என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சிவகார்த்திகேயன்"

    • நடிகர் சிவகார்த்திகேயன் தற்போது நடிக்கும் திரைப்படம் ‘மாவீரன்’.
    • இந்த படத்தில் அதிதி ஷங்கர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

    "டாக்டர்", "டான்" படங்களின் வெற்றியைத் தொடர்ந்து நடிகர் சிவகார்த்திகேயன் தற்போது 'மண்டேலா' பட இயக்குனர் மடோன் அஸ்வினுடன் இணைந்து புதிய படத்தில் நடிக்கிறார். 'மாவீரன்' என்று பெயரிடப்பட்டுள்ள இந்த படம் தமிழ், தெலுங்கு ஆகிய 2 மொழிகளில் தயாராகி வருகிறது. இப்படத்திற்கு தெலுங்கில் 'மாவீருடு' என்று பெயர் வைத்துள்ளனர். இதில் அதிதி ஷங்கர், சரிதா, இயக்குனர் மிஷ்கின் மற்றும் யோகி பாபு முக்கிய கதாபாத்திரல் நடிக்கின்றனர்.




    இந்நிலையில், 'மாவீரன்' படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோவை வெளியிட்டு முதல் பாடலான சீன்னு சின்னு பாடல் வருகிற 17ம் தேதியன்று வெளியாகும் என படக்குழு தெரிவித்துள்ளது. இந்த வீடியோ தற்போது வைதலாகி வருகிறது.

    • படத்தை 24 ஏ.எம். ஸ்டுடியோஸ் மற்றும் கே.ஜே.ஆர். ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.
    • எம்.எஸ்.சேலஞ்ச் என்ற திரைப்பட விளம்பர நிறுவனம் தொடர்ந்த வழக்கில் படத்திற்கு இடைக்கால தடை விதிக்கப்பட்டது.

    ஆர்.ரவிகுமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள திரைப்படம் 'அயலான்'. ஏ.ஆர் ரகுமான் இசையில், ரகுல் பிரீத் சிங், யோகி பாபு, கருணாகரன் உள்ளிட்ட பலர் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படத்தை 24 ஏ.எம். ஸ்டுடியோஸ் மற்றும் கே.ஜே.ஆர். ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.

    அயலான் நாளை திரையிடப்படும் என அறிவிக்கப்பட்டு இருந்த நிலையில் நாளை திட்டமிட்டபடி வெளியாகுமா? என்ற சந்தேகம் எழுந்தது.

    தங்களுக்கு தர வேண்டிய ரூ.1 கோடியை வழங்காமல் படத்தை வெளியிட கூடாது என எம்.எஸ்.சேலஞ்ச் என்ற திரைப்பட விளம்பர நிறுவனம் தொடர்ந்த வழக்கில் படத்திற்கு இடைக்கால தடை விதிக்கப்பட்டது.


    இந்நிலையில் அயலான் திரைப்படம் திட்டமிட்டபடி நாளை வெளியாகிறது.

    எம்.எஸ்.சேலஞ்ச் விளம்பர நிறுவனத்திற்கு ரூ.50 லட்சத்தை பட தயாரிப்பு நிறுவனம் செலுத்தியதாலும், மீதமுள்ள 50 லட்சம் ரூபாயை ஏப்ரல் 10-ம் தேதிக்குள் செலுத்துவதாக உத்தரவாதம் அளிக்கப்பட்டதாலும் படத்திற்கு விதிக்கப்பட்ட இடைக்கால தடை நீக்கம் செய்யப்பட்டுள்ளது.

    இதனால் திட்டமிட்டபடி நாளை அயலான் திரைப்படம் வெளியாகுவதால் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.

    ×