என் மலர்
நீங்கள் தேடியது "டி.இமான்"
- விஜய் நடிப்பில் வெளியான 'தமிழன்' படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு இசையமைப்பாளராக அறிமுகமானவர் டி.இமான்.
- இவருக்கு இசைத் துறையில் சிறந்த பங்காற்றியதற்காக கௌரவ டாக்டர் பட்டம் கொடுக்கப்பட்டுள்ளது.
விஜய் நடிப்பில் 2002-ம் ஆண்டு வெளியான 'தமிழன்' படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு இசையமைப்பாளராக அறிமுகமானவர் டி.இமான். அதன்பின்னர் ரஜினி, அஜித், விஜய், சூர்யா, விக்ரம், கார்த்தி உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களின் படங்களுக்கு இசையமைத்து தனக்கான இடத்தை தக்கவைத்துக் கொண்டார். சிறுத்தை சிவா இயக்கத்தில் அஜித் நடிப்பில் வெளியான 'விஸ்வாசம்' படத்திற்காக டி.இமான் தேசிய விருது பெற்றார். இவர் கைவசம் தற்போது சசிகுமாரின் 'காரி', விஜய் ஆண்டனியின் 'வள்ளி மயில்' உள்ளிட்ட சில படங்களில் உள்ளது.

இந்நிலையில் சமூக சர்வதேச ஊழல் எதிர்ப்பு மற்றும் மனித உரிமை கவுன்சில் சார்பாக இசையமைப்பாளர் இமானுக்கு கௌரவ டாக்டர் பட்டம் வழங்கியுள்ளது. இதுகுறித்து இமான் தனது பதிவிட்டிருப்பது, "இந்திய அரசால் அங்கீகரிக்கப்பட்ட இந்த நிறுவனத்திடமிருந்து கௌரவ டாக்டர் பட்டம் பெற்றதில் மகிழ்ச்சி" எனக் குறிப்பிட்டுள்ளார். மேலும் இதனுடன் டாக்டர் பட்டத்தின் சான்றிதழ்களை பகிர்ந்துள்ளார். இசைத் துறையில் சிறந்த பங்காற்றியதற்காக இமானுக்கு இந்தப் பட்டம் வழங்கப்பட்டுள்ளது. ரசிகர்கள் மற்றும் திரைப்பிரபலங்கள் பலரும் இமானுக்கு தங்களது வாழ்த்துகளை சமூக வலைதளத்தில் தெரிவித்து வருகின்றனர்.
இதற்குமுன்பு சத்யபாமா பல்கலைக்கழகம் சார்பாக டி.இமானுக்கு கெளரவ டாக்டர் பட்டம் கொடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
- தமிழ் திரையுலகில் 100க்கும் மேற்பட்ட படங்களில் சிறிய வேடங்களில் நடித்துள்ளவர் துணை நடிகர் பிரபு.
- இவரது உடலுக்கு இசையமைப்பாளர் இமான் இறுதி சடங்குகளை செய்தார்.
தனுஷ் நடிப்பில் வெளியான படிக்காதவன் படத்தில் நடித்து பிரபலமடைந்தவர் துணை நடிகர் பிரபு. இவர் தமிழ் திரையுலகில் 100க்கும் மேற்பட்ட படங்களில் சிறிய வேடங்களில் நடித்துள்ளார். இவர் சில காலமாக புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். ஆதரவற்ற நிலையில் இருந்த பிரபுவுக்கு இசையமைப்பாளர் டி.இமான் மருத்துவ உதவிகள் செய்துவந்தார்.

இந்நிலையில் துணை நடிகர் பிரபு நேற்று சிகிச்சை பலனின்றி காலமானார். அவரது மறைவு ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியது. நடிகர் பிரபுவின் உடலுக்கு மருத்துவ உதவிகள் செய்த வந்த இசையமைப்பாளர் டி.இமான் இறுதி சடங்குகளை செய்தார்.
- வரும் மே மாதம் 3 ஆம் தேதி தி ப்ரூஃப் திரைப்படம் வெளியாகவுள்ளது.
- படத்தின் டிரெயிலர் யூடியூபில் இதுவரை 12 லட்ச பார்வைகளை பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
2006 ஆம் ஆண்டு வெளியான திருடி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார் சாய் தன்ஷிகா . ஜெயம் ரவி நடிப்பில் 2009 ஆண்டு வெளிவந்த பேராண்மை படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்து மக்கள் கவனத்தை ஈர்த்தார்.
மாஞ்சா வேலு, நில் கவனி செல்லாதே, அரவான், பரதேசி போன்ற படங்களில் கதாநாயகியாக நடித்தார். பா.ரஞ்சித் இயக்கத்தில் 2016 ஆம் ஆண்டு வெளிவந்த கபாலி படத்தில் ரஜினிகாந்தின் மகளாக நடித்து சிறப்பான நடிப்பை வெளிப்படுத்திருப்பார். அதற்கடுத்து துல்கர் சல்மானுடன் சோலோ என்ற படத்தில் நடித்தார்.
இந்நிலையில் தன்ஷிகா 'தி ப்ரூஃப்' படத்தில் நடித்துள்ளார். கோல்டன் ஸ்டுடியோசின் கீழ் கோமதி சத்யா இப்படத்தை தயாரித்துள்ளார். நடன இயக்குனரான ராதிகா மாஸ்டர் இப்படத்தை இயக்கியுள்ளார். இப்படத்தின் டிரெயிலர் சில நாட்களுக்கு முன் வெளியானது, படத்தின் டிரெய்லர் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.
படத்தின் டிரெயிலர் யூடியூபில் இதுவரை 12 லட்ச பார்வைகளை பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. வரும் மே மாதம் 3 ஆம் தேதி தி ப்ரூஃப் திரைப்படம் வெளியாகவுள்ளது.
படத்தின் முதல் பாடலை ஏப்ரல் 20 ஆம் தேதி இசையமைப்பாளர் இமான் அவரது எகஸ் பக்கத்தில் வெளியிடவுள்ளார். இப்படத்தில் அறிமுக இசையமைப்பாளரான தீபக் இசையமைத்துள்ளார்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.