இந்நிலையில், இந்த நேர்காணல் குறித்து இமானின் முதல் மனைவி மோனிகா ரிச்சர்ட் கூறியுள்ளதாவது, சிவகார்த்திகேயனுக்கும் இமானுக்கும் நல்ல நட்பு உண்டு. எங்களுக்கு விவாகரத்து நடக்கக்கூடாதுன்னு பல முயற்சிகளை எடுத்தார். இமானோட விவாகரத்து முடிவுக்கு சிவகார்த்திகேயன் சப்போர்ட் பண்ணவில்லை. அது இமானுக்கு பிடிக்கவில்லை.
ஒரு வருடத்திற்கு முன்னாடி பொண்ணையெல்லாம் பார்த்து வைத்துவிட்டுதான், இமான் எனக்கு விவாகரத்தே கொடுத்தார். நான் முடியாதுன்னு சொன்னதுக்கு, அரசியல்வாதிகளை வைத்து 'உங்கப்பாவைக் கொன்னுடுவோம்'னு மிரட்டல் எல்லாம் கொடுத்து 46 நாட்களிலேயே விவாகரத்தும் வாங்கினார். இப்போ, இமானுக்கு பட வாய்ப்புகள் சரியாக இல்லை. அதனால்தான், இப்படியெல்லாம் பேசி பட வாய்ப்புகளை பிடிக்க நினைக்கிறார்" என்று கூறியதாக தகவல் வெளியாகியுள்ளது.
- தமிழ் சினிமாவில் நடிகராகவும், இயக்குநராகவும், நடன இயக்குநராகவும் வலம் வருபவர் பிரபு தேவா.
- எஸ்.ஜே.சினு இயக்கத்தில் பிரபுதேவா நடித்திருக்கும் புதியதிரைப்படம் தான் பேட்ட ராப்.
தமிழ் சினிமாவில் நடிகராகவும், இயக்குநராகவும், நடன இயக்குநராகவும் வலம் வருபவர் பிரபு தேவா. இவரது நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான திரைப்படம் பஹீரா. வில்லனாக பல கெட்டப்பில் வந்து ரசிகர்களை மிரட்டி எடுத்திருப்பார் பிரபுதேவா. இத்திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றது. இதனையடுத்து விஜய் நடிப்பில் உருவாகிக்கொண்டு இருக்கும் வெங்கட் பிரபு இயக்கத்தில் 'தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்' திரைப்படத்தில் முக்கியமான கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார்.
இதையடுத்து சக்தி சிதம்பரம் இயக்கும் புதிய திரைப்படத்தில் அவர் நடித்து வருகிறார். பிரபல மலையாள நடிகை மடோனா செபாஸ்டியன் நடிக்கும் இப்படத்திற்கு ஜாலியோ ஜிம்கானா என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், எஸ்.ஜே.சினு இயக்கத்தில் பிரபுதேவா நடித்திருக்கும் புதியதிரைப்படம் தான் பேட்ட ராப்.படத்தில் நாயகியாக வேதிகா நடித்துள்ளார். மேலும், பாலிவுட் நடிகை சன்னி லியோன் ஒரு பாடலுக்கு நடனமாடி இருக்கிறார். புளூ ஹில் பிலிம்ஸ் தயாரிப்பில் இத்திரைப்படம் உருவாகி இருக்கிறது.
இத்திரைப்படத்திற்கு டி இமான் இசை அமைக்கிறார். விவேக் பிரசன்னா, பகவதி பெருமாள், ரமேஷ் திலக், மைம் கோபி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். இப்படத்தின் ஆடியோ உரிமையை பிரபல நிறுவனமான டிசீரிஸ் கைப்பற்றி இருக்கிறது. மேலும், படத்தில் சுமார் 10 பாடல்கள் இடம்பெற்றிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
படத்தின் போஸ்டர்கள் மிகவும் கலர்ஃபுல்லாகவும், வைபாகவும் அமைந்து இருக்கிறது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.